Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் சிறிலங்கா கடற்படையினரின் அநீயாயம்

Featured Replies

யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் வலி வடக்கில் மீளக்குடியமர்ந்த மக்களின் படகுகளையும் வலைகளையும் சிறிலங்கா கடற்படையினர் சேதப்படுத்தி வருகின்றனர் என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் திட்ட இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாஸன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் இரண்டாவது பெரிய மீன்பிடித் துறைமுகமான மயிலிட்டியை ஏன் ? இன்னமும் சிறிலங்கா அரசாங்கம் உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் வைத்திருக்கின்றது என்றும் கேள்வியெழுப்பிய அவர் சிறிலங்காவில் சீனப் படகுகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் மேலும் சிக்கல் நிலையைத் தோற்றுவிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டமைப்பின் யாழ்.அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளபோதும் இந்த நாட்டில் இன்னமும் உண்மையான சுதந்திரம் இல்லை. மீளக்குடியமர்ந்த வலிகாமம் பகுதி மக்களின் படகுகளையும் அவர்களது வலைகளையும் சிறிலங்கா கடற்படையினர் சேதப்படுத்தி அவற்றை அழித்து வருகின்றனர்.

யுத்தம் முடிவடைந்தள்ள நிலையில் சிறிலங்காவின் இரண்டாவது மீன்பிடித் துறைமுகமான மயிலிட்டியை சிறிலங்கா அரசாங்கம் ஏன்? இன்னமும் உயர்பாதுகாப்பு வலயப்பகுதிக்குள்ளாக வைத்திருக்கின்றது. இவ்வாறான செயற்பாடுகள் உண்மையான சமாதானத்தை பாதிக்கும்.

சிறிலங்கா கடற்பகுதிக்குள்ளாக இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் நடைபெற்றுவரும் நிலையில் சிறிலங்கா அரசாங்கம் சீனபடகுகளுக்கு சிறிலங்கா கடற்பகுதிக்குள்ளாக மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அனுமதி வழங்கியது மட்டுமல்லாது. அவர்கள் சிறிலங்காவின் கரையில் அவற்றை இறக்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. வத்தளையின் ஒரு பகுதியில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் தகவலின்படி ஆயிரத்து 200 வரையானவர்களே இன்னமும் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இன்னமும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் மீளக்குடியேற்றப்பட வேண்டியவர்களாக உள்ளனர். இவர்கள் தற்போது பல்வேறு நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர்.

இவ்வாறான சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகள் நிலையான சமாதானத்தில் பாரிய தாக்கத்தை செலுத்துகின்றன. இவ்வாறான செயற்பாடுகளை விடுத்து மக்களின் நலனில் அதிக அக்கறையும் செயற்பட்டு அவர்களது தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.

இதேபோல தென்னிலங்கை மீனவர்களின் பிரச்சினையும் இரண்டு பகுதி மீனவர்களும் பேசித் தீர்;க்க வேண்டியவை . சில இதனை அரசியலாக்க முயற்சிக்கின்றனர். தென்னிலங்iயில் உள்ள புதிதாக முளைத்த இளவாதக் கட்சிகள் இவற்றை இனங்களுக்கிடையிலான முரண்பாடாக மாற்ற முயல்கின்றன. என்றார்.

http://www.sankathi24.com/news/31866/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.