Jump to content

கொத்துமல்லித் தொக்கு!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1069797_515704501829608_422014943_n.jpg

 

கொத்துமல்லித் தொக்கு!!!

தேவையானப்பொருட்கள்:

கொத்துமல்லி - ஒரு கட்டு
காய்ந்த மிளகாய் - 5 அல்லது 6
புளி - ஒரு பெரிய நெல்லிக்காயளவு
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 2 டீஸ்பூன்

செய்முறை:

கொத்துமல்லியை தண்ணீரில் நன்றாக அலசி, ஒரு சுத்தமான துணியில் (அல்லது காகிதத்தில்) பரப்பி, ஈரம் போக நிழலில் உலர்த்தவும். பின்னர் அதை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் அதில் பெருங்காயம், உளுத்தம் பருப்பு இரண்டையும் போட்டு சிவக்க வறுக்கவும். பின்னர் அத்துடன் புளியைச் சேர்த்து வதக்கவும். புளி சற்று வறுபட்டதும் மிளகாயைப் போட்டு சற்று வறுக்கவும். கடைசியில் அத்துடன் நறுக்கியக் கொத்துமல்லியைச் சேர்த்து சுருள வதக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி வைத்து ஆற விடவும். பின்னர் அத்துடன் உப்பு சேர்த்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல், சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.

இட்லி/தோசை, தயிர் சாதம் ஆகியவற்றுடன் தொட்டுக் கொள்ள சுவையாயிருக்கும். சூடான சாதத்துடன் சேர்த்து, ஒரு டீஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணை விட்டு பிசைந்து சாப்பிட இன்னும் சுவையாக இருக்கும்.

இந்தத் தொக்கு, குளிர்பதனப்பெட்டியில் வைத்தால் 2 அல்லது 3 வாரங்கள் வரை கெடாமல் இருக்கும். வெளியில் வைத்திருந்தால் ஒரு வாரம் வரை கெடாது.
 
 

நன்றி: -முகநூல்- 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மீண்டும் அரசியல் களத்தில் சந்திரிக்கா - சஜித்திற்கு விடுக்கப்பட்டுள்ள தூது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் புதிய கூட்டணியை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பையும் அதில் இணைத்து கொள்வதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சஜித் பிரேமதாச பொதுக் கூட்டணியுடன் இணைந்து செயற்பட விரும்பவில்லை என்றால், அவரை நீக்கிவிட்டு எதிர்கால நடவடிக்கைகளை தொடர திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. புதிய கூட்டணி புதிய கூட்டணிக்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தால், கடந்த பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளை கூட பெற முடியாத அளவிற்கு அவரை இழுத்துச் செல்வதற்கான திட்டங்கள் முன்னெடுப்பதாக தெரியவந்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையை மாற்றி, சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருடன் இணைந்து தலைமைத்துவ சபையாக செயற்படும் வகையில் புதிய கூட்டணி தொடர்பில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சந்திரிக்காவின் வருகை அண்மைக்காலமாக முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா குமாரதுங்க அரசியல் நடவடிக்கையில் இருந்து முழுமையாக ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அபார வளர்ச்சியை அடுத்து, சந்திரிக்கா அம்மையார் மீண்டும் அரசியல் களத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/sri-lanka-political-situation-chandrika-unp-join-1727494261#google_vignette
    • இலக்கிய மாதத்தையொட்டி 25 ஆவது தடவையாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் "கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை" ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பார்வையிட்டுள்ளார். இதன்போது இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர,சிறுவர் புத்தகங்கள் தொடர்பிலான தேசிய கொள்கைப் பத்திரத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கி வைத்தார்.  பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (28) நடைபெறும் கண்காட்சிக்கு வருகை தந்திருந்த மக்கள் ஜனாதிபதிக்கு விசேட வரவேற்பளித்தனர். 400 புத்தக கூடங்கள் இங்கு 400 புத்தக கூடங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றைப் பார்வையிட வந்திருந்த மக்களோடு ஜனாதிபதி சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகின்ற "கொழும்பு சர்வதேச புத்தக் கண்காட்சி" செப்டம்பர் 27 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 06 ஆம் திகதி இரவு 9.00 மணி வரையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடத்தப்படுகிறது. மேலும், பேராதனை பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி, கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் உதார திக்கும்புர,பணிப்பாளர் சமந்தி ஜயசூரிய, மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் இணை நிர்மாணப் பிரிவின் தலைவர் ருவன்திகா சேனநாயக்க உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.  https://tamilwin.com/article/president-visited-the-international-book-fair-1727509202#google_vignette
    • இலங்கையில் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறிப்பிட்டளவில் சீரமைக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, தனது தேர்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதிய சலுகைகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்திருந்தார். சட்டத்தின்படி,ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியும் அவரின் வாழ்நாளில் வாடகையின்றி பொருத்தமான குடியிருப்பைப் பயன்படுத்த உரிமை உண்டு. மாதாந்த கொடுப்பனவு பொருத்தமான குடியிருப்பு வழங்கப்படாவிட்டால், மாதாந்த ஓய்வூதியத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு இணையான மாதாந்த கொடுப்பனவு அவருக்கு வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதிக்கும், ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் பதவியை வகிக்கும் ஒருவருக்கும் மாதாந்த சம்பளத்திற்கு இணையான மாதாந்த செயலாளர் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதியின் விதவைகளுக்கு, அமைச்சரவை அமைச்சரின் பிரத்தியேக செயலாளராக பதவி வகிக்கும் நபருக்கு வழங்கப்படும் மாதாந்த சம்பளத்திற்கு இணையான மாதாந்த செயலாளர் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். அமைச்சரவைக் கூட்டம் அவர்கள் உத்தியோகபூர்வ போக்குவரத்திற்கும் தகுதியுடையவர்கள் மற்றும் ஒரு அமைச்சரவை அமைச்சருக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளும் அவர்களுக்கு உள்ளன. எனினும் இந்த சலுகைகள் அனைத்தையும் அரசாங்கம் மீளாய்வு செய்து தேர்தல் வாக்குறுதிக்கு அமைவாக அவற்றைக் குறைப்பதற்கான அளவுகோலை வகுக்கும் என ஜனாதிபதிக்கு நெருக்கமான உயர்மட்ட தரப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் விவாதிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  https://tamilwin.com/article/information-about-benefits-of-former-presidents-1727513505
    • 28 SEP, 2024 | 11:52 AM (எம்.நியூட்டன்)   வட மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில், “சூழல் நேய நிலைபேறான விவசாய யுகம் நோக்கி,”  எனும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண விவசாய பிரதிப்பணிப்பாளர் அஞ்சனா ஸ்ரீ ரங்கன் தெரிவித்தார்.   திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகி, நான்காம் திகதி வெள்ளிக்கிழமை வரையிலான, மூன்று தினங்கள் கண்காட்சி நிகழ்வு இடம் பெறவுள்ளது.   முப்பதிற்கும் மேற்பட்ட விடயத் தலைப்புக்களை உள்ளடக்கியதாக இக் கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/194970
    • அப்படியா...... அரவணைத்து விட்டாரா? நான் அறியவில்லை.  இவர் சிங்களவரேதான். அதிலென்ன சந்தேகம்? தன்னை வித்தியாசமானவராக காட்ட முனைகிறார். தமிழர் அழிக்கப்படும்போது இவர் இரக்கம் காட்டவில்லை, முண்டு கொடுக்காவிட்டாலும் மௌனமாக இருந்து ரசித்தவர். அதைவிட தமிழர் தாயகத்தை இரண்டு படுத்தியவர். இனிமேல் இவரே நினைத்தாலும் பிரித்ததை இணைக்கமுடியாது. தமிழரின் முயற்சி, முன்னேற்றம் அவர்களை உறுத்திக்கொண்டே இருக்கும்.    அனுரா எங்கேயும் தான் தமிழருக்கு ஆதரவு என்று சொல்லவில்லை சொல்லவும் மாட்டார் ஆனால் அவர் அரசியலில் காலூன்றுவதற்கு தமிழரின் ஆதரவை எதிர்பார்ப்பார்.  "நம்ப நட, நம்பி நடவாதே." என்பதுதான் நமக்கு பொருந்தும். காலூன்றியபின்னே தன் சுய ரூபத்தை காட்டுவார்.   
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 2 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.