Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று ஹிந்தியச் சுதந்திர தினம்,

Featured Replies

இன்று ஹிந்தியச் சுதந்திர தினமாம், அடுத்தவரின் சுதந்திரத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான உயிர்களை அணு அணுவாய் துடிதுடிக்க அழித்த கொடியவர்களின் சுதந்திர தினமாம். 

இதோ மறத்தமிழினத்தின் ஒரு கருஞ்சாபம்.........

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=J3Rux6P37bY

https://www.facebook.com/lingamvisva?hc_location=stream

https://www.facebook.com/lingamvisva?hc_location=stream

  • தொடங்கியவர்

1002493_693325567348963_2067291936_n.jpg
தமிழர் அனைவரும் இந்திய சுதந்திர தினத்தை புறக்கணிப்போம். 

இந்திய சுதந்திர தினத்தை புறக்கணித்து இந்திய தமிழக அரசின் அடக்குமுறைக்கு உட்படுத்தப் படும் கூடங்குளம் அணு உலை போராளிகளுக்கு துணை நிற்போம். 

ஈழத்தில் போரை நடத்தி பல ஆயிரம் தமிழ் மக்களை கொன்று குவிப்பதற்கு காரணமாக இருந்த இந்திய நாட்டின் சுதந்திர தினத்தை தமிழர்கள் நாம் புறக்கணிப்போம். போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் இலங்கைக்கு ஆயுதம் கொடுக்க தெரிந்த இந்தியாவால் ஒரு தீர்வை பெற்றுத் தர முடியவில்லை. விடுதலை புலிகளை தீவிரவாதிகளாக காட்டி , தமிழகத்தில் இருக்கும் ஈழத் தமிழர்களை முகாமில் அடைத்து கொடுமைப் படுத்தும் இந்திய சுதந்திர தினத்தை நாம் புறக்கணிப்போம். 

சிங்கள கடற்படைக்கு பயிற்சி கொடுத்தும் தமிழர்களை நடுகடலில் சுட்டு வீழ்ந்தும் சிங்கள கடற்படையை இதுவரை கண்டிக்காத காரணத்தால் தமிழ் மீனவர்கள் சார்பாக இந்திய சுதந்திர தினத்தை புறக்கணிப்போம். 

பிரிட்டிஷ் ஆட்சியாளரிடம் இருந்து ஆட்சியை பெற்றுக் கொண்டு பல் வேறு தேசிய இனங்களை சிறைபிடித்து வைத்துக் கொண்டு ஹிந்தி அல்லாதவர்களின் மொழியை அழித்து தேசிய இனங்களில் மொழி உரிமையை பறிக்கும் ஹிந்திய நாட்டின் சுதந்திர தினத்தை புறக்கணிப்போம். 

எல்லா தேசிய இனங்களின் வாழ்வாதாரத்தையும், இயற்கை வளங்ககளும், பண்பாடுகளையும் அழித்து வரும் இந்திய நாட்டின் சுதந்திர தினத்தை நாம் புறக்கணிப்போம். 

ஹிந்தியை தவிர வேறு எந்த மொழிக்கும் ஆட்சி மொழி அதிகாரம் வழங்காமல், மாநிலங்களுக்கு சுயாட்சி அதிகாரமும் வழங்காமல் எல்லா இனங்களுக்கும் அநீதி இழைக்கும் இந்திய சுதந்திர தினத்தை புறக்கணிப்போம் . 

பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து , அவர்கள் நிலங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் இந்திய நாட்டின் சுதந்திரதினத்தை ஒவ்வொரு குடிமகனும் புறக்கணிப்போம்.

சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகும் பல கோடி மக்களின் சார்பாக ஆதிக்க சாதி வெறி பிடித்த இந்திய அலட்சிய அரசின் சுதந்திர தினத்தை மனித இனத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் புறக்கணிப்போம்.

விவசாயிகளின் வாழ்வை அழிக்கும் மீதேன் எரிவாயுத் திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தும் இந்தியாவின் சுதந்திர தினத்தை நாம் புறக்கணிப்போம். 

இன்னும் ஏராளமான விடயங்களில் தமிழினத்திற்கும் மற்ற தேசிய இனங்களுக்கும் எதிராகவே செயல்படும் இந்திய சுதந்திர தினத்தை நாம் புறக்கணிப்போம் . 

உங்கள் எதிர்ப்பை காட்ட ஆகஸ்ட் 15 வரை இந்த படத்தை உங்கள் சுய விவரப் படமாக மாற்றுங்கள் இந்திய சுதந்திர தினத்தை நாம் அனைவரும் புறக்கணிக்கிறோம் என்பதை அனைவருக்கும் சொல்லுங்கள். 

தமிழே நம் தாய் மொழி . தமிழ்நாடே நம் தாய் நாடு. வாழ்க தமிழ்! வாழ்க செந்தமிழ் நாடு !

 
thankx Facebook 
 

Rajkumar Palaniswamy

 

  • தொடங்கியவர்
1175416_431509690299419_88555364_n.jpg
ஆகச்டு 15 தமிழர்கள் ஆங்கிலேயரிடமிருந்து கிந்தியர்களிடம் அடிமையாக்கப்பட்ட தினம்.
  • தொடங்கியவர்

 

‪#‎இந்தியாவிற்கு‬  ‪#‎விடுதலை‬ கிடைக்க காரணமாக அமைந்தவை என்ன? 

1) ‪#‎நேதாஜிசுபாஸ்சந்திரபோஸ்‬‪#‎பகத்சிங்‬ போன்றோரின் தலைமையிலான போராட்டம்

2) ‪#‎மகாத்மா‬ காந்தியின் அகிம்சைப்போர்

3) ‪#‎நேருவின்‬ தலைமையிலான இந்திய ‪#‎காங்கிரசின்‬நடவடிக்கைகள்

4) ‪#‎சுரண்டியது‬ போதும் புறப்படுவோம் என ‪#‎பிரித்தானியா‬எண்ணியமை

5) ‪#‎முதலாம்‬ ‪#‎இரண்டாம்‬ உலகப் போர்களால் பிரித்தானியா சற்று வலுவிழந்தமை

6) பிரித்தானிய ‪#‎குடியேற்ற‬ நாடுகளில் பிரித்தானியாவிற்கு‪#‎எதிரான‬ ‪#‎செயற்பாடுகள்‬ தீவிரமடைந்தமையால் வெளியேற தீர்மானித்தமை

7) ‪#‎மேற்கூறிய‬ எல்லாம்

 இல்லை இந்திய மக்களுக்கும் ‪#‎தேசிய‬ ‪#‎இனங்கள்‬பலவற்றுக்கும் இன்னும் #விடுதலை கிடைக்கவில்லை- இது பிரித்தானிய அரசின் நேரடி ஆட்சியில் இருந்து விடுபட்டமையே தவிர ‪#‎வேற்று‬ நாடுகளினதும் ‪#‎பல்தேசிய‬நிறுவனங்களினதும் மறைமுக பிடியிலிருந்து இந்தியா மீளவில்லை

9) மேற்கூறிய அனைத்தும் தவறு. விடுதலை அடைந்தமைக்கு காரணங்கள் வேறு( உங்கள் கருத்தை பதிவு செய்யவும்)

 ‪#‎நன்றி‬

  • தொடங்கியவர்

இந்தியா எனும் புனைவு தேசத்தின் விடுதலையையும், சுதந்திர தினத்தையும், சில புரட்சியாளர்களையும் பற்றிய காணொளிகளை பார்த்து கொண்டு இருந்த போது ஒன்று விளங்கியது. முன்பெல்லாம், லாலா லஜபதி ராயின் படுகொலைக்காக பலி(ழி) வாங்கிய பகத் சிங்கையும், சுக் தேவையும்; ஜாலியன் வாலாபாக் படுகொலைகளுக்காக லண்டனிலேயே பல ஆண்டுகள் காத்திருந்து, உதம் சிங் ஜெனரல் டையரை பலி(ழி) வாங்கியதை தேச பற்றாகவும், வீர தீர செயலாகவும் கொண்டாடிய இந்திய அதிகார வர்க்கம் இனி அப்படி செய்யாது என்றே தோன்றுகிறது! பகத் சிங்குகளால் இனி இருப்புக்கு ஆபத்து, எனவே சுருட்டியதை பாதுகாக்க கரம்சன் காந்திகளின் காயடிப்பு மந்திரம் அவசியம்!

குறைந்த பட்சம் மேனன்களும், நாராயணன்களும் பகத் சிங்குகளை ரசிக்க மாட்டார்கள், பழிவாங்கும் படலம் நிறைந்த பழைய சுதந்திர போராட்ட கதைகள் அவர்களின் வயிற்றில் புளி(லி)யை கரைக்கும்! இனியும் இந்த மண்ணில் உதம் சிங்குகளின் உதயம் தங்கள் உயிர்களுக்கு உத்திரவாதம் அளிக்காது என்பது விஜய் நம்பியார்களுக்கும், சிவசங்கர மேனன்களுக்கும், நாராயாணன்களுக்கும் நன்றாக தெரியும்! மக்களின் உளவியல்தான் இங்கே ஆச்சரியப்பட வைக்கிறது, ஜாலியன் வாலாபாக் படுகொலைகளுக்கு பழிவாங்க லண்டன் வரை சென்று டையரை சுட்டுக்கொன்ற உதம் சிங்கை மாவீரனாக கொண்டாடும் அதே தேசமும், மக்களும்தான், ஈழ மண்ணில் நித்தமும் ஜாலியன் வாலாபாக் படு கொலைகளை நடத்திய ராஜீவை கொன்ற தானுவை தீவிரவாதி என்கிறது!

ஆட்சியும் அதிகாரமும் படைத்தவர்கள் வரலாற்றை எழுதியதால் உதம் சிங் வரலாற்று நாயகனாகவும், தானுக்கள் தீவிரவாதிகளாகவும் ஆகிப்போனார்கள். ஐம்பது ஆண்டுகளாக தமிழனுக்கு (புரட்டு) வரலாறு எழுதிய 'திராவிட இடைத்தரகு' கோமான்கள், ராஜீவின் வாரிசுகளின் காலடியில் அதை சமர்ப்பணம் செய்துவிட்டு, ராஜிவுக்கு தண்டனை வழங்கியவர்களில் எஞ்சியவனுக்கு தூக்கு தண்டனைக்கான நாள் குறிப்பதில் ஆட்சேபனை இல்லை என்று குறிப்பு அனுப்பிவிட்டார்கள்! இன்று திராவிட புரட்டு வரலாற்று புரிதலில் தமிழனே, தானுவை தீவிரவாதி என்றும், ராஜீவின் கொலையே புலிகள் தோற்க காரணம் என்றும் சொல்லி சட்டை பையில் மூவர்ண கொடி குத்தும் போது வலிக்கத்தான் செய்கிறது, குண்டூசி இதயம் வரை ஊடுருவி இரத்தம் கசியத்தான் செய்கிறது!!!

 

  • தொடங்கியவர்

மலர்ந்து கொண்டிருக்கும் இந்திய சுகந்திரதினத்தை கொண்டாடும் இந்தியர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள் .

இந்திய தேசிய கொடியை முகநூலில் சிலர் சில நாட்களாக காலில் போட்டு மிதிப்பதும் அவமானப்படுத்துவதும் காணக் கூடியதாக இருந்தது அதைப்பார்த்து துடித்துப் போன மனிதர்களுக்கு என்னால் ஆறுதல் கூட சொல்ல முடியவில்லை காரணம் நான் ஈழத்தமிழன் இந்திய சிறிலங்கா கூட்டு சதியால் நாடற்று நாடு நாடாக அலையும் ஒரு தமிழன் .உயிரற்ற ஒரு கொடிக்கு கொடுக்கும் மதிப்பேனும் உயிர் உள்ள எனக்கு இல்லை .

எம் இனத்தை லச்சக்கணக்கில் கொன்று குவித்து என் தாயை என் சகோதரியை அம்மணமாக்கி அவளின் மார்பிலே காலை வைப்பதற்கு சிங்களத்துக்கு துணை போன கறை படிந்த இந்தியாவையும் இந்திய தேசிய கொடியையும் என்றுமே என்னால் மறக்க முடியாது .அக்கொடியை யாரும் மிதிக்க வேண்டாம் .எமது மார்பினிலே காலை வைத்து எம் தாய் சகோதரிகளின் 
மார்பில் கால் வைத்து உங்கள் தேசிய கொடியை உயரப் பறக்க விடுங்கள் .எங்கள் தோட்டமும் ஒருநாள் பூ பூக்கும் அன்று தேனிகள் கூட்டம் கூட்டமாக வரும் மறவாதீர்கள்.. 

..........மன வேதனையுடன் ..பா .சங்கிலியன் ...

 

Edited by nunavilan

அரசியல் வாதிகளுக்காக நாட்டை பகைப்பது சரியல்ல. பல இந்தியர்களுக்கு இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியவில்லை.

அரசியல் வாதிகளுக்காக நாட்டை பகைப்பது சரியல்ல. ல இந்தியர்களுக்கு இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியவில்லை.

 

அதனால் நாட்டைப் பகைப்பதில் தவறில்லை என்பதே சரியான செய்தி !

 

இதோ மறத்தமிழினத்தின் ஒரு கருஞ்சாபம்.........

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=J3Rux6P37bY

 

இந்திய சுதந்திர தினத்தில் அவர்களுக்கு பொருத்தமான பரிசு!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.