Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்வரும் 25ம் திகதி நவநீதம்பிள்ளைக்கும்; ஷிராணி பண்டாரநாயக்கவுக்கும் இடையில் விசேட சந்திப்பு :

Featured Replies

shirani_CI.jpg

 

 
எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கை செல்லும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
 
கடந்த மார்ச் மாதம் நம்பிக்கையில்லாத தீர்மானம் ஒன்றின் மூலம் ஷிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதன் பின்னர் அவர் கலந்து கொள்ளும் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை இதுவாகும்.அத்துடன் ஷிராணி பண்டாரநாயக்க பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், சந்திக்கும் முதல் சர்வதேச ராஜதந்திரி நவநீதம்பிள்ளை என்பதும் குறிப்பிடதக்கது.
 
இதற்கு முன்னர் ஸ்கைப் மூலமாக சர்வதேச நீதிபதிகள் சங்கத்தின் கூட்டத்தில் உரையாற்ற பண்டாரநாயக்க தயாராக இருந்த போதிலும் தொழிற்நுட்ப தடைகள் காரணமாக அந்த உரையை ஆற்ற முடியாது போனது. மனித உரிமை ஆணையாளருடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விடயங்கள்,  அடுத்த கட்ட செயற்பாடுகள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்தும் பேசப்படும் என தெரியவருகிறது.
 
இந்த பேச்சுவார்த்தை எங்கு நடத்தப்படும் என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.  ஷிராணி பண்டாரநாயக்கவின் வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெறலாம் என தெரியவருகிறது.
 
 
மனித உரிமை ஆணையாளர் இலங்கை சென்று யாரை சந்திக்க வேண்டும் என்று தீர்மானம் எடுக்கும் அதிகாரம் இலங்கை அரசாங்கத்திற்கு இல்லை என ராஜதந்திர ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், ஆணையாளருக்கு இவ்வாறான விஜயத்திற்கு இடமளிக்கப்படும் என இலங்கை உறுதியளித்திருந்ததே இதற்கு காரணமாகும்.
 
அதேவேளை இலங்கை செல்லும் நவநீதம்பிள்ளை அரச தரப்பினரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சிறுபான்மை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்க உள்ளார்.
 
அத்துடன் வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேச மக்களையும் அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உயர் அதிகாரிகளையும் சந்திக்க உள்ளார்,

விக்னேஸ்வரனையும் சந்தித்தால் நல்லது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.