Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் ஈழத்தில் பிறந்திருந்தால் உலக அளவில் புகழ் பெற்றிருப்பேன்: மூலிகை பெட்ரோல் ராமர்பிள்ளை பேட்டி!

Featured Replies

1157703_10153138010510198_1026207217_n.j
நான் ஈழத்தில் பிறந்திருந்தால் உலக அளவில் புகழ் பெற்றிருப்பேன்: மூலிகை பெட்ரோல் ராமர்பிள்ளை பேட்டி! 

பெட்ரோலுக்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிக்க வேண்டும் என்று பேச்சு எழும் பொழுதெல்லாம் இவர் குறித்த பேச்சு எழாமல் இல்லை. ராமர் பிள்ளை உலகையே தனது மூலிகை பெட்ரோலின் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர். இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற கேள்விக்கு. அவர் திசைகாட்டி இணையத்திற்கு வழங்கிய நேர்க்காணல்.

வணக்கம் அய்யா உங்களது ஆராய்ச்சியின் மீதான ஆர்வம் எங்கிருந்து தொடங்கியது. எது உங்களுக்கு ஊக்க சக்தியாக இருந்தது?

காரணம் என்று சொல்லவேண்டும் என்றால் நம்முடைய இலக்கியங்கள் தான் என்று சொல்லவேண்டும். நான் என் பள்ளியில் சுற்றுலாவிற்கு சென்றிருந்த பொழுது. ஒரு இடத்தில் நாங்களெல்லாம் சமையல் செய்துக்கொண்டிருந்தோம். அப்பொழுது பக்கத்திலருந்த ஒரு பச்சை மூலிகையில் சிறிது நெருப்பு பட்டு நெருப்பு பிரகாசமாக எரிந்தது.

அப்பொழுது அங்கிருந்த தமிழ் ஆசிரியரிடம் கேட்ட பொழுது அவர் இப்படியான மூலிகைகள் இருக்க தான் செய்கிறது என்று சொன்னார் நம் இலக்கியங்களில் இது குறித்து இருக்கிறது என்று சொன்னார் அப்பொழுது ஏற்பட்ட ஆர்வத்தில் நம்முடைய புறநானூறு அகானாநூறு போன்ற போன்ற புத்தகங்களை படிக்கும்பொழுது தான் எனக்கு இதில் அதிக ஆர்வம் ஏற்பட்டது.

குறிப்பாக புறநானூறில் நம்முடைய மலையும் மலை சார்ந்த மூலிகைகளை குறித்து நிறைய குறிப்புகள் இருக்கிறது. அது குறித்த தேடல்களை தொடங்கும்பொழுது தான் மூலிகை பெட்ரோல் தொடர்பான ஆர்வம் ஏற்பட்டது.

நம்முடைய அறிய இலக்கிய நூல்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடைய விடாமல் பல இருட்டடிப்புகள் செய்யப்படுவது வேதனையளிக்கிறது. ரைட் சகோதரர்கள் விமானம் தயாரித்ததற்கு முன்பே நம் ஆரியபட்டர் விமானம் தயாரித்ததர்க்கான ஆதாரங்கள் இருக்கிறது. பின் ஏன் இப்படியான விஷயங்கள் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. நம்மிடம் எது இல்லாமல் இருந்திருக்கிறது சிந்து சமவெளி நாகரீகம் தான் உலகின் தொன்மையான நாகரிகம் என்கிறார்கள். அங்கு கண்டுபிடிக்கபட்ட கட்டிடங்கள் சுட்ட செங்கல்களால் கட்டப்பட்டது அவ்வளவு அறிவு வளர்ச்சியுற்ற சமுதாயம் தான் நாம். அங்கு தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது அதில் குதிரை போன்ற உருவங்கள் பதிக்கப்பட்டிருக்கிறது எப்படி இதையெல்லாம் செய்தார்கள். இதெல்லாம் எதை காட்டுகிறது. அவ்வளவு அந்த அளவிற்கு அறிவியல் வளர்ச்சியில் இருந்திருக்கிறோம். என் ஆராய்ச்சியின் மீதான தொடக்கம் நம் தொன்மையின் சரித்திரத்தில் இருந்து தான் தொடங்கியது.

ஒட்டு மொத்த உலகத்தையே உங்கள் பக்கம் திருப்பி வைத்திருந்தீர்கள். என்ன ஆனாது இடைப்பட்ட இந்த காலத்தில்?

எல்லாம் அரசியல் தான் காரணம் அரசியல் செய்ய எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் அரசியல் கலந்தது தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்.

இடைப்பட்ட இந்த பத்து வருடங்களில் நான் எங்கிருக்கிறேன் எப்படி இருக்கிறேன் என்றே தெரியாமல் இந்திய மக்கள் இருக்கிறார்கள் ஆனால் இடைப்பட்ட இந்த காலத்தில் வெற்றிகரமாக என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை உடைத்துக்கொண்டு தான் இருக்கிறேன்.

என்ன நடந்தது எது நடந்தது என்ற விவரங்களை சி.பி.ஐ நீதிமன்றத்தில் விசாரணை நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. அவை அத்தனையும் ஆவணப்படுத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. இந்த வழக்கு இப்பொழுது முடியும் தருவாயை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

வழக்கு இன்னும் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் என்னால் அதிகம் பேச முடியாது ஆனால் ஒன்று மட்டும் சொல்ல முடியும் நீதிமன்றத்தில் சி.பி.ஐ அதிகாரியை எந்தரப்பில் கிட்டதட்ட 116 மணி நேரம் குறுக்கு விசாரணை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை எந்த வழக்கிலும் சி.பி.ஐ அதிகாரியை இவ்வளவு நேரம் குறுக்கு விசாரணை செய்யப்பட்டதில்லை என்பதிலிருந்தே என் பக்கம் உண்மை இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த வழக்கு முடியும்பொழுது என் மீது சுமத்தப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுக்களுக்கும் சம்மட்டி அடியாக இது இருக்கும். அந்த தீர்ப்பு எனக்கு விடிவாக இருக்கும் என்பதை விட ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளாதாரத்திற்கும் அது விடிவாக இருக்கும் என்பதே உண்மை.

ஐயா உங்களது மாற்று எரிபொருளான மூலிகை பெட்ரோலை இந்தியா ஏன் ஏற்க மறுக்கிறது?

சமீப காலமாக இங்கு மேற்கத்தைய நாகரிகத்தின் மீதான மோகம் அதிகரித்திருக்கிறது அது வெளிநாட்டில் எது கண்டுபிடிக்கப்பட்டாலும் அதை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்கிறது. ஆனால் உள்நாட்டில் கண்டுபிடிக்கப்படும் கண்டுபிடிப்புகளை மட்டும் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கிறது. அது தான் என் விஷயத்திலும் நிகழ்ந்திருக்கிறது.p5

கொக்ககொலாவில் பூச்சி மருந்து இருக்கிறது என்று நிரூபிக்கப்பட்ட பின்னும் அதை தடை செய்யாத இந்த நாடு. என்னுடைய மூலிகை பெட்ரோலின் மீது எந்த குற்றச்சாட்டும் யாராலும் நிரூபிக்கப்படாத நிலையில் தடை செய்தது. நான் ஏற்கனவே சொன்னதுபோல் நாம் அடையாத அறிவியல் வளர்ச்சி என்ன இருக்கிறது விமானம் தயாரித்த அளவிற்கு அறிவியல் வளர்ச்சியை எட்டியவர்கள் தான் நாம்.

நம்மால் ஒரு மாற்று எரிபொருளை கண்டுபிடிக்க முடியும் என்றால் வெளிநாட்டவர்கள் ஏற்றுக்கொண்டாலும் நம்மவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். என்னுடைய கண்டுபிடிப்பை அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டு பாராட்டுகிறார்கள் என் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்களை அவர்கள் முற்றிலுமாக மறுக்கிறார்கள். சில நல்ல நண்பர்களின் உதவியோடு உலகம் தழுவிய வகையில் பல நாடுகளின் சோதனை சாலைகளில் என் கண்டுபிடிப்பிற்கு நான் அங்கீகாரம் வாங்கி வைத்திருக்கிறேன். விரைவில் இந்தியாவிலும் என் மீதான குற்றச்சாட்டுக்களை தகர்த்தெறிவேன் இது நடக்கத்தான் போகிறது.

மூலிகை பெட்ரோல் தவிர்த்து நீங்கள் வேறு ஏதாவது துறையில் ஏதாவது ஆராய்ச்சியை செய்கிறீர்களா ஐயா?

நம் நாடு சந்தித்துவரும் மின்சார பிரச்னையை தீர்க்கும் விதமாக ஒரு ஆராய்ச்சியை செய்து வருகிறேன் அதுவும் இந்த மூலிகை பெட்ரோல் சார்ந்த ஆராய்ச்சி தான். முதலில் நம் நாட்டின் பெரிய பிரச்சனையான பெட்ரோலுக்கு ஒரு தீர்வை ஏற்படுத்தி விட்டு தான் அடுத்த ஆராய்ச்சிக்கு செல்லலாம் என்றிருக்கிறேன்.

உங்களது மூலிகை பெட்ரோல் எப்பொழுது மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்?

இன்றைய நாட்களில் பெரும்பாலான புதிய புதிய நோய்களுக்கு வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை தான் காரணமாக இருக்கிறது. அதற்கு மாற்றாக நான் கண்டுபிடித்திருக்கும் மூலிகை பெட்ரோல் இருக்கும். பல நாடுகளின் அறிவியல் சோதனை சாலைகளில் என் கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் பெற்று வைத்திருக்கிறேன். என்னுடைய கண்டுபிடிப்பு நீதிமன்றத்தின் மூலமாக இன்னும் இரண்டு மாதங்களுக்குள் என்னுடைய மூலிகை பெட்ரோல் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் முயற்சி நடைபெற்று வருகிறது. இரண்டு மாதங்களுக்குள் நிச்சயமாக என்னுடைய மூலிகை பெட்ரோல் பயன்பாட்டுக்கு வரும்.

உங்களின் மூலிகை பெட்ரோல் பயன்பாட்டிற்கு வந்தால் என்ன விலை இருக்கும்?

நான் பத்து வருடங்களுக்கு முன் 15 ரூபாய்க்கு இந்த பெட்ரோலை மக்களுக்கு வழங்கினேன். மத்திய புலனாய்வு துறை எனக்கு கேட்டது செய்கிறேன் என்ற பெயரில் நல்லது தான் செய்திருக்கிறது என்று நினைக்கிறேன். ஏனென்றால் இந்த பத்து வருட தொடர் ஆராய்ச்சியில் இன்றைய நிலையில் என்னால் 5 ரூபாய்க்கு வழங்க முடியும் அதிகப்படியாக 20 ரூபாய்க்குள் மக்களுக்கு கிடைக்கும் வகையில் என்னால் உறுதியாக கொடுக்க முடியும்.

பல உலக நாடுகள் உங்கள் கண்டுபிடிப்பை அங்கீகரிக்கிறது என்று சொல்கிறேர்கள் உங்களது கண்டுபிடிப்பை எங்களுக்கு கொடுங்கள் என்று ஏதாவது நாடு உங்களை அனுகியிருக்கிறதா?

சில நாடுகள் என்னை அணுகி இருக்கிறார்கள் அதற்கான சில வேலைகளும் நடக்கிறது ஆனால் முதலில் என் கண்டுபிடிப்பு இந்தியாவிற்கு தான் பயனளிக்க வேண்டும் அதற்காக தான் காத்துக்கொண்டிருக்கிறேன்.

ஐயா நீங்கள் ஒரு தமிழராக இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

உங்களுக்கு சில விடயங்களை சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். நான் மத்திய புலனாய்வு துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பொழுது என்னுடன் அடைக்கபட்டிருந்த இன்னுருவரின் பெயர் விக்டர். அவர் கோடம்பாக்கத்தில் பத்மநாபா கொலை வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டிருந்தார். நான் சிறையிலிருந்த 60 நாட்களும் தமிழினம் சந்தித்த துயரங்களை குறித்து நாங்கள் பேசிக்கொண்டிருப்போம். நேரடியாக அவர் சொன்ன விடயங்கள் அவ்வளவு துயரகரமானது.

ஈழத்தில் ஒருவேளை தெலுங்கர்களோ, மலையாளிகளோ, கன்னடர்களோ இருந்திருந்தால் இப்படியான சம்பவம் நடக்க நிச்சயம் இந்தியா விட்டிருக்காது. அதாவது தமிழனாக பிறந்த ஒரே காரணத்திற்க்காக தான் தமிழினம் இப்படியான துயரங்களை சந்தித்து நிற்கிறது.

நம்முடைய சொந்தங்கள் எல்லாம் அங்கு துடிதுடித்து சாகும்பொழுது நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று வேதனையாக இருக்கிறது. நான் தான் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவன் ஒரே தலைவன் என்று சொல்லி கொண்டவர்கள் எல்லாம் இனம் அழியும் பொழுது வேடிக்கை தானே பார்த்தார்கள் என்று வேதனையளிக்கிறது. இதற்க்கு காரணமாக இருந்தவர்கள் நிச்சயம் ஒரு நாள் தண்டனை அனுபவிப்பார்கள்.

நீங்கள் பேசுவதை பார்த்தால் நீங்கள் தமிழ் உணர்வாளரார் என்று தெரிகிறது மேதகு. வே. பிரபாகரன் அவர்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

என் வாழ்வில் நான் இருவரை மாவீரன் என்று சொல்வேன் ஒருவர் அண்ணன் பிரபாகரன் மற்றொருவர் வீரப்பன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த இனத்திற்காக வாழ்ந்தவர் அவர் அவரை எவராலும் அழிக்க முடியாது. மேலும் ஒன்றை சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன் ஒருவேளை நான் ஈழத்தில் பிறந்திருந்தால் என் கண்டுபிடிப்புகள் உலக அளவில் போற்றப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

பல சர்ச்சைகளுக்கு பின்பும் நீண்ட போராட்டத்திற்கு பிறகு பல்வேறு நாடுகள் வழங்கிய தர சான்றிதழ்களை கையில் வைத்திருக்கிறார். இன்னும் ஓரிரு மாதங்களில் தனது மூலிகை பெட்ரோல் பயன்பாட்டில் வந்துவிடும் என்று உறுதியாக நம்புகிறார். இம்முறை நிச்சயம் வெற்றிபெற நமது வாழ்த்துக்களுடன் விடைபெற்றோம்.

நன்றி : http://thisaikaddi.com/?p=24032

 

யாழன்புக்கும் அந்த கம்பனியில் பங்கு இருக்கு போல் இருக்கு. மூலிகை பெறோலில் நல்ல ஆர்வம் காட்டி வருகிறார்.  :lol:

ஈழத்தில் சிங்கள அரச காடையர்கள் நிறைய கழிவு ஒயில் வீசுவதைக் கேள்விப்பட்டதும் ராமருக்கு இந்த நினைப்பு வந்திருக்கலாம்.

ஈழத்தமிழர் ஒன்றும் ஏமாளிகள் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மூலிகைப் பெற்றோல் விடயத்தில் மத்திய புலனாய்வுத்துறை தலையிடும் அளவிற்கு அப்படியென்ன சிக்கல்? ராமர் பிள்ளை விரும்பினால் அதை அவர் தயாரித்துத்தனது காருக்கு விட்டு ஓடிப்பார்த்திருக்கலாம். அதை யார் தடுத்திருக்கப் போகிறார்கள்? பக்கத்து வீட்டுக்காரனுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்து ஓடச் சொல்லியிருக்கலாம்.

 

ஒரு பதார்த்தம் சரியாகச் செயற்பட்டால் அது தானாகவே சந்தைக்கு வந்துவிடும். இது நாம் விளைவிக்கும் மரக்கறியைச் சந்தைப்படுத்துவது போல ஒரு விடயம்தான். அடுத்த கட்டம்தான் பெற்றோலியக் கம்பனியொன்றை உருவாக்குவது. அதுவும் பெரிய விடயமில்லை.  கார்களெல்லாம் குறைந்த செலவில் ஓடும்போது கம்பனியும் தானாகவே வளர்ச்சியடைந்துவிடும்.  

 

ராமர் பிள்ளை  எதற்காக எல்லாவற்றையும் சிக்கலாக்கித் தற்போது தேசியத் தலைவரையும் வீரப்பனையும் வேறு இழுத்து இந்த விடயத்திற்குத் தேவையில்லாத விடயங்களைக் கையிலெடுக்கிறாரோ தெரியவில்லை. கொஞ்சம் பச்சிலை மூலிகைகளைப் பயிரிட நிலம் வேண்டுமென்றால் ஆரம்பத்தில் கம்பனியை வளர்த்தெடுக்க யாராவது கொடுக்காமல் விட்டுவிடுவார்களா?  கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கும்போது எங்கோ இடிக்கிறது.  ராமர் பிள்ளைக்குத்தான் அது வெளிச்சம்.

  • தொடங்கியவர்

யாழன்புக்கும் அந்த கம்பனியில் பங்கு இருக்கு போல் இருக்கு. மூலிகை பெறோலில் நல்ல ஆர்வம் காட்டி வருகிறார்.  :lol:

ராமர்பிள்ளைய நம்பி முதலீடு செய்த பணத்தை வெளிய எடுக்க விட மாட்டீங்க போல மல்லை அண்ணா  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.