Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரங்கேற்றிய அராஜகம் - நடுத்தெருவுக்கு வந்துவிட்ட அங்கஜன் இராமநாதன் அரச ஆதரவுக் குண்டர்கள்

Featured Replies

anga%2011.jpgஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட பிரதம அமைப்பாளரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமாகிய அங்கஜன் இராமநாதன் நேற்று யாழ்ப்பாணத்தில் அரங்கேற்றிய அராஜகத்தின் மூலமாக தனக்கு இருந்த சிறியளவிலான செல்வாக்கையும் இழந்து விட்டார் என்று யாழ்.குடாநாட்டு மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த தாக்குதலை தாங்கள் மிக வன்மையாக கண்டிப்பதாகவும் இந்த சம்பவத்தை சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கு கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரியுள்ளனர்.

அராஜகங்கள் மூலமாக அரசியல் செய்கின்ற எவரையுமே நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அங்கஜனின் தந்தையான இராமநாதன் தலைமையிலான குண்டர் படை கூட்டமைப்பு மீது மேற்கொண்ட தாக்குதலானது அங்கஜன் அணியினர் வன்முறைகள் மூலமாக யாழ்ப்பாண மக்களைப் பணிய வைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளமைமைத் தெட்டத் தெளிவாக உணர்த்துவதாகவும் யாழ்.குடாநாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலானது குடாநாட்டில் எவருக்கும் பாதுகாப்பு அற்ற தன்மையை உணர்த்துகின்றது. அரச ஆதரவுடன் எதையும் செய்யலாம் என்ற நிலையை வெளிக்காட்டியிருக்கின்றது. தாக்குதல் நடத்திய அங்கஜனின் தந்தை இராமநாதனை பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர். உடனடியாக கைதுசெய்யப்பட வேண்டிய ஒருவரை எந்த சட்டத்தின் கீழ் பாதுகாக்க முடியும் என்றும் குடாநாட்டு மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இது தொடர்பில் குடாநாட்டு மக்கள் மேலும் கருத்து வெளியிடுகையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தம்பிராசா மற்றும் கூட்டமைப்பு வசமுள்ள காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் ஆனைமுகன் ஆகியோர் பயணித்த வாகனத்தை யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியில் இடைமறித்த அங்கஜனின் தந்தை இராமநாதன் உள்ளிட்ட அங்கஜனின் அரச ஆதரவுக் குண்டர்கள் வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்து நாசமாக்கினர். பின்னர் பிஸ்டல் எடுத்து தம்பிராசாவைச் சுடுவதற்கு முற்பட்டுள்ளனர். இதற்கிடையே வீதிக் காவல் கடமையில் நின்ற பொலிஸார் வாகனம் உடைக்கப்படுவதை அவதானித்து அங்கு ஓடி வந்தபோது இராமநாதன் அந்த வீதியிலுள்ள தங்கள் வர்த்தக நிலையத்தினுள் ஓடி ஒழிந்துகொண்டார்.

anga%2012.jpg

இராமநாதனே கூட்டமைப்பு வேட்பாளரின் வாகனத்தை அடித்து உடைத்து அவரைச் சுட முயன்ற அராஜகத்தை மேற்கொண்டதற்கு போதிய ஆதாரங்கள் உள்ள போதிலும் அவரைக் கைது செய்யாமல் பொலிஸார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அரச ஆதரவாளர்கள் சட்டத்தை மதிக்காமல் கொலை செய்தாலும் அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் நிலமையே யாழ்ப்பாணத்தில் நிலவுகின்றது. இந்த அராஜகத்தை தட்டிக்கேட்க எவரும் இல்லாவிட்டால் நிலைமை மிக மோசமாக மாறுவதை எவருமே தடுக்க முடியாமல் போகும்.

ஆங்கஜன் இராமநாதனின் குண்டர்கள் மேற்கொண்ட அராஜக செயற்பாடுகள் இது தான் முதன் முறையன்று. கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலத்தின்போது பிரச்சாரங்களை மேற்கொண்டுவிட்டு திரும்பிய யாழ்.மாநகர மேயரை பெண் என்றும் பார்க்காமல் அங்கஜன் அணி அவர் மேல் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இதன் போது அங்கஜனின் தந்தை இராமநாதன் என்பவர் மாநகர பெண் மேயரின் குடுமியில் பிடித்து அவரை இழுத்து தாக்கியிருந்தார். மேலும், அதற்கு பின்னர் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் நிஷாந்தனை கொழும்பிலிருந்து கடத்திச் சென்று வீட்டில் கட்டி வைத்து கடுமையாக தாக்கிய பின்னர் விடுதலை செய்தனர். இப்போது கூட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த அராஜகங்களை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் குடாநாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அண்மையில் யாழ்.குடாநாட்டில் அரசியல் ஆதரவுடன் வழங்கப்பட்ட சமுர்த்தி, மற்றும் சிற்றூழியர் நியமனங்களின் போது குறிப்பிட்டளனவானோருக்கு நியமனங்களை வழங்கி அவர்களினதும் அவர்களின் உறவினர்களதும் ஆதரவுகளை அங்கஜன் பெற்றிருந்தார். அவர்களின் செல்வாக்கை நம்பியே அவர் தேர்தல் களத்திலும் இறங்கினார். ஆனால், நேற்று யாழ்ப்பாணத்தில் அங்கஜன் இராமநாதனின் குண்டர்கள் மேற்கொண்ட அராஜகத்தின் பின்னர் அந்த ஆதரவையும் இழந்து அங்கஜன் நடுத்தெருவுக்கு வந்துவிட்டதாக யாழ்.குடாநாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.

 anga%201.JPG

anga%202.JPG

anga%203.JPG

anga%204.JPG

anga%205.JPG

anga%208.JPG

anga%209.JPG

anga%2010.JPG

http://www.sankathi24.com/news/32447/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.