Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவனீதம்பிள்ளையை கொழும்பில் சந்திக்க நடவடிக்கை – சுமந்திரன்

Featured Replies

வடக்கு மக்கள் பற்றி சிந்திக்காவிட்டாலும் தென் பகுதியை கருத்திற் கொண்டாவது இராணுவமயபடுத்தலுக்கு முடிவு காணுங்கள் :

Sumandran_CI.jpg

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை கொழும்பில் சந்திப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
 
எதிர்வரும் 30ம் திகதி தமது கட்சிப் பிரதிநிதிகள் நவனீதம்பிள்ளையை சந்திப்பார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான பிரதிநிதிகள், இவ்வாறு நவனீதம்பிள்ளையை சந்திப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
 
கூட்டமைப்பினர் நவனீதம்பிள்ளையை சந்திப்பதற்கான நேரம் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தல்கள் மற்றும் மனித உரிமை நிலைமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் 25ம் திகதி நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
 
 
வடக்கு மக்கள் பற்றி சிந்திக்காவிட்டாலும் தென் பகுதியை கருத்திற் கொண்டாவது இராணுவமயபடுத்தலுக்கு  முடிவு காணுங்கள் :
 
நாடு இராணுவ மயமாக்கப்பட்டிருப்பதை வெலிவேரிய ரத்துபஸ்வல சம்பவம் நன்கு உணர்த்தியுள்ளது எனவும்  தெற்கில் இப்படி இருக்குமாயின் வடக்கைப் பற்றி எண்ணி பார்க்கவேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
 
 
வடக்கு மக்கள் பற்றி சிந்திக்காவிட்டாலும் பரவாயில்லை. தென் பகுதியை கருத்திற் கொண்டாவது இராணுவமயபடுத்தலுக்கு  முடிவு காணுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் சுமந்திரன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
 
வெலிவேரிய சம்பவம் தொடர்பாக நேற்று சபையில் நடைபெற்ற சபை ஒதம்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். வெலிவேரிய ரத்துபஸ்வல சம்பவத்-துடன் தொடர்புடைய குடி¬நீர்ப்பிரச்¬சினை குறித்து இங்கு பேசப்பட்டாலும் அங்கு இடம்பெற்ற சம்பவம் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.
 
 
குடிநீர் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்றதால் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். அதே¬போன்று அங்கு கொல்லப்பட்ட மக்கள் தொடர்பில் நாம் எமது கவலையையும் தெரிவித்துக்கொள்கிறோம். இங்குள்ள பிரச்சினை என்னவெனில் சிவிலியன் பிரச்சினைகளின்போது இராணுவம் எவ்வாறு ஈடுபடுத்த முடியும் என்பதே ஆகும்.
 
யுத்தம் நிறைவடைந்து நான்கு வருடங்கள் கடந்து விட்ட நிலையில் இராணுவத்தை ஈடுபடுத்தக் கூடியதும் பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாததுமான நிலைமைகள் எங்கும் ஏற்பட்டிருக்கவில்லை. 
 
எனினும் வெலிவேரியவில் இடம்பெற்றுள்ள சம்பவத்தின் மூலம் நாடு இராணுவமய மாக்கலுக்குள் உட்பட்டிருப்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
 
யுத்தம் ஒன்று இடம்பெறுமானால் அங்கு இராணுவத்தைப் பயன்படுத்தமுடியும். எனினும் சிவிலியன்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு இராணுவத்தை ஈடுபடுத்த முடியாது. வெலிவேரிய ரத்துபஸ்வல சம்பவத்தினூடாக வடக்கில் இடம்பெற்றவை பற்றி இங்கு நன்றாக உணர்ந்து கொள்ள முடியும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.