Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாத்தக சோலையின் சொந்தகாரருக்கு ஒரு பகிரங்க மடல்..!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாத்தக சோலையின் சொந்தகாரருக்கு ஒரு பகிரங்க மடல்..!

வணக்கம்,

வர்த்தக சோலை ஏற்பாட்டார்களே, உங்கள் இன உணர்விற்க்கும், உறவுகள் மீது நீங்கள் கொண்டிருக்கும் ஈடு இணையற்ற நேசத்துக்கும் நன்றிகள். தினம் தினம் தமிழர்கள் தாயகத்தில் செத்து மடிகையில், உங்களை போன்றவர்களின் திருவினையால் தானாம் அவர்கள் ஆத்மா சாந்தியடைகின்றது.

உன் உடலில் ஓடும் தமிழ் இரத்தத்தை எவன் மாற்றினான்? தமிழன் இரத்தம் மண்ணில் ஓட மகிழ்ந்து கொண்டாட உங்களால் எப்படி முடிகின்றது? தமிழ் ஒற்றுமை வாரம் என்று கனடாவில் புலிகளுக்கு எதிரான தடைச் சட்டத்தை எதிர்த்து கனடிய தமிழரால் கொண்டாடும் இவ்வேளை , உங்கள் நிகழ்ச்சிகள் தொடர்ந்த வண்ணமே இருந்தன. என்ன ஒரு இன உணர்வு பாருங்கள். உங்களை போன்ற ஒரு தமிழனை நான் இது வரை கண்ணடதில்லை கேளீர். தனியோரு மனிதனின் பிழைப்புக்காய், பல்லாயிரம் தமிழரின் உழைப்பில் உருவான தமிழர் வாரத்தில், உங்கள் நிகழ்ச்சி நடைபெற்றதானது, உங்களையும் உங்கள் எண்ணங்களையும் தமிழ் மக்களுக்கு தோலுரித்து காட்டியுள்ளது.

புலிகள் தடை செய்யப்பட்டதில் உள்ளுர மகிழ்வடையும் ஒரு சிலரில் நீங்களும் ஒருவர் என்பது எமக்கும் தெரியாததல்ல. உங்களை விட இங்கே புலியேதிர்ப்பை கொண்டு பிழைக்கும் வானொலிகளும், பத்திரிகைகளும் மேல். விடுதலையை நேசிப்பவனாய் வேடமிட்டு நீங்கள் பெற்ற லாபங்கள் அதிகம் என்பதால் தானோ என்வோ இன்னும் நீங்கள், தமிழர்கள் பக்கம் கொஞ்சம் நிற்கிறீர்கள்? அன்பிற்கினியவரே, உங்கள் வர்த்தக கை நூல் தான் உலகில் முதலாவது பெரிய தமிழ் வர்த்த கையேடு என்று அறிந்தேன். மகிழ்ச்சி . உங்கள் உழைப்புக்கு தலைவணங்கும் அதே நேரம், உங்கள் நடவடிக்கைகள் தமிழ் மக்களை சீண்டும், செயல்களாகவே உள்ளதை நீங்கள் அறி வேண்டும் என்பதில் அதிக அக்கறையுடனும் இருக்கின்றேன். நீங்கள் இன்று போடும் கோர்ட் சூட் முதல் கொண்டு எல்லாமே தமிழர்களினால் நீங்கள் உழைத்தது என்பதை நீங்கள் மறக்க கூடாது. அந்த மக்கள் உங்களுக்கு ஆதரவழித்தமைக்கு உங்கள் நன்றிக்கடன் அவர்களின் உணர்வுகளை மட்டம் தட்டுவதா? மக்கள் இங்கே ஒரு போதும் மாடுகளாய் இல்லை என்பதை மறந்து விடாதீர்கள். கொல்லும் பகைவனையும் எதிர்ந்து கேள்வி கேட்க்கும் எங்கள் தமிழ் மக்கள் உங்களை கேள்வி கேட்க தயங்குவது அதிசயமே, கொஞ்சம் கனடா பக்கம் திரும்பி பார்க்கும் போது தான் புரிகின்றது அதன் பிரச்சினைகள். சட்டம் தந்த சுகந்திரத்தாலும், பணம் கொண்ட திமிரினாலும் நீங்கள் ஆடுவது நன்றாகவே புரிகின்றது.

அட நான் இதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கின்றேன், பெற்றெடுத்த தந்தை கலமாகி ஆறு மாதம் கூட ஆகாத வேளை நீங்கள் ஜானகியை அழைத்து பிறந்த நாள் கொண்டாடியவர் தானே. உங்ளிடம் பாச நேச உறவுகள் பற்றி நான் கேட்பது எவ்வளவு முட்டாள் தனம். தாயகத்தில் ஆயிரம் ஆயிரம் பேர் சோறின்றி தவிக்க உங்கள் பணச் செருக்கு உங்களை என்ன பாடு படுத்துகின்றது. இதை வேறு தமிழ் தமிழ் என்று கத்தி கோவில்களின் விளம்பரப்பணத்தில், பெளத்தறிவு பேசும் முழக்கம் பத்திரிகை உங்கள் தந்தைக்கு செய்யும் நன்றியாய் பிரசுரித்திருந்தார்கள். தொடரட்டும் அவர்களின் தமிழ்ப்பணி, வேறின்றி விழதுகள் இங்கே வாழது என்பதை நீங்கள் மறக்க கூடாது. அந்த விழுதுகளும் காய்ந்து கருவாடாகும் வேர்களின் உதவியில்லை எனில். அந்த நிலையை நோக்கி நீங்கள் சென்று கொண்டிருக்கின்றீர்கள

இதில் ஒரு நகைச்சுவை என்ன என்றால், உங்கள் வர்த்தக சோலைக்கு வருகை தரும், மக்களுக்கு, வர்த்தக சமூகத்தினருக்கு, அனுமதிக்கட்டணம் பெறும் நீங்கள், மற்றைய எந்த நிகழ்வுகளுக்கும், அனுமதிக்கட்ணம் செலுத்துவதில்லை என்று தென்னிந்திய கலைஞர்களை அழைத்த ஒருவர் அசடு வழிய சொன்னதை நினைத்து தினமும் நான் சிரிப்பதுண்டு. பகட்டுக்கு சிரிப்பதும் பழகுவதும் உங்கள் குணாம்சமாகியிருப்பதும், தமிழ் தேசியத்தின் பால் நீங்கள் கொண்ட பற்று வெறும் வேசம் என்பதும் தற்போது வெளிச்சம். தமிழர் புனர்வாழ்வுக்கழகம் உங்களின் வர்த்தக சோலையில் ஒரு கட்டம் அமைக்க நீங்கள் அனுமதியளிக்கவில்லை என்ற செய்தி கேட்டு நான் கவலை கொண்டேன். சில வானொலி , பத்திரிகையாளர்கள் வழியே நீங்களும் இணைந்திருப்பதானாது தமிழ் தேசியத்தை மேலும் பாதிப்டைய செய்யும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகின்றேன். அதே நேரம், உங்கள் வழமையான வர்த்தக சோலைக்கு வரும் மக்கள் கூட்டமும், வர்த்தக சாவடிகளும், இவ்வருடம் இன்மையை கண்டு உளம் குளிர்ந்தேன். இன்னும் எமக்குள் சூடு சொறனையுள்ள, மான ரோசமுள்ள மக்கள் இருக்கின்றார்கள் என்பதை நினைத்து பேருவகை அடைந்தேன். இது ஒரு ஆரம்பமாகவே கருதுகின்றேன். மக்கள் உணர்வுகளை மதியாதவர்கள், ஒரு போதும் மக்கள் முன் வரமுடியாது என்ற யாதார்த்த பூர்வமான உண்மையை கனடிய தமிழ் மக்கள் உங்களை போன்றவர்களுக்கு உணர்த்த தவறமாட்டார்கள் என்று நம்புகின்றேன்.

ஜீவா....

சாவின் விளிம்பில் திணறும் எம்மினம் எக்கேடு கெட்டால் நமக்கென்ன? என்று தங்கள் வசதி கருதி லாபக்கணக்குப் பார்க்கும் மாந்தர் நிறைந்த தேசத்தில் வாழ்கிறோம். கவனித்துப் பாருங்கள் அப்படிப் பட்டவர்கள் தங்கள் முழுமையான குடும்ப அங்கத்தவரையும் வெளிநாடுகளுக்குள் வரவைத்தவர்கள்தான்.

உறவுகள் அங்கிருந்து வலிப்படும்போது இங்கு அவர்கள் களியாட்டங்களை நிகழ்த்துவார்களா?.......

அட போப்பா........

நேற்றைய இந்நிகழ்வை தவறு என்றால் இன்றைய தாரகைத் திருவாழாவை என்ன சொல்லப் போகிறீர்கள்? அல்லது தொடர இருக்கும் கொண்டாட்டத்தை எதற்குள் அடக்கப் போகிறீர்கள்?........

இது விடுதலை வியாபாரிகள் மலிந்த புூமி... எல்லாம் பேச்சளவில்த்தான்.....

பேசாமல் பாம்பு தின்னும் ஊருக்கு வந்து விட்டோம் நடுமுறி நமக்கென்று வாழ்கிற வழியைப் பாருங்க.....

அட்வைசர் ஆதிவாசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் போர் காளத்தல் இpருந்து வந்ததால் கஸ்டமாக இருக்கிறது சற்று யோசியுங்கள!!! நான் இங்கு ;அக்கங்கள் எழுதுவதில்லை என்னேனில் எனக்கு தமிழ்ழில் எழுதுவது சற்று கடினம் ஆனலும் மனம் பொறுக்கவில்லை மன்னிக்கவும்

எவரொருவர் போரின் கோரத்திற்கு முகம் கொடுத்து காயமுற்றோ, பேதலித்தோ, மானபங்கப்படுத்தப்பட்டோ, கண்முன்னே உறவுகள் இராணுவக்கரங்களில் அவதியுற்றோ, உறவுகள் செத்து வீட்டுக்குள் சிதைமூட்டி எரித்தோ, அல்லது புழுத்து நெளிய நெளிய அடக்கம் செய்ய இயலாமல் மனங்குமுறியோ, வாழ்ந்திருப்பார்களானால் அந்த அழுகையையும் அவமானத்தையும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது... ஆனால் புலம்பெயர் வாழ்நிலை அவ் அநுபவங்களை நீறு புூத்த நெருப்பாக்கி தணித்து நிற்கிறது. ஊதி தணல் மூட்ட வேண்டிய எழுதுகோல்கள் உறங்கிக் கிடக்கின்றன. என்ன செய்யலாம்? ஊடகங்கள் சினிமாவோடும், மெகாத் தொடர்களோடும், விழாக்களோடும், உலாக்களோடும் வீணான நோக்கில் விரைவாகத் தங்களை வளர்ச்சியடைய வைக்கின்றன. மக்களுக்குள் உணர்வுகள் இருக்கத்தான் செய்கிறது ஆனால் கூர்மை குன்றி தீட்டுவதற்கோ, புழுதி தட்டுவதற்கோ வீரியம் மிக்கவர்கள் வெளிப்படாதிருக்கிறார்கள் போலும் அப்படியே வெளிப்படும் சிலரும் ஒன்றிணைந்து செயலாற்ற முடியாமல் பொருளாதாரமும் வாழ்விடச்சூழலும் முடக்கிப் போடுவதை உணரமுடிகிறது.....

இன்றும் கூட யாழில் எம்மக்கள் மனிதக் கேடயங்களாக ஆக்கப்பட்டு 'உயிர் தரித்து இருக்கிறார்களா?" என்பதே பெருங்கேள்வியாக இருக்கிறது. விழாக்கள் செய்பவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. ஏனெனில் அவர்களைவிட அத்தகைய முயற்சிகளுக்கு ஆதரவு நல்கி வெற்றியடைய வைக்கும் மக்களைத்தான் குற்றம் சாட்ட முடியும். தாயக உணர்வு பாசம் என்பதெல்லாம் ஒவ்வொருவர் நெஞ்சிலும் பிறக்க வேண்டும். சொல்லிக் கொடுத்து வருவதல்ல உணர்வும், தாயகப் பற்றும் அது தன்னால் பிறக்க வேண்டும். தாயகத்திற்காகவே தற்கொடை செய்யும் தியாகம் நிறைந்த வீரமக்களைப் பெற்ற ஒரு சமுதாயம் புலம் பெயர் தேசங்களில் தம்முகம் தொலைக்கும் தம்போக்கை உணர்ந்தால் மாத்திரமே இவற்றிருந்து மீட்சி கிடைக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.