Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதி யுத்தத்தில் கொத்து, இரசாயன குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன; சட்டத்தரணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

43(13).jpg
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது கொத்துக்குண்டுகளும் இரசாயன குண்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்று மனுதாரர்கள் தெரிவித்ததாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சடத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 5 ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான விசாரணைகள் இன்று திங்கட்கிழமை நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், புதிதாக 7 ஆட்கொணர்வு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. அவைகள் நீதிமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இந்த வழக்கு விசாரணை தொடர்பில் பிபிசி செய்தி சேவை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இறுதி யுத்தத்தின் போது இந்தியக் கொடி தாங்கிய கப்பலில் இருந்து கரையில் பொதுமக்கள் பகுதி மீது குண்டுகள் வீசப்பட்டதாக வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு ஒன்றில் கூறப்பட்டிருந்ததாக சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உட்பட்டவர்கள் சார்பிலான முதல் ஐந்து ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பில் எதிர் மனு தாக்கல் செய்வதற்கு எதிரணித் தரப்பினருக்கு கடைசி சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், இன்னும் இரண்டு தினங்களில் அந்த எதிர்மனு தாக்கல் செய்யப்படும் என்று அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்ததையடுத்து, நீதிமன்றம் இந்த வழக்குகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

புதிதாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்களில் பல புதிய விடயங்கள் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்ருப்பதாக இந்த வழக்குகள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்தார்.

'பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த சுதந்திரபுரத்தினுள் தாங்கள் இருந்தபோது, விமானத்திலிருந்து அந்தப்பகுதி மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், கடலில் நிறுத்தப்பட்டிருந்த இந்தியக் கொடி பறக்கவிடப்பட்டிருந்த கப்பல் ஒன்றிலிருந்தும் கரையில் மக்கள் இருந்த பகுதிகளை நோக்கி குண்டுகள் எறியப்பட்டன என்றும் இந்த மனுக்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போயுள்ளவர்களின் குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்' என்று சட்டத்தரணி ரட்னவேல் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

'அது மட்டுமன்றி, கொத்துக்குண்டுகளும் இரசாயன குண்டுகளும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ள மனுதாரர்கள் தங்களின் கண் முன்னாலேயே இவற்றால் பாதிக்கப்பட்டவர்களுடைய முகங்கள், உடல்கள் விகாரமடைந்து, துன்பமடைந்து அவர்கள் மரணமடைந்ததைக் கண்டதாகவும் முதன் முறையாகத் தெரிவித்திருக்கின்றார்கள்' என்றும் சட்டத்தரணி ரட்ணவேல் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த வழக்குகள் யாவும் எதிர்வரும் செட்படம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டன.

 

இவையும் இந்தியன் தயவால் கிடைத்தவை என்று எப்ப சொல்லப் போகிறார்.

வக்கீல்கள் தவணை முறையில் தான் எதையும் செய்வார்களோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.