Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சத்துருக்கொண்டான் படுகொலையின் 23ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று -

Featured Replies

சத்துருக்கொண்டான் படுகொலையின் 23ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்படுகிறது.  1990ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் திகதி சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, திராய்மடு கிராமங்களை சேர்ந்த 198 பொதுமக்கள் சத்துருக்கொண்டானில் இருந்த இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டதாக காயங்களுடன் தப்பி வந்த சிவகுமார் என்ற இளைஞர் அரசுத்தலைவர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார்.

கொல்லப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்கியிருந்தன. எட்டு மாத குழந்தை விஜயகுமார், 3மாத குழந்தைகளான பிரியா, வேணுதாஸ் ஆகியோரையும் இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினரும் இரண்டு துண்டுகளாக வெட்டி எரியும் நெருப்பில் போட்டனர் என இச்சம்பவத்தை நேரில் கண்டவர் தெரிவித்திருந்தார்.

இச்சம்பவத்தில் 8வயதுக்கு உட்பட்;ட 68 சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களில் 80க்கு மேற்பட்டவர்கள் பெண்கள். இவர்கள் மிகக்கொடுமையாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

25வயதுடைய ஜீவமலர் என்ற பெண்ணின் கையில் இருந்த மூன்று மாத குழந்தை பிரியாவை பறித்தெடுத்து வெட்டி வீசிய படையினர் அப்பெண்ணை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த பின் வெட்டி கொன்றனர்.

இந்த படுகொலையில் இராணுவத்துடன் முஸ்லீம் ஊர்காவல்படையும் இனப்படுகொலை புரிந்தனர் என்பது பின்னர் தெரியவந்தது.

காயங்களுடன் தப்பி சென்ற சிவகுமார் என்ற இளைஞரை இராணுவம் தேடிய போது மட்டக்களப்பு பிரஜைகள் குழுவும் ஆயர் இல்லமும் அவரை மறைத்து வைத்து வைத்தியம் செய்து காப்பாற்றியிருந்தனர். இதன் பின்னர் ஆணைக்குழு முன் அவர் இந்த படுகொலைகள் பற்றி சாட்சியமளித்திருந்தார்.

இந்த படுகொலையை அப்போது சத்துருக்கொண்டான் இராணுவ முகாமுக்கு பொறுப்பாக இருந்த காமினி வர்ணகுலசூரிய என்பவன் தலைமையிலான சிங்கள இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல் படையை சேர்ந்த மஜீத் என்ற முஸ்லீம் பயங்கரவாதிகளும், ஏறாவூர் முஸ்லீம்களும் சேர்ந்து இந்த ஈவிரக்கமற்ற படுகொலையை புரிந்தனர்.

படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று சத்துருக்கொண்டானில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபியில் இன்று மாலை அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்த அஞ்சலி நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், உட்பட கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

http://www.thinakkathir.com/?p=52238#sthash.KK99sC6G.dpuf

  • தொடங்கியவர்

1185929_327022790775271_1517430751_n.jpg
ஈழத்தமிழரின் நாட்காட்டியில் வருடத்தின் ஆகப் பெரும்பாலும் கருப்பு நாட்கள்தான். அப்படி ஒரு நாள்தான் இன்று - செப்டம்பர் 9ம் தேதி.

1990ம் வருடம் இதே நாளில்தான் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் 5 கைக்குழந்தைகள், 42 சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 184 ஈழத் தமிழர்கள், இராணுவத்தினரால் துள்ளத் துடிக்கக் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். 

பிறரைக் கொல்லும்போது ஏற்படும் அலறலைக் கேட்டு தம் பிள்ளைகள் பயந்துவிடக்கூடாது என்பதற்காக அந்தப் பிஞ்சுகளின் காதுகளைப் பதைபதைத்துப் பொத்தினார்களாம் பெற்றவர்கள்.

படிக்கும்போதே நெஞ்சு பதறுகிறது...

http://andamansaravanan.blogspot.in/2010/09/blog-post_09.html

 

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடி படுகொலை நினைவாக.. ஹர்த்தால் எல்லாம் அனுஷ்டிக்க ஒத்துழைப்பு வழங்கிறவை.. ஈவிரக்கமற்ற பயங்கரவாதிகள் என்றவை.. தமிழ் மக்களை கொன்று குவித்த நிகழ்வுகளுக்கு கண்ணீர் விட தமிழ் மக்களை விடுவினமா..??! தமிழ் மக்களைக் கொன்று குவித்தவர்களையும் ஈவிரக்கமற்ற பயங்கரவாதிகளுன்னு சொல்லுவினமா..???! அவர்களுக்கு உலக நாடுகள் ஆதரவு தரக் கூடாதுன்னு அறிக்கை கொடுப்பார்களா..???!

 

சிங்கள - முஸ்லீம் கூட்டு தமிழின அழிப்பு  அத்தியாயத்தில் தம் இன்னுயிர்களை இழந்திட்ட எம் மக்களுக்கு நினைவு நாள் அஞ்சலிகள். :(

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

1186787_690398554322738_1658737934_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.