Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனது புகைப்படத்துடனான துண்டுப் பிரசுரங்களை வைத்திருந்ததாகக் கூறி TNA ஆதரவாளர்கள் கைது :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனது புகைப்படம் தாங்கிய துண்டுப்பிரசுரங்களை வைத்திருந்ததாகக்கூறி கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சுமார் 40 பேர் வரையினில் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கூட்டமைப்பின் இறுதிக் கட்ட பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் குடாநாடு முழுவதும் தொடர் பிரச்சாரங்களை செய்யவென கூட்டமைப்பின் வேட்பாளர்களான சுகிர்தன் மற்றும் அனந்தியினது ஆதரவாளர்கள் 40 பேர் வரை வாகனமொன்றில் சுற்றிச்சுழன்று வருகின்றனர்.
 
அக்குழுவினர் இன்று கொடிகாமம் நகரப்பகுதியினில் பிரச்சாரங்களினில் ஈடுபட்டிருந்த வேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். அவர்களது வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்செய்தி வெளிவரும் வரை அவர்களை எவரும் சந்திக்க அனுமதிக்கப்படவில்லையெனவும் எனினும் ஆளும் தரப்பின் பிரமுகர்களும் பொலிஸாருடன் உள்ளே காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ வெளியீடான வீடு பத்திரிகையில் செய்திக்கதையொன்றிற்காக பிரபாகரனது படமும் பொறிக்கப்பட்டுள்ளது. அதனை முன்னிறுத்தியே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
தற்போது வடக்கினில் தேர்தல் தொடர்பினில் ஏற்பட்டுள்ள பரபரப்பு நிலை அச்சத்தை மக்களிடையே தோற்றுவித்துள்ளது. 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

election-tamil.jpg

யாழ்.கொடிகாமத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் குழுவைச் சேர்ந்த நான்கு பேரை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சுவரொட்டிகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே எட்டுப் பேர் கைதாகியுள்ளதாக, யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். 

இவர்களிடம் 300 சுவரொட்டிகள் இருந்ததாகவும், அவர் கூறியுள்ளார். 

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீடு என்ற சஞ்சிகையுடனேயே இவர்கள், கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பிரபாகரன் மிகப்பெரிய தலைவராகியது எப்படி என்ற தலைப்பில் அந்த சஞ்சிகையில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையிலேயே பிரபாகரனின் படம் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மீது தாக்குதல் 

நாவற்குழிப் பகுதியில் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதுரவாளர்கள் மீது நேற்று மாலை 4.30 மணியளவில் அடையாளம் தெரியாத குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. 

தனது ஆதரவாளர்கள் பத்துப் பேர் மீதே, அடையாளம் தெரியாத குழுவினர் தாக்குதல் நடத்தியதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார். 

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இரு ஆதரவாளர்கள் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தாக்குதலை நடத்தியவர்கள் தங்களுக்குள் சரளமாக சிங்களத்தில் உரையாடியதாகவும் கஜதீபன் தெரிவித்துள்ளார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20130914109044

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.