Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“தமிழினத்துக்குத் துரோகமிழைப்பவர்கள் மனச் சாட்சிகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும்” பா.அரிய நேத்திரன்

Featured Replies

TNA_CD_16-300x169.jpg“நாங்கள் எங்கள் மக்களின் விடிவுக்காக எங்கள் மக்களின் இலட்சியப் பணிக்காக அவை கிடைக்கும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி ஜெயபுரம் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

போராட்டம் என்பது ஆயுதத்தை எடுத்துச் சுடுவது மட்டுமல்ல. அந்தப் பணிக்கு நாங்கள் உங்களை அழைக்கவில்லை. அகிம்சை ரீதியாக இராஜ தந்திர ரீதியாக சர்வதேசத்தின் மனச் சாட்சிகளை உலுக்கி எங்களுக்கான ஒரு தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு பணியில் நாங்கள் இறங்கியிருக்கிறோம். இந்தப் பணிக்கு உங்களிடம் நாங்கள் ஆணை கேட்கிறோம்.

வடக்கு மாகாண சபையினை ஆட்சி செய்வதற்கோ அல்லது கிழக்கு மாகாண சபையினை ஆட்சி செய்வதற்காகவோ உங்களிடம் நாங்கள் வாக்குக் கேட்கவில்லை. வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்திலே தமிழன் தமிழனாக வாழ வேண்டுமென்றுதான் நாங்கள் 66 வருடங்களாகப் போராடியிருந்தோம். போராடி வருகின்றோம். இந்த இராஜ தந்திரப் போராட்டத்திலே அடுத்த கட்டப் பணியினை மேற்கொள்வதற்கு சர்வதேச மனச்சாட்சிகளை தட்டுவதற்கு தமிழர்களாகிய நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய எங்களுக்கு ஆணை தரவேண்டும். ஏற்கனவே பலர் கூறியது போலவே, நாங்கள் எப்போது வேட்பு மனு தாக்கல் செய்தோமோ அன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று விட்டது. இதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூறவில்லை. தென்பகுதியில் இருந்து ஜனாதிபதி கூறியிருக்கின்றார். அமைச்சர்கள் கூறியிருக்கின்றார்கள்.

நாங்கள் 18, 19 ஆசனங்களை இத்தேர்தலில் பெற்றாலும் வெற்றிதான் ஆனால் அந்த வெற்றியினை நாங்கள் கேட்கவில்லை. இந்த வட மாகாண சபைக்கான தேர்தலில் 36 ஆசனங்கள் இரு போனஸ் ஆசனங்கள் உள்ளிட்ட 38 ஆசனங்களில் குறைந்தது 32 ஆசனங்களையாவது நாம் வென்றால் தான் வடமாகாணத்தில் 99 வீதமான தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்ற இலட்சியத்தை நாங்கள் அடையமுடியும். உடலாலே தமிழர்களாகவும் உள்ளத்தாலே சிங்களவர்களாக வெற்றிலைக்கு சோரம் போகிறவர்களாக இருக்கக் கூடாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் முடிவில் தேர்தல் வாக்குகளை எண்ணுகிற போது இந்த ஜெயபுரக் கிராமத்தில் இருந்து அனைத்து வாக்குகளும் வீட்டுக்குப் போடப்பட்டு இருக்க வேண்டும். அனைத்து வாக்குகளும் வீட்டுச் சின்னத்திற்குப் போடப்பட்டுள்ளது என்ற பெருமையுடன் நாம் அங்கிருக்க வேண்டும். அப்படியில்லாதுவிடில் நீங்கள் தமிழினத்துக்குத் துரோகம் செய்தவர்களாவீர்கள். 21ம் திகதி நீங்கள் வாக்குப் போட்டு விட்டு இரவு நித்திரைக்குப் போகும் போது இரவு திடுக்கிட்டு எழுவீர்கள். இந்த மண்ணில் ஆகுதியானவர்கள் உங்கள் நெஞ்சினில் வருவார்கள். அப்போது உங்கள் மனச் சாட்சிக்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும்.” எனத் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான தேர்தல் பரப்புரைக் கூட்டம் கிளிநொச்சி ஜெயபுரத்தில் மாலை 4 மணியளவில் மங்கள விளக்கேற்றல், உயிர் நீத்தோர் அகவணக்கத்துடன் கிளிநொச்சி மாவட்ட இளைஞரணிச் செயலாளர் கு.சர்வானந்தா அவர்களின் தலைமையில் ஆரம்பித்து இரவு 8 மணியளவில் நிறைவு பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பா.அரிய நேத்திரன், சி.சிறீதரன், வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ப.அரியரத்தினம், த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சிப் கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்கள் சு.தயாபரன், ம.அன்ரன் டானியல் (ஒஸ்மன்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞரணித் தலைவர் சு.சுரேன், முன்னை நாள் கிராம சேவையாளர் அரிய நாயகம் கிளி நொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் உதயன், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கிழக்கு மாகாண செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

http://tamilworldtoday.com/home

trans.gif

trans.gif

trans.gif

trans.gif

trans.gif

trans.gif

trans.gif

trans.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.