Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண சபைத் தேர்தலில் உண்மையில் அங்கிருக்கும் கள நிலவரமென்ன - அறிந்து கொள்வோமா!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
anantharaja-seithy-150.jpg

வட மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரப் பணிகள் சூடு பிடித்துள்ள இன்றைய தினத்தில் பலவேறு விதமான செய்திகள் தினமும் வந்து கொண்டிருப்பினும் கூட உண்மையில் ஊரில் என்ன நடக்கிறது. வெற்றி பெறப்போவது யார் என்பது உள்ளிட்ட கேள்விகளை முன் வைத்து கனடிய பல்கலாச்சார வானொலி வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் நடராஜா ஆனந்தராஜ் அவர்களிடம் நேர்காணல் ஒன்றை நடத்தியுள்ளது. அதன் முழு விபரமும் இங்கே. நேர் கண்டவர் : கந்தசாமி கங்காதரன். வட மாகாண சபைத் தேர்தல் நடக்க இருக்கின்ற சூழ்நிலையில் நகர சபைத் தலைவராக நீங்கள் இருந்து கொண்டிருக்கின்ற வல்வெட்டித்துறை பகுதியிலும் , சுற்று வட்டாரங்களிலும் எப்படி கள நிலவரம் இருக்கின்றது என்று பகிர்ந்து கொள்ள முடியுமா?

  

வல்வெட்டித்துறையினைப் பொறுத்த வரையிலே தமிழ்த் தேசியத்தோட தன்னை ஒன்றிணைத்துக் கொண்ட ஒரு நகரம். தேர்தலில் அதிக அளவு அக்கறை காட்டாத வட மாநிலத்தில் இப்போது கடந்த இரண்டு மாதங்களுக்குள்ளாக ஒரு திடீர் மாற்றத்தினை நாங்கள் பார்க்க கூடியதாக உள்ளது. ஓய்வு பெற்ற நீதியரசர் விக்கினேஸ்வரன் அவர்களை முதல்வர் வேட்பாளராக அறிவித்த பின்னர் மக்களிடையே ஒரு எழுச்சி, நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கின்றது. மற்ற தேர்தல்களில் நாங்கள் பலருக்கு வாக்களித்து, ஒரு விரக்தி அடைந்த நிலையில் இருந்தும், தங்களுடைய மீள்குடியேற்றங்களோ, அல்லது ராணுவ முகாம்களை அகற்றுதலோ, சுதந்திர நடமாட்டமோ இல்லாத நிலையில் ஜனநாயகம் என்ற போர்வையில் நடந்து கொண்டிருக்கும் தேர்தல்களை இன்று மக்கள் இன்னொரு விதமாகச் சந்திக்கிறார்கள்.

 

ஒன்றரை வருட நகர சபைத் தேர்தல் நடைபெற்ற போது இரண்டு அரசாங்கக் கட்சி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்த பொழுது அந்த நிலை இன்றைக்கு மாறி மிக அதிக அளவிலான மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை சாரந்திருப்பதை நான்கள் பார்க்கக்க கூடியதாக உள்ளது. அச்சத்தின் காரணமாக தங்கள் கருத்தினை வெளிப்படுத்தாமல் இருந்த மக்கள் கூட தற்போது படிப்படியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தங்கள் கருத்தினை தெரிவிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

 

இந்த வட மாகாண சபைத் தேர்தலில் வல்வெட்டித்துறை எல்லைக்குள் எடுத்துக் கொண்டால் நிச்சயமாக 90 சதவீத மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை ஆதரிக்கின்றார்கள். மீதமுள்ள 10 சதவீதத்தினர் வேண்டுமானால் பிற சலுகைகளுக்காகவும் உறவினர்களுக்காகவும் ஆதரிக்காமல் போகலாம். ஆனால் 90 சதவீத மக்கள் சுய நிர்ணய உரிமையையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினையும் சார்ந்தே இருக்கின்றார்கள். அதின் எந்த விதமான மாறுபாடான கருத்தும் இல்லை. ஆனால் எங்களுடைய மக்களிடையே இருக்கும் ஒரு பாதகம் என்னவென்றால் கூட்டமைப்புத் தான் வெல்லும் என நினைக்கும் அதே வேளையில் நாங்கள் எல்லோரும் ஒட்டு போட வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணமும் மக்கள் சிலரிடம் இருப்பது பாதகமான விளைவையும் பிறகு ஏற்படுத்தும்.

 

புலம்பெயர்ந்த நீங்கள் உங்கள் உறவுகளுக்குச் சொல்ல வேண்டும். எவ்வளவுக்கு நாங்கள் வாக்குகளை அதிக அளவில் பிரயோகிக்கின்றோமோ அந்த அளவிற்கு எங்கள் ஆசனங்களின் எண்ணிக்கையை நாங்கள் கூட்டலாம். விகிதாச்சார அடிப்படையில் நடைபெறும் தேர்தல் என்பதால் அளிக்கப்படும் வாக்குகளின் அடிப்படையில் தான் உறுப்பினர்களின் எண்ணிகையும் தெரிவு செய்யப்படும். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக 90 விதமானவர்கள் இருக்கின்ற போது, ஆகக் குறைந்தது 75 அல்லது 80 விகிதாச்சார மக்கள் வாக்களித்தால் நிச்சயமாக வட மாகாண சபையிலே 30 அல்லது 32 ஆசனங்களை எங்களது கூட்டமைப்பு கைப்பற்றி ஆட்சி அமைக்கக கூடிய, மூன்றில் இரண்டு பங்கினை எடுக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.

 

ஆனால் எங்களுடைய மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புத தான் வெல்லும், விக்கினேஸ்வரன் தான் வெல்லுவார், அவர் வெல்லுவார், இவர் வெல்லுவார் என மெளனமாக இருந்து ஒட்டு போடா விட்டால் , அரசாங்கக் கட்சிக்கு இருக்கக் கூடிய வாக்குகள் அப்படியே முழுமையாக பயன்படுத்தப்படும். எனவே அதில் மக்கள் தெளிவாக இருக்கணும் . அவர்கள் தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்துகின்றார்கள். வேலை வாய்ப்புக்கள், பதவி உயர்வுகள், ஆட்களை ஏற்றி இறக்க வாகன உதவிகள், ராணுவ உதவிகள், போலிஸ் உதவிகள், உள்ளிட்ட எல்லா பலன்களையும் அரசாங்க வேட்பாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களின் படங்கள், சுவரொட்டிகளை கிழித்தெறிந்த அதிரடிப் படையினர் கரி, கழிவுகளைப் பூசிய படைகள் அரசாங்கக் கட்சி வேட்பாளர்களின் பெரிய கட் அவுட் எல்லாம் வீதிகளில் காணக்கூடியதாய் இருக்கின்றது ஜனநாயகம் என்றால் இவருடைய போஸ்டர்களும் அகற்றப்பட வேண்டும் அல்லது இவருடைய போஸ்டரையும் விட வேண்டும். ஆனால இந்த பாரபட்சமான நிலைக்கு மத்தியில் தான் எங்களுடைய தேர்தல் நடைபெறப் போகின்றது. முக்கியமாக 21 ஆம் தேதி எங்கள் மக்கள் 7 மணிக்கு தாங்கள் வாக்குச் சாவடிக்கு செல்வதென்றும், ஒரு முடிவு எடுத்திருக்கின்றார்கள்.

 

நாங்கள் மக்களுக்கு விடுக்கின்ற ஒரு வேண்டுகோள் ஒவ்வொருவருக்கும் மூன்று ஒட்டு போடலாம் மூன்றையும் ஒருவருக்கே போட முடியாது. முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள விக்கினேஸ்வரனுக்கு எல்லோரும் 10 ஆம் நம்பர் வாக்கு வீட்டு சின்னத்தில் போடுவார்கள். மீதி இரண்டு தமக்கு விருப்பமான எவரையும் போடலாம். யாழ் மாவட்டத்தில் 18 வேட்பாளர்கள்; இருக்கின்றார்கள்.

 

அந்தப் 18 பேரில் எவரையும் தாங்கள் போடலாம். நல்ல படித்த, பண்பான, கொள்கையில் உறுதியுடன் நிற்கின்ற எவருக்கும் மக்கள் வாக்களிக்கலாம். இங்கே அபிவிருத்தி என்றொன்று போராட்டம் நடக்கின்றது. அபிவிருத்தியா, தமிழ்த் தேசியமா அலது சுய நிர்ணய உரிமையா என்று ஏராள போராட்டம் நடக்கின்ற போது சுய நிர்ணய உரிமை என்ற தாயகக் கோட்பாடு வெற்றி பெற்றால் தான் அபிவிருத்தி நிலைத்து நிற்கும்.

 

இதை நாங்கள் கைவிட்டு விட்டு அபிவிருத்தியை பார்த்தோமேயானால் சுலபமாக அழியக் கூடிய ஒன்று. ஆனால் சுய நிர்ணயமும், தாயகமும் ஒரு போதும் அழியாது. அதை நினைவில் வைத்துக் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் எங்களுடைய மக்கள் வாக்களிப்பார்கள் , வாக்களிக்க வேண்டுமென்று நாங்கள் கொண்டிருக்கின்றோம்.

 

நகர பிதா, நகர சபையினுடைய தலைவர் என்ற வகையிலே எங்களுடைய முழுமையான வெற்றியை நாங்கள் காட்ட வேண்டும். போர் முடிவுக்கு வந்து விட்டதாக சொல்லப்படுகின்றது ஆனால் இன்னொரு வடிவிலே எங்களுடைய போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. எங்களுடைய உறவுகளுக்கு நாங்கள் ஒன்று சொல்ல வேண்டும். என்னவென்றால் நாங்கள் மௌனித்துப் போயிருக்கிறோம், எங்களுடைய குரல் ஓய்ந்து போயிருக்கிறது.

 

ஆனால் எங்களுக்காக குரல் கொடுக்கும் உறவுகள் இன்று புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கின்றார்கள். அவர்களுடைய பலம் தான் இன்று நவநீதம்பிள்ளை அவர்கள் இங்கு வந்து, எங்களுடைய பிரச்சினையை அறிந்து உண்மையை உணர்த்தியதற்கும் புலம் பெயர்ந்த உறவுகளின் செயல்பாடுகள் தான் காரணம்.

 

இங்கே நாங்கள் முக்கியமாகக் கருதுவது தாயகத்தில் வசிப்பவர்கள் அனைவரும் முதலில் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிப்பதும், பிற வாக்குகளை தாங்கள் விரும்பியோருக்கு அளிப்பதும் தான் முக்கியமானது. இப்போது நடக்க இருக்கின்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லாத இன்னுமொரு கட்சி வெற்றி பெறுமிடத்து அதனால் என்ன விளைவு ஏற்படும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்வாதரத்திற்கான ஒரு அஸ்திவாரத்தை முன்வைக்கின்றது. அவர்களை தலைநிமிர்ந்து வாழக் கூடிய ஒரு மனிதர்களாக உருவாக்கி விட்டிருக்கின்றார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று சொல்வதை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முன்பிருந்த விடுதலைப் போராட்டம் எங்களுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தித் தந்தது. இலங்கையில் தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்ற அடையாளத்தை அந்தப் போராட்டம் தான் வெளிக்கொண்டு வந்தது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெறுமானால் அந்த அடையாளம் தொடர்ந்து நிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர்த்த இன்னுமொரு அமைப்போ அல்லது அரச கட்சியோ ஆட்சியைக் கைப்பற்றுமானால் அந்த அடையாளம் அகற்றப்பட்டு விடும்.

 

அதை தட்டிக் கேட்க யாராலும் முடியாது. குடியேற்றங்கள், அல்லது ராணுவ முகாம்களோ, அபிவிருத்தி என்ற போர்வையில் ராணுவ இயல்பான ஓட்டம், இன்று ஒவ்வொரு பிரதேசங்களிலும் தொழில், வியாபாரம் என்ற இனத்தவர்கள் குடியேற்றப்படுவார்கள். அதைத் தட்டிக் கேட்க முடியாமல் போய் விடும். ஆக அடையாளம் இல்லாது போவதோடு தமிழ்த் தேசிய பாரம்பரிய நிலமும் எங்களுக்கு இல்லாமல் போய் விடும்.

 

இது தான நாங்கள் எதிர்பார்க்கும் ஒன்று. அதை நாங்கள் எற்க வேண்டுமெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிராகரிக்கலாம். தமிழர் என்ற அடையாளம் தேவையில்லை, தமிழர் நிலம் தேவையில்லை, தமிழர் பண்பாடு தேவையில்லை, எங்களுக்கு அபிவிருத்தி ஒன்றே முக்கியம் என நாங்கள் நிகழ்த்துவோமேயானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை மக்கள் நிராகரிக்கட்டும், நாங்கள் இன்னொரு மொழியை பேச வேண்டிய நிலை இந்த மண்ணில் உருவாகும். தமிழ் என்பது மறைந்து போற நிலை ஒன்று வரும். சில நாடுகளில் தமிழ் அழிந்து போவது போல யாழ்ப்பாணத்திலும், வடக்கு கிழக்கிலும் தமிழ் அழிந்து போய் விடும்.

 

 

 

anantharaja-seithy-1-20130916-500.jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=93046&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.