Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா முன்றலில் திரண்ட மக்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனஅழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றலில் பெருந்திரளாக திரண்ட மக்கள் ஈகைபேரொளி செந்தில்குமரனுக்கு வணக்கம் செலுதியதுடன் பேராட்டத்திலும் ஈடுபட்டுள்ளார்கள்.

 

ஒரு பலம் வாய்ந்த சர்வதேச சக்தியாக அணிதிரண்டு எமது மக்களின் விடிவுக்காக உலகத் தமிழினம் உரிமைக்குரல் எழுப்பவேண்டும் என்னும் தலைவர் பிரபாகரன் அவர்களின் வார்த்தைக்கு இணங்க பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு ஐ.நா முன்றலில் இன்று ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்துகின்றனர்.

 

கடும் மழையினையும் பொருட்படுத்தாது சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஐரோப்பிய நாடுகளிலிருந்து பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு ஐ.நா. முன்றலில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தி வருகின்றனர்.

 

 

அண்மையில் ஜெனீவா முன்றலில் தன்னுடலை தீக்கிரையாக்கிய ஈகைபேரொளி செந்தில்குமரனது நிழற்படத்திற்கு மலர்மாலை சூட்டி அகவணக்கம் செலுத்தி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தி வருகின்றனர்.

 

சுமார் 2:30 மணியளவில் ஜெனீவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பூங்காவில் இருந்து பெருந்திரளான மக்களுடன் ஆரம்பித்த இம் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐ.நா முன்றலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது.

 

ஐ.நாவின் கவனத்தை ஈர்க்கும்வகையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இம்மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் பிரான்ஸ் கஜன் அவர்கள்இ 1956 தொடக்கம் இன்றுவரை இலங்கையில் தமிழினத்துக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் அநீதிகளை புகைப்படமாக்கி கண்காட்சியாக வெளிப்படுத்திக்கொண்டுள்ளார்.

 

மாபெரும் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து கோபி சிவந்தன் தலைமையில் மேலும் இருவர் பெல்ஜியம் நோக்கி மிதிவண்டிப் பயணத்தையும் மேற்கொண்டுள்ளனர். இவர்களது மிதிவண்டிப் பயணத்திற்கு நகராட்சி மன்றங்கள் ஆதரவளித்து வருவதாகவும் எனவே தமிழ் மக்களையும் அவர்களுக்கான ஆதரவினை வழங்குமாறும் சிவந்தன் கேட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Un%20%20400%20260.jpg

un%2001.jpg

un%2002.jpg

un7.jpg

un11.jpg

un5.jpg

un9.jpg

un12.jpg

un3.jpg

 

http://www.sankathi24.com/news/33262/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.