Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை மையப்படுத்திய அமெரிக்காவின் நகர்வுகள்!

Featured Replies

America1.jpgசமகால பூகோள அரசியலின் செல்நெறியைத் தீர்மானிக்கும் வலுக்கொண்டதாகக் கருதப்படும் 'அமெரிக்கா' குறித்த இரண்டு முக்கிய செய்திகள் அண்மையில் வந்திருந்தன. அதில் ஒன்று அமெரிக்காவின் கடந்தகால நகர்வு தொடர்பானது. மற்றையது அதன் எதிர்கால நகர்வு தொடர்பானது. ஆயினும் இந்த இரண்டு செய்திகளின் மையப்பகுதியென்னவோ, இலங்கையை சார்ந்ததாகவே இருந்தது.

முதலாவது செய்தியை பகிரங்கப்படுத்திய சிங்கள தேசத்தின் பாதுகாப்புச் செயலாளர், ஏறக்குறைய அனைவருக்குமே தெரிந்த அமெரிக்கா தொடர்பான நகர்வை அசைபோட்டிருந்தார். கங்காரு தேசத்தின் 'The Australian' பத்தியாளரான Greg Sheridan இற்கு இந்தப் பழைய விடயத்தை நினைப்பூட்டிய கோத்தா, விடுதலைப் புலிகளின் இலங்கைத்தீவு நோக்கிய ஆயுத விநியோகத்தை முறியடிக்க வொஷிங்டன் பெரும்பங்காற்றியதாகக் குறிப்பிட்டிருந்தார்.

“The Americans were very, very helpful. Most of the locations of these ships were given to us by the Americans,” இவ்வாறு குறிப்பிட்ட கோத்தா, அதனால் உருவான பலன்களையும் மறைக்கவில்லை! அவ்வாறான அமெரிக்க உதவியால் 2006 ஆம் ஆண்டுவரை விடுதலைப் புலிகளின் 12 ஆயுத விநியோகக் கலங்கள் அழிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டுகிறார்.

இறுதிக்கட்டப் போர் என இன்றுவரை சிலாகிக்கப்படும் தமிழின அழிப்புக்கு சில நாட்களுக்கு முன்னர் வரை கொழும்பு முன்னெடுத்த குரூரமான போரில் வொஷிங்டன் முதல் டெல்லி வரை பங்கெடுத்தமை பகிரங்கமானது. விடுதலைப் புலிகளை அழிக்க உதவினால் தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வை உடனடியாக வழங்குவோம் என்ற கபடமான உறுதிமொழியை அமெரிக்கா உட்பட்ட மேற்குலகுக்கு வழங்கியே மகிந்த & co இந்த உதவியைப் பெற்றிருந்தும், அதன் பின்னர் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் மேற்குலகிற்கு 'நாமம்' போட முனைந்ததும் 'சந்திக்கு' வந்துவிட்ட விடயங்கள்!

ஆனால் இப்போது கோத்தா கூறும் தம்மைக்குறித்த சிலாகிப்புக் கதைகளையோ, "The Americans were very, very helpful" என்ற அவரது பெருமைகளையோ இரசிக்கும் நிலையில் வொஷிங்டன் இல்லை என்பது அங்கிருந்து வெளிவரும் இன்னொரு கருத்து மூலம் புலப்படுகிறது. அதாவது.. "இந்தக் கதையெல்லாம் கிடக்கட்டும் அப்பனே, முதலில் 'Accountability" எனப்படும் பொறுப்புக்கூறல் குறித்த முறையான உள்ளகப் பொறிமுறையொன்றை உருவாக்குங்கள்! இல்லையேல் அனைத்துலக ரீதியான பொறிமுறையொன்றை அதற்காக உருவாக்கும் எமது அழுத்தத்தை எதிர்கொள்ளுங்கள் என்பது இந்தக் கருத்து!

ஏறக்குறைய ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் அதன் ஆணையாளரும் மேற்குலகமும் முன்வைத்த கருத்தின் எதிரொலிப்பாக இந்தக் கருத்தை வெளியிட்ட முகமும் சாதாரணமானதல்ல! முன்னர் ரொபேட் ஓ பிளேக் வகித்த தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் என்ற பொறுப்பில் புதிதாக அமரவுள்ள நிஷா-தேசாய் பிஸ்வாலே (Nisha Desai Biswal) இதனைக் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவின் பரிந்துரை மற்றும் தெரிவின் அடிப்படையில் தெற்காசிய விவகாரங்களுக்கான முகமாக இன்னும் ஓரிரு நாட்களில் மாறவுள்ளார் நிஷா பிஸ்வால்.

அவ்வாறான நிலையில் தனது இராஜாங்கப் பொறுப்பை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடுடைய அமெரிக்க செனட்டின் வெளிவிவகார உறவுகளுக்கான குழு முன்னிலையில் தோன்றியபோதே நிஷா பிஸ்வால் ஶ்ரீலங்காவையும் தொடவேண்டி நேரிட்டுள்ளது. அதாவது 'தெற்காசியா' குறித்த வொஷிங்டனின் பொறிமுறையில் யார் அமர்ந்தாலும், அவர்களின் கைகளிலுள்ள அங்குசமும் மகிந்த அதிகாரமைய காதுகளை பொறுப்புடமைக்காகத் திருகும் என்பது புதிய தெற்காசிய இராஜாங்கச் செயலாளர் ஊடாகவும் நிரூபிக்கப்படுகின்றது.

அமெரிக்க செனட்டரான ஜோன் மைக்கேன் இன்னொரு முனையில், இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களில் அமெரிக்கா காத்திரமான நடவடிக்கையை எடுக்க வேண்டியது அவசியமானதென இடித்துரைக்கும் பின்னணியில் நிஷா பிஸ்வாலின் கருத்தும் சமகாலத்தில் வெளிவந்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயம்.

ஏற்கனவே ரொபேட் ஓ பிளேக் இருந்த இடத்தில் வரப்போகும் நிஷா, இந்தியப் பூர்வீகத்தைக் கொண்டவர். அத்துடன் தெற்காசிய இராஜாங்கத் துணைச் செயலாளர் பதவியில் அமரும் தெற்காசிய பூர்வீகத்தைக் கொண்ட முதலாவது அமெரிக்கரும் கூட! ரொபேட் ஓ பிறேக்கிற்கு ஶ்ரீலங்காவின் முன்னாள் தூதர் என்ற அடிப்படையில் இலங்கைத் தீவு தொடர்பான புரிதல் இருப்பதைப்போல, நிஷா பிஸ்வாலுக்கு இலங்கைத்தீவின் மனிதாபிமான நிலவரங்களில் மேலதிகமான புரிதல் உள்ளது.

இந்தியாவின் ஒடிசா மாநில கிராமப்புறத்திலிருந்து அமெரிக்க வாழ்வுக் கனவுடன் புறப்பட்ட குடியேறிகளின் வாரிசான நிஷா, அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கத்தின் பொறுப்பாளராகவும், அதன் பின்னர் இலங்கை உட்பட்ட நாடுகளில் மனிதாபிமானப் பணிகளை முன்னெடுக்கும் U.S.AID எனப்படும் United States Agency for International Development இன் உதவி நிர்வாகியாகவும் இருந்தவர். அந்தத் தளத்தில் இருந்துதான் இப்போது தெற்காசிய இராஜாங்கப் பொறுப்புக்கு அவர் நகர்த்தப்படுகின்றார்.

உங்களுக்கு இன்னொரு உபரித் தகவலும் உண்டு! ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவிபிள்ளை தனது அண்மைய இலங்கைப் பயணத்தின்போது தனது நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் கிழக்கில் சந்தித்த தமிழ் மதகுரு ஒருவர் கூட U.S.AID இன் மனிதாபிமானப் பணிகளுடன் தொடர்புடைய முக்கிய முகம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆகவே, உள்ளூரில் மகிந்த தமிழ் ஊடகர்களை கடந்தவாரம் அலரி மாளிகைக்கு அழைத்து கூட்டமைப்பின் யாழ் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரனின் இரண்டு புதல்விகளும் இரண்டு சிங்கள அரசியல்வாதிகளின் புதல்வர்களை திருமணம் முடித்திருப்பதால் அதில் ஒரு புதல்வி இவ்வாறான திருமணத்தின் மூலம் தனக்கும் உறவுக்காரியாகிவிட்டதாகக் கூறினாலும், இவ்வாறான 'தனிமனித' உறவுகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் அவரையும் அவரது அதிகார மையத்தையும் துரத்தப்போவது மிகத் தெளிவாகவே தெரிகிறது.

http://tamilworldtoday.com/home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.