Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திர சதுக்கத்தில் புத்த மதக் கொடியா- நவி பிள்ளை கேள்வி?

Featured Replies

சிறீலங்கா பயணம்மேற்கொண்ட ஐநா மன்ற மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் அமைந்திருக்கும் முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனநாயகவின் சிலையை அகற்றவேண்டும் என்று ஆலோசனை கூறினார் என்ற செய்திகளை அவரது அலுவலகம் மறுத்திருக்கிறது.

இந்தச் சிலை பற்றி அவர் ஒரு வார்த்தையும் பேசவில்லை அது அகற்றப்படவேண்டும் என்று ஒரு போதும் அவர் கூறவுமில்லை என்று அவரது அலுவலக ஊடகத் தொடர்பாளர் ரூபர்ட் கால்வில் கூறியிருக்கிறார்.

இதே விஜயத்தின் போது இந்த சுதந்திர சதுக்கத்தில் புத்த மதக்கொடி மட்டும் பறக்கவிடப்பட்டிருப்பது பற்றிய பிரச்சினையிலும் நவி பிள்ளை நல்லிணக்கம் மற்றும் அனைத்தினங்களையும் ஒன்றிணைத்தல் தொடர்பான கூட்டமொன்றில் கேள்வியொன்றை எழுப்பியதாக வரும் சர்ச்சைகள் தொடர்பாக பதிலளித்திருக்கும் அவரது அலுவலக ஊடகத் தொடர்பாளர் ரூபர்ட் கால்வில் இந்த கொடி விவகாரத்தை நவி பிள்ளை விவாதித்தாகக் கூறினார்.

' இலங்கை காலனிய நாடாக இருந்து விடுதலை பெற்றதைக் கொண்டாடும் இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் ஒரு மதத்தின் கொடி மட்டும் பறக்கவிடப்படுவது பொருத்தமானதா என்று ஆணையர் கேட்டார். மற்ற மதங்களைப் பின்பற்றுவோர் இதை மற்றவர்களின் உணர்வுகளைப் பொருட்படுத்தாத ஒரு செயலாகப் பார்க்கலாம்' என்றும் அவர் கூறினார்.

இதற்கு மாறாக இலங்கை அரசு இந்த சதுக்கத்தில் தேசியக் கொடியை பறக்கவிடுவதைப் பற்றி பரிசீலிக்கலாம். தேசியக்கொடி அனைத்து இலங்கையர்களுக்கும் அவர்கள் யார் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதையும் மீறி சொந்தமானது அது அனைவரையும் ஒன்றுபடுத்தும் ஒரு கொடி என்று நவி பிள்ளை ஆலோசனை வழங்கினார் என்று ரூபர்ட் கால்வில் கூறினார்.

http://www.sankathi24.com/news/33348/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு மாறாக இலங்கை அரசு இந்த சதுக்கத்தில் தேசியக் கொடியை பறக்கவிடுவதைப் பற்றி பரிசீலிக்கலாம். தேசியக்கொடி அனைத்து இலங்கையர்களுக்கும் அவர்கள் யார் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதையும் மீறி சொந்தமானது அது அனைவரையும் ஒன்றுபடுத்தும் ஒரு கொடி என்று நவி பிள்ளை ஆலோசனை வழங்கினார் என்று ரூபர்ட் கால்வில் கூறினார்.

 

அம்மாவுக்கு

சிங்களவனுக்கு பத்தி  சொன்னால்  கேந்தி   வரும் என்ற புறப்படுமுன்  எவரும்  சொல்லவில்லைப்போலும் :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.