Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திர சதுக்கத்தில் புத்த மதக் கொடியா ? நவி பிள்ளை கேள்வியால் சர்ச்சை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

130919164834_independance_square_304x171

புத்தக் கொடி சர்ச்சை -- நல்லிணக்கத்துக்கு ஒரு மதக்கொடி பொருத்தமா?

இலங்கைக்கு சமீபத்தில் விஜயம் செய்த ஐநா மன்ற மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை, கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் அமைந்திருக்கும் முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனநாயகவின் சிலையை அகற்றவேண்டும் என்று ஆலோசனை கூறினார் என்ற செய்திகளை அவரது அலுவலகம் மறுத்திருக்கிறது.

 

இந்தச் சிலை பற்றி அவர் ஒரு வார்த்தையும் பேசவில்லை, அது அகற்றப்படவேண்டும் என்று ஒரு போதும் அவர் கூறவுமில்லை என்று அவரது அலுவலக ஊடகத் தொடர்பாளர் ரூபர்ட் கால்வில் கூறியிருக்கிறார்.

இலங்கை காலனிய நாடாக இருந்து விடுதலை பெற்றதைக் கொண்டாடும் இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில், ஒரு மதத்தின் கொடி மட்டும் பறக்கவிடப்படுவது பொருத்தமானதா என்று ஆணையர் கேட்டார். மற்ற மதங்களைப் பின்பற்றுவோர் இதை மற்றவர்களின் உணர்வுகளைப் பொருட்படுத்தாத ஒரு செயலாகப் பார்க்கலாம்”, என்றும் அவர் கூறினார்.இதே விஜயத்தின் போது, இந்த சுதந்திர சதுக்கத்தில் புத்த மதக்கொடி மட்டும் பறக்கவிடப்பட்டிருப்பது பற்றிய பிரச்சினையிலும் நவி பிள்ளை , நல்லிணக்கம் மற்றும் அனைத்தினங்களையும் ஒன்றிணைத்தல் தொடர்பான கூட்டமொன்றில், கேள்வியொன்றை எழுப்பியதாக வரும் சர்ச்சைகள் தொடர்பாக பதிலளித்திருக்கும், அவரது அலுவலக ஊடகத் தொடர்பாளர் ரூபர்ட் கால்வில், இந்த கொடி விவகாரத்தை நவி பிள்ளை விவாதித்தாகக் கூறினார்.

 

இதற்கு மாறாக இலங்கை அரசு, இந்த சதுக்கத்தில் , தேசியக் கொடியை பறக்கவிடுவதைப் பற்றி பரிசீலிக்கலாம். தேசியக்கொடி, அனைத்து இலங்கையர்களுக்கும் , அவர்கள் யார், எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதையும் மீறி, சொந்தமானது, அது அனைவரையும் ஒன்றுபடுத்தும் ஒரு கொடி, என்று நவி பிள்ளை ஆலோசனை வழங்கினார் என்று ரூபர்ட் கால்வில் கூறினார்.

  'கொடி யதார்த்தத்தையே பிரதிபலிக்கிறது'

 

இலங்கையில் புத்த மதத்துக்கு முதன்மை இடம் கொடுத்த 1972 அரசியல் சட்டத்தை அடுத்து, பௌத்தம் தான் முன்னிலைப்படுத்தப்பட்ட மதம் என்ற உணர்வு மக்களிடையேயும் ஊன்றி வந்திருக்கிறது, இந்த நிலையில் சுதந்திரச் சதுக்கத்தில் புத்த மதக்கொடி பறக்கவிடப்பட்டிருப்பது என்பது இந்த உண்மையின் புற நிலையான வெளிப்பாடே தவிர , இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று கூறுகிறார் மானுடவியல் பேராசிரியரும், பகுப்பாய்வாளருமான யுவி தங்கராஜா.

 

யதார்த்தமான நிலையை வைத்துப் பார்த்தால் இலங்கையில் பௌத்தத்திற்குத்தான் முதலிடம் தரப்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

 

சுதந்திரச் சதுக்கம் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் ஒரு மதத்தினர் மட்டும் சொந்தம் கொண்டாடக்கூடிய கொடி பறக்கவிடப்பட்டிருப்பதை, உள்ளூர்வாசிகள் கூட இது நாள் வரை உணரவில்லை, இதன் குறியீட்டளவிலான முக்கியத்துவம் வெளிநாட்டிலிருந்து வந்தவருக்குத் தெரிகிறது என்றார் அவர். மக்களுக்கு இது குறித்த பிரக்ஞை இல்லை என்பது கவனிக்கவேண்டிய விஷயம் என்றார் அவர். அந்த வகையில் உள்ளூர் மக்கள் இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டார்களா என்ற கேள்விகூட எழுகிறது என்றார் யுவி.

 

சிங்கள மக்களில் முற்போக்கானவர்கள் மத்தியில் இது போன்று சிறுபான்மை மக்களை வருத்தும் அல்லது அவர்களை பாரபட்சமாக நடத்தும் நடவடிக்கைகள் தவிர்க்கப்படவேண்டும் என்ற உணர்வு இருந்தாலும், அரசு, கடும்போக்காளர்களை திருப்திப்படுத்தும் வண்ணமே செயல்படுகிறது என்றும் யுவி கூறினார்.

  தவறு இல்லை என்கிறார் அமைச்சர் வாசுதேவ நானயக்கார

இது குறித்து கருத்து தெரிவித்த தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நானயக்கார, இது சம்புத்த ஜயந்தி காலம். எனவே இந்தக் காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் புத்த மதக்கொடியைப் பறக்கவிடுவது அசாதாரணமானது இல்லை, இதில் யாரும் கவலை தெரிவிக்கவும் இல்லை என்றார்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/09/130919_navipillaiflag.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.