Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் இராணுவ இடையூறு இருப்பதாக தமக்கு முறைப்பாடு கிடைக்கவில்லையாம்! மகிந்த ஹத்துருசிங்க

Featured Replies

mahinda_hathurusinghe-01.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினர் இடையூறு ஏற்படுத்துவது குறித்து பொலிஸாருக்கோ தமக்கோ எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லையென யாழ்ப்பாண இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க 'பி.பி.ஸி சந்தேஷி'க்கு தெரிவித்துள்ளார்.

இராணுவ அழுத்தங்கள் இருந்ததாக சரியான ஆதாரங்களை சாட்சிகளுடன் முன்வைக்கும் பட்சத்தில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள தயாரென இராணுவக் கட்டளைத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது முன்வைக்கும் கருத்துக்கள், தற்போது நிலவும் அமைதியான சூழ்நிலைக்கு பங்கம் விளைவிப்பதாக அமைகிறது எனவும் அவர் கூறினார்.
 
தனிநாடு ஒன்றை அமைப்பது குறித்து முன்வைக்கப்படும் கருத்துக்களினால் வடக்கில் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்குப் பதிலாக எதிர்காலத்தில் அந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகமாக காணப்படுவதாக மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு கடிதம் ஒன்றின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு இராணுவ வீரர்களினால் இடையூறு ஏற்படுவதாகவும் அதனால் அவர்களை இராணுவ முகாமுக்குள் முடக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
 
வடக்கில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக கடந்த நாடாளுமன்ற அமர்வின்போது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கருத்து தெரிவித்திருந்ததுடன், சிவில் உடை அணிந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களே தேர்தல் வன்முறைகளை மேற்கொள்வதாகவும் யாழ்ப்பாணத்தில் இவ்வாறு மேற்கொள்ளப்படும் வன்முறைச் சம்பவங்களுக்கு இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க பொறுப்புக் கூறியே ஆகவேண்டுமென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://tamilworldtoday.com/home

Edited by Kashni

உனக்காரப்பா பிரச்சனையை சொல்லுறது 
பிரச்சனையே நீதானே   

வேலியே பயிரை மேயுது...

ஆதாரங்களை எப்படி முன்வைத்தால் நீயோ முன்வைத்தவனையே பின்வைத்துவிடுவாயே? அப்புறம் எப்படி? எது வசதி?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.