Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாண சபைக்கான வாக்களிப்பு சிறிலங்கா இராணுவத்தை வெளியேற கோரும் - றொய்ற்றர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாண சபைக்கான வாக்களிப்பு சிறிலங்கா இராணுவத்தை வெளியேற கோரும் - றொய்ற்றர்
[ வெள்ளிக்கிழமை, 20 செப்ரெம்பர் 2013, 07:54 GMT ] [ நித்தியபாரதி ]


சிறிலங்கா அரசாங்கத்திற்கும் சிறுபான்மையினரான தமிழ்ச் சமூகத்திற்கும் இடையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட அரசியல் பிணக்கானது மேலும் தூண்டப்படும் என்கின்ற அச்சத்தை விளைவிக்கின்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலானது சனிக்கிழமையன்று சிறிலங்காவின் வடக்கில் நடைபெறவுள்ள நிலையில் மக்கள் இதற்கான வாக்குகளை வழங்கவுள்ளனர்.

இத்தேர்தலில் சிறிலங்காவை ஆளும் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கமானது தோல்வியைச் சந்திக்கும் என்பதற்கான அறிகுறிகள் பெருமளவில் தென்படுகின்றன. ஆனால் இதில் வெற்றி பெறும் என எதிர்வுகூறப்படும் பிரதான தமிழ்க் கட்சியானது வடக்கு மாகாணத்தில் சுயாட்சிக்கான கோரிக்கையை மறுபடியும் முன்வைக்கும்.

1983 தொடக்கம் 2009ல் தமிழ்ப் புலிகள் தோற்கடிக்கப்படும் வரை சிறிலங்காவின் வடக்கானது புலிகளின் மையமாக காணப்பட்டது. வடக்கில் வாக்களிக்கும் பெரும்பாலானவர்கள் தமிழர்களாவர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமது பிராந்தியத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் எவ்வாறான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றனர் என்பதற்கு நேரடி சாட்சிகளாக உள்ளனர். குறிப்பாக போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தால் இழைக்கப்பட்ட பல்வேறு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களால் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறான பாதிப்புக்களைச் சந்தித்துள்ள தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே தமது வாக்குகளை பெருமளவில் வழங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் எனக் கோருவதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது மீண்டும் தனிநாட்டுக் கோரிக்கையை வலுப்படுத்துவதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்பதே தனது முதலாவது கோரிக்கையாக உள்ளதாக கூட்டமைப்பின் பிரதான வேட்பாளரான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

"இராணுவத்தின் பிரசன்னம் என்பது உண்மையான பிரச்சினையாக உள்ளது. நீங்கள் இராணுவத்தை வெளியேற்றினால், எமது மக்கள் தமது நாளாந்த வாழ்வில் எதிர்நோக்கும் தலையீடுகளிலிருந்தும் அச்சுறுத்தல்களிலிருந்தும் விடுதலை பெறுவர். நாங்கள் அவசியமற்ற சித்திரவதைகளுக்கு உள்ளாக முடியாது" என ஓய்வுபெற்ற நீதிபதியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளருமான 74 வயதான விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

போரின் போது இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் பதிலளிக்குமாறு சிறிலங்கா அதிபர் ராஜபக்ச மீதும் சிறிலங்கா அரசாங்கத்தின் மீதும் அனைத்துலக அழுத்தம் இடப்பட்டது. இவ்வாறான போர்க் குற்றங்களுக்கு பொறுப்பளிப்பதன் மூலமே நாட்டில் மீளிணக்கப்பாட்டைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் நிராகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த யூலையில், போரின் போது காணாமற் போன மக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ராஜபக்ச கட்டளையிட்டார். இவ்வாறு காணாமற் போனவர்களில் தமிழ் மக்களே பெரும்பாலானவர்களாவர்.

வடக்கில் கடமையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரப்பரை செய்வதன் ஊடாக வாக்காளர்களை தவறாக வழிநடாத்துவதாக ராஜபக்சவின் ஆளும் கட்சியின் பிரதான வேட்பாளரான சின்னத்துரை தவராஜா தெரிவித்துள்ளார்.

"ஏற்கனவே சிறிலங்கா இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. 2010ல் 64 சதுரகிலோமீற்றர் பரப்பளவுக்குள் இருந்த இராணுவத்தினர் தற்போது இவ்வாண்டில் 24 சதுர கிலோமீற்றர் பரப்புக்குள் குறைக்கப்பட்டுள்ளனர். இராணுவ நகர்வுகள் தொடர்பில் தீர்மானிப்பதற்கான எவ்வித உரிமையையும் மாகாண சபை கொண்டிருக்கவில்லை" என சின்னத்துரை தவராஜா குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபர் ராஜபக்ச நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ளதுடன், எட்டு மாகாணங்களைத் தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கிறார். வடக்கு மாகாண சபைத் தேர்தலிலும் தான் வெற்றிபெறுவேன் என்ற உறுதிப்பாட்டை ராஜபக்ச கொண்டுள்ளார் என்பதை அங்கு நாட்டப்பட்டுள்ள பரப்புரை பதாகைகள் மற்றும் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் சுட்டிநிற்கின்றன. ஆனால் இதில் ராஜபக்சவின் ஆளும் கட்சி வெற்றி பெறுவதென்பது கடினமானதாகக் காணப்படுகிறது.

தாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே தமது வாக்குகளை வழங்கவுள்ளதாக பெரும்பாலான யாழ்ப்பாண வாழ் மக்கள் 'ரொய்ற்றர்' ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர். இராணுவத்தின் அச்சுறுத்தல் காரணமாக தமது கருத்தைத் தெரிவிப்பதற்கோ தமது பெயரைக் கூறுவதற்கோ சிலர் விரும்பவில்லை.

"வடக்கு மாகாணத்தை விட்டு இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டால் மட்டுமே மக்கள் சுதந்திரமாக கருத்துக்களைக் கூறுவார்கள். தமிழ் மக்களுக்கு சுதந்திரமான தனிநாடு ஒன்று தேவை என நான் நினைக்கிறேன்" என இரு பிள்ளைகளின் தந்தையான 43 வயதான எஸ்.குமார் தெரிவித்தார்.

"நாங்கள் எமது நிலத்தைத் திரும்பப் பெறவேண்டும்" என வாக்களிப்பதற்கு 30 கிலோமீற்றர் பயணம் செய்ய வேண்டியுள்ள 63 வயதான சவரிமுத்து ராஜேஸ்வரி கூறுகிறார்.

"நாங்கள் நிறையத் துன்பங்களை அனுபவித்துள்ளோம். எனது வீடு போரின் போது அழிவடைந்து விட்டது. எனது நிலத்தை அரசாங்கம் மீண்டும் என்னிடம் திருப்பித் தந்தால் அது எனது வாழ்வில் மிகப் பெரிய உதவியாக இருக்கும்" என இராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.

செய்தி வழிமூலம் : Reuters
மொழியாக்கம் : நித்தியபாரதி


http://www.puthinappalakai.com/view.php?20130920109092

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.