Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியக் கூட்டமைப்பினரே தமிழனே ஆளவேண்டும் என்பதற்குத் தந்த ஆணையை எறிந்து விடாதீர்கள்

Featured Replies

9ACE6D59-3465-4F5D-8B27-E22C243A5161_mw1வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடந்து முடிந்து கட்சிகள் பெற்ற ஆசனங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளது என்ற உண்மையைக் கூறித்தான் ஆகவேண்டும்.

இந்த உண்மைகளுக்குள் தமிழ் மக்கள் எழுச்சியோடு - உணர்வு பூர்வமாக வாக்களித்துள்ளனர் என்பதை நினைக்கும் போது நாம் தமிழனாகப் பிறந்ததில் பெருமை கொள்ளவேண்டும்.

தேர்தல் முடிவுகளைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தினால், வடமாகாணத்தில் அடங்கும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் தமிழ் மக்களின் வாக்களிப்பு சொல்லி வைத்தது போல தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தமிழ் உணர்வும் தமிழன் என்ற பற்றும் இம்மியும் குறையாமல் - குலையாமல் இருந்துள்ளதை நினைக்கும் போது கண்களில் இருந்து கண்ணீர் முத்துக்கள் கொட்டிக் கொள்கின்றன.

2009ம் ஆண்டு வன்னிப்போரில் தங்கள் உறவுகளைப் பறிகொடுத்து பரிதவித்த அந்த மக்கள் முள்ளிவாய்க்காலில் கால் இழந்து, கையிழந்து, கண் இழந்து அந்தோ! உறவுகளையும் பலிகொடுத்து முட்கம்பி வேலிக்குள் அடைபட்டு, அம்மா பசிக்குது என்று பச்சிளம் குழந்தையின் அழுகை கண்டு இதயம் வெந்து நொந்து சீ. ... என்ன மனித வாழ்வு என்ற வெறுப்பின் எல்லையில், மீள்குடியமர்வு என்ற பெயரில் தறப்பாளுக்குள் குந்தியிருந்து பச்சை விறகை ஊதி நெருப்பேற்றி பச்சையரிசிக் கஞ்சி காச்சிக் குடித்தபோதும், வடக்கு மாகாண சபைத் தேர்தலில் மார்தட்டி நாங்கள் மானமுள்ள தமிழர் தரையால், கடலால், ஆகாயவெளியால் போரிட்ட மறவர். எங்களை அடிமையாக்க யாராலும் முடியாதென்பதை வாக்குப் பலத்தால் நிரூபித்த எங்கள் அருமந்த தமிழ் உறவுகளை நினைக்க - அவர்கள் தமிழ் மீது கொண்ட பாசத்தை, நேசத்தை, அன்பை நினைக்க அழுகையும் ஆனந்தக் கண்ணீரும் வராமல் வேறென்ன வரும்.

அன்புக்குரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே!

ஈழத்தமிழ் மக்கள் தங்கள் கடமையை இந்த உலகில் எவரும் எதிர்பாராத வகையில் செய்து முடித்துள்ளனர்.

வன்னிப்போரில் காலிழந்த தமிழ் மூதாட்டியும் தன்தலையால் நடந்து தன் வாக்கை உங்களுக்கு இட்டு மகிழ்ந்தாள்.

இந்த உண்மையை உங்கள் உயிர் உள்ளவரை மறந்துவிடாதீர்கள். தமிழ் மக்கள் திரண்டெழுந்து தமிழனைத் தமிழனே ஆளவேண்டும் என்பதற்குத் தந்த ஆணையை எறிந்து விடாதீர்கள்.

இந்த ஆணையைக் கையில் தூக்கி எடுங்கள். அரசுடன் பேசுங்கள். சர்வதேசத்தை கூவி அழையுங்கள். பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வு காணுங்கள். இது உங்களிடம் தமிழ் மக்கள் தந்த மிகப்பெரும் பொறுப்பு. மறந்து விடாதீர்கள்.

நன்றி: வலம்புரி

http://www.sankathi24.com/news/33515/64//d,fullart.aspx

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.