Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் அரச திணைக்களங்களில் பெண்களுக்கெதிரான பாலியல் தொல்லை!

Featured Replies

யாழ்.குடாநாட்டிலுள்ள அரச திணைக்களங்களில் பணியாற்றும் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இந்த வேளையில் பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி அலுவலக கணனியில் ஆபாசப் படங்களை ஏற்றி வைத்திருந்த சமுர்த்தி முகாமையாளர் ஒருவர் அங்குள்ள பெண் உத்தியோகத்தர்களை பாலியல் ரீதியாக இம்சைப்படுத்தியமை தொடர்பில் பிரதேச செயலருக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

பிரதேச செயலர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அதன் அறிக்கையை யாழ்.மாவட்ட சமுர்த்தி ஆணையாளர் மகேஸ்வரனுக்கு அனுப்பி வைத்திருக்கின்றார்.

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் இரண்டு சமுர்த்தி வங்கிகள் இயங்குகின்றன. இதில் ஒரு வங்கியில் பணியாற்றும் சமுர்த்தி முகாமையாளர் அந்த வங்கியில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர்களை பாலியல் ரீதியாக இம்சைகளுக்கு உட்படுத்தி வந்துள்ளார். பெண் உத்தியோகத்தர்கள் தினமும் அணிந்து வருகின்ற ஆடைகளைப் பார்த்து வர்ணிப்பதை இவர் வழக்கமாக கொண்டிருந்தார்.

மேலும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுடன் இவர் மிகக் கடுமையான நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாகவும் மிக அண்மித்த இடத்தில் வீடுகள் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்களைக் கூட இவர் மதிய உணவிற்கு வீட்டுக்குச் செல்ல அனுமதிப்பதில்லையென்று உத்தியோகத்தர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். 

இந்நிலையில், பெண்கள் பயன்படுத்தும் அலுவலகக் கணனியில் இவர் ஆபாசப் படங்களை ஏற்றி வைத்திருந்துள்ளார். தமது வேலைகளைச் செய்வதற்காக கணனியைப் பயன்படுத்திய பெண்கள் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில் இது தொடர்பில் குறித்த பிரதேச செயலருக்கு முறையிட்டுள்ளனர். 

ஆனால் சமுர்த்தி முகாமையாளருக்கு எதிராக காத்திரமான நடவடிக்கை எடுக்காத பிரதேச செயலர், முறைப்பாடு செய்த பெண்களில் ஒருவரை வேறு சமுர்த்தி வங்கிக்கு இடமாற்றியுள்ளதாக தெரியவருகின்றது. இதனால் இந்த விடயம் யாழ்.மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சங்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அந்தச் சங்கம் இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு யாழ்.மாவட்ட சமுர்த்தி ஆணையாளர் மகேஸ்வரன் மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலர் ஆகியோரைக் கோரியிருந்தது.

இதன் பின்னர் குறித்த சமுர்த்தி முகாமையாளரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பிரதேச செயலர் இது தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமுர்த்தி ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ளார். பிரதேச செயலர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார். (மேற்படி சமுர்த்தி முகாமையாளரின் பெயர் விபரங்கள் மற்றும் விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்கள் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உரிய நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் அவரின் பெயர் விபரங்களையும் விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களையும் தரவேற்ற நாங்கள் தயாராக இருக்கின்றோம்)

இதேவேளை, இந்த விடயம் யாழ்.குடாநாட்டிலிருந்து வெளிவருகின்ற பத்திரிகை ஒன்றில் செய்தியாக வெளிவந்த நிலையில் அந்தப் பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைந்த சமுர்த்தி முகாமையாளர்கள் குழு அநாகரிகமாக நடந்துகொண்டுள்ளது. குறித்த சம்பவம் நடைபெறவில்லையென்றும் பத்திரிகைச் செய்தி பிழையானது என்றும் மறுப்பு பிரசுரிக்குமாறும் பத்திரிகை ஆசிரியபீடத்தை அச்சுறுத்தியுள்ளது.

மேற்படி சமுர்த்தி முகாமையாளர் குழு பத்திரிகை அலுவலகத்தில் எப்படி நடந்துகொள்வது என்பது தெரியாமல் செயற்பட்ட விதம் குறித்து மேற்படி பத்திரிகை பணியாளர்கள் கடும் சீற்றமடைந்துள்ளனர். இதேவேளை குறித்த விடயத்தை மேலும் உரிய ஆதாரங்களுடன் வெளியிடுவதற்கு மேற்படி பத்திரிகை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரியவருகின்றது. 

இந்த நிலையில் ஆபாசப்படம் ஏற்றி வைத்திருந்தமை மட்டும் பொய் என்றும் ஏனைய சம்பவங்கள் அனைத்தும் உண்மை என்றும் குறித்த பிரதேச செயலர் தனது நெருங்கிய நண்பர்களுக்கு கூறியுள்ள தகவல்களும் வெளியே வந்துள்ளதாக சங்கதியின் பருத்தித்துறை செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.sankathi24.com/news/34154/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.