Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காத்தான்குடி முஸ்லீம்களால் ஆரையம்பதி தமிழ் கிராம காணிகள் அபகரிப்பு -

Featured Replies

காத்தான்குடி முஸ்லீம்களால் ஆரையம்பதி தமிழ் கிராம காணிகள் அபகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி இன்று ஆரையம்பதி பிரதேச மக்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள அரச காணிகள் மற்றும் பொதுமயானம் என்பனவை திட்டமிட்ட வகையில் அபகரிக்கப்படுதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் மாவட்ட செயலகத்தின் வாயல்கதவினை மூடி பெருமளவான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  காத்தான்குடி நகரசபையின் முதல்வர் அஸ்பர் தனது உறவினர்களின் பெயரில் அதிகளவான காணிகளை இப்பகுதியில் திட்டமிட்ட வகையில் அபகரித்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.

தமக்குள்ள அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள பொதுமயானம் மற்றும் அரச காணிகளை அவர் அபகரித்துள்ளார்.  தமிழர்களின் பாரம்பரிய பிரதேசமான ஆரையம்பதியில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பு மீண்டும் ஒரு இன வன்முறையை தூண்டும் செயலெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆர்ப்பட்டத்தில் கலந்துகொண்டோர் காணி அபகரிப்புக்கு எதிரான பதாகைகளையும் காத்தான்குடி நகரசபை முதல்வருக்கு எதிரான பதாகைகளையும் தாங்கியிருந்தனர். இதனையடுத்து இந்த பிரச்சினை பற்றி ஆராய அப்பகுதிக்கு ஒரு குழுவை அனுப்புவதாக மாவட்ட அரசாங்க அதிபர் சாள்ஸ் உறுதியளித்ததை அடுத்து இந்த ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் துண்டுபிரசுரம் ஒன்றும் வெளியிடப்பட்டது.

அதில், திட்டமிட்ட வகையில் இனமுறுகலை ஏற்படுத்த துடிக்கும் காத்தான்குடியில் சில முஸ்லிம்களினாலும் நகரசபை தலைவர் ஜனாப் அஸ்வர் உட்பட ஆரையம்பதி மக்களின் 15000க்கும் மேற்பட்டர்கள் பயன்படுத்தும் பொதுமயான காணியினை அத்துமீறி அடைத்துள்ளனர்.அதன் காரணமாக ஆரையம்பதிக்கு பொதுமயானம் இல்லாமல் போய்விட்டது. நாங்கள் எங்கு பிணங்களை அடக்கம் செய்வது.

ஆரையம்பதி நரசிம்மர் ஆலயத்தினை சுற்றி 15 ஏக்கர் காணிகளுக்கு மேல் போலி ஆவனங்களுடன் வேலியிட்டு திட்டமிட்ட குடியேற்றத்துக்காக அடைக்கப்பட்டுள்ளது. அதற்கு கிராமசேவகர், பிரதேச செயலாளர் அனுமதியின்றி மின்சாரசபையின் சட்டதிட்டங்களை மீறி மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது கரையோர சட்டதிட்டங்களை மீறும் செயலாகும்.என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.batti_arpadam_001.jpgbatti_arpadam_002.jpgbatti_arpadam_004.jpgbatti_arpadam_005.jpg

http://www.thinakkathir.com/?p=52961#sthash.BUvvj2LT.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.