Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரிஸ் தமிழ் வர்த்தகர்களிற்கும் மக்களிற்கும்...2

Featured Replies

நாம் ஏற்கனவே சில மாநகர விதிகள் பற்றி பார்த்திருந்தோம். அதிலும் முக்கியமாக விளம்பரச் சுவரொட்டிகள் பற்றியும் அதனால் சந்திக்க இருக்கும் சட்டச் சிக்கல்கள் பற்றியும் பார்த்தோம். இதில் அடுத்த முக்கியமான விடயங்களில் ஒன்றாக வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை நிறுவது பற்றி விளக்கமளிக்கப்பட்டது.

Page%2018-2.jpg

முக்கியமாக பெருமளவான வர்த்தக நிலையங்களின் பெயர்ப்பலகைகள் எந்த விதமான அனுமதிகளோ முறையான விண்ணப்பங்களோ செய்யப்படாமல் நிறுவப்பட்டுள்ளன. இது தண்டனைக்குரிய குற்றமாகும்.

மாகநரசபையால் இதற்கான குற்றப்பணம் விதிக்கப்பட்டால் அது பெயர்ப்பலகை நிறுவப்பட்ட நாளிலிருந்து ஒரு நாளிற்கு 500 ஈரோக்கள் வரை அமையக்கூடியது. இது வர்த்தக நிலைத்தையே அடியோடு அழித்துவிடும் அளவிற்குப் பாரதுரமான குற்றப்பணமாக அமையும்.

பெயர்ப்பலகைகளின் அளவுகளும் வர்ணங்களும் கூட நகரத்திட்டமிடல் திணைக்களத்தினால் கட்டுப்படுத்தப்படும். பெயர்ப்பலகை நிறுவும்போது நகரத்திட்டமிடல் திணைக்களத்தின் கட்டட அழகியல் நிபுணர்களிடம் அனுமதியும் ஆலோசனையும் பெறல் வேண்டும். Boulevard Morlandஇல் அமைந்திருக்கும் Direction d'Urbanisme எனும் மாநகரசபை அலுவலகத்தில் பெயர்ப் பலகைக்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்வதோடு அதற்கான ஆலோசனைகளையும் பெற முடியும்.

ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் அந்த வர்த்தக நிலையம் அமைந்திருக்கும் கட்டடப்பகுதியின் அமைப்பைப் பொறுத்து பெயர்ப்பலகைக்கான நிறங்கள் இவர்களால் தீர்மானிக்கப்படும். ஆனால் பெரும்பாலான வர்த்தகர்கள் தமது விருப்பத்திற்குப் பலவர்ண பெயர்ப்பலகைகளை அனுமதியின்றி நிறுவி இருப்பதாக பரிஸ் 10 இன் நகரபிதாவும் கட்டடக்கலை நிபுணர்களும் குற்றம் சாட்டினார்கள்.

பெயர்ப்பலகைக்கான மாதிரி வடிவம் வரையப்பட்டு அதனது முப்பரிமாண அளவீடுகளும் கொடுக்கப்பட்டு அது ஒளிரும் பெயர்ப் பலகையா அல்லது சாதாரணமானதா என்ற விளக்கங்களும் கொடுக்கப்பட்டு வர்த்தக நிலையத்தின் படத்துடன் அதற்குரிய விண்ணப்பங்ககளும் அனைத்து ஆவணங்களும் மூன்று பிரதிகள் எடுக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படல் வேண்டும். இது பரிசீலனை செய்யப்பட்டு அனுமதி அளிக்கப்பட்ட பின்னரே பெயர்ப்பலகைகள் நிறுவப்படல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அத்தோடு பெயர்ப்பலகைகளில் முக்கியமான வர்த்தக நிலையத்தின் பெயர் இலத்தீன் எழுத்துக்களில் அதாவது பிரெஞ்சு எழுத்துக்களில் கட்டாயமாக இருக்கவேண்டும். அதன் கீழ் அதற்குரிய தமிழ்வடிவம் இருக்கலாம். இது சட்டத்தின் மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அனுமதியின்றிப் பெயர்ப்பலகைகளை நிறுவி இருக்கும் வர்த்தகர்கள் உடனடியாகத் தாம் நிறுவியிருக்கும் பெயர்ப்பலகைகளிற்கான அனுமதி விண்ணப்பத்தைத் தயார் செய்து விண்ணப்பிக்க வேண்டும். அதற்குரிய மாற்றங்களை நகரத் திட்டமிடற் திணைக்களம் தெரிவிக்குமாயின் அந்த மாற்றங்கள் செய்யப்படல் வேண்டும்.

பரிஸ் வர்த்தக நிலையங்களின் சட்டபூர்வமான நடவடிக்கைகளைக் கண்காணிக்கச் சிறப்புக் காவற்துறைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளதோடு ஒரு சிறப்புக் கண்காணிப்பாளரும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அனுமதியின்றி செய்யப்படும் பெயர்ப்பலகை விளம்பரங்கள் மற்றும் திருத்த வேலைகளை மிகவும் அவதானமாகவும் கண்டிப்பாகவும் அவதானித்து அதற்குரிய குற்றப்பணத்தை அறவிட உள்ளார். அதனால் மிக அவசரமாக முதலில் பெயர்ப் பலகைகைகளிற்கான சட்டபூர்வ அனுமதியைப் பெற்று அதற்கான வருடாந்த வரியைச் செலுத்த வேண்டும்.

அடுத்துக் கடைகளிற்கு வெளியே வைக்கப்படும் பொருட்கள். இவையும் வர்த்தகர்கள் மீது மாநகரசபை சாட்டிய குற்றங்களில் ஒன்றாகும். இப்பொருட்களை வைப்பதற்கென நடைபாதையின் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். முக்கிமாகப் பொருட்கள் ஏற்றி வரும் மரச்சட்டங்கள் (Palette) வெளியில் வைப்பது  தடை செய்யப்பட்டுள்ளது. அத்தோடு உணவுப் பொருட்கள் வெளியில் வைக்கும் போது அது நிலமட்டத்தில் இருந்து ஒரு மீற்றர் உயரத்தில் வைக்கபடல் வேண்டும் எனச் சட்டம் வலியுறுத்துகின்றது. அத்தோடு வெளியில் நின்று வியாபாரம் செய்வதும் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்களின் போக்குவரத்தைத் தடை செய்யவதோடு சட்டவிரோதமானதும் என வலியுறுத்தப்பட்டது. வெளியில் பொருட்கள் வைக்கும் போது முக்கியமாக பழங்கள் போன்றவற்றினைப் பெட்டி பெட்டியாகக் கீழே வைத்து எடுத்து விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

பழங்கள் உணவுப் பொருட்கள் என்பதால் அவை மேற்குறிப்பிடப்பட்டபடி ஒரு மீற்றர் உயரத்திற்கு மேலேயே இருக்க வேண்டும். அத்தோடு வீதியை வியாபாரம் செய்யும் இடமாகவும் மாற்றப்படலாகாது எனவும் குறிப்பிடப்பட்டது. இதற்கான விளக்கங்களையும் ஆலோசனைகளையும் தரத் தாம் எப்பொழுதும் தயாராக இருப்பதாக பரிஸ் 10 மாநகரசபை தெரிவித்துள்ளது.

இப்படியான விடயங்கள் மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட இருப்பதால் அதற்குரிய ஆலோசனைகளைப் பெற்றுச் செய்வதன் மூலம் குற்றப்பணத்திலிருந்து தப்பிக்க முடியும்.

- அநபாயன்

நன்றி: ஈழமுரசு

http://www.sankathi24.com/news/34175/64/2/d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.