Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவில் படுகொலை செய்யப்பட்ட பிரித்தானியர் தொடர்பாக இளவரசர் சாள்ஸ் கேள்வியெழுப்புவார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

prince-Charles-12813-150.jpg

சிறிலங்காவில் படுகொலை செய்யப்பட்ட பிரித்தானியாவைச் சேர்ந்த 32 வயதான குறம் சேய்க் Khuram Shaikh தொடர்பில் நீதியைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சியை பிரித்தானிய இளவரசர் சாள்ஸ் மேற்கொள்ளவுள்ளார். அடுத்த மாதம் சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் அரசாங்கத் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சிமாநாட்டைத் தலைமை தாங்குவதற்காக சிறிலங்காவுக்கு வரவுள்ள பிரித்தானியாவின் இளவரசரான சாள்ஸ், 2011ல் படுகொலை செய்யப்பட்ட பிரித்தானியரும் செஞ்சிலுவைச் சங்கப் பணியாளருமான சேய்க் தொடர்பில் நீதியைப் பெற்றுக் கொள்வதற்காக கேள்வியெழுப்புவார் எனக்கூறப்படுகிறது. இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூனும் சிறிலங்காவுக்கு வரவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதே. 

சேய்க் மற்றும் இவரது காதலி மீதான தாக்குதலில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பனும் சிறிலங்காவின் ஆளும் சுதந்திரக் கட்சியின் முக்கிய அரசியல்வாதியுமான ஒருவர் தொடர்புபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ராஜபக்சவின் நெருங்கிய நண்பர் ஒருவர் சேய்க் படுகொலையுடன் தொடர்புபட்டதற்கான தடயங்கள் உள்ளபோதிலும், இவர் மீது எவ்வித குற்றங்களும் பதிவுசெய்யப்படவில்லை. 

சேய்க்கின் சொந்த இடமான றொக்டேலைச் Rochdale சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான சிமோன் டன்சுக் Simon Danczuk, சேய்க் படுகொலை செய்யப்பட்ட சிறிலங்காவுக்குச் செல்வது தொடர்பில் தனது அழுத்தத்தை பிரித்தானியப் பிரதமர் மீது மேற்கொண்டதன் பின்னர், தற்போது பிரித்தானிய இளவரசர் சாள்ஸ் இது தொடர்பில் தனிப்பட்ட நலனைக் காண்பித்துள்ளதாகவும், சேய்க்கின் படுகொலை தொடர்பாக ராஜபக்சவிடம் கேள்வியெழுப்பவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

சேய்க்கின் படுகொலை தொடர்பில் சிறிலங்காவானது மிகத்தெளிவான பதிலை வழங்காதுள்ள நிலையில், சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் உச்சிமாநாட்டை பிரித்தானியப் பிரதமர் கமறூன் புறக்கணிக்க வேண்டும் என டன்சுக் மீண்டும் மீண்டும் தனது கோரிக்கையை முன்வைத்த நிலையில், இந்த விவகாரத்தில் இளவரசர் சாள்ஸ் தலையீடு செய்ய முன்வந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. 

பொதுநலவாய அமைப்பின் உச்சிமாநாட்டை சிறிலங்காவில் நடாத்துவது தொடர்பில் முதலில் பிரித்தானியா தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தது. சிறிலங்காவானது மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் போன்றவற்றில் ஈடுபட்டபோதிலும் இவை தொடர்பில் பொறுப்பளிக்கவில்லை என்கின்ற காரணத்தை முன்வைத்து தான் இந்த உச்சிமாநாட்டைப் புறக்கணிப்பதாக கனடா தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த உச்சிமாநாட்டைப் புறக்கணிக்குமாறு பிரித்தானியப் பிரதமரிடமும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. 

சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் மிகப் பரவலாக நடைபெறுகின்றன என்பதற்கு சேய்க் படுகொலை தொடர்பில் நீதி வழங்கப்படாமை எடுத்துக்காட்டாக உள்ளது என விமர்சகர்கள் கூறுகின்றனர். 

2011 நத்தார் தினமன்று அதிகாலையில் சேய்க் மற்றும் இவரது காதலி தென் சிறிலங்காவில் உள்ள தங்காலையில் அமைக்கப்பட்டிருந்த சிறிய விடுதி ஒன்றில் தங்கியிருந்த வேளையில், ரஸ்யாவைச் சேர்ந்த சேய்க்கின் காதலி மீது ஆண்கள் சிலர் பாலியல் சித்திரவதை செய்ததாக சேய்க் முறைப்பாடு செய்த பின்னர் இவரது கழுத்து நெரிக்கப்பட்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தொடர் தாக்குதலால் சுயநினைவற்றிருந்த சேய்க்கின் காதலியை பலர் கூட்டாகச் சேர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக சிறிலங்கா காவற்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் அரசியல்வாதி ஒருவர் உட்பட எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டு கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தபோதிலும், சேய்க்கின் காதலி பாலியல் வன்புணர்வுக்கு உட்படவில்லை என சிறிலங்கா அரசாங்க அமைச்சரான தினேஸ் குணவர்த்தன அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மரபணுப் பரிசோதனை உட்பட பல்வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இறுதியில் குற்றவாளிகள் எவ்வித தண்டனையுமின்றி விடுவிக்கப்பட்டனர். 

சிறிலங்கா மத்திய புலனாய்வு அதிகாரிகளால் வழங்கப்பட்ட மரபணுப் பரிசோதனையின் இறுதியில், சேய்க் படுகொலை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட பிரபல அரசியல்வாதி மற்றும் ஏனைய இருவரதும் மரபணுக்கள் ஒத்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக கடந்த மாதம் தங்காலை நீதிமன்றில் இடம்பெற்ற அமர்வில் குறிப்பிடப்பட்டதாக சிறிலங்கா ஊடகங்கள் தெரிவித்திருந்தன. 

"சேய்க் தொடர்பான வழக்கானது எவ்வித முடிவும் எட்டப்படாது இழுத்தடிக்கப்படுவதால் எமது குடும்பத்தினர் தொடர்ந்தும் மனவேதனையில் உள்ளனர். எனது தந்தையார் ஒவ்வொரு நாளும் சேய்க்கின் கல்லறைக்குச் சென்று வணக்கம் செலுத்துகிறார். இது எமது குடும்பத்திற்கு பெரும் மனவேதனையைத் தருகிறது. இதனை ஆற்றுவதற்கு வேறுவழி எதுவுமில்லை" என சேய்க்கின் சகோதரரான நசீர் கடந்த வெள்ளியன்று தெரிவித்துள்ளார். 

"நாங்கள் சிறிலங்காவுக்குச் சென்றபோது, சேய்க் படுகொலை தொடர்பான சாட்சியங்கள் மற்றும் மரபணுப் பரிசோதனை அறிக்கை போன்றவற்றுக்காக காத்திருப்பதால் இது தொடர்பில் தீர்ப்பு வழங்கப்படவில்லை என எம்மிடம் கூறப்பட்டது. ஆனால் இந்த ஆதாரங்களை சிறிலங்கா அதிகாரிகள் பல மாதங்களுக்கு முன்னர் பெற்றுவிட்ட போதிலும் எமது சகோதரரின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவில்லை" என சேய்க்கின் சகோதரரான நசீர் மேலும் குறிப்பிட்டார். 

நசீரிடம், கமறூன் சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்க வேண்டுமா அல்லது இல்லையா எனக் கேட்டபோது, "இது மிகவும் கடினமான ஒரு கேள்வி" என அவர் பதிலளித்தார். 

"சேய்க்கின் படுகொலை தொடர்பாக நீதி எட்டப்படும் வரை கமறூன் பொதுநலவாய அமைப்பின் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும்" என நாடாளுமன்ற உறுப்பினரான டன்சுக் தெரிவித்துள்ளார். 

சேய்க் படுகொலை தொடர்பில் நீதி வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறதேயொழிய, இதுதொடர்பில் விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் என நினைக்கவில்லை. 

இந்த வழக்கில் சிறிலங்கா அரசாங்கம் தலையீடு செய்து காலத்தை இழுத்தடித்து வருகிறது என்ற குற்றச்சாட்டை கடந்த டிசம்பரில், சிறிலங்காவின் பிரித்தானியாவுக்கான பதில் உயர் அணையாளர் நிவிலி டீ சில்வா மறுத்திருந்தார். 

சேய்க்கின் படுகொலை விவகாரமானது சிறிலங்காவில் நிலவும் மனித உரிமை மீறலைக் கோடிட்டுக் காட்டுகிறது. சிறிலங்காவின் மனித உரிமைச் சூழல் மோசமடைந்த நிலையில் அங்கு நடைபெறும் பொதுநலவாய அமைப்பின் உச்சிமாநாட்டில் தான் கலந்துகொள்ள மாட்டேன் என கனேடியப் பிரதமர் ஹார்பர் அறிவித்துள்ளதானது இதற்கு மேலும் வலுச்சேர்க்கிறது. சிறிலங்காவில் யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் இடம்பெறும் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கமானது பொறுப்பளிக்கத் தவறியுள்ளதால் தான் சிறிலங்காவில் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டைப் புறக்கணிப்பதாக, இந்த மாதத்தின் ஆரம்பத்தில் பாலிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது கனேடியப் பிரதமர் உறுதிபடத் தெரிவித்திருந்தார். 

"கனேடியர்களால் மதிக்கப்படும் பொதுநலவாய அமைப்பின் முக்கிய விழுமியங்களை சிறிலங்கா அரசாங்கமானது கடைப்பிடிக்கத் தவறியுள்ளமை தெளிவாகிறது" என பிரதமர் ஹார்பர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார். 

செய்தி வழிமூலம் : The Observer 

மொழியாக்கம் : நித்தியபாரதி

 

http://www.puthinappalakai.com/view.php?20131015109255

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.