Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

EPRLன் மாகாண சபை உறுப்பினர்களில், மூவர் வவுனியாவில் சத்தியப் பிரமாணம்

Featured Replies

மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 30 பேரும் ஒன்றிணைந்து செயற்படுவார்கள், தலைவர் ஆர்.சம்பந்தனின் தலைமையில் அவர்களுக்கான வழிகாட்டலை TNA செய்யும்:- சிவசக்த்தி ஆனந்தன்

Eprlf_CI.jpg

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட மாகாணசபை உறுப்பினர் க.சர்வேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் டாக்டர் சிவமோகன், வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர் எம்.தியாகராஜா ஆகிய மூவரும் இன்று புதன்கிழமை (16.10.13) வவுனியாவில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

வவுனியா சட்டத்தரணி க.தயாபரன் இவர்களுக்கு சத்தியப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த வைபவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மற்றுமொரு வவுனியா மாவட்ட உறுப்பினராகிய இந்திரராஜா முதலமைச்சர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே புளொட் அமைப்பைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்திலும், மேலும் இருவர் கொழும்பிலும், மற்றுமொருவராகிய சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்காலிலும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதில் தாமதம் ஏற்பட்டிருந்த போதிலும், எதிர்வரும் 25 ஆம் தேதி தனது முதல் அமர்வை நடத்தவுள்ள வடமாகாணசபையின் முதலாவது நடவடிக்கையில் இருந்து, மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 30 பேரும் ஒன்றிணைந்து செயற்படுவார்கள் என்றும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனின் தலைமையில் அவர்களுக்கான வழிகாட்டலை கூட்டமைப்பு செய்யும் என்றும் இன்றைய பதவியேற்பு நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97735/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.