Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி மஹிந்த முன்னிலையில் சிவி இன்று மீண்டும் சத்தியப்பிரமாணம்!

Featured Replies

052501.jpg

வட மாகாண சபை முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் இன்று (17) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

வட மாகாண சபையின் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அமைச்சு பொறுப்புக்களுக்கே சிவி இன்று சத்தியப்பிரமாணம் செய்வதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

http://www.tamizl.com/?p=45063

வட மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமது அமைச்சுப் பொறுப்புக்களுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படங்கள் - ஜனாதிபதி ஊடக பிரிவு)

 

 

01%28886%29.jpg

02%28709%29.jpg
03%28516%29.jpg
04%28354%29.jpg
05%28259%29.jpg
06%28182%29.jpg


தமக்கு பொறுப்பான அமைச்சுக்களுக்காக வட மாகாண முதலமைச்சர் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

 

01%28885%29.jpg
வட மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமது அமைச்சுப் பொறுப்புக்களுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது. வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.விக்னேஸ்வரன், கடந்த வாரம் ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சராகவும் மாகாணசபை உறுப்பினராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிலையிலேயே தமக்கு பொறுப்பான அமைச்சுக்களுக்காக வட மாகாண முதலமைச்சர் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

வடமாகாண முதலமைச்சரின் கீழ் வடமாகாண நிதி மற்றும் திட்டமிடல், சட்டம் மற்றும் ஒழுங்கு, காணி மற்றும் வீதி அபிவிருத்தி, மின்சாரம், வீடு மற்றும் நிர்மாணம், நீர்வள, கூட்டுறவு அபிவிருத்தி, சமூகசேவைகள் மற்றும் புனர்வாழ்வு, மகளீர் விவகாரம், கைத்தொழில் மற்றும் வர்த்தக மேம்பாடு, சுற்றுலா, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள், நிர்வாக மற்றும் உணவு வழங்கல்  மற்றும் விநியோகம் ஆகிய அமைச்சுகள் உள்ளடங்கும். 

இதேவேளை, வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் ஏழு பேரும் இன்று மாலை ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.