Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் கலாச்சார நுண் அலகுகளும் அடித்தள மக்கள் சினிமாவும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ் கலாச்சார நுண் அலகுகளும் அடித்தள மக்கள் சினிமாவும்
 

 

 

 

 

1983 ஆம் வருடம் மூன்று ஆண்டகளுக்கு மேலாக தொடர் மரணங்கள் எங்கள் குடும்பத்தை துரத்திய காலமது. மருத்துவமனைகளின் வராந்தாக்களிலேயே வாழ்ந்து கொண்டிருந்த நாட்களவை. குடிப்பழக்கம் உண்டென்றாலும், அதன்வழியே தப்பிச்செல்லும் வாய்ப்பற்றகாலம். செகண்ட் ஷோ என்று அறியப்பட்ட பின்னிரவு சினிமாக் காட்சிகளே, மனப்பிறழ்வின் விளிம்பில் அல்லாடிக் கொண்டிருந்த என்¬¬க் காத்து ரட்சித்தன. அப்படியொரு நாளின் பின்னிரவில் பாரதிராஜாவின் ‘மண்வாசனை’ சினிமாவைப் பார்க்க நேர்ந்தது. கூட்டம் நிரம்பி வழிந்தது. கதைக்களம் தேனி அல்லி நகரத்தின் அருகிலுள்ள காக்கிவாடன்பட்டி. எட்டுப்பட்டி இளைஞர்கள் பிடிக்கும் அடங்காத ஜல்லிக்கட்டுக்காளைக்கு சொந்தக்காரன் மூக்கத்தேவன். அவனும் ஜல்லிக்கட்டுக்காளை போன்றவன்தான். குடி, கூத்தியாள் என்று மனம்போன போக்கில் வாழ்பவன். ஆனாலும் கழுத்தில் மஞ்சக்கயிறு கட்ட நிர்பந்திக்கும் சாராயம் காய்ச்சும் கூத்தியாளிடம் ‘நல்லநாளும் பொழுதுமா வீட்டுக்குப் போகலன்னா பொம்பள லட்சயக் கெடுத்துப்புடுவா’ என்று அச்சமும் காட்டுவான். வீட்டுக்குள் மனைவியை அடித்து துவைத்து மஞ்சக்காணியை (பெண்ணிற்கு சீராகக் கொடுக்கப்படவேண்டிய அப்பன் வீட்டு நிலம்) வாங்கி வரச் சொல்வான். கோபத்தின் உச்சத்தில் ‘களவாணி குடும்பத்தில பொண்ணெடுத்தெ பாரு ஏம் புத்திய செசருப்பால அடிக்கணும்’ என்பான். அத்தனன அடியையும் பொறுத்துக் கொண்டிருந்த மனைவி ‘ஏலே! எங்கப்பன் வீட்டப்பத்தி ஏதாவது பேசுன புருஷனுகூட பாக்காம கொள்ளிக்கட்டய எடுத்து கோலம் போட்டுப்புருவன் கோலம்’ என ஆவேசம் காட்டுவாள். ‘அவ்வளவு ரோசக்காரி உங்காத்தகிட்ட போயி மஞ்சக்காணியையும்சீரையும் வாங்கிட்டு வாடி’ என்பான் ககன். காட்சி மாறும். ஆத்தாக்கிழவி திண்ணையில் உட்கார்ந்திருப்பாள். மகள் தெருவில் நின்றபடி ‘லட்சயும் மொச்சயும் கெட்டாதான் ஞாயம் பொறக்கும் போலிருக்கு’ என்று கத்தி விட்டு உடனடியாக சீரைக் கொடுக்கும்படி கேட்பாள். ‘யாருடி அவ நீயும் உம் புருஷனும் வம்பாடுபட்டுச் சம்பாதிச்சத கேட்டு வந்திருக்யா’ என்பாள் ஆத்தா. தொடர்ந்து கிழவியே ‘புடவை எங்க காயுது, நடைய எங்க நிறுத்தறதுன்னு அலையறான் அந்த பொச கெட்டபய. முதல்ல உம் புருஷன முடிஞ்சு வையி’ என்பாள். மகளோ, அவன் மகராஜனோ, பிச்சைக்காரனோ எம் புருஷன் ஆம்பள. அவன் ஆயிரஞ் செய்வான். அதக் கேக்கிறதுக்கு யாருக்கும் பவர் கெடயாது. இந்த மாசி பங்குனிக்குள்ள மஞ்சக்காணிய¢¢குடுக்கல ஆத்தா புள்ளன்ற ஒறவே அந்துபோயிடும். மானங்கெட்டு மகிழிபூத்துரும்’ என்று எச்சரித்துவிட்டு வெளியேறுவாள். ஊர்ப்பெரிய மனிதர்கள் கிழவியிடம் ‘ஏங்கெழவி மஞ்சக் காணியை குடுத்துட்டா என்ன’ என்பார்கள். கிழவி வினயமாக ‘நா என்ன கேனச் சிறுக்கியா, எத எப்பக் குடுக்கனும்னு எனக்குத் தெரியும்யா. சின்னது (பேத்தி) ஒன்னு வளருதுல்ல. அதுவரும்போது பார்க்கலாம் என்பாள். தொடரும் காட்சி மகள் வயிற்றுப்பேத்தி சடங்காகி விடுவாள். கிழவியின் மகன் (கதைநாயகன்) தாய்மாமன¢வீரணனை அழைக்காமல் சடங்குக்கு ஏற்பாடு செய்வான் மூக்கையா. ‘ஏலே வீரணா வெந்த சோத்துக்கும் விதிவந்த சாவுக்கும் பெறந்தவனாடா நீ’ என்று மகனை உசுங்பபேத்தி விடுவாள் கிழவி. அருவாளுடன் கிளம்பும் வீராணன் அக்கா வீட்டு தெரு முனையில் அருவாளை சாணை பிடித்தபடி ‘இன்னைக்கு ரெண்டு ஒண்ணு பாத்துருவம்’ என்பான். ஊரார் சமாதானம் செய்து மூக்கையாவை கிழவி வீட்டுக்கு அழைத்து சென்று தாய் மாமனை அழைக்கச் செய்வாக்ரள். வீராப்பாக கிழவி முகத்தை கண்கொண்டு பார்க்காமல் அங்கு கட்டப்பட்டிருக்கும் மாடுகள் பக்கமாய்ப் பார்த்து ‘புள்ளக்கி மொற செய்ய வந்திருங்க’ என்பான். க்கையா. அதைக் கிண்டலடிக்கும் விதமாக, ‘ஏலே வீரணா அந்த மாட அவுக்கு விடு போயி மொற செஞ்சுட்டு வரட்டும்’ என்பாள் கிழவீ. சடங்கு வீடு. ஊரார் கூடியிருப்பர். வீம்பு குறையாத மூக்கையா, ‘வெறும் மாலயப் போட்டுட்டு போகச் சொல்லு’ என்பான். ஒரு ஓரமாக உட்கார்ந்திருக்கும் கிழவி, ‘முக்காத்துட்டக்குச் சீலயெடுத்து மூனு காசுக்கு நகை வாங்குனாலும் அது முறமாமன் சீர். அத வாங்கிக்க அந்தச் சிறுக்கிக்கி குடுத்து வச்சிருக்கணும். வெவரந்தெரிஞச பெரிய மனுஷங்க சொல்றது’ என்று இடிப்பாள். ஊரார் கிழவி சொல்றதுதான் சரி எனப்ர். வீட்டிற்கு வெளியே திண்ணையில் ஆட்களுக்கு நடுவே உட்கார்ந்திருப்பான் வீரணன். ‘என்ன சடங்கு உள்ளய வெளியயா ஏம்பா வீரணா என்ன சமஞ்ச புள்ள மாதிரி ஒக்காந்திருக்க’ என்பான் நண்பனொருவன். ‘போடா போயி மாலய போடு’ என்பார் மற்றொருவர் உள்ளே நுழைந்து விறைத்தபடி நின்று ‘இப்ப நான் என்ன செய்யணும்’ என்று கெத்தாகக் கேட்பான். ஊரார், ‘ம்.. அருவாளத் தூக்கிட்டு அலையத் தெரியுதில்லை. அந்த மால யஎடுத்துப்போடு’ ன்பர். மாலையை முத்துப்பேச்சி கழுத்தில் போட்டதும் விருட்டென வெளியேறும் வீரணானை ‘பச்ச ஓலய எடுத்து குச்சுக் கட்டுடா’ என்பர். அனைத்தையும் விறைப்பாகச் செய்துவிட்டு வீரணன் திரும்ப கூட்டம் கலகலப்பாகும். ‘ஏண்டா டேய் மெல்லப் போக வேண்டியதுதான. நல்ல பய’ என்று மகிழ்வாள் கிழவீ.

 

ஏறத்தாழ மூன்றாண்டு கால மருத்துவமனை வாசங்களில் அந்நியமாகிப் போன எனது சமூக வாழ்வுச்சூழல் திரைக்காட்சியாக என்னை வெகுவாக ஆட்கொண்டது. இன்றளவும் இயல்பாக என்னால் பேச முடியாத என் சமூக மொழி என்னை நெகிழ்வுறச் செய்தது. கலாச்சாரச் சூழல் அதுதான் என்றபோதும், வேலை நிமித்தம் என் தாய் தந்தையர் வாழ்ந்த ஊர்களும், கிறித்தவப் பின்புலமும் என்னை அதனுடன் ஒன்றிணைவு காண முடியாத அந்நியனாகவே வளர்த்திருந்தது. போதாக்குறைக்கு அக்கா அண்ணன் வழி அறிமுகமான திராவிடமும், தமிழத் தேசியமும், பெரியாரும், பெருஞ்சித்திரனாரும் சாதியத்தை சற்றுமட்டுப்படுத்தியிருந்ததே உண்மை. ஆனாலும் திரையில் விரிந்த காட்சிகளும் அவை காட்சிப்படுத்திய கலாச்சாரக் கூறுகளும் என்னை முற்றிலுமாகப் புரட்டிப்போட்டது. ஏற்கனவே பாரதிராஜா அவர்களின் பதினாறு வயதி«னிலே பத்தின் வழி ஈர்க்கப்பட்டு அவரது ரசிகனாகியிருந்தேன். அந்தத் திரைப்படம் என்னை கவர்நத்தற்கான காரணங்களில் மயிலு ஸ்ரீதேவியும், சப்பாணி கமலும் முன்னுரிமை பெற்றிருந்தனர். மயிலுவின் ஆத்தா தஞ்சாவுரு தவுனு குருவம்மா¬¬விட இது எப்படி இருக்கும் எனும் ரஜனிதான் கவனத்தைப் பெற்றார். பதினாறு வயதினிலே திரைப்படத்தின¢கதைக்களம் தேனி வட்டாரத்து பகுதி என்பதைத் தாண்டி கலாச்£ரக் கூறுகள் விழுமியங்கள் பெரிதாக ஒன்றும் பதிவாகிவிடவில்லை.
 
பின்னாட்களில் வெங்கடேஷ் சக்கரவர்த்தி போன்றோரால் மண்வாசனை சினிமா என்ற வகையினம் ஒன்று உருவாக்கப்படுவதற்கு காரணமான திரைப்படம் இதுதான். 70களின் கடைசி வருஷங்களில் வட ஆற்காடு மாவட்டப் பகுதிகளிலேயே அரசுப் பணியாற்றி இருந்தபோது, அந்த அன்பான மக்களின் மொழி எனக்குப் பிடிபடாத ஒன்றுதான். ஆனால் வேலூர் ரயரங்கின் இரவுக் காட்சியில் என்னுடன் அமர்ந்து சினிமாப் பார்த்த அனைவருமே நான் ரசித்த அத்தனை தருணங்களையும் ரசித்தனர், கைதட்டினர். மகிழ்ந்தனர். ‘அவன் கெடக்கான் பொசகெட்ட பயலும்’ ‘மானங்கெட்டு மகிழிபூத்துருமும்’ எப்படி அவர்களை சென்றடைந்தது. எனக்கு வியப்பாக இருந்தது. அந்தக் கலாச்சார சினிமாவை ரசிக்க வட்டார வழக்கொன்றும் தடையாகவில்லை. கேள்வியும், வியப்பும் அன்றைய மனநிலையில் எனக்கு விட்டுப் பிரிந்திருந்த சமூகச் சூழலுக்குத் திரும்பியதான உணர்வு கிடைத்தது. ஆனால் சமீபத்தில் மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தைப் பார்த்தபோது விடுபட்டுபோன அந்தக் கேள்வி திரும்ப எழுந்தது. இத்தனைக்கும் மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தை அரங்கில் பார்க்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. சொல்லப்போனால் பத்து இயக்குனர்கள் நடிக்கிறார்கள் என்பதாக விளம்பரப்படுத்தப்பட்டபடத்தை பார்க்கும் ஆர்வம் தோன்றவில்லை என்பதே உண்மை. படம் வெளி வந்து திரையரங்குகளை விட்டு வெளியேறிவிட்ட பின்பு (சென்னையின் நவீன மல்டி பிளெக்ஸ்களில் இவர்களுக்கு இடம் கிடையாது.)
எனது வீட்டின் வரவேற்பறையில் ஐங்கரன் டிவிடியில் மனைவி, மகள், மருமகன், மகன், மருமகள் புடைசூழ மாயாண்டி குடுமபத்தார் திரைப்படத்தை பார்க்க நேர்ந்தது. உசிலம்பட்டிக்க அருகே உள்ள எஸ் மேட்டுப்பட்டியில் வாழும் மாயாண்டி மற்றும் அவரது பகைகார அண்ணன் விருமாண்டி ஆகியோரின் குடும்ப சரிதம் அது.மாயாண்டிக்கு நான்கு மகன்கள், ஒரு மகள். விருமாண்டிக்கு ஐந்து மகன்கள். இவர்களின் அப்பாவின் இளைய தாரத்து மகளுக்கு பாகம் பிரித்ததில் விருமாண்டிக்கு தம்பி மாயாண்டி மீதும் அவரது குடும்பத்தார் மீதும் தீராத பகை. உறவிலும், அசலிலும் கட்டி வைத்த மருமகள்கள் மாயாண்டி இருக்கும் வரை அமைதி காக்கிறார்கள். மாயாண்டியின் மரணத்தின்போது தனியனாய் இருப்பவன் கடைசி மகன் மட்டுமே. தட்டுத் தடுமாறிப் படித்து பொறியியல் கல்லூரியில் சேர்ந்த பிறகே அப்பாவின் மரணம் நேர்கிறது. அடிகளையும், கோபங்களையும் கொண்டு அண்ணன்களால் மதினிமார்களை கட்டுக்குள் கொணர முடிவதில்லை. பெண்களின் தொந்தரவு மிதமிஞ்ச தாய்மாமன் தலையீட்டு பாகம் பிரிக்கப்பட்டு, வீடற்ற கடைசி மகன் மோட்டார் ரூமில் குடிபுகுகிறான். மாயாண்டி இருந்தவரை மகளுடன் வந்து அள்ளிக்கொண்டு போகும் மருமகனும், கடைசி வசூலாக செய்முறை வைக்கிறான். அக்கா வீட்டு பத்திரிக்கையின் தாய்மாமன் பட்டியலிலேயே ஒன்றுமில்லாத கடைசி மகனின் பெயர் விடப்பட்டு விடுகிறது. பிள்ளைகளும் தங்கள் குடும்பமும் கெட்டு விடுமே என்ற அச்சத்தில் அண்ணன்கள் அமைதி காக்கின்றனர். அழையாத விருந்தாளியாக வருகிறான் கடைசித்தம்பி. யாரும் எதிர்பாராத வகையில் அவன் பங்காக கிடைதத ஐம்பதாயிரம் £யையும் செய்முறையாக எழுதிவிட்டு சாப்பிடாமல் வெளியேறுகிறான். குடும்பமே பதறித் துடிக்கிறது. திரும்பிப் பார்கக்£மல் நடக்கும் தம்பியை தொடர்ந்து கதறி அழுகிறாள் அக்கா. தம்பி தெரியாம செஞ்சுபிட்டன்டா. நீ எங்கப்பண்டா. வந்து ஒரு வா சோறு தின்னுட்டு போயிற்றா என்று மன்றாடுகிறாள். மொத்தக் குடும்பமும் பதைபதைத்து நிற்கிறது.
என் வீட்டின் அறையில் நிறைந்திருந்த கூட்டம் கண்ணீரில் மிதந்திருந்தது. அதன் பின்னர் நான் சந்தித்த இனக்குழு மனிதர்களில் அந்தக் காட்சியை சிலாகிக்காதவர்களே இல்லை. நண்பர்களிடமும் அதேவிதமான வரவேற்பு. இது எப்படி சாத்தியம். ஒரு இனக்குழுவின் தனித்துவமான கலாச்சார விழுமியங்கள் எப்படி அனைத்து தரப்பினரையும் அதே ரீதியில் உணர்வு ரீதியாக பங்கு கொள்ளச் செய்ய முடியும். தனித்துவம் என்பதே கேள்விக்குரிய ஒன்றுதானோ. மனித வாழ்வின் நிகழ்வுச் சூழல்களும், முறைமைகளும் மாறலாம். ஆனால் அடிப்படையிலான கலாச்£சர நுண்கூகறுகள் அனைத்து இனக்குழு வாழ்வுத் தருணங்களிலும் அடிநாதமாக செயல்பட்டபடியே இருக்கும் எனப்தே சரி. இங்கு ஒன்றை தெளிவுப்படுத்திக் கொள்ளுவது நலம். கலாச்சார நுண்கூறுகுளின் இருப்புதான் இனக்குழு அடையாளங்களைக் கடந்து கலை அனுபவத்தை சாத்தியமாக்குகிறது என்பதே அது.
கலாச்சார நுண் கூறுகள் அபூர்வமா£ தருணங்களில் இயல்பாய் முகிழ்ந்துவிடும். அதே உத்திகளைத் திரும்பக் கைக்கொள்ளும்போது அதன் வீரியம் மங்கி சாயமிழந்துவிடும். இதை ராசு மதுரவனின் மற்றொரு படமான கோரிப்பாளையம் திரைப்படத்தில்காணலாம். வீட்டுக்கு அடங்காத தறுதலைத் தம்பி ஒரு கொலையைச் செய்துவிட்டு தப்பித்து அக்கா வீட்டிற்கு வருவான். தம்பியையும் நண்பர்களையும் பார்த்தவுடன் கோழியடிக்கிறேன் சாப்பிடு எனும் அக்கா அவனுக்குத்தெரியாமல் வீட்டிலிருந்த நகைகளை எடுத்து பக்கத்து வீட்டில் கொடுத்து ‘பத்திரமா வைச்சுக்கக்கா. என் தம்பி போனதும் வாங்கிக்கிறேன். அவனும் அவன், பிரண்ட்சும் பெரிய களவாணிப் பயலுக’ என்பாள். இதைப் பார்த்துவிடும் தம்பி நண்பர்களை அழைத்துக்கொண்டு போய்விடுவான். இங்கு அக்கா ரோடு வரை வந்து தம்பியை ஒருவாய் சாப்பிட்டுட்டு போடா என்பாள். காட்சி சலிப்பூட்டுவதைத் தவிர வேறொன்றும் நிகழ்ந்துவிடுவதில்லை.
 
மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தின் கதைக் களத்தில், மாயாண்டி விருமாண்டி பகை மாயாண்டியின் மரணத்தோட முடிவுக்கு வந்துவிடும். தம்பியின் மரணத்துக்கா கண்ணீர் விடுவார் விருமாண்டி. இதே போன்ற காட்சி தேவர் மகன் திரைப்படத்திலும் உண்டு. சிவாஜி மரணமடைந்தவுடன் பகை மறந்து ‘எங்கண்ண செத்துட்டாருடா’ என்று காகா ராதாகிருஷ்ணன் அழுவார். சமூக வாழ்வின் அசலான தருணங்கள¬ அநேகமாகத் தவறவிட்டிருந்த தேவர்மகன் அபூர்வமான ஓரிரண்டு பதிவுகளையும் செய்திருந்தது. குறிப்பாக கலவரத்தில் காயப்பட்டவர்களை பார்க்க கமல் மருத்துவமனைக்க வருவார். கலவரத்தில் ஒரு கையை இழந்த இசக்கி ‘கடசி வரைக்கும் விடவே இல்லைய்யா. களவாணிப்பயலுக கைய செட்டிப்புட்டாங்க.. அது கெடக்கட்டும் விடுங்கய்யா... என்ன திங்கற கையிலேயே கழுவனும், கழுவுன கையிலேயே திங்கனும்’ என்று சிரிப்பான். இநத்க் காட்சிதான் இசக்கி பாத்திரம் ஏற்ற வடிவேலுவை மிகப்பெரிய வெற்றிக்கு இட்டுச் சென்றது.
ஐம்பதுகளில் துளிர்க்கும் காதலைப் பேசிய ஒரே தமிழ்த்திரைப்படம் முதல் மரியாதை மட்டுமே சிவாஜி பாத்திரப்படைப்பின் தர்க்க நியாயங்கள் கடுமையான விமர்சனத்திற்குரியது என்ற போதிலும், விமர்சனக் குரலையும் வடிவுக்கரசியின் வார்த்தைகளில் பதிவு செய்திருப்பார் பாரதிராஜா. கோபதாபங்களும், சுயகழிவிரக்கமுமே வாழ்வாகிப்போன மனைவி கணவனை மதிப்பதில்லை. சின்னப் பெண்ணுடனான உறவில் திளைக்கும் நாயகன், அவள் குடிசையில் மீன் சாப்பிட்டு விட்டு கண்கலங்கி, ‘ஏங்காதத கைருசிக்கப்புறமா இப்பதா அதப்பார்க்கிறே’ என்பான். எத்தனைக் கலாச்சார மாறுபாடுகளுக்குள்ளும் இடம்பிடித்து சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விடும் உணர்வல்லவா. அம்மாவின் கைருசி. அம்மாவின் கைப்பக்குவத்தை நினைத்து உருகாத மனிதர்கள் உண்டா என்ன. இந்தக்கால நூடுல்ஸ் அம்மாக்களுக்குக்கூட இது வாய்க்கக்கூடும்.
 
தங்கர்பச்சானின் அழகியும் சேரனின் ஆட்டோகிராப்பும் தமிழின் பிரத்யேகமான சினிமாக்கள் எனலாம். கிராமியச சூழலின் வளர்பருவ அனுபவங்களை நெகிழ்வாகச் சொன்ன திரைப்படங்ங்ள். உலக சினிமாக்களில் இந்த வகை சினிமாக்கள் ஒவ்வொரு மொழியிலும் உண்டு. உள்ளபடியே சொன்னால் இந்தவகை மாதிரியின் முதல்படமான பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள், சம்மர் ஆப் 42 என்ற ஆங்கிலப் படத்தின் தழுவலே. அழியாத கோலங்களில் திரைப்படத்தில் தழுவலின் சாயல் அடர்த்தியாக இருக்கும். அழகியும் ஆட்டோகிராப்பும் தெளிவான தமிழ் வாழ்வுச் சாயல் கொண்டவை. அவை கையாண்ட பதின்பருவ நினைவுக்ள் கவித்துவமானவை. வேடிக்கையாகச் சொல்வதானால் ஆட்டோகிராப் இல்லாத மனித வாழ்வசாத்தியமற்றதென்றே தோன்றும். நேரமும், நிகழ்வும் மாறலாம். ஆனால் அடிநாதமான கலாச்சார உணர்வு ஒன்றுதான்.
 
கலாச்சார நுண் அலகுகளை காட்சிப்படுத்த தீவிரமான கதைக்களமும், ஏமாற்றமும், துக்கமும் நிறைந்த சூழல்களும்தான் பயன்படும் என்பதில்லை. எளிமையான வாழ்வின் சாதாரண நிகழ்வுகே  அதைச் செய்துவிட முடியும். ‘களவாணி’ திரைப்படத்தில் ‘இந்த ஆடி கழிஞ்சு ஆவணி பொறந்தா அவன் டாப்பா வந்திருவான்’ என்று அம்மா சொல்லும்போது உலகின் அம்மாக்கள் எல்லோரும் ஒரே உருவில் பேசுவதாகவே தோன்றும். வெட்டியாக சுற்றிக் கொண்டிருக்கின்றான் என்பது அவள் அறி£யததில்லை. அவனுக்கு பயந்து ரூபாயை ஒளிக்க முயல்பவளும் அவள்தான். அதே வேளையில் மகன் வெளிநாட்டுக்குப் போய் வேலை பார்க்க பாஸ்போர்ட் எடுக்க பணம் கேட்க, கணவன் மறுத்தும் ‘டேய் இவரு காசு குடுக்கற மாதிரி தெரியல. இந்தா இந்தத் தாலிக்கொடிய அடகு வைச்ச வேலைய பாரு’ என்று கழட்ட முயன்று ‘அடியே ஏழு பவுனு சங்கிலிடி’ என்று பதறும் கணவனை சரிக்கட்டுபவளும் அவள்தான். அவள் அம்மா. அது மட்டுமே அவள்.
 
கிளிண்ட் ஈஸ்ட்வுட் இயக்கி நடித்த ஹாலிவுட் திரைப்படம் ‘தி பிரிட்ஜஸ் ஆமேடிசன் கவுண்டி’ (1995) (ஜிலீமீ தீக்ஷீவீபீரீமீச் ஷீயீ னீணீபீவீச்ஷீஸீ நீஷீஉஸீட்ஹ்) கதாநாயகி அற்புதமான நடிகையான மெரில் ஸ்டிரிப் (விமீக்ஷீஹ்றீ ச்ட்க்ஷீமீமீஜீ). தாயின் இறுதிச் சடங்குக்காக மேடிசன் வருகின்றனர் பிரான்ஸ்செஸ்கா (விமீக்ஷீஹ்றீ ச்ட்க்ஷீமீமீஜீ) வின் பிள்ளைகளான கேரலினும், மைக்கெலும் தந்தை ஏற்கெனவே மற¬ந்துவிட்டார். தாயின் உயில் பிள்ளைகளின் முன்னால் வாசிக்கப்படுகிறது. சொத்துகளை பங்கிட்டதுபோக தாயின் உயிலுள்ள தன்னை எரித்த சாம்பலை மேடிசன் கவுண்டியின் பாலங்களில் தூவி விட வேண்டும் என்ற விருப்பம் ஆச்சரியங்கொள்ள செய்கிறது. தான் ஏன் அந்த வேண்டுகோளை வைக்கிறன் என்பதற்கான விபரங்கள் தனது டைரியில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கும். டைரியை படிக்கும் மகனும், மகளும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள்.
டைரியின் பக்கங்கள் காட்சியாக விரிகிறது. 1965 ஆம் வருடத்தில் ஒரு நாள் வியாபாரம் தொடர்பாக வெளியூர் செல்லும் கணவனையும், பிள்ளைகளையும் வழியனுப்புகிறாள் தாய். அத்துவானமான பெரிய வீட்டில் தனித்து இருக்கிறாள் தாய். நேஷனல் ஜியாபிராபி புத்தகத்திற்காக மேடிசன் கவுண்டயின் பாலங்களை படமெடுக்க வந்திருக்கும் கிளிண்ட் ஈஸ்ட்வுட் வருகிறார். ஒரு வார காலத்திற்குள் இயல்பான பேச்சு, ‘நட்பாகி, காதலில் முடிகிறது. மேடிசன் கவுண்டியின் பாலங்களில் சுற்றியலைகின்றனர் காதலர்கள். வாரத்தின் முடிவு நெருங்க பெரும் தவிப்பும் பதற்றமும் உண்டாகிறது. இதுவரையிலான எல்லாம் கரைந்துபோன நிலையில் வாழ்கிறாள் பிராண்ஸ்செஸ்கா. பெரும் போராட்டத்தின் முடிவில் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டுடன் செல்லும் திட்டத்தைக் கைவிடுகிறாள். அதற்குப் பின்னரான காலங்களில் அந்த ஒரு வார காலம் மட்டுமே உயிர்ப்புடன் இருந்ததாக நம்புகிறாள். சாம்பலாக மேடிசன் கவுண்டியின் பாலங்களில் தொடர்ந்திட விரும்புகிறாள்.
பிள்ளைகளுக்கு குறிப்பாக மகனுக்கு தாயின் காதல் பெரும் பதற்றத்தையும், துக்கத்தையும் உருவாக்குறிகது. தாங்கள் அறியாத பெண்ணொருத்தியாக மாறிப்போன தாயின் சுயம் பிள்ளைகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. ஏறத்தாழ ஒரு இந்திய கலாச்சார மனத்தின் தவிப்புகளையும், அதிர்ச்சிகளையும் காட்சிப்படுத்திய திரைப்படம். பிள்ளைகளின் தவிப்பில் நம்மை அடையாளங் காணச் செய்து விடுகிறது. திருமண உறவு என்பதே அநேகமாக காலாவதியாகிவிட்டதாக சொல்லப்படும் மேற்கத்தியக் கலாச்சாரங்களில் இன்னும் வாழ்நாள் பந்தமாக ஐம்பது சதவீதத்திற்கும் மேலான திருமணங்கள் தொடர்கின்றன என்பது நமக்குச் செய்தியே.
 
சேரனின் தவமாய் தவமிருந்து திரைப்படம் யதார்த்த வகை சினிமா என்பதான திட்டமிடலுடன் உருவான படம். பிள்ளைகளை ஒரு நிலைக்கு கொண்டுவர உழைத்து ஓடாகத் தேய்ந்துவிடும் அப்பாக்களைப் பற்றியது என்ற அறிவிப்புடன் தொடங்குகிறது படம். முத்தையாவின் குடும்பம் பற்றியது கதை. மனைவியும், இரண்ட மகன்களுமான குடும்பத்தின் மகிழ்வும், துன்பமுமே கதைக்களம். அப்பாவின் உழைப்பை உறிஞ்சி வளரும் மகன்கள் தடம் புரள்கின்றனர். அவசர கதியிலான காதலும், காமமும் அவர்களை அலைக்களிக்கிறது. மகன்கள் வளர்ந்து கஞ்சி ஊத்துவார்கள் என்ற தந்தையின் கனவு பொய்த்துப் போகிறது. விரக்தியும், நிராசையுமே மிச்சமாகிறது பெற்றோருக்கு. தோற்றுப்போன இளைய மகன் மனைவி கைக்குழந்தையுடன் வீடு திரும்புகிறான். வாசலில் பிள்ளையுடன் நிற்பவனைப் பார்த்து கதவை அறைந்து சாத்துகிறாள் தாய்.
 
திறந்திருக்கும் புறவாசல் வழியே நுழைந்து மகன் தன் பிள்ளையை தாயின் காலடியில் கிடத்துகிறான். சரண்யா என்னும் தமிழ் சினிமா கண்ட அதிசயயான நடிகையின் உடல் மொழிவழியும், முக அசைவுகளின் வரியும் காட்சி நகர்கிறது. அழும் குழந்தையை அள்ளிக் கொள்வதற்கு முன்னால் அவர் காட்டும் முக பாவங்களுக்காக இந்திய சினிமாவின் சிறந்த நடிகைக்கான விருது ஐந்துமுறை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். கதாநயாகிக்கான வரையறைகளில், விதிமுறைகளில்(?) இந்தப் பாத்திரங்களுக்கெல்லாம் ஏன் இடமில்லை எனப்த புதிர்தான். மூன்றரை மணிநேர சினிமாவான தவமாய் தவமிருந்து இந்த ஒரு காட்சியில் உயர்ந்து, எழுந்து நின்று விடும். இந்தக் காட்சியினை ரசிப்பதற்கு எந்தக் காலாச்சாரமும் தடையாக இருக்க முடியாது.
 
தமிழ் சினிமாவின் உண்மையான ஸ்டார்களாகத் தென்படும் இளவரசுவையும் சரண்யாவையும் மட்டும் நம்பி எடுக்கப்பட்டிருக்கும் இன்னொரு படம் ராசுமதுரவனின் முத்துக்கு முத்தாக மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் பெரும் நம்பிக்கையை கொடுத்தவர் என்பதால் முதல் நாள் காட்சியிலேயே ஆஜர். இருக்கையில் நெளிய வைத்த திரைப்படத்தில் ஆறுதலாக இளவரசும், சரண்யாவும். ஐடீந்து மகன்களும் வாழ்வின் மேடு பள்ளங்களில் இடறி வீழ்ந்து எழுந்து போராடுகின்றனர். பெரியவனுக்கு அரசாங்கத்தில் வாத்தியார் வேலை. இளையவன் கம்ப்யூட்டர் என்ஜினியர். மற்ற இருவரு போராட்டமான வாழ்வு வாழ, ஒருவன் மட்டும் சிறைச்சாலையில். வெறிச்சோடிய வீட்டில் நோயாளியான மனைவியுடன் தனியே இருக்கப் பிடிக்காமல் பெரிய மகன் வீட்டக்குப் போகிறார்கள் பெற்றோர். பள்ளியில் வந்து பார்க்கும் அப்பா, அம்மாவையும் வீட்டுக்கு அனுப்பும்போது, வெறும் கையோடு வந்து விட்டார்கள் என்று மனைவி ஏசுவாள் என்று அஞ்சி, ஆட்டுக்கறி வாங்கிக்கொடுத்து அனுப்புகிறான். உண்மையை தெரிந்து கொண்ட மனைவி சாடித்தீர்க்கிறாள். பெற்றோரிடம் அடுத்த மகன் வீட்டிற்கான புறப்பாடு நடக்கிறது.
 
அரும்பாடுபட்டு, பிள்ளைகளையும் வதைத்து தானும் வதைபட்டு அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் அனுப்பி விட்டு அனாதைகளாக வசதியான முதியோர் இல்லங்களில் வாழ்வோருக்கு தம் வாழ்வை இதனோடு ஒப்பிட்டுக் கொள்வதில் சிரமமேதும் இருக்க முடியாது. அமெரிக்காவில் பிள்ளைகள் வீட்டில் ஆறு மாதங்கள் பிணைக் கைதிகளாக சம்பளம் இல்லாத ஆயாக்களாக பணிபுரிந்து தப்பித்து சுதந்திரம் பெற்ற மகிழ்வுடன் நாடு திரும்பும் பெற்றோரை சென்னை விமான நிலையத்தில் பணிபுரிந்த காலத்தில் நிறைய பார்த்திருக்கிறேன். முத்துக்கு முத்தாக படத்தின் இறுதிக்காட்சியில் அவமானம் தாங்க முடியாமல் விஷ விதையை அரைத்து குழம்பில் சேர்த்து விடுவார். குழம்பு ருசியின் மாறுபாட்டில் இளவரசு விஷமிருப்பதை உணர்ந்து மென்மையான சோகம் கலந்த புன்முறுவலை மனைவியிடம் வீசுவார். சரண்யா, நா மட்டுந்தா செத்துப் போயிறலாம்னுதா நெனச்சே. ஆனா இந்த ராட்சசிகள்ட்ட ஒன்னய தனியா விட்டுட்டுப்போக மனசு கேக்கல என்பார். இளவரசும், சரண்யாவும் தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த நட்சத்திரங்கள் என்பதில் அய்யமேதுமில்லை.
 
கலாச்சார நுண் அலகுகளின் வழி உயர்ந்த கலை அனுபவத்தை சாத்தியமாக்கும். இவ்வகைத் திரைப்படங்களை எந்த வகைமையில் சேர்க்கலாம். கலாச்சார சினிமா (மீட்லீஸீவீநீ நீவீஸீமீனீணீ) என்பது பொருத்தமானதுதான். ஆனாலும் அதை விட அடித்தள மக்கள் சினிமா (ஷிஉதீணீறீட்மீக்ஷீஸீ சிவீஸீமீனீணீ) என்பது இன்னும் அனுக்கமானது.
 
தமிழில் சுதீணீறீட்மீக்ஷீஸீ என்ற ஆங்கில வார்த்தை னறுவிதமாக மொழமாற்றம் கண்டுள்ளது. விளிம்புநிலை, அடித்தள மக்கள் மற்றும் கீழோர் என்பனவே அவை. கிராம்சியின் கொடையான சுதீணீறீட்மீக்ஷீஸீ ராணுவப் படிநிலைகளில் உள்ள வகைமைகளின் அடிப்படையிலானது என்பர். கிராம்சி அதை மீறீவீட்மீ ஜ் சுதீணீறீட்மீக்ஷீஸீ என்ற இருமையை சுட்டவே அதைப் பய்னபடுத்தினார் என்பர். எனவே அதை மேலோர் ஜ் கீழோர் என்று புரிந்து கொள்ள வேண்டும் என்பது ஆய்வாளர் சுந்தர் காளி போன்றோரின் வாதம். பேராசிரியர் அ. சிவசுப்ரமணியன் அதை அடித்தள மக்கள் என்று மொழியாக்கம் செய்தார். பேராசிரியர் மார்க்ஸ் அதை விளிம்புநிலை என்பதான பொருளிலேயே பதிவு செய்தார். மூன்று வாதங்களும் கருத்து வலிமை கொண்டவைதான் என்றபோதும், விளிம்புநிலை என்ற சொல் வெகுவாகப் பயன்பாடு கண்டு சில அடிப்படையான புரிதல் சிக்கல்களை உருவாக்கியது. தமிழில் சுதீணீறீட்மீக்ஷீஸீ என்பதான விளிம்பு நிலை என்ற சொல் பல அடுக்குகளாக உள்ள மக்கள் இருப்பைக் குறிப்பிடாமல், ஆகக் கடைநிலையில் இருப்பதான ஜனத்திரளை மட்டுமே குறிப்பிடுவதானது. அதன் விளைவாக விளிம்பு நிலை மனிதத் திரளில் வேசியரம், திருமண உறவுக்கு வெளியே பிறந்த பிள்ளைகளும், கைவிடப்பட்ட பிச்சைக்காரர்களும், பைத்தியக்காரர்களுமே பிரதானமானவர்களாக அடையாளப்படுத்தப்பட்டனர். அதனால்தான் தமிழின் முதல் சுதீணீறீட்மீக்ஷீஸீ சினிமா என்பதாக இயக்குநர் செல்வராகவனின் புதுப்பேட்டை திரைப்படம் கொண்டாடப்பட்டது. கூகுள் தேடலில் சுதீணீறீட்மீக்ஷீஸீ என்றவுடன் திரையை நிறைப்பது ‘புதுப்பேட்டை’ சினிமா குறித்த தகவல்கள். புதுப்பேட்டை சினிமா முறைசாரா பாலியல் உறவின் விளைவாக அனாதையாக்கப்படும் இளைஞன் ஒருவனின் கதை. எந்தவிதமான கலாச்சார விழுமியங்களுக்கும் சிக்காதவன். தாய், நண்பன், வேசையான காதலி, மனைவி என அனைவரையும் எந்தவித தயக்கமுமின்றி வஞ்சிப்பவன், கண்டதே காட்சி கொண்டதே கோலம் என வாழ்பவன். திறப்புகளற்ற வன்முறை எனும் கூண்டுக்குள் சிக்குண்டு, வெளியேறும் வாய்ப்பற்று தொலைந்து போனவன். ‘உலக சினிமா’ அறிமுகத்தின் வழி உருவான ‘கலக’ சினிமா அது. இந்த சினிமாவிற்கான ‘உலலக சினிமா’ முன்மாதிரிகள் ஏராளம். திரைப்படத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை ‘மாதிரி’களின் தாக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
 
புதுப்பேட்டையோடு ஒப்பிடும்போது இயக்குநர் ஜனநாதனின் ஈ படம் நேர்மையானது. அங்கும் லும்பன் நாயகன்தான். அப்பன் பெயர் தெரியாத அனாதையான அவனை எடுத்து வளர்த்த ஆயாவைத் தவிர உறவென்று யாரும் கிடையாது. திருட்டு, பொய், துரோகம் எல்லாம் அவனுக்கு அத்துப்படி. நட்பு, காதல் எல்லாம் அவனுக்குப் புரியாத சங்கதிகள். ‘இவங்கள்ள யாரோ ஒருத்தன்தான் எனக்கு அப்பனா இருப்பாண்டா’ என்று தனது பிறப்பு ரகசியத்தை மகிழ்வாக சொல்வான். தமிழ் சினிமா நாயகர்களிலேயே மிக அபூர்வமானவன் இவன். காதலியை கூட்டிக்கொடுத்து சம்பாதிப்பதற்கு திட்டமிட்டு அவளிடமே அது குறித்து பேசுபவன். ‘எங்கிட்ட வந்து இப்படி கேட்க உனக்கு வெட்கமா இல்ல’ எனும் நாயகியின் சொற்கள் அவனை சுடுவதல்லை. இதில் சிறப்பு என்னவென்றால் இறுதிவ¬டிர மரபான சினிமா நாயகனுக்கான ‘உணர்தல்’ அதன் தொடர்பான ‘தெளிதல்’ இவனிடம் நிகழ்வதே இல்லை என்பதே. அதைவிட ஆறுதலான விஷயம். ‘ஈ’ படத்தை யாரும் தமிழின் இரண்டாவது சுதீணீறீட்மீக்ஷீஸீ நீவீஸீமீனீணீ என்று கொண்டாதாதது.
 
விளிம்பு நிலை சினிமா மட்டுமின்றி தமிழின் தலைசிறந்த சினிமாக்களாக இதுவரை நாம் கொண்டாடி வந்த சினிமாக்களே மறுவாசிப்பில் பெரும் குழப்பமான சினிமாக்களாகத் தென்படுகின்றன. முள்ளும் மலரும் மற்றும் உதிரிப்பூக்கள் திரைப்படங்களைப் பார்த்தபோது அவை கலாச்சார அடையாளமற்ற சினிமாக்கள் என்பது பெரும் உறுத்தலானது. உமா சந்திரனின் நாவலின் திரைவடிவமான ‘முள்ளும் மலரும்’ ரஜினி என்ற நாயக உருவாக்கத்தில் செலுத்திய கவனம் அளவிற்குகூட கதை நிகழும் சமூகச் சூழலை பதிவு செய்யத் தவறி இருந்தது. தமிழில் பலமுறை எடுக்கப்பட்ட பாசமலர் சினிமா வகையில் இது ரஜினியின் பாசமலர். அவ்வளவே. அடுத்ததாக ‘உதிரிப்பூக்கள்’ மறுவசிப்பில் இந்தத் திரைப்படம் பெரும் வெறுமையை உருவாக்கியது. ஒருவகையில் இந்தத் திரைப்படத்தின் வெற்றியும், அது தொடர்பிலான கொண்டாட்டங்களும்தான், மகேந்திரன் என்ற படைப்பாளியை வெகுவாக குழப்பி அவரை படைப்பூக்கமான செயல்பாட்டுத் தளத்திலிருந்து வெளியேற்றி விட்டதோ என்ற அச்சம் எழுகிறது. 1981ல் வெளியான இத்திரைப்படம், மகேந்திரன் அவர்களின் இயக்குநர் அனுபவத்தின் உச்சக்கட்டமாகக் கொண்டாடப்பட்டது. கலைப்பட இயக்குநர் என்பதான முத்திரையை அவருக்குக் கொடுத்ததும் இத்திரைப்படமே. கதை நிகழும் கிராமம் தமிழகத்தின் எந்தப்பகுதி என்பதே முதல் குழப்பம். அது ஒரு அபூர்வமான ஊர். பெரும் கலவரம் நடந்தால்கூட போலிஸூக்கு போகாத ஊர். அதை போலீஸ்காரர்களிடமே சொல்லி அனுப்பி விடும் ஊர். மனவக்கிரமான மனிதனை தட்டிக்கேட்க திரனில்லாத ஊர். பஞ்சாயத்து கூடும், கேள்விகள் எழுப்பப்படும். கைகலப்பு நடக்கும். அடுத்த நாள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவார்கள். கொடுமை செய்யும் மருமகனுக்கெதிராக அதிர்ந்துகூட பேசாத அப்பா. இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக வாயே திறக்காமல் செத்துப்போகும் மனைவி. உச்சக்கட்ட அபத்தம் கொடூரனை ஊரே கூடி அழைத்துச் சென்று நீரில் அமிழ்த்தும் காட்சி. பறையொலி பின்னணியாக ஒலிக்க ஊரே வயல்களினூடாக நடக்கும். அவனும் மனம் வெதும்பி ‘ஒங்களயெல்லாம் என்னைப்போல மாத்திட்டேன்’ என்று வருந்துவான். அதைவிட அபத்தமாக கடைசி நிமிடத்தில் அவனைக் காக்க முயல்வதுபோல், அவனால் நரடியாக பாதிப்பிற்குள்ளான தம்பி மற்றும் பள்ளி ஆசிரியர்களும் அவனை நெருங்க, ஒரு தாட்டியான ஆள் அவர்களைத் தடுப்பான். தமிழ் மாற்று சினிமா ஆர்வலனாக இதைத்தான் நான் கொண்டாடியிருகிறேன். இதேபோன்றதொரு விபத்தில்தான் அவள் அப்படித்தான் திரைப்படத்தின் இயக்குநர் ருத்ரைய்யாவும் மாட்டிக்கொண்டார் என்றே தோன்றுகிறது. 1980களில் ‘வசந்தம் வருகிறது’ இதழுக்காக நானும், பத்திகையாளர் நண்பர் சிகாமணியும் அவரை பேட்டி கண்டது நினைவுக்கு வருகிறது. தமிழ் சினிமாவில் ஒரு அற்புதம் நிகழ்ந்துவிட்டதாகவே உணர்ந்தோம். அந்தத் திரைப்படத்தை இன்றளவும் கொண்டாடியபடி இருப்போர் அநேகம். கருத்தியல் ரீதியாக இன்றளவும் எனக்கு அத்திரைப்படத்துடன் எந்த விலகலும் கிடையாது. ஆனாலும் அதனுடன் ஒரு அந்நியத்தன்மை உருவாவதை தவிர்க்க முடியவில்லை.
 
அவள் அப்படித்தான் படத்தோடு ஒப்பிடும்போது தமிழ்ச்செல்வனின் நாவலை ஒட்டி எடுக்கப்பட்ட இயக்குநர் சசியின் பூ திரைப்படம் ஒரு மாபெரும் நிகழ்வாகத் தோன்றுகிறது  நாயகி மாரி தமிழ் சினிமா கண்ட பெண் பாத்திரங்களில் மிகச் சிறப்பானவள் என்பதில் அய்யமில்லை. இழந்துபோன கனவுகளை சுமந்தபடி அலைக்கழியும் மாரி தமிழ்த்திரைக்கு மிகவும் புதிதானவள். புதிரானவளும்கூட. கட்டிய புரஷனுக்கு எள்ளளவும் துரோகமில்லாமல் எளிமையாக மாமன் மகன் மேல் பாசம் கொள்பவள். நிராகரிப்பின் எந்தச் சுவடும் அவள் செயல்பாடுகளில் இல்லை. தனக்கு கிடைக்காத மாமன் மகன் மேல் காமமற்ற அன்பை அவளால் பொழிய முடியும். இழப்பின் சுவடு இல்லாமல் கணவனோடு வாழவும் முடியும். அவள் யாரையும் குற்றஞ்சாட்டுவதுகூட இல்லை. மாமன் மகனைக் காணப் புறப்படும் பெண்ணின் நடவடிக்கைகள் அவள் கணவனை எரிச்சலூட்டுவதில்லை. கணவனின் முழுமையான நம்பிக்கையை பெற்றவள் மாரி. ஆனாலும் இறுதியாக மாரி அழுகிறாள். எதற்காகவெல்லாம் அவள் அழுகக்கூடும். அந்த நொடியில் தன் இழப்புகளுக்கும் மாமன் மகனின் இழப்புகளுக்கும் சேர்த்தேதான் அவள் அழுதிருக்க வேண்டும். மாரியின் அழுகையில் நாமும் சேர்ந்து அழுதுவிடுவதுதான் உத்தமம். அந்தப் பெண்ணின் அழுகுரல் கேட்டபடியே இருக்கிறது. வாழும் காலம் முழுதும் அது தொடர்ந்தபடியேதான் இருக்கும். மாரியின் கலாச்சார அடையாளம் தெளிவானது அது இந்த மண் சார்ந்தது.
 
எனவே கலாச்சார சினிமாக்களை அடித்தள மக்கள் சினிமா என்ற வகைமையில் சேர்ப்பதே சரி. எளிய மனிதர்களின் இயல்பான வாழ்வை, அவர்களின் வாழ்வுச்சூழல் சார்ந்து எடுக்கப்படும் திரைப்படங்களே இனி போற்றப்படும். கோட்பாட்டுக் குழப்பங்கள் இனி செலாவணி ஆகாது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.