Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குற்றவாளியை மறைத்து வைத்திருக்கும் வடக்கு ஆளுநர்!!

Featured Replies

chandrasri.pngவவுனியாவினில் சிறுவர்கள் மீதான பலவந்த ஓரினச்சேர்க்கைகுட்படுத்திய குற்றச்சாட்டினில் தேடப்பட்டு வரும் பிக்குவை வவுனியாவினிலுள்ள தனது விருந்தினர் விடுதியினிலேயே வடக்கு ஆளுநர் சந்திரசிறி தங்க வைத்துள்ளமை அம்பலமாகியுள்ளது.தற்போது இலங்கைப்பொலிஸார் தேடிக்கொண்டிருப்பதாக பத்திரிகைகளிற்கு கூறிக்கொண்டிருக்கும் குறித்த பிக்குவையே  ஆளுநர் சந்திரசிறி மேல்மட்ட பணிப்பினையடுத்து மறைத்து வைத்திருப்பது அம்பலமாகியுள்ளது.

இது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில்    வவுனியாவில் உள்ள சிறுவர் இல்லமொன்றினை நடத்தி வந்த பிக்கு ஒருவர், அங்கிருந்த 22 சிறுவர்களை ஓரினச்சேர்க்கைக்கு பலவந்தமாக உட்படுத்தி வந்துள்ளார். ஆயினும் இவ்வாறான பாதகச் செயலைப் புரிந்த அந்தப் பிக்கு இன்னமும் கைது செய்யப்படவில்லை.பாதிக்கப்பட்ட சிறுவர்களுள் பலர் தமிழ் சிறார்களாவர்.

வவுனியா அட்டம்பகஸ்கட என்ற இடத்தில் உள்ள சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார் என்று செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, அந்த இல்லத்தைச் சேர்ந்த 22 சிறுவர்கள் வைத்திய பரிசோதனைக்காக கொழும்புக்குக் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்பரிசோதனைகளின் போதே அவர்களும் பாலியல் ரீதியான இம்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.                                                

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையைச் சேர்ந்த அதிகாரிகள் கொழும்பில் இருந்து நேரடியாக வந்து அங்கு விசாரணைகளை நடத்திய பின்னர், அந்த இல்லம் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகளில் அட்டம்பகஸ்கட சிறுவர் இல்லத்தை நடத்தி வருகின்ற பிக்குவே குறிப்பிட்ட சிறுவர்களைத் துஸ்பிரயோகம் செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஆயினும் அவர் இன்னும் பொலிஸாரால் கைது செய்யப்படவில்லை. அவர் மீது சந்தேகம் ஏற்பட்டிருந்த போதிலும் முறையான விசாரணைகள் நடத்தப்படவில்லை என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊழியர் சங்கத்தினரும் பொதுமக்களும்  கண்டனம் வெளியிட்டிருக்கின்றனர்.

http://www.pathivu.com/news/27569/57//d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.