Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடும்பத் தலைமைப் பெண்களும் அவர்களின் வாழ்வாதாரங்களும் - சாந்திசச்சிதானந்தம்

Featured Replies

Womens_CI.jpg

 
சாந்தி சந்சிதானந்தத்தின் இந்தக் கட்டுரை பல கேள்கவிளை உருவாக்கி இருக்கிறது. இந்த இடத்தில் அண்மையில் ஐ.ஆர்.என் ஆய்வொன்றை தமிழாக்கம் செய்து வெளியிட்டு இருந்தோம். இந்த அமைப்பு ஏற்கனவே பல சமூக ஆய்வுகளை செய்தி அறிக்கைகளாக வெளியிட்டு இருக்கின்றது. அவற்றையும் நாம் தமிழாக்கம் செய்து வெளியிட்டு இருக்கிறோம். அது போன்றே

 

பாலியல் தொழிலில் கேந்திர நிலையமாக மாறி வரும்வடக்கு – விசேட தமிழாக்கம் குளோபல் தமிழ்ச்செய்திகள்:-

என்ற செய்தியையும் ஐ.ஆர்.என் அறிக்கையின் தமிழாக்கம் என வெளியிட்டு இருந்தோம். 

 

எமது தளத்தைப் பார்வையிட்டு வருவோருக்கு மிகத் தெழிவாக தெரியக் கூடிய விடயம் நாம் பரபரப்புக்காக கட்டுரைகளையோ செய்திகளையோ மிகைப் படுத்தல்களையோ  வெளியிடுவதில்லை. தவறுதலாக அத்தகைய உணர்வை வாசகர்களுக்கு ஏற்படுத்தியது, ஏற்படுத்துகிறது என்றால் அதனை வெளிப்படையாக சுட்டிக் காட்டினால் அந்த தவறை  மீண்டும் செய்யாமல்  எம்மை சுயவிமர்சனம் செய்து கொள்வோம்.  ஏற்கனவே செய்திருக்கிறோம்.

அந்த வகையில் எம்மால் முதலில்  தமிழாக்கம் செய்யப்பட்ட ஐ.ஆர்.என்னின் இந்த அறிக்கை பின்னர் அனைத்து இணையங்களிலும் மேலும் கீழும் சிறிய மாற்றங்களுடன் 'ஈஅடிச்சான் கொப்பி அடிச்சான்' என பரபரப்பூட்டும் தகவல்களாக வெளிவந்தன. 

எனினும் இந்த அறிக்கையின் ஊடாக தற்போது எழுந்துள்ள விமர்சனங்களை, கவலைகளை முழுமையாக குளோபல் தமிழ்ச் செய்திகள் கவனத்தில் எடுத்துக்கொள்கிறது அதற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறது. இனிவரும் காலங்களில் இத்தகைய நுண்நுணர்வான விடயங்களில் மிகுந்த கவனம் எடுப்போம் என அனைத்து வாசகர்களுக்கும் அறியத் தருகிறோம். 
நடராஜா குருபரன்

 

குடும்பத் தலைமைப் பெண்களும் அவர்களின் வாழ்வாதாரங்களும் -  சாந்திசச்சிதானந்தம்
                                    

கடந்தவாரம் இணையத்தள செய்திகளில் வடக்கில் வாழும் குடும்பங்களுக்குத் தலைமைதாங்கும் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவது தொடர்பாக வெளியிடப்பட்ட ஒருகட்டுரை, முகப்புத்தகத்திலும் வேறு தளங்களிலும் பகிரப்பட்டும் மீள் பதிவாக்கப்பட்டும் வருவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. கடந்த 25 வருடங்களுக்கு மேலாக, எமதுசமூகம் யுத்தத்தினால் விதவைகளாக ஆக்கப்பட்டும் உழைப்பாளிகளை இழந்தும் வாழும் பெண்களைப் பற்றிப் பேசி வந்திருந்தாலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அவர்களின் வாழ்வில் ஏற்படுத்தவில்லை என்பதுடன் பாலியல் தொழில் என்னும் இந்தவிடயம் இப்பிர்ச்சினைக்கு ஒருபுதிய பரிமாணத்தையும் சேர்த்திருக்கின்றது. இதனால் இந்நிலைமையைப் பற்றி எமது சமூகம் எவ்வாறான புரிதலைக் கொண்டிருக்கின்றது என்பதை சற்றே ஆழமாக நோக்க வேண்டியிருக்கின்றது.

விதவைகளாகவோ அல்லது மணமாகாமலோ தனியே வாழும் பெண்களின் பிரச்சினைகள் முழுவனே எமது சமூகத்தினால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகளாகும். அதீத கட்டுப்பாடுகளுடன் நாம் பெண் பிள்ளைகளை வளர்ப்பதும், அதேசமயம் மிகச் சுதந்திரமாக ஆண் பிள்ளைகளை வளர்ப்பதும் இதற்காக முதன்மையான காரணங்களாகின்றன. பெண்களை உழைப்பாளிகளாக சமூகம் கருதாததும், அவர்களின் பாலியல் நடத்தையைக் கட்டுப்படுத்துவதிலேயே குறியாக இருப்பதுமே இதற்கான அடிப்படைகள் எனலாம். இதன் விளைவாக சமூகத்தின் வெளியிடங்களில் சென்று திரிந்த அனுபவங்கள் பெண்களுக்கு ஆண்களுடன் ஒப்பிடும் பொழுதுமிகக் குறைவாகக் காணப்படுகின்றது. சுதந்திரமாகத் திரியும் ஆண்களினால் வன்முறைக்கு ஆளாக்கப்படும் அச்சுறுத்தல்கள் பெண்களை வீடுகளுக்குள் மேலும் முடக்கின்றன. அவர்களுக்கு வழங்கப்படும் திறன்களும் 'பெண்கள் பார்க்கக்கூடிய' தொழில்களுக்கான திறன்களாகத் தானிருக்கின்றன. இளம் பெண்பிள்ளைகளுக்கு தொழில் பயிற்சி என்ற பேச்சை எடுத்தவுடன் எல்லோரும் 'தையல்' என்றபாட்டைப் பாட ஆரம்பித்து விடுகிறார்கள். ஏன் தையலைத் தவிர அவர்களுக்கு வேறெதுவும் செய்யமுடியாதா? ஒரு எலக்ட்ர்Pஷனாக, மெக்கானிக்காக, மேசனாக, கம்ப்பியூட்டர் புரோகிராமராக உழைக்கமுடியாதா? பெண்களின் தொழில் என்று கருதப்படும் தையல் சமையல் போன்றவற்றையெல்லாம் வர்த்தகரீதியாகச் செய்யப் போகும் போது அவை முழுக்க முழுக்க ஆண்களினால் செய்யப்படுகின்றன என்பது வேறுவிடயம். இவ்வாறு, சமூகத்தின் வெளியரங்கில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் ஆற்றல் குறைபாட்டினாலும் சந்தைக்கேற்ற தொழில்களைக் கற்றுக் கொள்ளாத காரணத்தினாலும் அவர்களின் வாழ்வாதார முயற்சிகள் பாதிக்கப்படுகின்றன. பொதுவாக எல்லோரும் வீட்டோடு செய்யும் தொழிலை நாடுகின்றனர். வீட்டோடு செய்யப்படும் தொழில்கள் எத்தகைய வருமானங்கள் ஈட்டக்கூடியன என்பதை நாமெல்லோரும் அறிவோம். அதனால்தான் தனது குடும்பத்தின் உழைப்பாளியை இழந்தபெண் என்றவுடனேயே, பெண்கள் ஆதிகாலந் தொட்டு வயல் வெளிகளிலும் பின் தொழிற்சாலைகளிலும் ஆண்களுக்கு சரிக்குச் சமனாக உழைத்து வந்திருந்தும், ஐயோபாவம் என்றுசமூகம் அவர்களுக்காக அனுதாபப் படுகின்றது.

மேற் கூறிய பலவீனங்களுடன் பெண்களை சமூகம் வளர்த்தெடுப்பதனால், அவர்கள் தங்களது குடும்பங்களைச் சார்ந்துதான் தமது வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொள்கின்றனர். அதற்கான ஆதரவும் அவர்களுக்கு குடும்பங்களிடமிருந்து கிட்டியிருக்கின்றது. ஆனால் நடந்து முடிந்த இக்கோரயுத்தம் இத்தகைய குடும்ப வலைப் பின்னல்களை முற்றாக அழித்து விட்டது. இடப்பெயர்வு, இறப்பு, புலம் பெயர்வுஎனப் பல காரணங்களினால் தமிழ் மக்களின் சமூக வாழ்வு சின்னா பின்னமாக்கப்பட்டு விட்டது. இன்று வன்னி மாவட்டங்களுக்குச் சென்றால் ஒருவிதக் குடும்பத் துணையும் இல்லாது தட்டத் தனியாக வாழும் பல பெண்களைக் காணலாம். இவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களைக் கொடுக்கக் கூடியசந்தைப் பொருளாதாரமும் அங்கில்லை. அவர்களுடைய நிலைமையை ஆராய்ந்தால் எப்படித்தான் உயிர் வாழுகிறார்களோ என்றுவியக்கத்தான் முடியும். இப்படியான திக்கற்ற நிலைமையில் இருக்கும் பெண்கள் தங்களுக்கிருக்கும் ஒரே மூலதனமான உடலினை வைத்துப் பிழைக்க முயல்வது இயற்கைதான். அதற்கு சாதகமாக ஆண்களையும் நாம் மிகச் 'சுதந்திரமாக' வளர்த்து விட்டிருக்கின்றோமே. அத்துடன், இப்பிரதேசங்களில் காணப்படும் இராணுவ மயமாக்கல் இதற்கு இன்னுமொரு தூண்டியாகின்றது.

இப்படியாக இத்தகைய பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுவதனால், இதைப் பற்றிய கட்டுரைகளும் செய்திகளும் அடிக்கடி வெளியிடப்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக ஊடகங்களில் முக்காலும் பரபரப்பு குறித்தே இவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. பாலியல் பற்றிய பொருளே எமது சமூகத்துக்கு பரபரப்பான விஷயமாகும். அத்துடன், எமது குடும்பங்களினதும் சமூகத்தினதும் கௌரவம் (hழழெரச) பெண்களின் பாலியல் நடத்தைகளை அடிப்படையாக வைத்தே அளவிடப்படுவது எமதுகலாசாரப் பண்புகளில் ஒன்றாகும். இதனால் முன்னைய பரபரப்பு இன்னும் பலமடங்குகளாகின்றது. எங்களுடைய பெண்கள் சோரம் போகின்;றனர், அதுவும் எதிரி இனத்துடன் என்பதெல்லாம் உள் மனதில் விளையாட ஆரம்பிக்கின்றது. இப்படியான பெண்கள் 5000 ஆம், 7000ஆம் என எண்ணிக்கைகளை விசுக்குகின்றனர். யாராவது பெண் எந்த ஆய்வாளருக்கும் தான் பாலியல் தொழில் செய்கின்றேன் என்று ஒத்துக் கொள்ளுவாளா? ஒருபெண்ணிடமிருந்தே இந்தக் கதையை அறிய முடியாமலிருக்கும் பொழுது 7000 பெண்களிடமிருந்து அறியக் கூடுமா? ஏந்த அடிப்படையில் இந்த எண்ணிக்கைகள் பெறப்படுகின்றன என்பதற்கு ஒருசான்றுகளும் கிடையாது. ஆதரரங்களின்றி பெறப்படும் இத்தகவல்களினால் ஊடகங்களே இலாபமடைகின்றன. எல்லோரும் பரபரப்பாக அவற்றை வாசிப்பதும் பகிர்வதும் பிரசுரிப்பதுமாக இருக்கின்றனரே. முடிவில் இந்த உணர்ச்சிமயமான எதிர் வினைகளெல்லாம் பெண்களுக்கு தீங்கு விளைவிப்பவையாகவே முடிவடைகின்றன.

முதலாவதாக தனித்து வாழும்  சகல பெண்களையும் சமூகம் இந்தக் கண்ணாடி கொண்டுபார்க்கச் செய்கின்றன. அடுத்ததாக, அவர்கள் தமது சமூகத்தைச் சேர்ந்த ஆண்களின் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகும் வாய்ப்புக்களை அதிகரிக்கின்றன. சாதாரணமாகவே விதவைகளைப் பிற ஆண்கள் தாம் அனுபவிக்கக் கூடிய 'சரக்காகத்தான்' பார்க்கின்றனர். இப்படியான செய்திகள் ஆண்களின் இந்த நோக்கங்களை ஊக்கப்படுத்துவதாகவே இருக்கின்;றன. மூன்றாவதாக, இத்தகைய செய்திகள் இப்பெண்களின் சுய கொளரவத்தினையும் ஆளுமையையும் பாதிக்கின்றன. தாழ்வுச் சிக்கலை  ஏற்படுத்துகின்றது. இப்போதிருக்கும் பௌதிக சமூககாரணிகள் பாலியல் தொழிலுக்குசாதகமாக இருக்கின்றன தான்என்றாலும் தீர்வுகள் பற்றிப் பேசுவோமே என்பேன் நான்.

பெண்களுக்கான உதவித் திட்டங்களைக் கொண்டுவருபவர்களின் அறிவுக் கண்களைத் திறப்பதில்தான் இந்தத் தீர்வுதங்கியுள்ளது. பெண்கள் கூட்டுறவு அமைப்பாகச் செயற்பட ஆரம்பிக்கவேண்டும். அந்த அமைப்பொன்றுதான் குடும்ப வலைப்பின்னல்கள் சிதைந்ததனால் அவர்களுக்கு எற்பட்ட இழப்பினை ஈடு செய்யக் கூடும். சந்தைப்படுத்தும் வாய்ப்புள்ள புதியதொழில்களில் அவர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். கூடுகளில் வைத்து மீன்களை வளர்த்தல் (கiளா கயசஅiபெ), கடலட்டைகள் வளர்த்தல் போன்ற கடல் தொழில்களிலும், மோட்டார்சைக்கிள் திருத்தக் கடையைப் போடுவது போன்ற டெக்னிக்கல் தொழில்களிலும் நிரம்ப இலாபங்கள் உண்டு. எமது பெண்களுக்கெல்லாம் தலையில் பூவைத்துக்கொள்ள ஆசை இருந்தாலும், இன்றுபூச்சரம் விற்கின்றவிலையில் விசேட நிகழ்வுகளுக்குத்தான் அவர்கள் அதனைநாடுகின்றனர்.  அட, பூந்தோட்டங்கள் வைத்து நகரங்களுக்கும் கோயில்களுக்கும் பூ வினியோகிக்கலாமே. லட்சம் லட்சமாக உழைப்பார்கள். இப்படி சற்றே நிதானித்து சிந்தித்தால் பல விதமானவாய்ப்புக்கள் தென்படும். ஊடகங்கள் இந்தவாய்ப்புக்களைப் பற்றிய கட்டுரைகளைப் போடலாமே. இவற்றைச் செய்து வெற்றிகண்ட பெண்களைப் பேட்டிஎடுக்கலாமே.  

செய்யலாம்தான். ஆனால் அதற்கெல்லாம் கடுமையாக உழைக்கவேண்டுமே. பெண்களை கூட்டுறவு அமைப்புக்களாக வலுப்படுத்துவதோ, புதிய தொழிற்றுறைகளில் பழக்கிகையைப் பிடித்து வழிகாட்டி ஈடுபடுத்துவதோ, அல்லது இவ்வாறு வெற்றிகண்ட பெண்களைத் தேடி எடுத்து பேட்டிகாணுவதோ கடினமான வேலையாகும். அதனைவிட, ஒருசிறுகடனைக் கொடுத்துவிட்டு விதவைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர் என்கின்ற செய்தியைப் போட்டுமுடிப்பது இலகுவானதல்லவா?  

அடி என்னடி உலகம், இதில் எத்தனை கலகம்

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97846/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.