Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுநலவாய மாநாடும் இந்தியாவும் - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுநலவாய மாநாடும் இந்தியாவும் - யதீந்திரா

கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்குகொள்ளுமா, இல்லையா என்னும் வாதப் பிரதிவாதங்கள் தொடர்கின்றன. ஆனால் இந்தியாவின் பக்கத்திலிருந்து உறுதியான செய்திகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையில், 'டைம்ஸ் ஒப் இந்தியா' கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பதிலாக, இந்தியாவின் துணை குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரி பங்குபற்றக்கூடுமென்று செய்தியிட்டுள்ளது. இதேபோன்று, சமீப நாட்களாக கொழும்பில் இடம்பெறும் கொமன்வெல்த் மாநாட்டை கடுமையாக விமர்சித்துவரும் கனேடிய பிரதமருக்குப் பதிலாக, பிறிதொரு உயர்மட்டக் குழுவினர் அனுப்பிவைக்கப்படுவர் என்று செய்திகள் வெளியாகியிருந்தன. கடந்த ஆண்டு, 58 வது கொமன்வெல்த் பாராளுமன்ற அமர்வு (Commonwealth Parliamentary Conference) கொழும்பில் இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, 23வது கொமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கான இணக்கம் காணப்பட்டது.

எனினும், இலங்கையில் முடிவுற்ற யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின்போது இடம்பெற்றதாகக் கருதப்படும் மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை பொறுப்புக் கூறாத நிலையில், இலங்கையில் மேற்படி மாநாட்டை நடத்தக் கூடாது என்றவாறான குரல்களே அதிகரித்திருக்கின்றன. எனினும் இவ்வாறான விமர்சனங்களை மீறி இலங்கையில் குறிப்பிட்டவாறு கொமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட நாடுகள் இதில் பங்குகொள்ளக் கூடாது என்றவாறான வாதங்கள் மேலெழுந்தன. ஆரம்பத்தில் கொமன்வெல்த் மாநாடு இலங்கையில் இடம்பெறக் கூடாது என்பதில் தரித்து நின்றவர்கள், தற்போது இந்தியா, கனடா மற்றும் பிரித்தானியா முதலான முக்கிய நாடுகள் மேற்படி மாநாட்டை பகிஸ்கரிக்க வேண்டும் என்று வாதிட்டு வருகின்றனர். இந்த பின்னணியில்தான், தமிழ்நாட்டிலிருந்து இந்தியாவிற்கு அழுத்தங்களை பிரயோகிக்க முடியுமென்று சிலர் நம்புகின்றனர்.

இதன் பொருட்டு, கருணாநிதி மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுத, முன்னைநாள் நக்சல்பாரி செயற்பாட்டாளரும், பிற்காலத்தில் தன்னை தீவிர புலி ஆதரவாளராகவும் காண்பித்துக்கொண்ட தியாகு, உண்ணாவிரதம் மேற்கொண்டார். தியாகுவின் உண்ணாவிரதத்திற்கும், கருணாநிதியின் உருக்கமான கடிதத்திற்குமாக மன்மோகன் சிங் பதிலளித்திருக்கின்றார். தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தாத வகையில் முடிவுகள் எடுக்கப்படும். இத்துடன் எல்லாம் முடிந்துவிட்டது.

இப்போது இந்தியாவின் விடயத்திற்கு வருவோம். இந்தியா கொழும்பில் நடைபெறப்போகும் கொமன்வெல்த் மாநாட்டை பகிஸ்கரிக்குமா? இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நிகழ்வில் பங்குகொள்ளாது, பிறிதொருவர் இந்தியாவின் சார்பில் பங்குகொள்வாரானால் மேற்படி நிகழ்வை இந்தியா பகிஸ்கரித்துவிட்டதாக பொருள் கொள்ளலாமா? ஒரு பேச்சுக்காக, இந்தியா கொமன்வெல்த் மாநாட்டை பகிஸ்கரிக்குமானால், அதனால் இந்தியாவிற்கு என்ன நன்மை? கொழும்பு அதிகம் சீனாவின் பக்கமாக சாய்துவிடக் கூடாது என்னும் இந்திய விருப்பத்தை அது வலுப்படுத்துமா அல்லது பலவீனப்படுத்துமா? கொமன்வெல்த் மாநாட்டை இந்தியாவோடு, தொடர்புபடுத்தி விவாதிக்கும்போது இப்படியான கேள்விகளையெல்லாம் கேட்க வேண்டியிருக்கிறது.

இந்த இடத்தில் நமது ஆய்வாளர்கள் கருத்தூன்றி நோக்கத் தவறிய விடயமொன்று உண்டு. இந்தியா, கொமன்வெல்த் மாநாட்டை பகிஸ்கரிக்க வேண்டும் என்று தமிழகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் குரல் எழும்பியிருக்கின்ற சூழலில், சீனாவோ இலங்கையுடனான தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக அறிவித்திருக்கின்றது. சீனாவின் மேற்படி கூற்று, பழம் நழுவி கொழும்பின் வாயில் விழுந்ததற்கு ஒப்பானது. எனவே இந்தியா கொழும்பிலிருந்து தூர விலகும்போது, அந்த இடைவெளி சீனாவின் வசமாகும். இதனால்தான் முன்னர் கேணல் ஹரிகரன், சீனா இந்தியாவின் இடங்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தின்று கொண்டிருக்கின்றது என்றார். இதனை கருத்தில் கொண்டுதான் சவுத்புளொக் தனது முடிவுகளை எடுக்கும். ஏனெனில், தமிழ்நாட்டில் ஒரு சிலர் தீமூட்டிக் கொள்கின்றார்கள் என்பதற்காக அல்லது உண்ணாவிரதமிருக்கின்றனர் என்பதற்காக இந்தியா தனது வெளிவகாரக் கொள்கையை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. எனவே இந்த பின்புலத்திலிருந்துதான், இந்தியா அடுத்த மாதம் இடம்பெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டை பகிஸ்கரிக்குமா அல்லது இல்லையா என்பதை நோக்க வேண்டும்.

இந்தியா மேற்படி கொமன்வெல்த் மாநாட்டை பகிஸ்கரிக்கக் கூடாது என்னும் குரலில், சென்னையை தளமாகக் கொண்டிருக்கும் ஓய்வுபெற்ற பேராசிரியர் சூரியநாராயணன், சமாதானம் மற்றும் முரண்பாட்டு கற்கைகளுக்கான நிலையத்தின் (Institute of Peace and Conflict Studies - IPCS) இணையத்தளத்தில் எழுதியிருக்கும் கட்டுரையில், இது குறித்து பிறிதொரு கண்ணோட்டத்தை பதிவு செய்திருக்கின்றார். இந்தியாவின் பிராந்திய நலன்களை முன்னிறுத்தி சிந்தித்துவரும் சூரியநாராயணன், இந்தியா கொமன்வெல்த் மாநாட்டை பகிஸ்கரிக்குமாக இருந்தால், வன்முறையின் மூலம் ஒரு தனிநாட்டை உருவாக்கும் வெறித்தனத்துடன் இயங்கிவரும் தமிழ் புலம்பெயர் தரப்பினருக்கே, (fanatical sections among the Tamil diaspora) அது வாய்ப்பாக அமைந்துவிடும் என்று குறிப்பிடுகின்றார்.

வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்திருக்கின்ற சந்தர்ப்பத்தில், உயர்வாக மதிக்கப்படும் ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன் நம்பிக்கைக்குரிய முதலமைச்சராக இருக்கின்ற சூழலில், இந்தியாவின் உடனடியான கொள்கை, அந்த ஆட்சியை பலப்படுத்துவதாகவே இருக்க வேண்டும் என்று நாராயணன் குறிப்பிடுகின்றார். இந்தியாவின் நலனிலிருந்து விடயங்களை பார்க்கமால், இந்தியா தமிழர்களின் நலனை கருத்தில்கொண்டு, தனது முடிவை பரீசீலிக்க வேண்டும் என்னும் கோணத்தில் விடயத்தை ஆராய்ந்திருக்கின்றார் நாராயணன். ஆனால் இந்தியா தனது நலனிலிருந்துதான் முடிவுகளை எடுக்கும். இருப்பினும் நாராயணன் குறிப்பிடும் நோக்கிலும் விடயத்தை அவதானிக்க இடமுண்டு.

1987இல் மேற்கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தமானது, இலங்கையின் ஆயுத பிணக்குகளை ஒரு முடிவுக்கு கொண்டுவரும் ஒரு 'முரண் தணிப்பு' உபாயமாகவே கைக்கொள்ளப்பட்டது. தனது மேற்பார்வையில் இருக்கும், பிராந்திய எல்லைக்குள் முரண்பாடுகள் தீவிரமடைந்து செல்வதானது தனது பாதுகாப்பிற்கு சவால்விடக் கூடிய அன்னிய சக்திகளுக்கான கதவுகளை இலங்கைக்குள் திறந்துவிடலாம் என்னும் அச்சமே அன்று முதன்மையானதாக இருந்தது.

இதன் விளைவாக உருப்பெற்றதே மாகாணசபை முறைமை. மாகாணசபையின் உருவாக்க நோக்கம், இலங்கையில் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துவரும் தமிழ் மக்களுக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் நீதியையும் சமத்துவத்தையும் உறுதிப்படுத்தும் நோக்கில், ஒரு நியாயமான தீர்வை பெற்றுக்கொடுப்பதாகும். ஆனால் அன்று இந்தியா எதிர்கொண்ட முற்றிலும் எதிர்பாராத விடயங்கள், இறுதியில் இந்தியாவை பெரும்பாலும் விடயங்களை கையாளும் பொறுப்பிலிருந்து முற்றிலுமாக அன்னியப்படுத்தியிருந்தது. அவ்வாறு அன்னியப்படுத்தப்பட்ட இந்தியாவிற்கு மீண்டும் அதே மாகாணசபையை கையாளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தியாவின் உதவியின்றி வடக்கு மாகாணசபையை பலப்படுத்த முடியாது என்னும் நிலையிலேயே தமிழர்களும் இருக்கின்றனர். எனவே கிடைத்திருக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தை இந்தியா கைப்பற்றிக்கொள்ள வேண்டுமானால், அடுத்த மாதம் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்குமானால், அந்த வாய்ப்பை பற்றிக்கொள்ள முடியுமா? இந்த கோணத்தில் சிந்திப்பதும் சரியான ஒன்றுதான். ஆனால் இந்தியா பகிஸ்கரிப்பு மற்றும் பங்குபற்றல் இரண்டையும் நிறுத்துப் பார்த்தே முடிவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் இந்தியா கொழும்பிலிருந்து விலகிச் செல்லுமானால், இந்தியா விட்டுச் செல்லும் அந்த 'இடைவெளிகளை' சீனா 'விழுங்கிக் கொள்ளும்' என்பதிலும் சந்தேகமில்லை.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=49bc97f6-fda1-4570-ba6b-bc2a8f0da1f6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.