Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுபவர்களாக நாம் இருக்க வேண்டும் – முதல்வர் விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுபவர்களாக நாம் இருக்க வேண்டும் – முதல்வர் விக்னேஸ்வரன்
[ புதன்கிழமை, 23 ஒக்ரோபர் 2013, 00:37 GMT ] [ நித்தியபாரதி ]


வடக்கு மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், கடந்த 11ம் நாள் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் உறுதிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட நிகழ்வில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிகழ்த்திய உரை.

வடக்கு மாகாண சபையின் தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் எனது சகோதர சகோதரிகளே!

இங்கு கூடியிருக்கும் எங்களில் பலர் முன்னர் வேட்பாளர்களாக சந்தித்திருந்தோம். தற்போது நாங்கள் அனைவரும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் என்ற வகையில் இங்கு கூடியிருக்கிறோம்.

தேர்தலில் போட்டியிட்ட பெரும்பாலான வேட்பாளர்கள் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சிலர் இத்தேர்தல் மூலம் சபையில் அங்கம் பெறமுடியவில்லை.

இது மக்களுக்கு சேவை புரிவதில் எவ்விதத்திலும் தடையாக இருக்கவில்லை. தற்போதைய இந்தச் சந்திப்பில் இவர்களின் சேவைகள் தொடர்ந்தும் தேவைப்படுகின்றது என்பதை மட்டும் கூறிக்கொள்ள நான் விரும்புகிறேன்.

தேர்தலில் வெற்றியீட்டித் தேர்வாகியுள்ள நாங்கள் தற்போது முக்கிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளோம். இன்று இங்கு உறுதிப்பிரமாணம் எடுத்துள்ள நாங்கள் அனைவரும் எமது கடமைகளையும் எமது வேலைகளையும் ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் மேற்கொள்வோம்.

மக்களிடம் நாம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நாம் மறந்துவிட முடியாது. மக்களுக்கு நாம் அளித்த வாக்குறுதிகளை விசுவாசத்துடன் நிறைவேற்றுவோம்.

நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு எத்தகைய கடப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை வகுத்துக் கொள்ள வேண்டும். எமது கடமைகளும் சேவைகளும் மக்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும்.

25 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் துன்பத்தை அனுபவித்தனர். அவர்கள் தாம் எதை விரும்புகின்றனர், எதை நிராகரிக்கின்றனர் என்பதை வெளிப்படுத்த முடியாதவர்களாக இருந்துள்ளனர்.

இந்த மக்கள் தமது விருப்பங்கள் மற்றும் விருப்பமற்றவை எவை என்பதை தற்போது நடந்து முடிந்த தேர்தலின் மூலம் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த அடிப்படையில் நாங்கள் இன்று இங்கே உறுதிப்பிரமாணம் எடுத்துள்ளோம். எமது கடப்பாடுகள் மக்களை நோக்கியதாக உள்ளன. வேறுஎவருக்காகவும் இவற்றை விட்டுக்கொடுக்க முடியாது.

அண்மையில் நரேந்திர மோடி மிக முக்கிய கருத்தொன்றை வெளிப்படுத்தியிருந்தார். அதாவது 'நல்லாட்சி என்பது ஆளுவதை மட்டும் நோக்காகக் கொண்டதாக இருக்கக் கூடாது. இது மக்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும்.

மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு நல்லாட்சி மேற்கொள்ளப்பட வேண்டும். நல்லாட்சி என்பது மக்கள் மையப்படுத்தப்பட்டு, அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும்' என நரேந்திர மோடி குறிப்பிட்டிருந்தார்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் குஜராத் மக்களின் மனங்களை வென்ற ஒரு தலைவரால் கூறப்பட்டுள்ள இக்கருத்தானது எமக்கும் பொருத்தமானதாகும்.

மக்களின் தேவைகள் மற்றும் அவர்களின் விருப்பங்கள் எவை என்பதைக் கண்டறிந்து ஆராய்ந்து எமது கடமைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பதை நான் இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

மக்கள் மத்தியில் எவ்வித பாகுபாடுகளுமின்றி நாம் எமது கடமைகளை முன்னெடுக்க வேண்டும்.

தமது வாழ்வை முதன்மைப்படுத்தி சுயநலவாத அரசியல்வாதிகள் தமது செயற்பாடுகளை மேற்கொள்கின்ற இந்தவேளையில், நான் ஒரு சம்பவத்தைக் கூறவிரும்புகிறேன்.

எனக்கு சிங்களவர் ஒருவர் நண்பராக இருந்தார். நாங்கள் இருவரும் சட்டக்கல்லூரியில் ஒன்றாகப் படித்தோம். 1977ல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, எனது சிங்கள நண்பர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட கையோடு எனது நண்பருடன் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தேன்.

நான் அவரிடம் 'நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?' என வினவினேன். 'ஓ! இந்தத் தேர்தலில் வெற்றி கொள்வதற்காக நான் நிறையப் பணம் செலவழித்திருக்கிறேன். இந்தப் பணத்தை மீளப்பெற்றுக் கொள்வதற்கான செயற்பாட்டை நான் செய்யவேண்டாமா?' என அவர் பதிலளித்தார்.

பணம் சேர்ப்பதை நோக்காகக் கொண்டே தான் அரசியலுக்குள் நுழைந்தேன் எனது நண்பர் கூறினார். இவர் பின்னர் ஜே.வி.பி ஆல் படுகொலை செய்யப்பட்டார் என்பது வேறுகதை.

ஆகவே அரசியலுக்குள் நுழைவதென்பது பணத்தைச் சேகரிப்பதற்காகவும், அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல்வாதி சுயநலமாகச் செயற்படுவதற்காக என்ற கருத்து நிலவுகிறது.

நாங்கள் போரின் பின்னான காலப்பகுதியில் வாழ்கிறோம். மக்கள் எல்லாவற்றையும் இழந்த அந்தத் தருணங்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

எமது மக்கள் போரின் போது சின்னாபின்னமாக சிதறுண்டு வாழ்ந்தனர். இவர்கள் தமது கௌரவத்தை இழந்து தவித்தனர். மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுபவர்களாக நாம் இருக்க வேண்டும்.

போரின் போது சிதறி வாழ்ந்த மக்கள் தாமாகவே தமது பணிகளை ஆற்றக்கூடியவர்களாக மாற்றி அவர்களுக்கு புத்துயிர் வழங்கி, ஜனநாயக வழிமுறைக்குள் கொண்டு செல்ல வேண்டும்.

நாங்கள் எமது சொந்த சுயநலங்களுக்காக மக்களை பலவந்தப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒருபோதும் ஈடுபடக் கூடாது. மீண்டும் மக்கள் குழப்பமடைந்து பாதிக்கப்படுகின்ற நிலைக்கு அவர்களை நாம் ஒருபோதும் தள்ளக்கூடாது.

நாங்கள் தற்போது போரைச் சந்தித்து மீண்டுள்ளோம் என்பதை மறந்துவிடக் கூடாது. தற்போதைய புதிய சூழலில், நாங்கள் எமது நிலைகளை மீள வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறான ஒரு நிலையில், பொது வாழ்க்கைக்கு முக்கியமான ஏழு கோட்பாடுகளைக் கூறுவது தற்போது பொருத்தமானது என நான் நினைக்கிறேன்.

1. சுயநலமின்மை:

சுயநலமின்றி செயற்படுதல். பொது வாழ்க்கைக்குள் நுழையும் அனைவரும் மக்களின் நல்வாழ்வை மட்டும் முதன்மைப்படுத்தி அனைத்துத் தீர்மானங்களையும் எடுக்க வேண்டும். பொதுச் சேவையில் ஈடுபடுபவர்கள் எந்தவேளையிலும், எந்தச் சூழ்நிலையிலும் தமது தனிப்பட்ட நலன் கருதியோ அல்லது தமது குடும்ப உறுப்பினர்களின் அல்லது நண்பர்களின் நலன்கருதியோ நிதி மற்றும் ஏனைய சன்மானங்களைப் பெற்றுக் கொள்ளும் கைங்காரியங்களில் ஈடுபடக்கூடாது.

2. ஒருமைப்பாடு:

பொது வாழ்வில் ஈடுபடுவோர் வெளித்தரப்பினரிடமோ வெளி நிதி நிறுவனங்களிடமோ கடன் பெறக்கூடாது. அவ்வாறு பெற்றிருந்தால் இவர்கள் தமது கடமைகளை நேர்மையுடனும் ஒருமைப்பாட்டுடனும் மேற்கொள்ள முடியாது.

3. பாரபட்சமின்மை:

பொது வாழ்வில், நியமனங்களும் பரிசில்களும் தகைமைகள் மற்றும் தகுதிகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட முடியும். நாம் எப்போதும் பாரபட்சமின்றி செயற்பட வேண்டும்.

4. பொறுப்புக்கூறுதல்:

பொதுச் சேவையில் ஈடுபடும் நாங்கள் எம்மால் செய்யப்படும் எல்லா நடவடிக்கைகளுக்கும் நாமாகவே பொறுப்பளிக்கின்றவர்களாக இருக்க வேண்டும். இதன்மூலம் நாம் ஒருபோதும் பொறுப்பற்ற விதமாக நடந்து கொள்ளமாட்டோம்.

5. வெளிப்படைத்தன்மை:

நாங்கள் எம்மால் எடுக்கப்படும் தீர்மானங்களை வெளிப்படையாக ஆராய்ந்து பகுத்தறிந்து எடுக்க வேண்டும். பொது மக்களின் நலன்கள் கவனத்திற் கொள்ளப்படவில்லை எனக் கூறப்பட்டால் நாம் எமது தீர்மானங்களை எடுத்ததற்கான காரணங்கள் எவை என்பதை திறந்த மனத்துடன் வெளிப்படுத்த வேண்டும்.

6. நேர்மை:

பொது மக்களுக்கு சேவை செய்கின்ற எவரும் தமது வளங்களை வெளிப்படையாக அறிவிப்பது மிகவும் அவசியமானதாகும். இதன் மூலம் முன்னுரிமையின் அடிப்படையில் திட்டங்களை அமுல்படுத்த முடியும்.

*7. தலைமைத்துவம்:

பொது வாழ்வுக்காக தம்மை அர்ப்பணித்துள்ள அனைவரும் மேற்கூறப்பட்ட கோட்பாடுகளை தமது தனிப்பட்ட வாழ்வில் கடைப்பிடிப்பதுடன் ஏனையவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும்.

 


இந்த ஏழு கோட்பாடுகளையும் நான் ஏங்கே பெற்றுக் கொண்டேன் என நீங்கள் என்னைக் கேட்கலாம்.

ஜோன் மேயர் பிரித்தானியாவின் பிரதமராக கடமையாற்றிய போது, நொலன் என்பவரின் தலைமையில் ஒரு ஆணைக்குழுவை உருவாக்கி அதனிடம் பொது வாழ்வில் ஈடுபடுபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கோட்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணித்தார்.

இந்த ஆணைக்குழு இந்த விவகாரத்தை ஆராய்ந்து தனது முதலாவது அறிக்கையை 1996ல் வழங்கியது. மேற்கூறப்பட்டுள்ள ஏழு கோட்பாடுகள் நொலன் தலைமையில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவால் ஏகமனதாக முன்வைக்கப்பட்ட கோட்பாடுகளாகவும் பரிந்துரைகளாகவும் காணப்பட்டன.

நானும் தற்போது தான் பொது வாழ்வில் ஈடுபடவுள்ளேன். நான் நீதித்துறையில் பணியாற்றிய போது, இவ்வாறான சம்பவங்கள் மிகவும் குறைவாகும். தற்போது அவ்வாறில்லை.

ஒருவர் புன்னகை புரிந்தவாறு என்னை நோக்கி வரும்போது நான் இவர் தொடர்பாக ஆராய்ந்து இவர் நல்ல நோக்கத்திற்காக வந்துள்ளாரா அல்லது இல்லையா என்பதை அறியவேண்டும். எல்லா வேளைகளிலும் நான் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

உங்களைப் போலவே நானும் எனது பணியை மிகவும் சிரமத்துடன் நிறைவேற்ற வேண்டும்.

அரசாங்க அதிகாரிகள் சமூகப் பொறுப்பற்றவர்களாகச் செயற்படுகின்றனர் என எமது மக்கள் கருதுகின்றனர். இந்த அதிகாரிகள் சுயநலமாகச் செயற்பட்டு, மக்களின் நலனைக் கவனத்திற் கொள்ளாது நடக்கின்றனர் என்பதை நான் அறிகிறேன்.

நாங்கள் மீண்டும் அதே தவறை விட்டால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். எமக்காக வாக்களித்து எம்மை மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்ற உதவிய மக்களுக்கு எதிராக அவர்களின் நலன்கள், உரிமைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக நாம் சுயநலமாகச் செயற்பட முடியாது.

எமது மாகாணசபை அரசாங்கத்தில் பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. நாம் எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். எமது கடந்த காலத்தை எந்தக் கட்சியும் மறந்துவிட முடியாது.

நாங்கள் தற்போது ஜனநாயக வழியில் எமது பாதங்களைப் பதித்துள்ளோம். ஜனநாயக ஆட்சியில் முழுமையான ஆராய்ச்சி, கலந்துரையாடல், ஒப்புதல்கள் போன்றன மிகவும் முக்கியமானதாகும்.
அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானம் எடுப்பதைத் தவிர்ப்பது மிகவும் சிறந்ததாகும்.

மக்கள் எமது தரப்பில் 30 பேரைத் தெரிவு செய்துள்ளனர். இதில் இருவர் தவிர ஏனையவர்கள் மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எல்லோரும் ஒரேவிதமான கடப்பாடுகளைக் கொண்டுள்ளனர். எவரும் இதனை அசட்டை செய்ய முடியாது.

மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டியது எமது கடப்பாடாகும். நான் தற்போதிலிருந்து, அடுத்த தேர்தலில் நான் வெற்றி பெறுவேனா, எனது கட்சி வெற்றி பெறுமா எனக் கருதத் தொடங்கினால் அது மக்களுக்கு நாம் செய்யும் துரோகமாகும்.

தற்போது மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை முக்கியப்படுத்தி சேவையாற்ற வேண்டும். இதைவிடுத்து எனது சொந்த எதிர்காலத்தையும் கட்சியின் எதிர்காலத்தையும் கருத்திற் கொண்டு பணியாற்றக் கூடாது.

மக்களுக்காக நாம் அதிகளவிலான சேவைகளை ஆற்ற வேண்டும். மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றைத் தீர்க்க வேண்டும். எமது நிலைப்பாடுகளில் நாம் விசுவாசமாக இருக்க வேண்டும்.

எமது பொதுப் பணியாளர்கள் கூட அவர்களது அலுவலகத்தில் விசுவாசமாக இருக்க வேண்டும். மக்களை சரியாக வழிநடத்துவதற்காக இவர்கள் தமது கடமையைச் செய்யும் போது அது அவர்களின் நன்னடத்தைக்கு சான்றாகும்.

நாங்கள் அரசாங்க சேவகர்கள் என்ற எண்ணப்பாட்டுக்குப் பதிலாக நாம் அரசாங்கத்தின் பாதுகாவலர்கள் எனக் கருதுகிறோம். இதுவே உண்மையும் கூட. முன்னைய அரசாங்கங்கள் எமது அதிகாரங்களை மட்டுப்படுத்தியிருந்தன.

நாங்கள் மக்களுக்கான சேவையை ஆற்றும் போது மக்களே எமது பிரதான பொறுப்புக்கூறுபவர்களாக உள்ளனர் என்பதை நாம் மறக்கக் கூடாது. 'மக்களுக்கு சேவையாற்றுவதற்காக ஆட்சியில் உள்ள அனைவரும் சாதி, மதம், பால் போன்ற பேதங்களை கவனத்திற் கொள்ளக் கூடாது.

சேவை வழங்குவதை மட்டுமே இவர்கள் கருத்திற் கொள்ள வேண்டும். இவர்கள் அரசியல் எண்ணப்பாடுகளுக்கு அப்பால் செல்ல வேண்டும். பொது நலன்களிலிருந்து தனிப்பட்ட நலன்களைப் பிரித்தறிந்து கொள்ளக் கற்றுக் கொள்ள வேண்டும்' என நவீன சிங்கப்பூரை உருவாக்கியவர் என மதிக்கப்படும் லீ குவான் யூ குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே மக்களுக்கு சேவை வழங்குவதென்பது எமது புனிதமான கடமையாக இருக்க வேண்டும்.

எமது தனிப்பட்ட நலன்களிலிருந்து விடுபட்டு சுயநலமற்ற சேவையை வழங்க முன்வரவேண்டும். முதற்தடவையாக, வடக்கு மாகாண சபையானது பலம் பெற்று செயற்படத் தொடங்கியுள்ளது.

இதனை நிர்வகிப்பவர்கள் நாங்களே. நாங்கள் என நான் இங்கு தமிழ் பேசும் மக்களையே குறிப்பிடுகிறேன். நாங்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகச் செயற்பட வேண்டும்.

தற்போதும் கூட வடக்கு மாகாண சபைத் தேர்தலானது உலக அரங்கில் ஒரு பதிவை ஏற்படுத்தியுள்ளது. எமது அயல்நாடு எம்மைப் பாராட்டியுள்ளது.

எமது நடவடிக்கைகள் அவர்களுக்கு வியப்பூட்டுவதாக அமைய வேண்டும். எமது சுயநலமற்ற சேவையானது எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.

எனது வேலைத்திட்டத்திற்கு நான் புதியவன். உங்களில் பலர் என்னைப் போல இந்தப் பணிக்குப் புதியவர்களாக உள்ளீர்கள். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.

முதன்மையான இடத்தை அடைவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணிபுரிவோம். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமது இலக்குகளை அடைந்து கொள்வோம்.

http://www.puthinappalakai.com/view.php?20131023109296
 

  • கருத்துக்கள உறவுகள்

எமது நடவடிக்கைகள் அவர்களுக்கு வியப்பூட்டுவதாக அமைய வேண்டும். எமது சுயநலமற்ற சேவையானது எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.

 

ம்ம்ம்......

தொடரட்டும்

டக்ளஸ், சந்திரசிறிக்கு முதலமைச்சர் சீ.வியின் முதல் தாக்குதல்! பீதியில் அதிகாரிகள்…

வட மாகாணசபையின் பிரதிநிதிகளுக்கான பிரதான அமர்வுக்;கட்டடத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மூலம் திறந்து வைக்க மாகாணசபையின் பிரதம செயலாளர் மேற்கொண்ட முயற்சி முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றுள்ளது.

சுமார் 450 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கைதடியில் கட்டப்பட்டு வரும் பிரதிநிதிகள் சபைக்கான அமர்வுக் கட்டடத்தின் முதலாம் தளம் அவசர அவசரமாக கட்டி முடிக்கப்பட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.

குறித்த புதிய கட்டட தொகுதயிலேயே வடக்கு மாகாணசபையின் முதலாவது அமர்வு நடைபெறவுள்ள வெள்ளிக்கிழமையன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மூலம் திறந்து வைக்க மாகாணசபையின் பிரதம செயலாளர் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனின் கவனத்திற்கு சென்றுள்ளது. அமைச்சரால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பேரிலேயே திறப்பு விழாவை அவர்மூலம் திறந்து வைக்க அதிகாரிகள் முயற்சித்ததாகவும் கூறப்படுகின்றது.

இதனிடையே குறித்த திறப்பு விழா நிகழ்வு தொடர்பான ஏற்பாடுகளின் ஓர் அங்கமாக திறந்து வைக்கவிருந்த கல்வெட்டு தயாரிப்பில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்த வேளையில்; திறப்பு விழா ஏற்பாடுகளிற்கு தடைபோட்ட முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் முதலாவது அமர்வு தொடர்பான ஏற்பாடுகளை மட்டும் முன்னெடுக்க அதிகாரிகளிற்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்நிகழ்விற்கு வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறியும் செல்லவுள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மூலம் கட்டடத்தை திறந்து வைக்க அவரும் ஆலோசனையினை வழங்கியிருந்ததாக கூறப்படுகின்றது.

வடக்கில் அரச கட்டடங்களை திறந்து வைக்கும் பாரம்பரிய போட்டி ஒன்று தொடர்வது குறிப்பிடத்தக்கது.

 

jvp news

நிர்வாகம் இந்த பேச்சை யாழில் நிரந்தரமாக பின் பண்ணிவிடலாம். இது அரச சேவையில் ஈடுபடும் சகலருக்குமான பொது பேச்சு.மேற்கு நாடுகளில் நம்மிடையே தனியார் பொது சேவை(வைத்தியசாலை, வக்கீல்...), அரச அலுவலகங்களில் பணிபுரியும் பலருக்கும் கூட தேவையான பாடங்கள் சொல்லப்பட்டிருக்கு. 

 

மிகவும் தேவையானது, இந்த போச்சால் நோக்கப்பட்ட கூட்டமைப்பு அங்கத்தவர்கள் இதைப் புரிந்த்து அதன் படி ஒழுகி, வேதனையால் வாடிப்போயிருக்கும் நமது மக்களுக்கு, சுயநலம் பாராது, இனமதசாதிய பேதம் இல்லாமல் சேவை செய்ய   முயல வேண்டும்.

புதியவர்களுக்காக...

 

DSC_0083%282%29.JPG

வட மாகாண சபைக்கு புதிதாக தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களிற்கான செயலமர்வு இன்று வியாழக்கிழமை யாழ். ரில்கோ சிற்றி ஹோட்டலில் நடைபெற்றது. (படங்கள்: எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா)

DSC_0066%282%29.JPG

DSC_0044%283%29.JPG

DSC_0106%281%29.JPG

DSC_0012%282%29.JPG

DSC_0109%282%29.JPG

DSC_0144%282%29.JPG

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.