Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா – இங்கிலாந்து அலுவலகங்கள் முற்றுகை 300 பேர் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா – இங்கிலாந்து அலுவலகங்கள் முற்றுகை 300 பேர் கைது!

இனப் படுகொலை நாடான இலங்கையில் பொதுநல நாடுகள் மன்ற மாநாட்டை நடத்தாதே என்று வலியுறுத்தி இன்று (25.10.2013) காலை 10.00 மணியளவில் சாசுத்திரி பவன் மற்றும் இங்கிலந்து துணைத் தூதரகம் முற்றுகைப் போராட்டத்தை  மே பதினேழு இயக்கம் ஒருகிணைப்பாளர் தோழர் திருமுருகன் தலைமையேற்றார்.

uk_lanka_embassy_1.jpg

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு மல்லை சத்தியா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தொழிலாளர்கள் அணி பொதுச் செயலாளர் சைதை சிவா, மனிதநேய மக்கள் கட்சி மாணவரணி மாநிலச் செயலாலர் தோழர் அனிஸ், சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா துணைப் பொதுச் செயலாளர் அம்சா, தமிழக மக்கள் சனநாயக கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் ஆதிதிராவிடன், திராவிடர் விடுதலைக் கழகம் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிகுமரன், தோழர் சிவகாளிதாசன், மக்கள் விடுதலை இயக்கத் தலைவர் இரவி, உயிரிதுளிகள் இயக்கம் முகிலன், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் சிபி உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் திரளானோர் பங்கேற்று கைதாகி கிரீம்சு சாலை அருகில் மண்டபத்தில் வைக்கப் பட்டுள்ளனர்.

uk_lanka_embassy_2.jpg

தமிழ்த் தேசப் பொதுவுடைக் கட்சி சார்பாக பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், சென்னை நகரச் செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், தாம்பரம் நகரச் செயலாளர் இளங்குமரன், தமிழக இளைஞர் முன்னணி தாம்பரம் நகரச் செயலாலர் தோழர் வெற்றித் தமிழன், சென்னை நகரச் செயலாளர் தோழர் கோவேந்தன், மகளிர் ஆயம் தோழர் ம.லெட்சுமி, தோழர் புதுமொழி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று கைதாயினர்.

uk_lanka_embassy_3.jpg

இந்திய அரசே ! இந்திய அரசே !

ஈழத்தமிழர் பிணங்களை தின்று தீர்த்த இந்திய அரசே !

காமன் வெல்த் மாநாடா!

 சிங்களவனின் மாமன் மச்சான் மாநாடா!

பொதுநல மாநாடா?

கொலைக் காரன் இராசபட்சே புகழ் சூட்டும் மாநாடா?

கனடா நாட்டை பாரடா ! காமன் வெல்த்தைப் புறக்கணித்தது

ஏனடா இந்திய இலங்கையே

அந்த நாள் ஆரியப் பாசமா?

சிங்களன் உணக்கு பங்காளி?

தமிழர் உனக்குப் பகையாளியா?

வெளியேற்று வெளியேற்று

காமன் வெல்த் அமைப்பிலிருந்து

சிங்கள நாட்டை வெளியேற்று

மனித உரிமைகள் மாண்புகள் என்று

மகத்துவம் பேசும் பிரிட்டன் அரசே!

மகிந்த இராசபட்சே செய்த

மனிதப் படுகொலைத் தெரியலையா ?

நடத்தாதே நடத்தாதே காமன் வெல்த் மாநாட்டை

கொலைக் கார கொழும்பு நகரில் நடத்தாதே

போன்ற முழக்கங்கள் எழுப் பட்டது.

 uk_lanka_embassy_4.jpg

uk_lanka_embassy_5.jpg

uk_lanka_embassy_6.jpg

uk_lanka_embassy_7.jpg

uk_lanka_embassy_9.jpg

uk_lanka_embassy_11.jpg

uk_lanka_embassy_10.jpg

 

(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : வெற்றித் தமிழன், பாலா)

நன்றி - பதிவிணையம்

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளுக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் உணர்வாளர்களுக்கு நன்றி..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.