Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுநலவாயத் தலைமை கள்வனுக்கு விதானை வேலை போன்றது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பழைய ஒரு பேப்பரிலிருந்து

 

பொதுநலவாயத் தலைமை கள்வனுக்கு விதானை வேலை போன்றது

ஒருவாறு வடமாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விட்டன.  எதிர்பார்த்தபடி ஒருமனதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களும், எதிர்பாராதபடி அரசகூட்டமைப்பின் வேட்பாளர்களும் தெரிவு செய்யப்பட்டு களமிறக்கப்பட்டுள்ளனர். இது தமிழர் தரப்பின் நிதானமான அரசியற் போக்கையும், அரசதரப்பின் தளம்பற் போக்கையும் காட்டி நிற்கின்றது.  

வடக்கில் என்னதான் அபிவிருத்திப் பணிகளை நிறைவேற்றி தமிழர்களின் மனங்களைக் கவர்ந்திழுக்க அரசதரப்பு முயன்றாலும் தேர்தலென்று வரும்போது மக்கள் அதையெல்லாம் கணக்கிலெடுக்கப் போவதில்லையென்பதைத்தான் முடிவுகள் காட்டப்போகின்றன. மக்களைச் சுற்றிவரப் போடப்பட்டுள்ள ராணுவ வேலிகள் பிடுங்கியெறியப்பட்டு ஓர் சுதந்திரமான வாழ்க்கை அவர்களுக்குக் கிடைத்தாலும் இந்த நிலை தொடரவே செய்யும். தமது உள்ள10ர் நிர்வாகத்தை முழுமையாகத் தாமே பார்த்துக்கொள்ளக் கூடியதாகவும், உள்ள10ர்ப் பாதுகாப்பைத் தாமே ஏற்படுத்திக் கொள்ளக் கூடியதாகவும், தமது மாகாணத்தில் தமது விருப்புக்கு எதிராக குடியேற்றங்கள் நடைபெறாமல் இருக்கக்கூடியதாகவும் மாகாணசபையின் அதிகாரங்கள் எப்போது நிலைப்படுத்தப் படுகின்றதோ அப்போதுதான்; மக்கள் மனதை வெல்வது தொடர்பாகக் அரசாங்கம் கனவுகாண முடியும்.

தற்போது பேரினவாத அரசியல்வாதிகளின் உளறல்களை நோக்கும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரைக் கண்டு அவர்கள் மிகவும் மிரண்டு போயுள்ளனர் என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது.  புலிப் பூச்சாண்டியைக் காட்டித் தொடர்ந்தும் மக்களை ராணுவ அடக்குமுறைக்குள் வைத்துக்கொண்டு ஓர் அடாவடி அரசியலைத் தொடர்ந்து கொண்டு போவதற்கேற்ற வகையில் தற்போது தெரிவு செய்யப்பட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் அமையவில்லை என்னும் ஆதங்கத்தினால், எப்படியாவது அவரின்மீது ஏதோவொரு வகையில் சேறுபூசிவிட வேண்டுமென்னும் நோக்கில், பல பேரினவாதிகள் அதற்காக முயன்று கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழ்நிலையிலிருந்து முற்றிலும் விடுபட்டு, குற்றம் காணமுடியாத கௌரவமான பல மனிதர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களாக நிறுத்தியிருப்பது அரசாங்கத்திற்கும் அதனோடு சேர்ந்தியங்கும் பேரினவாதிகளுக்கும் பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மாவை போன்ற சாதுரியம் மிக்க பழுத்த அரசியல் வாதிகள் இந்த விடயத்தில் தங்களது அரசியல் சிரேஷ்டத்தை (சீனியாரிட்டி) எந்தவொரு சுயநல நோக்கிற்கும் பாவிக்காமல் விட்டுக்கொடுத்து, அரசியலுக்குப் புதியவரான முதலமைச்சர் வேட்பாளரை அவரது தகுதியின் அடிப்படையில் உள்வாங்கியிருப்பது பேரினவாதிகளுக்கு மிகுந்த வயிற்றெரிச்சலை மூட்டியிருக்கிறது.  அதனால் அவர்களை சம்பந்தமில்லாமல் உளறவும் வைத்திருக்கிறது.  தமிழர் கூட்டணியின் தலைமையும் அவரது கூட்டணியும் இந்தச் சாதுரியமான காய் நகர்த்தலினால் மேலும் ஒருபடி உயர்ந்திருக்கிறார்கள்.  இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாணசபைத் தேர்தலில் அமோக வெற்றியீட்டுமென்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட விடயமாகவே தென்படுகின்றது.

எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபமென்னும் நோக்கில் அரசாங்கமும் அதன் சகபாடிகளும் பல்வேறு நெருக்கடிகளுக்குள் சிக்குண்டு கிடக்கும் தமிழர்களின் வாக்குகளைச் சூறையாட முனைகிறார்கள். அதனால் வரும் வெற்றி தற்போதுள்ள அரைகுறைத் தீர்விலும் வெட்டுக்களைப் போடத்தான் பயன்படுத்தப்படும். மக்களின் செல்வாக்கோடு இனப்பிரச்சனையைத் தீர்த்து வைக்கிறோமென்று உலகத்துக்குக் காட்டியபடி 13ம் திருத்தச் சட்டத்தை அடியோடு செல்லாக்காசாக்கி விடவே ஆளும் தரப்பு முயலும்.  இந்தத் தருணத்தில் தகுதியான வேட்பாளர்களை நிறுத்தி அந்த முயற்சிகளையெல்லாம் முறியடிக்கக் கூடிய கௌரவமான அரசியற் பாதையில் தமிழர்களை வழிநடத்திச் செல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அர்ப்பணிப்போடு செயல்படுவது பாராட்டப்படவேண்டிய விடயம்.  

வடமாகாணத் தமிழ் மக்கள் இந்தத் தருணத்தில் தமது வாக்குகளைச் சரியான விதத்தில் பயன்படுத்தாது போனால் கிழக்கு மாகாணத் தமிழர்கள் தற்போது நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது போன்றே அவதிப்பட நேரிடும்.  வாக்குகள் எமது முட்டாள்த்தனத்தினால் பிரிந்து போகுமானால் பலம்குறைந்தவோர் ஓர் தொங்கு மாகாணசபையை அமைக்கவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகலாம். அதனால் எந்தப் பலனும் இல்லாது போய்  வடக்கில் பேரினவாதிகளின் பிடி இறுகவே வாய்ப்பேற்படும்.  அதனால் அறுதிப் பெரும்பான்மையுடன்; தமிழ்த் தேசியவாதிகளை வெல்லவைக்க வேண்டியது தமிழர்களின் தலையாய கடமையாகிறது. ஆரோக்கியமான ஜனநாயக அரசியல் முறைமைக்குள் தமிழ்மக்கள் கொண்டுவரப்படும்போது தெற்கிலும் அதன் தாக்கம் ஏற்படவே செய்யும்.  அடாவடி அரசியலுக்கு விடைகொடுக்க வேண்டிய கட்டாயம் சிங்கள மக்களுக்கும் ஏற்படாமற் போகாது.  உலகமும் இந்த எதிர்பார்ப்போடுதான் இலங்கை தொடர்பான தனது ராஜதந்திரக் காய்நகர்த்தலைச் செய்து கொண்டிருக்கிறது.

கள்ளனைப் பிடித்து விதானை வேலை கொடுக்க வேண்டுமென்பார்கள். அப்போதுதான் அவன் வேறு வழியில்லாமல் திருந்தி நடப்பானாம்.  காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் இலங்கை அதிபருக்கு அந்தவேலைதான் கொடுக்கப்படும் போலிருக்கிறது.  தக்க தருணத்தில் வடபகுதித் தேர்தலும் வருகிறது. நாகரீக அரசியலை நாம் முன்னெடுக்கும்போது உலகின் கண்கள் அதனை உற்று நோக்கும். காமன்வெல்த்தின் தலைவராக இருக்கப்போகும் தலைவரையும் கவனிக்கும்.  உயர்ந்த பதவியொன்றில் இருந்து கொண்டு, 'காணியதிகாரம், பொலிஸ் அதிகாரமெல்லாம் சிங்களவர்களுக்கு மட்டும்தான் தமிழர்களுக்கு இல்லை' என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருக்க முடியாது.  

உயர்நிலைக்கு வரும்போது ஜனநாயகத்தையும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமைகளையும், மனிதவுரிமைகளையும் மதிக்கும் ஓர் பெருந்தலைவராக இலங்கையதிபர் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டிய கடமைப்பாட்டுக்கு உட்பட்டவராகிறார்.  ஆகவே இலங்கையதிபருக்கான அந்தப் பதவி ஒரு பிளஸ் பொயின்ராக மாற்றமடையக்கூடிய சாத்தியங்களும் இல்லாமலில்லை.  அந்தவகையில் ஆழ்ந்து சிந்திக்கும்போது இலங்கையில் காமன்வெல்த் உச்சிமகாநாடு நடைபெறுவதும் அதன்விளைவாக பொதுநலவாயத்தின் தலைமையை இலங்கை பெறுவதும் நன்மை தரக்கூடிய விடயமாக உள்ளதை மறுக்கமுடியாது.  தற்போதுள்ள பேரினவாதம் பேசும் மூன்றாம்தர அரசியல்வாதிகளின் கூட்டை முற்றாக வெட்டியெறிந்துவிட்டு நாகரீமிக்க கனவான்களை மதித்து அவர்களின் ஒத்துழைப்போடு வெற்றிகரமாக அரசாங்கத்தை நடத்திச் செல்லக் கூடியதாக எதிர்காலச் சூழ்நிலைகளை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் இலங்கையரசுக்கு உருவாகி வருகிறது.  அதைத் தவிர்த்துத் தனது தலையில் தானே மண்ணையள்ளிப்போடும் நிலைக்கு இலங்கையரசு உட்படாது என எதிர்பார்க்க இடமுண்டு.

புலம்பெயர்ந்த தமிழர்கள் இதனைக் கொஞ்சம் கருத்திற்கொண்டு இலங்கையில் நடைபெறப்போகும் பொதுநலவாயத் தலைவர்களின் உச்சி மகாநாட்டிற்கும் அதனால் இலங்கை பெறப்போகும் தலைமைத்துவத்திற்கும் இடையூறு விளைவிக்காமல் இருப்பதே நல்லது போலத் தோன்றுகின்றது.  ஏற்கனவே மனிதவுரிமை மீறல்களுக்கும் போர்க்குற்றங்களுக்கும் பொறுப்பாகித் தனது மரியாதையை இழந்து போயிருக்கும் இலங்கை, பொதுநலவாயத்தினாலும் புறக்கணிக்கப்படும்போது அதன் விளைவுகள் நன்மை பயக்குமென்று எதிர்பார்க்க முடியாது.

மூக்கறுந்தவனுக்குச் சாங்கமென்ன சரியென்ன என்பார்கள்.  ஏற நனைந்தவனுக்குக் கூதலென்ன குளிரென்ன என்பார்கள்.  தலைக்குமேலே போகும் வெள்ளத்தைச் சாணா முழமா என்று அளந்ததில் எந்தவித பயனுமில்லை.  அந்தவகையில் இலங்கை முற்றாக அவமதிக்கப்படும்போது தற்போதுள்ள மனிதவுரிமை மீறல்களையும், சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கெதிரான அடக்குமுறைகளையும் மேலும் அதிகரிக்க இடமுண்டு. பெரும்பான்மை இனவெறியர்களினதும், பல பௌத்த பிக்குகளினதும் ஆதரவு அத்தகைய அராஜகத் தன்மைகொண்ட அரசியலுக்கே இருப்பதால் இலங்கையரசு தனது இனவெறி ஆட்சியைத் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லாலத நிலை தோன்றிவிடும்.  அந்த நிலை தோன்றாதிருக்க இலங்கை கௌரவமானவோர் இடத்தில் நிலைபெற வேண்டும்.

சிலவேளைகளில் இதனை முட்டாள்த்தனமானவோர் வாதமாகவும் சிலர் எண்ணக் கூடும். ஆனால் நாம் நமது தகுதியை உயர்த்த முனையும்போது நம்முடன் போட்டியாக நிற்கும் எதிராளியின் தகுதியும் உயர்நிலையில் இருக்கும்போதுதான் அரசியலில் நல்ல விளைவுகளை எதிர்பார்க்க முடியும்.  இனவெறியர்களும் காடையர்களும் நிறைந்தவோர் கும்பலை எதிர்த்து கனவான் அரசியலை நடத்துவதென்பது அவ்வளவு சுலபமானதாக இருக்கப் போவதில்லை.

யுத்த வெற்றிக்குப் பின்னரான இவ்வளவு காலமும் ஆயுதவன்முறைக்கு எதிரான அரசியலைக் கொண்டு நடத்தும் போர்வையில் ரௌடித் தனமான அரசியலுக்குத் தமிழர்களைப் பலிக்கடாவாக்கி ராணுவ நெருக்குவாரத்திற்குள் ஆட்சியைக் கொண்டுசென்ற இலங்கையரசுக்கு இனிமேலும் அந்த வாய்ப்பைக் கொடுக்காமல் தடுப்பது அரசியல் ராஜதந்திர ரீதியில் சிறந்த காய்நகர்த்தலாகும். அதற்காக காமன்வெல்த்தின் தலைமையை இலங்கை பெற்று ஓர் கௌரவமான இடத்திற்கு வருவதையும் அதன்பலனாய் தேசிய சிறுபான்மையினங்களின் தார்மீக உரிமைகளை இலங்கை மதித்தேயாக வேண்டிய கடப்பாட்டை உருவாக்குவதையும் நாம் ஊக்குவிப்பதே சரியானதாகப்படுகிறது.

 

Edited by karu

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரைக் கண்டு அவர்கள் மிகவும் மிரண்டு போயுள்ளனர் என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது.  

 

 

அதிகராத்தை சிங்களவர்கள் வைத்திருக்கிறார்கள். பிறகு ஏன் அதிகாரத்தை கேட்கும் எம்மிடம் பயப்பட வேண்டும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.