Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல் அமர்வில் கூறத் தவறிய விடயங்களும் எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டி பேச்சுக்களும் - அ.நிக்ஸன்-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதல் அமர்வில் கூறத் தவறிய விடயங்களும் எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டி பேச்சுக்களும் - அ.நிக்ஸன்-

28 அக்டோபர் 2013
 


NPC%20Bilding_CI.jpg

Notes முதலமைச்சரின் அதிகாரங்கள் பற்றிய சட்டரீதியான அனுகுமுறைகளுக்கு எத்தனை உறுப்பினர்கள் ஒத்தழைப்பு வழங்குவார்கள்? மாகாண சபை நிரந்தரமானது என்ற நம்பிக்கையுடன் தமது பதவிகளை மட்டும் உறதிப்படுத்த முற்படும் உறுப்பினர்கள் பாதிப்புகள் தொடர்பான புள்ளி விபரங்களை சேகரிக்க தவறுகின்றனர்

வடமாகாண சபையின் முதல் அமர்வில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரை இரண்டு விடயங்களை கூறியது. ஓன்று அரசியல் தீர்வின் முக்கியத்துவம் இரண்டாவது அரசியல் தீர்வுக்காக இலங்கைக்கு வெளியில் நின்று நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தமிழகம் புலம் பெயர்தமிழர்கள் என்ற இரு சமூகங்களின் ஒத்தழைப்பு. 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களை அப்படியே நடைமுறைப்படுத்த வேண்டும் என விக்னேஸ்வரன் வலியுறுத்தியமை பொதுவான விடயமாக இருந்தாலும் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் நீண்டகால அரசியல் பிரச்சினைகளை இன்னமும் நீடித்துச் செல்லக்கூடாது என்ற ஒரு கடும் தொணியும் தென்பட்டது. இந்த கருத்து வெளிப்பாடுகள் வடமாகாண சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரையில் இருந்து வேறுபடுகின்றது. முதல் அமர்வில் நிகழ்த்திய உரை குறைந்தபட்ச நியாயப்பாடுகளை வெளிப்படுத்தியமைக்கு காரணம் ஊடகங்களில் முன்னர் எதிராக வெளியிடப்பட்ட விமர்சனங்கள்தான் என்ற கருத்துக்களும் உண்டு.
 

80 வருடகால அரசியல்

தமிழர்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகள் ஆரம்பிபதற்கு காரணமாக அமைந்த இலங்கைத் தேசிய இயக்கத்தின் பிளவு 1921 ஆம் ஆண்டு தமிழர் மகா சபையை உருவாக்கியது. தமிழர்களின் சுயமரியாதையை கட்டியெழுப்பவதற்கான அடித்தளமாக அது அமைந்திருந்தது. பிரித்தானியர் ஆட்சியில் இருந்தபோதும் அவர்களால் உருவாக்கப்படுகின்ற அரசியலமைப்பு தமிழர்களின் அரசியல் அபிலாiஷகளை உள்வாங்கவில்லை என்ற குற்றச் சாட்டுக்கள் அப்போதைய தமிழத் தலைவர்களினால் முன்வைக்கப்பட்டன. ஏறத்தாள 80 வருடத்திற்கும் மேற்பட்ட அரசியல் வரலாறுகளையும் 60 ஆண்டுக்கு மேற்பட்ட அரசியல் போராட்ட காலத்தையும் கொண்டமைந்த தமிழர் அரசியல் இன்று வடமாகாண சபையுடன் வந்த நிற்கின்றது.

அரசியலமைப்பில் இல்லை

மக்களுடைய அன்றாட பிரச்சினைகள் வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு நன்கு தெரியும். ஆனால் அரசியல் அபிலாiஷகளை பெறுவது அல்லது அதற்கான பேச்சுக்களை முன்னெடுப்பது என்ற விடயங்களில் மக்கள் பிரதிநிதிகளடைய கருத்து வெளிபாடுகள் ஏதோ இருக்கின்ற அரசியலமைப்பில் இருந்து எல்லாவற்றையும் பெற்றுவிடலாம் என்ற நோக்கம் தெரிகின்றது. விக்னேஸ்வரனுடைய உரையில 13 ஆவது திருத்தச்சட்டத்தின் முக்கிய சரத்துகள் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும் இந்த அரசியலமைப்பை தான்டி தீர்வு முன்வைக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை கொடுத்திருந்தது, ஆனால் சில உறுப்பினர்களடைய பேச்சு அவ்வாற அமையவில்லை. தங்களுடைய பதவிகளை காப்பாற்றிக் கொண்டால் போதும் என்ற மன உணர்வுகளை மாத்திரமே காண முடிந்தது.

ஆளுநர் அலுவலகத்துடன் முரண்பாடு

நிர்வாக விடயங்களில் அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் முரண்பாடுகள் வரலாம். ஆனால் முதல் அமர்வுகளுக்கான எற்பாடுகளில் காணப்பட்ட முரண்பாடுகள் ஒன்றை அழிக்கின்ற அல்லது இருக்கின்ற அதிகாரங்களையும் பிடிங்கி எடுக்கின்ற ஒரு தன்மையை காண்பித்தது. குறிப்பாக வடமாகாண ஆளுநருடைய அலுவலக செயற்பாடுகள் அவ்வாறான நிலையை தோற்றுவித்தன. உதாரணமாக தமிழ் கலாசார உடைகளுடன் தமிழ் மாணவர்களை கொண்டு சிங்கள வாத்தியங்கள் வரவேற்பு நிகழ்வில் இசைக்கப்பட்டன. இது ஆளுநர் அலுவலகத்தின் ஆதிக்கத்தை காண்பித்து.

அங்கு நின்ற சில உறுப்பினர்கள் இது பற்றி பேசிக் கொண்டது என்னவென்றால் 'இன்றோடு ஆளுநரின் அட்டகாசங்கள் முடிவுக்கு வந்து விட்டன. இதுதூன் ஆளுநர் நடத்தும் கடைசி ஆட்டம்' என்றும் கூறினர். தமிழத்தேசிய கூட்டமைப்புக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்கள் உள்ளளன அதனால் அந்த பெரும்பான்மை மூலம் ஆளுநரை பதவி நீக்கம் செய்யலாம் என்ற ஒரு பேச்சும் உள்ளது. அவ்வாறான ஒரு நம்பிக்கையில் சில உறுப்பினர்களும் புன்சிரிப்புடன் ஆசனங்களில் அமர்ந்திருந்தனர்.

ஆனால் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிக்கும் 18 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாணங்களுக்குரிய பொலிஸ் ஆணைக்குழு அதிகாரங்கள் பறிக்கப்பட்டு ஜனாதிபதி மூலமாக ஆளுநரின் இறுதி முடிவுகளுக்கான அதிகாரங்களும் காணப்படுகின்றன.

சுயாதீனமாக செயற்பட முடியுமா?

17 ஆவது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டிருந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் முறை நீக்கப்பட்டு ஐந்து உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்ற சபையிடம் அந்த அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அந்த நாடாளுமன்ற சபை ஜனாதிபதியின் கட்டு;பாட்டுக்குள் அல்லது ஜனாதிபதியினுடைய ஆலோசணையை கேட்பதற்கு கடமைப்பட்டுள்ளது எனலாம். இவ்வாறன ஒரு நிலையில் மாகாண சபை எவ்வாறு சுயாதீனமாக செயற்படும் என்ற கேள்விகள் எழுகின்றன. ஆகவே சில உறுப்பினர்கள் இந்த விடயங்களை அறிந்திருக்கவில்லை எனலாம். முதலமைச்சர் குறைந்த பட்சம் சட்டத்தால் ஒரு அரசியல் போராட்டத்தை நடத்த தயாராகிவிட்டார் என்பதை தனது உரையில் வெளிப்படுத்திய நிலையில் எத்தனை உறுப்பினர்கள் அதற்கு ஒத்தழைப்பு வழங்க தயாராக இருக்கின்றனர்?

அரசியல் பிரச்சினையை சட்டத்தால் அனுக முடியாது என்பது வேறு. ஆனால் குறைந்த பட்சம் அந்த பரீட்சாத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முற்படும்போது இந்த அரசியலமைப்பு அல்லது கடந்தகால தீர்வு முயற்சிகள் ஏன் தோல்வி கண்டன என்பதை நியாயப்படுத்த ஒரு வாய்ப்பு மீண்டும் கிடைக்கும். ஆனால் அந்த முயற்சியை கைவிட்டு அல்லது அந்த முயற்சிக்கு ஒத்தழைப்பு வழங்காமல் தமது பதவிகள் பற்றியும் அடுத்த நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளிலும் ஈடுபட்டால் தமிழர்களின் அரசியல் போராட்டம் என்பதன் முக்கியத்துவம் குறைந்து இறுதியில் மாகாண சபைதான் தீர்வு என்றாகிவிடும்.

வெற்றிடங்கள் உண்டு

வடமாகாணத்தின் அரச சேவையில் 3500க்கு மேற்பட்ட வெற்றிடங்கள் உண்டு சுமார் 4ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளன. அரச நிறுவனங்களில் சிற்றாழியர் வெற்றிடங்களும்; நிரந்த நியமனம் இன்றி சுமார் ஆயிரம் உழியர்களும் பணிபுரிகின்றனர். மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களிலும் பல அரச செயலக கட்டிடங்கள் நிரந்தரமாக இல்லை. அரச ஊழியர்கள் பலருக்கு சம்பளங்கள் உரிய முறையில் வழங்கப்படுவதில்லை. ஏற்றத் தாழ்வுகள் காணப்படுகின்றன. இந்த தகவல்கள் கேள்விகளாக கடந்த ஆண்டு பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல் புத்தகத்தில் உறுப்பினர் ஒருவாரால் பொது நிர்வாக அமைச்சிடம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் மாகாண சபை உறுப்பினர்கள் எவரும் முதல் நாள் அமர்வில் இது பற்றிய புள்ள விபரங்களை வெளியிடவில்லை. (இந்த புள்ளிவிபரங்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முற்பட்டது. ஆனால் இன்று வரையும் வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை.)

புதிய உறுப்பினர்கள் இனித்தான் தேடி எடுக்க வேண்டும் என்று கூற முடியாது. ஏனெனில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பலர் அரச சேவையில் முன்னர் பணியாற்றியவர்கள். வேறு சிலர் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக பதவி வகித்தவர்கள் எனவே வெற்றிடங்கள் பற்றிய தகவல்களை அறிந்திருத்தல் வேண்டும். தேர்தல் பிரசாரங்களின்போது மக்கள் தமது பிரச்சினைகளை சொல்லியிருந்தார்கள். வேட்பாளர்கள் பலரும் கேட்டிருந்தனர்.

நிதியில்லை என கூறுவார்கள்

அரச வெற்றிடங்களை நிரப்ப முற்படும்போது அரசாங்கம் நிதி இல்லை என கூறு முற்படும் அல்லது அரச நியமனங்கள் மத்திய அரசாங்கத்தின் கடமை என்றும் மாகாண அரசாங்கள் வெற்றிடங்களை நிரப்பும் போது மாகாணத்தை சேர்ந்த அமைச்சர்களிடம் ஆலோசணை பெற வேண்டும் எனவும் கூறுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு. அப்போது மாகாண சபைகளின் அதிகாரம் பற்றிய கேள்விகள் இயல்பாகவே எழும் அவ்வாறு எழும்போது ஒவ்வொரு விடங்களுக்கும் நீதித்தறையை நாட வேண்டி நேரிடும். இந்த இடத்தில் நீதித்தறையுடன் போராடுவதுதான் மாகாண அரசாங்கங்களின் கடமையா என்ற கேள்வியை மக்கள் முன்வைப்பார்கள்.

அப்போதுதான் அரசியலமைப்பின் படி நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பான சந்தேகங்களும்; எழும். முதல் நாள் அமர்வில் உரையாற்றிய உறப்பினர்கள் பலர் வடமாகாண சபையை ஏனைய மாகாண சபைகளை விட திறம்பட நடத்தி காண்பிக்க போவதாக கூறியிந்தார்கள். என்ன அர்தத்தில் கூறினார்களோ தெரியாது ஆனாலும் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான உரிமைகள் பல தசாப்பதங்களாக உறுதிப்படுத்தப் படாமையினால் மேற்சொன்ன பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதன் மூலம் ஏனைய மாகாண சபைகள் கூட குறிப்பாக கிழக்கு மாகாண சபையும் அது தொடர்பாக பேச ஆரம்பிக்கும்.

அப்போது வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய கேள்வியும் எழலாம். கிழக்கு மாகாண சபையை தவிர ஏனைய மாகாண சபைகள் சிங்களவர்களை பெரும்பான்மையாக கொண்டிருப்பதனால் அந்த சபைகள் தமக்குரிய உரிமைகள் பற்றி பேசும் என்று எதிர்ப்பார்க்க முடியாது. எனவே கிழக்கு மாகாண சபையை மாத்திரமே கருத்தில் கொண்டு அல்லது கிழக்கு மாகாண சபையின் ஒத்தழைப்பை பெற்றுக்கொண்டு வடமாகாண சபை, தமிழர்களுக்கான உரிமைகளை பெறும் விடயத்தில் போராட்டங்களை முன்னெடுக்கலாம். முதலமைச்சர் விக்னேஸ்வரன் வார்த்தையில் கூறுவதானால் சட்டத்தால் கையாளப்படவுள்ள போராட்டங்கள். நீதித்துறையை நோக்கி கேட்கப்படவுள்ள கேள்விகளை எழுப்பும் போது கிழக்கு மாகாண சபையின் ஆதரவை பெறலாம். கிழக்கு மாகாண சபை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அங்குள்ள முஸ்லீம் உறுப்பினர்களின்; முஸ்லீம் மக்களின்; ஆதரவுகளை தமிழத்தேசிய கூட்டமைப்பு பெற முடியும்.

மாங்குளத்தில் அமைந்தால் நன்று

ஆகவே இந்த வடக்கு மாகாண சபை 1920இல் தேசிய இயக்கம் பிளவுபட்ட காலம் முதல் வரலாறுகளை கூறுகின்ற சபையாக மாற்றப்பட வேண்டும். வெறுமனே பதவிக்கும் தனிப்பட்ட நபர்களின் செல்வாக்குகளக்காகவும் வடமாகாண சபை அமையக் கூடாது. மாகாண சபைக்குரிய கட்டடம் கூட மாங்குளத்தில் அல்லது முல்லைத்தீவில் அமைய வேண்டும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் யாழ்ப்பாணம் கைதடியில் அந்த செயலக கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

குடிதண்ணீர் பிரச்சினை காரணமாக மாங்குளத்தில் அமைக்க  முடியவில்லை என தமிழத் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் காரணம் கூறுகின்றனர். குடிதண்ணீர் வசதியில்லாத அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சர்வதேச விமான நிலையம், துறைமுகம், விளையாட்டு மைதானம் அமைக்க முடியும் என்றால் ஏன் மாங்குளத்தில் வடமாகாண சபையின் கட்டடத்தை அமைக்க முடியாது? 1982 ஆம் ஆண்டு ஸ்ரீ ஜயவர்த்தனபுரத்தில் பாராளுமன்ற கட்டடத்தை முன்னாள் ஜனாதிபதி அமரர் ஜேர் ஆர் ஜயவர்த்தன அமைத்த போது அந்த பிரதேசத்தில் குடிநீர் வசதி இருந்ததா? சேறும் சகதியுமாக இருந்த அந்த பிரதேசத்தில் நாடாளுமன்ற கட்டடம் அமைக்கப்பட்டு இன்று ஸ்ரீ ஜயவர்த்தனபுர இலங்கையின் நிர்வாக நகரமாக மாறியுள்ளது. அரசாங்கம், நிர்வாக கட்டடம் ஒன்றை அமைத்தால் வசதி வாய்புக்களை ஏற்படுத்துவது இலாகுவானது என்பதற்கு இது ஒரு உதராணம்.

சம்பிரயதாய நிகழ்வு அல்ல

வடமாகாண சபையின் நிர்வாக கட்டடத்தை மாங்குளத்தில் அமைத்தால் அந்த பிரதேசம் வளர்ச்சியடையும். அங்கு மக்களும் குடியேறுவார்கள் மக்களின் வாழ்க்கைத்தரமும் உயர்வடையும். இல்லையேல் யாழ்ப்பாணம் மட்டும் வளர்ச்சியடையும் ஏனைய மாவட்டங்களில் சிங்கள குடியேற்றங்கள் இலகுவாக நடைபெற அது வாய்ப்பாகவம் அமைந்துவிடும். முதல்நாள் அமர்வில் தமிழத்தேசியம் அது இது என்று அர்த்தமற்ற வார்த்தைகளினால் மட்டும் உணர்ச்சி பூர்வமாக தமது கருத்துக்களை வெளியிட்ட உறுப்பினர்கள் மேற்கூறிய இந்த விடயங்கள் தொடர்பாக தொட்டிருக்க வேண்டும்.

முதல்நாள் அமர்வில் இந்த விடயங்களை பேசக்கூடாது இது சம்பிரதாய பூர்வ நிகழ்வு என்று கூறி தவிர்ப்பதற்கு இந்த மாகாண சபை தமிழ்களுக்கு கிடைத்த ஆட்சி அதிகாரமல்ல. வரப்பிரசாதமும் கிடையாது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியின் பின்னரான ஒரு கட்டாய அரசியல் சூழல்தான் இந்த மாகாண சபை. ஆகவே குறைந்த பட்சம் இந்த விடயங்களை கூறுகின்போது ஒரு நியாயப்பாடு வெளிப்படும்.

தமிழத்தேசியம் என்றால் என்ன?

மக்களின் வாக்குகளை மாத்திரம் கருத்தில் கொண்டு தமிழ்த்தேசிய பேசும் உறுப்பினர்கள்; தமிழத்தேசியத்துக்கு எதிரானவர்கள் என்ற முடிவுக்கு வரலாம். இலங்கையின் அரசியலமைப்புக்கு வெளியில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதுதான் தமிழத்தேசியத்தின் அடிப்படை. இலங்கையின் அரசியலமைப்பும்-- சட்டங்களும் தமிழர்களின் அபிலாiஷகளுக்கு எதிரானவை என்பதை தமிழத்தேசிய கோட்பாடு எடுத்துக்காட்டுகின்றது.

ஆகவே 'தமிழத் தேசியம்' என்பதன் அர்த்தம் புரியாமல் 'தேசியம்' என்ற கோட்பாட்டின் உள்ளடக்கத்தை அறியாமல் வடக்கு கிழக்கு மாகாண சபைகளில் அங்கம் வகிக்கும் தமிழ் உறுப்பினர்கள் தமிழத்தேசியம் பேசுகின்றனர். போரின் பக்கவிளைவுகளினால் ஏற்பட்ட பாதிப்புகள், அரசியலமைப்பு சட்டங்களில் உள்ள பௌத்த தேசியவாத சிந்தனைகள், சிங்கள அரசியல் தலைவர்களின் செயற்பாடுகள் போன்றவற்றை வரலாறுகளுடன் இராஜதந்திர மொழியில் வெளிப்படுத்துங்கள், தமிழத் தலைவர்கள் விட்ட தவறுகளையும் மீட்டிப் பாருங்கள். நீங்கள் நினைக்கின்ற தமிழத்தேசியம் அல்லது சுயநிர்ணய ஆட்சிக்கான ஒரு தேவை அப்போது உணரப்படும்.
 
 
 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98196/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.