Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

களம் பற்றிய கருத்துக்கள்

தாத்தாவை மீண்டும் கருத்துகளத்திற்கு அனுமதிக்கலாமா ? 12 members have voted

  1. 1.

    • இல்லை
      5
    • ஆம்
      7

Please sign in or register to vote in this poll.

Featured Replies

களத்தில் அனைத்து விபரங்களையும் தமிழில் மாற்றும் முயற்சி நடைபெறுகின்றது போல் இருக்கின்றது. வாழ்த்துக்கள், ஆங்கிலத்தை தமிழில் மாற்றும்போது அனைவரும் அறிந்த தமிழ் சொற்களை பயன்படுத்தினால் நல்லது என்று எண்ணுகின்றேன்.
  • Replies 62
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

களத்தில் எனது பெயரையும் மறைவுசொல்லையும் அழுத்தி உள்நுழைய முன்பு அனைத்தும் தமிழில் தெரிகின்றது. உள்ளே சென்றபின்பு பழையபடி ஆங்கிலத்துக்கு மாறிவிடுகின்றது. அது ஏன்?

  • தொடங்கியவர்

களத்தில் கோப்புக்கள் சில மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தவறுகளை சுட்டிக்காட்டவும். அல்லது பொருந்தாத சொற்களை எப்படி மாற்றி அமைக்கலாம் என்று தெரிவிக்கவும்.

இங்கு சென்று உங்கள் மொழியை மாற்றிக்கொள்ளலாம்http://www.yarl.com/forum/profile.php?mode...sub=prefer&

தகவலுக்கு நன்றி. profile க்கு சென்று மொழியை ஆங்கிலத்தில் இருந்து தமிழ் என்று மாற்றிய பின்பு அனைத்தும் தமிழில் தெரிகின்றது.

எங்கும் தமிழ்

எல்லாம் தமிழ்

கண்ணுக்குள் ஓர் வெளிச்சம

நன்றி மோகன் அண்ணா

மிகமிக அழகாக இருக்கின்றது

சில சொற்கள் அகராதி பார்க்கவேண்டி இருக்கின்றது அவற்றை இலகுதமிழில் போட்டுவிட்டால் இன்னும் அழகாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேமதுரத் தமிழோசை உலகெங்கும் கேட்கும் வகை செய்யும் முதற்படியாக இணைய உலகில்

யாழ் இணையம் சிறகை விரித்துள்ளது

விரைவில் வானம் வசப்படும்

நன்றிகள் பலகோடி மோகன்,யாழ்,மற்றும் மட்டுறுத்துனர் சகோதரர்களே இந்த தமிழாக்கத்திற்கு முன்னின்று உழைத்தவர்கள் யார் என்று தெரியவில்லை சிறப்பான நன்றிகள் அவருக்கு

தமிழ் நடை இலகு படுத்தலில் களத்தின் அறிஞர்கள் நிச்சயம் உதவுவார்கள் என்னாலியன்ற உதவி செய்ய நானும் தயார்...

.... இந்த தமிழாக்கத்திற்கு முன்னின்று உழைத்தவர்கள் யார் என்று தெரியவில்லை சிறப்பான நன்றிகள் அவருக்கு

தமிழ் நடை இலகு படுத்தலில் களத்தின் அறிஞர்கள் நிச்சயம் உதவுவார்கள் என்னாலியன்ற உதவி செய்ய நானும் தயார்...

நன்றி ஈழவன், இந்தத் தமிழாக்கத்திற்கு முன்னின்று உழைத்தவர் இளங்கோ அவர்களே.

மேலும் இங்கு சில சொற்பிழைகள் இருக்கலாம். சில சொற்கள் சரியாக இருந்தாலும் அதற்கு ஈடான வேறு சொற்கள் பாவித்தால் நல்லது என கருதலாம். மேலும் சில சொற்கள் மாற்றப்படாது உள்ளன. இவை அனைத்திற்கும் உங்கள் அனைவரது உதவிகள் தேவைப்படுகின்றன. சரியான சொற்களை அடையாளம் கண்டு எமக்கு அறியத்தந்தால் கூடியவரை தமிழுக்கு மாற்றிவிடமுடியும்.

நன்றி

யாழ்வையை முற்றும் தமிழ்ப்படுத்தும் செயலை பெரிதும் வரவேற்கின்றேன் .மகிழ்ச்சியும்,நன்றியும் போற்றுதலும் உரித்தாகுக.

கீழ்க்காணும் பதங்களை பார்வைக்கு வைக்கின்றேன்,

அவை பொருளடக்கம்=forum index

முகப்பு=home

திரட்டு=album

அண்மைக்கருத்துகள்=recent topics

தரநிலை,படிநிலை,மதிப்பிடம்=rank

பதிக்க=register

புது(வேறு) கருத்து வரைய=new topic

மறுமொழி வரைய=post reply

கருத்துரை=comment

பொழிலருடன் இணைந்து....

Nick page...துணைப்பக்கம்

என்பதையும் நாமும் உங்கள் பார்வைக்குத் தருகின்றோம்...!

அழகு தமிழாள் அழகிங்கு

ஆள அருமைகள் அமைத்திட்ட

அரும் கள உறவுகளுக்கு

நம் பாராட்டுக்கள்...!

:twisted: :P

யாழ்வையை முற்றும் தமிழ்ப்படுத்தும் செயலை பெரிதும் வரவேற்கின்றேன் .மகிழ்ச்சியும்,நன்றியும் போற்றுதலும் உரித்தாகுக.

கீழ்க்காணும் பதங்களை பார்வைக்கு வைக்கின்றேன்,

அவை பொருளடக்கம்=forum index

முகப்பு=home

திரட்டு=album

அண்மைக்கருத்துகள்=recent topics

தரநிலை,படிநிலை,மதிப்பிடம்=rank

பதிக்க=register

புது(வேறு) கருத்து வரைய=new topic

மறுமொழி வரைய=post reply

கருத்துரை=comment

உங்கள் கருத்து கவனத்தில் எடுக்கிறேன் பொழில்

ஆனாலும் சில சிக்கல்கள் உள்ளன

தமிழ் எழுத்துக்களை image இல் எழுதுவது சுலபமானது அல்ல எனவே மிக சிறிய சொற்களாக தெரிவு செய்ய வேண்டியுள்ளது.

எனவே நீங்க குறிப்பிட்ட

மறுமொழி வரைய=post reply

புது(வேறு) கருத்து வரைய=new topic

மாற்றம் செய்யமுடியாது.

மற்றும் நீங்கள் குறிப்பிட்ட

அண்மைக்கருத்துகள்=recent topics க்கு சமீபவிடயங்கள் என்றும் முகப்பு=home க்கு மனை என்றும்

அவை பொருளடக்கம்=forum index க்கு களப்பிரிவுகள், பொருளடக்கம் என்றும்

எழுதியுள்ளேன். இங்கு நான் தனியே ஆங்கிலத்திற்கான மொழிபெயர்பாக எழுதவில்லை. மாறாக என்ன கருத்தை வெளிப்படுத்துகிறது என்பதை வைத்தே எழுதினேன். ஏனெனில் நான் dutch மொழியினை அடிப்படையாக வைத்தே எழுதினேன். இத்துடன் சிறிய சொற்களாகவும் எழுதவேண்டியுள்ளது.

மற்றும் நீங்கள் கூறிய இச்சொற்களை மிகவிரைவில் மாற்றுகிறேன்.

திரட்டு=album

தரநிலை,படிநிலை,மதிப்பிடம்=rank

சில சொற்கள் அகராதி பார்க்கவேண்டி இருக்கின்றது அவற்றை இலகுதமிழில் போட்டுவிட்டால் இன்னும் அழகாக இருக்கும்.

நன்றி பரணி

அவற்றைக்குறிப்பிட்ால் கவனத்தில் எடுக்க உதவியாக இருக்கும்.

தமிழ் நடை இலகு படுத்தலில் களத்தின் அறிஞர்கள் நிச்சயம் உதவுவார்கள் என்னாலியன்ற உதவி செய்ய நானும் தயார்...

நிட்சயம் பலரின் உதவி தேவைப்படுகிறது Eelavan.

மொழிமாற்றம் செய்வதில் பெரியளவில் சிக்கல்கள் இருக்கவில்லை.

எப்படி மொழிமாற்றம் செய்வது என்பதிலேயே ஆரம்பத்தில் பிரச்சினை இருந்தது. ஏனெனில் unicode எழுத்துக்களை நேரடியாக மொழிபெயர்ப்பு கோப்புக்குள் புகுத்தமுடியாது அதனை இந்த forum க்கான script ஏற்றுக்கொள்ளாது. பல முயற்சிகளின் பின் இலக்ககோட் கள் மூலம் செய்யலாம் என்பதை அறிந்து கொண்டேன். ஆனாலும் அதற்கான converter கள் இல்லாததினால் phpbbforum ஐயே converter ஆக பயன்படுத்தினேன். அதற்குப்பிறகும் ஒரு சிக்கல் இருந்தது.

forum இல் எங்கெல்லாம் java script இருக்கிறதோ அங்கெல்லாம் decimal code ஐ unicode க்கு மாற்ற மறுத்தது. சில நாட்களாக மண்டையை போட்டு உடைத்தும் ஒன்றும் பிடிபடவில்லை.

யார் uft-8 பாவிக்கறார்கள் அவர்கள் எப்படி செய்திருக்கிறார்கள் என்று முயற்சித்தேன். தழிழருக்குள் எவரும் phpbb க்கு unicodeதமிழ் பாவிக்கவில்லை. சீன நாட்டவர்களும் வியட்னாமியரும் அதனை பயன்படுத்துவதை அறிந்தேன். அவர்களின் மொழிக்கோப்புக்கள் .php ஆகா இருந்ததினால். அதனை உருவி எடுப்பதிலும் சிக்கல் இருந்தது.

அவர்களிடம் நேரடியாகவே கேட்டேன். முதலில் தரமறுத்தனர்.பின் எனது link ஐ கொடுத்துவிடயத்தை புரிய வைத்தேன் ஆனாலும் எப்படி மாற்றம் செய்வது என்பதை மட்டும் சொன்னார். அவரும் அரைகுறை ஆங்கிலம் நானும் அதே நிலை. எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனாலும் தேடும் முயற்சியை நான் கைவிடவில்லை. வியட்னாம் அல்லது சீனாக்காரனின் கோப்பு ஒன்றை எடுத்தால் விடயம் புரியும் என்று எண்ணிக்கொண்டு இருந்தேன். ஒரு முறை வியட்னாம்காரரின் forumக்கு சென்றபோது அவர்கள் மொழி அவர்களின் template இல் இருந்தது. மொழிக்கோப்புக்களை ஒரு தளத்திலிருந்து உருவுவதே சிக்கல் ஆனால் templates கோப்புகளை இலகுவாக உருவிவிடலாம். அதனை எனது forum இல் போட்டபோது அவர்களில் மொழியை எனது forum இல் காணமுடிந்தது.

அவர்கள் எழுதியதற்கு பின் நானும் தமிழில் உன்றை எழுதினேன்.

என்ன ஆச்சரியம் இவ்வளவு காலமும் script ஐ யும் குழப்பிய தமிழ் இப்போது வியட்னாம் மொழியுடன் எதுவித குழப்பமும் இன்றி தெரிகிறது. அதன் பின் வியட்னாம் சொல்லை ஒவ்வொரு எழுத்தாக பின்பக்கமாக அழித்துவிட்டு ஒவ்வொரு முறையும் பரீட்சித்து பார்த்தேன். வியட்னாம் எழுத்துக்கமுழுவதையும் அழித்துவிட்டு பார்த்தபோது மீண்டும் குழப்ப தொடங்கியது.

பலமுயற்சிகளின் பின் ஒன்றை அறியமுடிந்தது

கீழேயுள்ள



இடுவதன் மூலம் javascript ம் unicodeதமிழை ஆதரிக்கும் என்று.

unicode பற்றி எதையும் நான் படிக்காததினால் இவ்வளவு சுற்று சுற்றவேண்டியதாகிவிட்டது. ஆனால் இப்போது தான் தெரிகிறது பல இலகு வழிகள் உண்டு என்று.

இந்த கோப்பை மொழிபெயர்ப்பதற்கு நேரடியாக இல்லாதவிடத்திலும் எனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் சந்திரவதனாக்கா, மூனா , இளைஞன் போன்றவர்களே

நான் செய்ய வேண்டிய வேறு பல வேலைகளை இவர்கள் செய்து தந்ததினால். அந்த நேரத்தை இந்த மொழிபெயர்ப்புக்கு பயன்படுத்த கூடியதாக இருந்தது.

நான் lang_main கோப்பையும் வேறுசிலவற்றிலும் மட்டுமே மாற்றம் செய்தேன். ஆனாலும் இன்னும் பல கோப்புக்கள் மாற்றம் செய்யவேண்டும்.

நேரமுள்ளவர்களும் ஆர்வமுள்ளவர்களும் முயன்றால் அனைத்தையும் மாற்றமுடியும்.

Nick page இல் நான் கையே வைக்கவில்லை.

குருவிகள் அதனை செய்ய வந்ததையிட்டு மகிழ்ச்சி

உங்கள்சேவையைகண்டு,ஆராட்ச்சி

மற்றும் முகப்பில் முன்போலவே கருத்தாடுவோர் கருத்து தலையங்கம் போடுவதால் புதிய கருத்தாடுபவரை என்னம் ஊக்குவிக்கும் என எண்ணுகிறேன்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நண்பர் இளங்கோ மற்றும் மோகன் அண்ணா

களத்தில் ஏற்பட்ட மலர்ச்சி பற்றிய எனது பார்வையைத் தருகின்றேன் இது ஏனைய உறுப்பினர்களுக்கும் புதிதாக வருபவர்களுக்கும் எவ்வாறு ஏற்புடையது எனப் பாருங்கள்

களத்தினைப் பார்வையிடுபவர்கள் இருவகையினர்

1) உறுப்பினர்கள்

2) விருந்தினர் அல்லது வாசகர்கள்

இவ் இருவகையினருள்ளும் தமிழில் நன்கு புலமை உள்ளவர்களும் உள்ளனர் ஓரளவு புலமை உள்ளவர்களும் உள்ளனர்

எனவே செய்யப்படும் மாற்றங்கள் இவ்விருவகையினரையும் கருத்தில் கொண்டே செய்யப்படல் வேண்டும் இல்லாவிடில் அதன் பயனை எட்டமுடியாது போய்விடும்

எனவே இலகு தமிழ் அல்லது ஓரளவு பாவனையில் உள்ள மொழிநடை அவசியம்

களத்தில் உறுப்பினர் ஆக உள்ள ஒருவர் தனது மொழியைத் தெரிவு செய்யமுடியும் தமிழ் அல்லது ஆங்கிலம் இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்யலாம்

ஆனால் விருந்தினர் முன்னே இருப்பது ஒரே ஒரு தெரிவு தமிழ் மட்டுமே எனவே அவர்களும் இதன் மூலம் பயன் பெறுவதற்கு கையாளப்படும் மொழிப்பிரயோகம் இலகுவானதாக இருத்தல் வேண்டும்

இந்த வகையில் களத்தில் புதிதாக உள்நுழைபவர்களுக்கும் விளங்கும் வகையில் Register என்பது ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளது இதனை உறுப்பினராகப் பதிவு செய்ய அல்லது களத்தில் இணைய என்று மாற்றலாம் ஆயினும் புதிதாக வருபவர்களுக்கு விளங்கும் வகையில் அதனை ஆங்கிலத்தில் தருவதே நல்லது

அதே போன்று இணைப்பில் என்னும் தரவில் விருந்தினர்,மறைவிலுள்ளவர்கள

போன்று இணைப்பில் என்னும் தரவில் விருந்தினர்,மறைவிலுள்ளவர்கள

ஆங்கில குறிப்புகளுக்கு இணையாக தமிழை மாற்றாது கருத்தின் பொருள் உணர்நது தமிழாக மாற்றுவதே சிறந்தது.

அந்த விதத்தில் பல சொற்கள் பொருந்தியுள்ளன.

சில தமிழ் செற்களை புரிந்துகொள்ள நேரம் எடுக்கிறது.எனினும் இது பழக்கத்திற்கு வர சரியாகிவிடும்.

மிக விரைவில் பிஏச்பி முழுமையாக தமிழில் தர வாழ்த்துக்கள்.

மிக முக்கியமான பாராட்டுக்கள் பட்டன் இமேஜ் மிக சிறப்பாக மாற்றியது தெரியாமல் தமிழில் மாற்றியுள்ளீர்கள்

புது வருசத்தில களம் புதுப்பொலிவோடை இருக்கு.

மாறுதல்கள் மனசுக்கு மகிழ்வாக இருக்கு.

இன்னும் இன்னும் யாழ் தளம் சிறப்பாக வளர மனதார வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி இளங்கோ

அருமையான விளக்கம் முதலில் எனக்கும் குழப்பம் ஆகத் தானிருந்தது எப்படியாக மொழி பெயர்க்கலாம் என்று

கூடுமானவரை ஆங்கிலத்திலிருந்து நேரடியாக மொழிபெயர்க்காமல் செய்கைகளின் அடிப்படையில் பெயரிடுவதற்கு முயல்கிறீர்கள் நல்லதொரு முயற்சி

வெற்றி பெற வாழ்த்துக்கள் ஏதாவது சொற்கள் அலது ஆங்கிலப்பதங்களுக்கு மாற்றீடு தேவையானால் கேளுங்கள் எனது கருத்தையும் சொல்கிறேன்

மீண்டும் நன்றி

உங்கள் அரிய முயற்சிக்கு

முயற்சி திருவினை ஆக்கும்

யாழ் களத்தின் புதுப்பொலிவு கண்டு மகிழ்ந்தேன்.இதில் பங்கு கொண்ட யாவருக்கும் என் வாழ்த்துக்கள். பாராட்டுகள்.

முற்றும் தமிழாகிப்பொலியும் யாழ்முகப்பு முகர்ந்து முழுமகிழ்ச்சி.

முழுவெண்சட்டையில் கடுகன்ன கறையாய் எனக்கு படுவது இவையே,

அ. அஞ்சல்ப்பெட்டி- புணர்ச்சி பிழைதட்டிய இச்சொல்லை அஞ்சற்பெட்டி என்றோ அஞ்சல் பெட்டி என்றோ மாற்ற வேண்டும் என்பது என் அவா.

ஆ. register என்பதின் தமிழ்ப்பதம் அறியாதவர் யாழில் கால் பதித்தல் சிறப்பா?

இ. ஸ்தானம்-தமிழெழுத்தல்லாத ஒன்றை பெற்ற இப்பதம் தித்திக்கும் தமிழ் மீது துவளாத பற்று கொண்ட மனங்களை வருடுமா (அ) நெருடுமா?.

ஈ. சுயகுறிப்புக்கள்-இச்சொல்லையும் பரிசீலனைச் செய்க.

உ. உறுப்பினர்பட்டியல்- இங்கு வல்லெழுத்து மிகும்.

நன்றி பொழில்

அ. அஞ்சல்ப்பெட்டி- புணர்ச்சி பிழைதட்டிய இச்சொல்லை அஞ்சற்பெட்டி என்றோ அஞ்சல் பெட்டி என்றோ மாற்ற வேண்டும் என்பது என் அவா.

தவறைச்சுட்டியதற்கு நன்றி திருத்தவேண்டிய சொற்களுக்குள் இதுவும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆ. register என்பதின் தமிழ்ப்பதம் அறியாதவர் யாழில் கால் பதித்தல் சிறப்பா?

சிறப்பில்லை எனில் நானும் இங்கு வரமுடியாது.

இங்கு இருப்பவர்கள் பலர் தமிழையே சரியாக எழுத தெரியாதவர்கள் தான். நீங்கள் தமிழ் நாட்டில் இருப்பதால் அந்நிலை இல்லாமல் இருக்கலாம்.

இ. ஸ்தானம்-தமிழெழுத்தல்லாத ஒன்றை பெற்ற இப்பதம் தித்திக்கும் தமிழ் மீது துவளாத பற்று கொண்ட மனங்களை வருடுமா (அ) நெருடுமா?.

இதற்காான பதிலை ஏற்கனவே தந்துள்ளேன்.

(தரநிலை,படிநிலை,மதிப்பிடம்=rank ) இந்த சொல்லில் ஒன்றை சேர்த்துக்கொள்வதாக

ஈ. சுயகுறிப்புக்கள்-இச்சொல்லையும் பரிசீலனைச் செய்க.

என்ன தவறு என்று குறிப்பிடாமல் பரிசீலனை செய்யச்சொன்னால்.???

மாற்றப்படும் சொற்கள்.

வியாக்கியானம்->கருத்துரை=comment

ஸ்தானம்->தரநிலை,படிநிலை,மதிப்பிடம்=rank

அஞ்சல்ப்பெட்டி->அஞ்சற்பெட்டி

இணைப்பில் -> பார்வையாளர்

கருத்துரை என்பதை கருத்துக்கள் என்று சொல்லலாமா இளங்கோ

தரநிலை படிநிலை மதிப்பிடம் இது அதிகமான சொல்லாக இருக்கின்றது. இதைவிட வரிசை என்று சுருக்கநிலையில் கூறலாம். வரிசை என்பதன் அர்த்தம் மாறலாம். ஆனாலும் Rank என்பதற்கு வரிசை என்பதே சிறந்தது என்று நினைக்கின்றேன்.

Recent Topics என்பதனையும் மாற்றம் செய்யலாம்.

சமீபவிடயங்கள் என்பது சற்று நெருடலாக இருக்கின்றது.

  • தொடங்கியவர்

வணக்கம் இளங்கோ,

முதலில் யாழ் களத்தை முற்றாக தமிழில் மாற்றும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். மற்றும் ஆங்கில சொற்களை நீங்கள் செய்கையின் அடிப்படையில் மொழி பெயர்க்கும்போது பலரும் பலவிதமான கருத்துக்களை வெளியிடுவதை கவனித்தேன். அவை உங்களுக்கு சிரமமாக இருக்கலாம். அதனால் நீங்கள் மொழி பெயர்க்கும் அனைத்து ஆங்கில சொற்களையும் உங்களுடைய தமிழாக்கத்துடன் இங்கே வரிசைப்படுத்தி போட்டீர்கள் என்றால் அவற்றுக்கு யாழ் கள நண்பர்கள் தங்களுடைய கருத்துக்களை எழுதுவார்கள். அவற்றிலிருந்து இறுதியாக பொருத்தமான மொழிபெயர்ப்பு சொற்களை தேர்ந்தெடுக்கலாம். நீங்களும் அடிக்கடி சொற்களை மாற்றவேண்டியது இல்லை. இது எனது தனிப்பட்ட கருத்து.

Welcome to யாழ் இணையம் என்பதில் Welcome to மாற்றி தமிழில் போடலாமே !

யாழ் இணையத்திற்குள் அழைக்கின்றோம்

அல்லது

யாழ் இணையத்திற்குள் உங்களை வரவேற்கின்றோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.