Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவிலாறில் தண்ணி கேட்ட படையினருக்கு குடாநாட்டில் ~தண்ணி காட்

Featured Replies

மாவிலாறில் தண்ணி கேட்ட படையினருக்கு

குடாநாட்டில் ~தண்ணி காட்டும்| புலிகள்

-தெய்வீகன்-

கடந்த 2000 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி இரவு உதயன் பத்திரிகை தடைசெய்யப்பட்டு அங்கிருந்த நாம் அனைவரும் அலுவலகத்தின் வாயிலுக்கு அழைத்துவரப்பட்டோம். பத்திரிகை நிறுவனத்தின் ஒருவாசல் விடாமல் சீல்வைத்த பொலிஸார், விடியும் வரை எம்மை வாசலிலுள்ள பத்திரிகையின் நூலகத்தில் தங்கியிருந்துவிட்டு விடிந்ததும் வீடு செல்லும்படி கூறிச்சென்றனர். தடை செய்யப்பட்ட நிறுவனத்துக்கு தமது பொலிஸ் அணியொன்றை பாதுகாப்புக்கு விட்டுச்சென்றனர்.

அவ்வாறு பாதுகாப்புக்கு நின்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடன் விடியும் வரை நேரம் போவதற்கு கதைத்துக்கொண்டிருக்கையில் பதவி வழியாகவும் பணி ரீதியாகவும் அவர் தான் சார்ந்த படைக்கு விசுவாசமாக இருந்த போதும் தமிழர்களின் போராட்டம் குறித்த சரியான மதிப்பீடும் விடுதலைப் புலிகளின் போர்த்திறன் குறித்தும் செறிந்த வீரம் குறித்த வியப்பும் அவரிடம் காணப்பட்டதை உணரக்கூடியதாக இருந்தது. அவ்வாறு பேசிக்கொணடிருக்கையில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் திறன்கள் பற்றி கதைத்துவிட்டு ஆட்லறி ஏவுதிறன் பற்றி கூறினார்.

1gp5.jpg

'எங்கட ஆக்கள் சண்டையெண்டு வந்தவுடன வகை தொகையா ஆயுதங்களை பாவிக்கிறதில மன்னர்கள். குடுக்கிறத அப்படியே பொழிஞ்சு தள்ளுவினம். அது எங்க விழுகுது எத்தனை விழுகுது எண்டெல்லாம் கணக்கில்லை. புலிக்கெதிரா அடிக்கிறம் எண்டதில அவயளுக்கு ஒரு ஆத்ம திருப்தி. அவ்வளவுதான். ஆனால் புலி அடிச்சுதெண்டா அப்பிடியில்லை. உதாரணமா அவங்கள் ஒரு முகாமுக்கு ஆட்லறி அடிச்சா அளந்து அடிப்பாங்கள். ஒரு அடி வாசல் காப்பரணில விழும். மற்ற அடி முகாமிண்ட அலுவலகத்தில விழும். இன்னொரு அடி முகாமுக்குள்ள இருக்கிற சமயலறையில விழும். அவ்வாளவு தூரம் புலனாய்வு தகவல்களை சேகரிச்சு அதுக்கு ஏத்த மாதிரித்தான் அடிப்பாங்கள். எங்கட ஆக்கள் சுதாரிக்கிறத்துக்குள்ள அடி முடிஞ்சு எங்கடையில அரவாசிப்பேர் முடிஞ்சிருப்பினம்" என்று கண்களில் ஆச்சரியம் வழிய அதே நேரம் தமது படையினரின் நிலை குறித்து ஏளனத்துடன் பேசினார்.

படையினருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் புலிகளின் ஆட்லறி ஏவுதிறன் இன்று களத்தில் என்ன ஆட்டம் காட்டுகிறது என்று இதில் விரிவாக சொல்லத்தேவையில்லை. அவ்வப்போது சமர்க்களங்களில் சாதனைகளை படைத்து வந்த புலிகளின் ஆட்லறிகள் இன்று தமிழீழத்தை புலிகள் மறைமுகமாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள் என்ற இராணுவ ரீதியான உண்மைக்கு வலுச்சேர்த்திருக்கிறது. வடக்கில் பலாலியும் கிழக்கில் திருகோணமலை படைத்தளமும் புலிகளின் ஆட்லறி எல்லைக்குள் இருக்கும்வரை வடக்கு-கிழக்கில் சிறிலங்காப் படையினரின் இருப்பு என்பது ஒப்புக்கு சப்பாணி என்ற கதைதான். விடுதலைப் புலிகளோ தமது செயற்றிறனை களநிலைக்கேற்ப கனகச்சிதமான முன்னெடுத்து வருகிறார்கள்.

பல நாடுகளினதும் பயிற்சி பெற்ற சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைகளை எதிர்கொள்ளும் புலிகளின் இராணுவ வளர்ச்சி என்பது மாவிலாறில் ஆமி அடித்தவுடன் திருப்பி அடித்ததில் வந்ததோ அல்லது தென்னிலங்கையில்ல கூவுவதை போல புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர் கிடைக்கப்பெற்ற இடைக்கால யுத்த ஓய்வில் பெற்றுக்கொண்டதோ அல்ல. அது வீரவரலாறு. எதிலும் தீராத முயற்சி. கிடைக்கும் வளங்களை வைத்து உச்சப்பயனை பெறும் அதீத உழைப்பு. வரைவிலக்கணங்களுக்குள் அடங்கும் சம்பிரதாய சாதனைகளை உடைத்தெறியும் நுட்பம் எனப்பல.

2tl2.jpg

உதாரணத்துக்கு இன்று எதிரியின் கண்ணில் வரலை விட்டு ஆட்டும் புலிகளின் ஆட்லறி பலத்தை எடுத்துக்கொண்டால் அதன் மூலம் இன்று அவர்கள் அடைந்துள்ள வெற்றி என்பது பிரமிக்கத்தக்கது.

1996 இல் முல்லைத்தீவு தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்திடமிருந்து 900 செல்களுடன் சேர்த்து கைப்பற்றிய இரண்டு 122 மில்லி மீற்றர் ரக ஆட்லறிகள்தான் விடுதலைப் புலிகளுக்கு கிடைத்த முதலாவது ஆட்லறி. அதன் பின்னர் மட்டக்களப்பு புலுக்குனாவையில் அதே ஆண்டு பிற்பகுதியில் 85 மில்லி மீற்றர் ரக ஆட்லறி ஒன்று கைப்பற்றப்பட்டது. எதிரியிடம் கைப்பற்றப்பட்ட இந்த மூன்று ஆட்லறிகளையும் வைத்துக்கொண்டு அதன் ஏவுதிறன் பற்றி கற்று அதனை எவ்வாறு களத்தில் பயன்படுத்துவது. எவ்வளவு சிக்கனமாக அதனை பயன்படுத்துவது போன்ற விடயங்களை தெரிந்து 1997 இல் வவுனியா சிறிலங்கா இராணுவ முகாம் மீதான தாக்குதல் ஒன்றில் முதன் முதலாக ஆட்லறியை பயன்படுத்தினர். அப்போதான் புலிகளிடம் ஆட்லறி இருக்கும் விடயம் படையினருக்கும் வெளிஉலகுக்கும் தெரியவந்தது.

ஏதிரியிடம் கைப்பற்றிய இந்த மூன்று ஆட்லறிகள் மட்டும்தான்; வன்னிக்குள் ஆழக்கால் பதித்த சிறிலங்கா இராணுவத்தின் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கைக்கு எதிராக பயன்படுத்தப்பட்டன என்பதையும் ஏ-9 பாதையை கைப்பற்ற வந்த இராணுவம் அதே பாதையால் பின்வாங்கி ஓடுவதற்கு புலிகளின் இந்த ஆட்லறிகளும்தான் கணிசமான பங்குவகித்தன என்றால் உலகின் எந்த இராணுவ விமர்சகரும் நம்பமாட்டார்கள். ஆனால் புலிகள் அதனை செய்தார்கள். செய்து காட்டினார்கள்.

இதன்பின்னர் 2000 ஆம் ஆண்டு புலிகளின் வீரத்துக்கு வாகை சூடிய ஆனையிறவு பெருந்தள மீட்பு சமரின்போது அங்கிருந்து 122 மில்லி மீற்றர் ரக ஆட்லறிகள் இரண்டும் 152 மில்லி மீற்றர் ரக ஆட்லறிகள் மூன்றும் புலிகளால் கைப்பற்றப்பட்டன. ஆனையிறவு தாக்குதலின்போது பின்வாங்கிச்சென்ற படையினரின் ஒரு அணி 122 மில்லி மீற்றர் ஆட்லறி ஒன்றை வாகனத்தில் கட்டியிழுத்துக்கொண்டு கிளாலி கடற்கரை வீதியால் ஓடியது. இதைக்கண்ட புலிகளின் விக்டர் கவச எதிர்ப்பு அணி ஒன்று அவர்களை கலைத்துச்சென்று கட்டியிழுத்துச்சென்ற வாகனத்தை தாக்கி கூடச்சென்ற படையினர் மீது தாக்குதல் நடத்தி அந்த ஆட்லறியை மீட்டனர். (கீழுள்ள படத்தில் அந்த ஆட்லறியையும் மீட்ட அணியினரையும் காணலாம்.)

4md5.jpg

இதனுடன் புலிகளின் ஆட்லறி வலு மடங்குகாகியது. சாதரணமாக பல ஆட்லறிகளை களத்தில் வைத்து சாதிக்கக்கூடிய சாதனையை ஒரு ஆட்லறியை வைத்து நிலைநாட்டக்கூடிய திறனை புலிகள் பெற்றுக்கொண்டனர். இதில் சிறிலங்காப் படையினர் புலிகளை நெருங்கவே முடியவில்லை. உதாரணமாக ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின்போது படையினர் ஏவிய ஆட்லறிகள் அரைவாசிக்கு மேல் இலக்குத்தவறி வயல்களுக்குள்ளும் விவசாய நிலங்களுக்கும் விழுந்து அப்பாவி மக்களின் உயிர்களை காவுகொண்டனவே தவிர புலிகளின் நிலைகளை தாக்கியவை மிகச்சொற்பமே.

ஓயாத அலைகள் - 3 நடவடிக்கை புலிகளின் ஆட்லறி வலுவின் ஒரு புதிய பாய்ச்சல் என்று கூறலாம். ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையில் நேரடி மோதல்கள் அதிகம் இடம்பெறாததால் புலிகளின் ஆட்லறியே படையினருக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியது. படையினரின் வௌ;வேறு நிலைகளை ஏக காலத்தில் ஆட்லறிகளை கொண்டு தாக்கும் புதிய வலுவை ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையின்போது புலிகள் வெளிப்படுத்தியிருந்தனர். ஒரே பெயரிலான படை நடவடிக்கையென்றாலும் அதன் தாக்குதல் எங்கெங்கு நடைபெறுகிறதோ அங்கெல்லாம் ஆட்லறி கொண்டு தாக்கும் அந்த திறனை புலிகளிடம் எதிர்நோக்கிய படையினர் சிக்கி திணறுண்டு போயினர். (கனகராயன் குளத்தில் ஆட்லறிகொண்டு புலிகள் நடத்திய சங்காரத்தில் படையினர் அடைந்த இழப்பு ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையில் கோடிட்டுக்காட்டப்படவேண்டிய

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுரையிற் சில தவறுகளுண்டு. சம்பந்தப்பட்டவர்க்குச் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள்.

கிளாலிக் கரையில் தப்பியோடும்போது கைப்பற்றப்பட்ட ஆட்லறி 152 மி.மீ ஆட்லறி.

குட்டிசிறி படையணி மோட்டார்களுக்கானது. கிட்டுப்படையணிதான் ஆட்லறிகளுக்கானது. கட்டுரையாசிரியர் இரண்டையும் ஆட்லறியோடு சம்பந்தப்படுத்தியுள்ளார்.

வவுனியாவில் புலிகள் நடத்த்திய முதல் ஆட்லறித்தாக்குதலோடுதான் இராணுவத்துக்கும் உலகத்துக்கும் புலிகளிடம் ஆட்லறி இருப்பது தெரியவந்தது என்ற கருத்து பொருத்தமன்று.

ரத்வத்த பொய் சொன்னாலும் தகவல்கள் வெளியேறின. தப்பியோடின இராணுவத்தினன் சொன்ன வாக்குமூலம் முக்கியம். அதைவிட புலிகளின் வீடியோப்பிரச்சாரம் நன்றாக நடந்தது. ரத்வத்தவின் கூற்றை இராணுவத்தினரே நம்பியிருக்க மாட்டார்கள்.

---------------------------------------------------------

மற்றும்படி நல்ல கட்டுரை. புலிகளின் பல்குழல் பீரங்கி பற்றியும் எழுதியிருக்கவேண்டும். தள்ளாடி முகாமுக்கு அவர்கள் ஏற்படுத்திய பலத்த சேதம் முக்கியமானது. இலங்கை அரசபடைக்கு அப்பீரங்கியை அறிமுகப்படுத்தியதே புலிகள்தாம். பல்குழற்பீரங்கிபற்றிச் சொல்லாமல் ஆட்லறி பற்றிய கட்டுரை முழுமையடையாதல்லவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.