Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரன்-கொரிய தூதுவர் இன்று சந்திப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

CV60_60(2).jpg
-கெலும் பண்டார

இலங்கைக்கான கொரிய தூதுவர் ஜோன்-மூன் சோய் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவிருக்கின்றார்.

 

இவ்விஜயத்தின் போது யாழ். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை காலை 10.30 மணியளவில் சந்திக்கவுள்ளதாக தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

தூதுவர் வடக்கின் நிலவரம் குறித்தும் குறிப்பாக வடபகுதி மக்களின் வாழ்க்கை தரம் குறித்தும் கவனம் செலுத்துவார் எனவும் பேச்சாளர் கூறினார்.

நடந்து முடிந்த வட மாகாண சபை தேர்தல் தொடர்பாகவும் அவர் கலந்துரையாட உள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

கொரியாவினூடாக சிறந்த தோயனுட்ப்ப பயிற்சிகளை பெறுவதற்கு இந்த சந்திப்பில் முதல்வர் ஆவணை செய்ய வேண்டும்

விக்னேஸ்வரன்-கொரிய தூதுவர் இன்று சந்திப்பு

CV60_60%282%29.jpg-கெலும் பண்டார

இலங்கைக்கான கொரிய தூதுவர் ஜோன்-மூன் சோய் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவிருக்கின்றார்.

 

இவ்விஜயத்தின் போது யாழ். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை காலை 10.30 மணியளவில் சந்திக்கவுள்ளதாக தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

தூதுவர் வடக்கின் நிலவரம் குறித்தும் குறிப்பாக வடபகுதி மக்களின் வாழ்க்கை தரம் குறித்தும் கவனம் செலுத்துவார் எனவும் பேச்சாளர் கூறினார்.

நடந்து முடிந்த வட மாகாண சபை தேர்தல் தொடர்பாகவும் அவர் கலந்துரையாட உள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

      வலி. வடக்கு விவகாரம் உள்நாட்டு பிரச்சினையாகும்: அமெரிக்க தூதுவர்

 

DSC_0040%283%29.JPG

-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

வலி. வடக்கு விவகாரம் உள்நாட்டு பிரச்சினை என்பதால் கருத்து கூற முடியாது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சல் ஜே. சிசன் தெரிவித்தார்.

அமெரிக்க தூதுவர் மிச்சல் ஜே. சிசன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது.

இதன் பின்னர் அமெரிக்க தூதுவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அதன்போது வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள பொதுமக்களின் வீடுகள் இராணுவத்தினரால் உடைக்கப்படுகின்றமை தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் அமெரிக்க தூதுவரிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு கருத்துத் தெரிவித்த தூதுவர், "இந்த பிரச்சினை உள்நாட்டு அரசாங்கத்தின் பிரச்சினையாகும். இது தொடர்பாக நான் எதுவித கருத்துக்களையும் கூறமுடியாது" என்றார். அங்கு தொடந்து கருத்து வெளியிட்ட அமெரிக்க தூதுவர்,

"யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 5,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கு அமெரிக்காவினால் உதவிகள் மேற்கொள்ளப்படும். வட மாகாணத்தில் வாழும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அமெரிக்க மக்கள் அவதானித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அத்துடன், வட மாகாணத்தில் முதன்முறையாக முதலமைச்சர் தெரிவுசெய்யப்பட்டமை சந்தோசமளிக்கின்றது. வட பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான உதவிகளினை அமெரிக்க அரசாங்கம்  வழங்கும்" என்றார்.

இதேவேளை, வலி. வடக்கு வீடுகள் உடைப்பு பிரச்சினை தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தியுள்ளார் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு பெற்றுக்கொள்ளப்படும்  எனவும் அவர் குறிப்பிட்டார்.

DSC_0028%281%29.JPG

DSC_0037%285%29.JPG

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.