Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு மாநாடு : காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு தீர்மானம் இன்று முடிவுக்கு வந்தது? அனுமதி வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

Featured Replies

CHOGM-India.jpgகொழும்பு மாநாட்டில் பங்கேற்பது குறித்து இந்திய காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் நேற்று புதுடெல்லிடியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

எனினும், இந்தச் சந்திப்பில் எவ்வித உடன்பாடுகளும் எட்டப்படவில்லையென இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் இந்தியா காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் சல்மன் குர்திஷ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் கலந்துகொண்டதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

இதன்போது கொழும்பு மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் எனவும் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், தமிழக கட்சிகளின் எதிர்ப்புகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

சுமார் ஒன்றரை மணி நேரம் இந்தக் கலந்துரையாடல் நீடித்த போதிலும் இறுதியில் எவ்விதத் தீர்மானமும் எட்டப்படவில்லையென இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கொழும்பு மாநாட்டில் பங்கேற்பது குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தீர்மானிப்பார் என மத்திய அமைச்சர் ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

எனினும், பிரதமர் மன்மோகன் சிங் கொழும்பு மாநாட்டைப் புறக்கணிப்பதானது இலங்கையுடனான இராஜதந்திர விரிசலை ஏற்படுத்தும் என்ற காரணத்திலும், கலந்துகொள்வது அடுத்த வருடம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனாலும் காங்கிரஸ் கட்சி கொழும்பு மாநாடு குறித்து ஆழமாக ஆராய்ந்து வருவதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கொழும்பு மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்க காங்கிரஸ் உயர்நிலைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக மற்றுமொரு தகவலும் வெளியாகியுள்ளது. எனினும், இந்ததத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

பொதுநலவாய மாநாட்டை பல நாடுகள் தொடர்புடைய சர்வதேச விவகாரமாக அணுக வேண்டுமென்றும், இதை இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையேயான பிரச்சியைாக கருத கூடாதென்றும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துளு;ளன.

சர்வதேச விவகாரங்களில் இந்தியாவிற்கென விசேடக் கொள்கை உள்ளதாகவும், அதனை தொடர்ந்தும் கடைபிடிக்க வேண்டுமென்றும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன.

http://tamilworldtoday.com/home

யாழ். வருமாறு மன்மோகனுக்கு சி.வி. அழைப்பு

 

CV60_60%283%29.jpgநவம்பரில் நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வருகைதந்தால் யாழ்ப்பாணத்திற்கும் வருகைதந்து அங்குள்ள நிலைமைகளையும் அவதானிக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.
tamilmirror

மாநாட்டில் பங்கேற்க மன்மோகன் விருப்பம்: அறிக்கை

கொழும்பில் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கின்ற  பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் விரும்புவதாக த டைம்ஸ் ஒப் இந்தியா அறிக்கையிட்டுள்ளது.

அயல்நாட்டுடன் தொடர்பிலிருப்பது இந்தியாவின் கேந்திர நலனுக்கு முக்கியமானது என்பதைக் கருத்தில் கொண்டே இவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அடங்கிய கட்சியின் மத்திய குழுவுடன் பேசிய பின் இலங்கைக்கு வரும் தீர்மானம் கூடுதல் வலுப்பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு அப்பால் இலங்கை அரசாங்கத்துடன் முக்கிய செல்வாக்கை பேணுவதற்கு பிரதமர் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

ராஜபக்ஷ அரசாங்கத்துடன் தொடர்புகளை வைத்திருப்பதன் மூலமே இலங்கை அரசாங்கத்தின் நடத்தை மீது செல்வாக்கு செலுத்தவும் இதன் மூலம் தமிழர்களுக்கு நன்மை செய்யவும் முடியுமென இந்திய அரசாங்கம் சிந்திக்கின்றது.

மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை வராதிருப்பது இலங்கையை அவமதிப்பதாக கருதப்பட்டு இந்தியாவின் நல்லெண்ணத்தை கடுமையாக பாதிக்கலாமென இந்திய அரசாங்கம் கருதுகிறது.

இலங்கை அரசாங்கம் சீனா எனும் துரும்பு சீட்டை காட்டியுள்ளது. மாலைதீவுடன் நெருக்கடி தொடர்வதனால் கொழும்புடனான தொடர்பு மோசமடைவதை இந்திய விரும்பமாட்டாது என்றும் ளலாமென ரைம்ஸ் ஒப் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

 

tamilmirror

 

மன்மோகனுக்கு கருணாநிதி எச்சரிக்கை

 

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றால் அதன் விளைவை காங்கிரஸ் கட்சி சந்திக்க நேரிடும்' என்று தி.மு.க தலைவர் மு.கருணாநிதி எச்சரித்துள்ளார்.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கருணாநிதி, 'இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய  மாநாட்டில் இந்தியா சார்பில் ஒரு துரும்பும் பங்கேற்கக் கூடாது' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

'தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் எதிர்ப்பை மீறி பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை மாநாட்டில் கலந்து கொண்டால், அதன் பலன்களை காங்கிரஸ் கட்சி அனுபவிக்க நேரிடும்' என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 

tamilmirror

 

 

 

பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கும் முடிவை காங்கிரஸ் உடனே திரும்பப் பெற வேண்டும் : திருமாவளவன்   பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதாக காங்கிரஸ் உயர்மட்டக் குழு எடுத்துள்ள முடிவு உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்திய அரசு பங்கேற்கக் கூடாது என ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும் வலியுறுத்தி வருகிறது.

இது தொடர்பில் தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் உயர்மட்ட குழு பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்ற முடிவை எடுத்துள்ளது. இதுபெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

தி.மு.க. தலைவருக்கு பிரதமர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால், அதற்கு நேர்மாறான முடிவை காங்கிரஸ் உயர்மட்ட குழு எடுத்துள்ளது. இந்த முடிவை காங்கிரஸ் கட்சி திரும்பப்பெற வேண்டும். தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்.

இந்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டால் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்திக்கும்.

காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவை கண்டித்தும், இந்த முடிவை திரும்பப்பெறக் கோரியும் எதிர்வரும் 3 ஆம் திகதி எனது தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

கருணாநிதியின் பேச்சில் காங்கிரஸ் மீதான வாஞ்சை விட்டுப்போகவில்லை. கருணாநிதி கவனமாக நடந்தால் இந்த தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க வை கூட்டி அள்ளி கூடைக்குள் போடும் பணியை கைவிட முடியும். இனி ஒரு காலத்தில் யாராவது நல்ல தலைமை வந்தால் கட்சி மீளூம். ஆனால் அவரால் இனி காங்கிரசை தமிழ் நாட்டில் காப்பற்ற முடியாது.  அதை மறந்து விடட்டும்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.