Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானிய பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் - TNA

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானிய பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் - TNA
31 அக்டோபர் 2013


மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானிய பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பங்கேற்க உள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களின் மனித உரிமை நிலைமைகள் குறித்து விரிவான அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் கமரூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய ஏற்கனவே இணங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் கமரூனின் யாழ்ப்பாண விஜயத்திற்கான ஏற்பாடுகளை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்த போதிலும் வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். சில வெளிநாட்டு ராஜதந்திரிகள் ஏற்கனவே யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய விருப்பம் வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98335/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

DAVID_CAMERON.jpg

சிறிலங்காவின் வடக்கு, கிழக்கின் மனிதஉரிமைகள் நிலை தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரோனிடம் கையளிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க அடுத்த மாதம் சிறிலங்கா வரவுள்ள பிரித்தானியப் பிரதமர், வடக்குப் பகுதிக்கும் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் வரும் போது, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரோனைச் சந்தித்து, வடக்கு கிழக்கில் மனிதஉரிமைகள் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

“பிரித்தானியப் பிரதமர் வடக்கிற்கு பயணம் மேற்கொள்ளவும், இங்குள்ள நிலையை நேரில் காணவும் ஏற்கனவே விருப்பம் வெளியிட்டுள்ளார். 

அவரது யாழ்ப்பாண பயணத்துக்கான ஏற்பாடுகளை கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகம் மேற்கொண்டு வருகிறது.” என்றும் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

அதேவேளை, கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ள போதிலும், வெளிநாட்டு பிரதிநிதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

கொமன்வெல்த் மாநாட்டுக்கு வரவுள்ள பல வெளிநாட்டுப் பிரதிநிதிகள், வடக்கிற்கு பயணம் மேற்கொண்டு போருக்குப் பிந்திய நிலைமைகளை காண விருப்பம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20131031109347

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.