Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவின் முதலீட்டுடன் சிறிலங்காவின் தலைநகரில் கட்டப்படவுள்ள துறைமுக நகரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் தலைநகரான கொழும்பின் கடற்கரையில் 1.43 பில்லியன் அமெரிக்க டொலரில் கட்டப்படவுள்ள துறைமுக நகரத்தின் அபிவிருத்தித் திட்டமானது, வருகின்ற மாதம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் போது அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளதுடன், இத்திட்டமானது டிசம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் வியாழனன்று தெரிவித்துள்ளனர்.

230 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படவுள்ள துறைமுக நகரத்திற்கான திட்டமானது 15 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்குள் முதலீடு செய்வதை நோக்காகக் கொண்டு சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவுள்ளது. 230 ஏக்கர் நிலப்பரப்பில் துறைமுக நகரம் ஒன்றைக் கட்டுவதற்கான உடன்படிக்கையானது ஏற்கனவே சிறிலங்கா அரசின் சிறிலங்கா துறைமுக அதிகார சபையுடன் சீன தொடர்பாடல் கட்டுமான நிறுவனமானது மேற்கொண்டுள்ளது.

39 மாத காலங்களைக் கொண்ட இத்திட்டத்தில் பூங்காக்கள், குடியிருப்புக்கள், அலுவலகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களும் அமைக்கப்படவுள்ளதாக சிறிலங்கா துறைமுக அதிகார சபை அறிவித்துள்ளது.

சீன நிறுவனம் ஒன்றால் விரிவுபடுத்தப்படும் கொழும்புத் துறைமுகத்துடன் இணைந்ததாகவே தற்போது துறைமுக நகரம் அமைக்கப்படவுள்ளது. இத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி பெறப்பட்டால் டிசம்பர் மாதத்தில் இத்திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் என திட்ட இயக்குனர் சுசாந்த அபேசிறிவர்த்தன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

"அமைச்சரவையிடமிருந்து அனுமதியைப் பெற்ற பின்னர், இத்திட்டத்துடன் தொடர்புபட்ட உடன்படிக்கைகளில் நாங்கள் கைச்சாத்திடுவதுடன், டிசம்பர் மாதத்தில் துறைமுக நகரத்தைக் கட்டுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும். இதற்கான ஆரம்பப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன" என திட்ட இயக்குனர் மேலும் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தை மேற்கொள்வதற்குத் தேவையான 230 ஏக்கர் நிலப்பரப்பும் சீன நிறுவனத்திடம் 99 ஆண்டுகாலக் குத்தகையில் வழங்கப்படவுள்ளது என துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் பிரதி அமைச்சர் றோகித பொகலகாம ஒக்ரோபர் மாத ஆரம்பத்தில் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

சிறிலங்காவில் 30 ஆண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது 2009ல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர், சிறிலங்காவின் நெடுஞ்சாலைகள், தொடரூந்துப் பாதைகள், நிலக்கரி மின்சக்தி ஆலை, விமான நிலையம், துறைமுகம் போன்ற பல்வேறு பாரிய திட்டங்களுக்காக சீனாவானது 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளதுடன், போருக்குப் பின்னான சிறிலங்காவின் அபிவிருத்தியில் சீனா மிகப் பெரிய முதலீட்டாளராக உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

http://www.puthinappalakai.com/view.php?20131101109353

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.