Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாணசபையின் நாளைய பேரவை அமர்வில் சந்திரசிறீயின் உரையை புறக்கணிக்க அனந்தி சசிதரன் முடிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாணசபையின் நாளைய பேரவை அமர்வில் சந்திரசிறீயின் உரையை புறக்கணிக்க அனந்தி சசிதரன் முடிவு:-

10 நவம்பர் 2013

ஆளுநர் உரையை புறக்கணிக்க சிவாஜிலிங்கம் - சுகிர்தரன் ஆகியோரும் முடிவு செய்துள்ளனர்:-


வடக்கு மாகாணசபையின் நாளைய பேரவை அமர்வின் போது இடம்பெற தீர்மானிக்கப்பட்டுள்ள ஆளுநர் சந்திரசிறியினது சிறப்புரையினை புறக்கணிக்க தான் முடிவு செய்திருப்பதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு அனந்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இராணுவத் தளபதியாகவிருந்த வேளையிலேயே ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் காணாமல் போயிருந்தனர். குறிப்பாக கிருசாந்தி குமாரசாமி பாலியல் வன்புணர்வுக்கு உட்பட்டு கொல்லப்பட்டதும் இவரது காலத்திலேயே எனத் தெரிவித்த அனந்தி, இவர் தளபதியாக இருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் பெண்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்ததாகவும் கூட்டிக் காட்டியுள்ளார்.

இவை  தவிர இவரை வவுனியா தடுப்பு முகாம்களின் இணைப்பாளராக நியமித்த வேளையிலேயே முகாம்களிலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வடிகட்டப்பட்டு காணாமல் போகவும் செய்யப்பட்டிருந்தனர். இவற்றை தாம் மறக்க முடியாதென அனந்தி சசிதரன் தெரிவித்தார். அத்துடன் முதலமைச்சரே ஆளுநரை வேண்டாம் என்று சொன்ன பின் அவரது உரையை கேட்கும் தேவை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மற்றொரு மாகாணசபை அங்கத்தவர் கே.சிவாஜிலிங்கம் தான் நாளைய  ஆளுநர் சந்திரசிறியினது சிறப்புரையினை பகிஸ்கரிக்கப் போவதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மாகாண சபையின்  அங்கத்தவரான சுகிர்தன், ஆளுநரின் சிறப்புரையை புறக்கணிக்க உள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்ட அவர் 'எல்லாவற்றிற்கும் மேலாக கூட்டமைப்பினரை அதன் தலைவர்களை நாய்கள்  என பகிரங்கமாகப் பேசியவர் இந்த ஆளுநர். நடந்து முடிந்த தேர்தலில் கூட கூட்டமைப்பின் தேர்தல் தோல்விக்காக முழு அளவில் வேலை செய்தவர். பகிரங்கமாக மேடையேறி ஆளும் தரப்பின் வெற்றிக்காக பாடுபட்டவர். இவருக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டுமென்ற எந்த தேவையுமில்லை' எனக் கூறிய அவர் தானும் நாளைய தினம் ஆளுநர் சிறப்புரையினை பகிஸ்கரிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
இன்று வரை கூட்டமைப்பினை கிள்ளு கீரையாக கருதுபவர் சந்திரசிறி. அவருக்கு எமது நிலைப்பாட்டினை சொல்லி வைக்க எமது ஒற்றுமையான வெளிநடப்பு முக்கியமானதென மற்றுமொரு அங்கத்தவர்  தெரிவித்த போதும்  அவர் உடனடியாக தனது பெயரை குறிப்பிடவிரும்பவில்லை. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த பல கூட்டமைப்பு அங்கத்தவர்களும் நாளைய ஆளுநரது சிறப்புரையினை பகிஸ்கரிக்கலாம் என தெரிய வருகின்ற போதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
 
 
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98781/language/ta-IN/article.aspx


'அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் பிரதிநிதியான ஆளுநரின் உரையைப் புறக்கணிக்க நான் முடிவு செய்துள்ளேன்
10 நவம்பர் 2013


கே.சிவாஜிலிங்கம


வடக்கு  மாகாணசபையின் கூட்டத்தில் ஆளுநர் உரையை பகிஸ்கரிக்க உள்ளதாக கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற அங்கத்தவரும் தற்போதைய வட மாகாண சபையினது அங்கத்தவருமான கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இது  தொடர்பில் விடுத்துள்ள பத்திரிகை அறிக்கையில்
'இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதியாக ஜனாதிபதியின் பிரதிநிதியாக விளங்கும் ஆளுநரின் உரையைப் புறக்கணிப்பது என நான் முடிவு செய்துள்ளேன்.'
போரின் பொழுது அப்பாவித் தமிழ் மக்கள்  சுமார் 70,000 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. பல்லாயிரக் கணக்கானோர் அங்கவீனர்களாகவும், காயமடைந்தும், விதவைகளாகவும், அநாதைகளாகவும், ஏதிலிகளாகவும் ஆக்கப்பட்டனர். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துக்களும் அழிக்கப்பட்டன.
போர் முடிந்தும் நான்கரை ஆண்டுகள்  கடந்தும் பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கான மறுவாழ்வு நிவாரணம் என்பன வழங்கவில்லை உள்ளக  விசாரணைகள்  நடைபெறவில்லை. இந்த சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைபேரவையின் தலைவி திருமதி. நவநீதம்பிள்ளை இலங்கை அரசு உரிய விசாரணைகளை நடாத்தத் தவறும் பட்சத்தில் எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச நீதி விசாரணையை நடாத்த வேண்டி வரும் என எச்சரித்துள்ள சூழ்நிலையிலும் இலங்கை அரசு தனது போக்கை மாற்றுவதாக இல்லை.
ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகள் சிறைகளில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள் ஆயிரக்கணக்கானவர்கள் புணர்வாழ்வு முகாம்களில் விடுதலையை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றார்கள். சரணடைந்து காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்களின் நிலமை இன்னமும் தெளிவாகவில்லை.
தழிழ் இனப்படுகொலை ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேசத்தின் கவனத்திற்கு வந்த பின்னரும் இலங்கை அரசு பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டை நடாத்துவதில் விடாப்பிடியாக உள்ளது. பொதுநலவாய மாகாநாட்டிற்கோ அல்லது அந்த நாடுகளின் தலைவர்களுக்கோ நாம் எதிரானவர்கள் அல்ல தமிழ் இனப்படுகொலையை செய்து இன அழிப்பைச் செய்து வரும் இலங்கை அரசாங்கம் நடாத்தும் மகாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என்பதுவுமே இலங்கைத் தமிழர்களின் விருப்பமும் வேண்டுகோளும் ஆகும்.
தமிழ் இனப்படுகொலைக்காக பல சாட்சியங்கள் வெளிவந்துன்ன சூழ்நிலையில்  தமிமீழத்தேசியத் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார் என்பதற்கு ஆதாரமாக உயிருடன் வைக்கப்பட்டிருந்த சனல் - 4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டிருந்தது இதற்கும் வழமை போல அரசாங்கம்  அலட்சியமாக நடந்து கொண்டது.
தம்புள்ள காளிகோவில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது தமிழ் மக்களின் ஒரே பகுதியினராகிய இந்துக்களின் மதச்சுதந்திரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. தமிழ்தாயகத்தின் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களில் வாகரை, முறிகண்டி, வலிகாமம் வடக்கு, ஆகிய  இடங்களில் முப்படையினருக்கான குடியிருப்புக்கள் கட்டப்பட்டு எமது நிலம் காபட்களும் செய்யப்பட்டு வருகிறது.
தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும், தாய்தமிழகத்திலும் இலங்கை அரசியல் தமிழ் இன் அழிப்புக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை இலங்கை அரசு அலட்சியம் செய்துவருகிறது.
வலிகாமம் வடக்கில் 23 வருடங்களாக குடியிருக்க முடியாமல் துரத்தப்பட்ட அம் மக்களின் 6300 ஏக்கர்களின் காணி சுவீகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கிழக்கில் சம்பூரில் 10,000 ஏக்கர்கள் காணி  சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ் தாயத்தில் திட்டமிட்டு வருகிறது. தமிழ்  தாயகத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 
இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வுகாண வேண்டும் என்ற நிகழ்ச்சி நிலையே மறந்த சூழ்நிலையிலேயே இலங்கை அரசாங்கம் உள்ளது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்களில் மாகாநாடு இலங்கையில் நடைபெறக்கூடாது என்பதற்காக அதில் பொதுநலவாய நாடுகளில் தலைவர்களும் கலந்து கொள்ளக்கூடாது எனவும் வலியுறுத்தியும், தமிழ் இனப்படுகொலையை செய்த இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ்இன அழிப்பு நடவடிக்கைகளை கைவிடுமாறு வலியுறுத்தியும் சர்வதேச சமூகம் சர்வதேச நீதி விசாரணைகளை நடாத்தி நீதியைப் பெற்றுத்தரவேண்டும் எனவும் நிரந்தர அரசியல் தீர்வைப் பெற உதவவேண்டும் எனக்கோரி ஆளுநர் உரையை புறக்கணிப்பது எனத் தீர்மானித்துள்ளேன'; என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்
 
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98782/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.