Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொது நல­வாய மாநாட்டின் மத்­தியில் எழுந்­துள்ள மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுக்­கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொது நல­வாய மாநாட்டின் மத்­தியில் எழுந்­துள்ள மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுக்­கள் -

16 நவம்பர் 2013

செல்­வ­ரட்னம் சிறி­தரன்:-



பொது­ந­ல­வாய அமைப்பின் கொழும்பு மாநாடு, பல்­வேறு எதிர்­பா­ர்ப்­புக்­க­ளையும், பல­த­ரப்­பட்ட உணர்­வு­க­ளையும் ஏற்­ப­டுத்தியிருந்­தது. இந்த மாநாட்டைப் பல உலக நாடுகள் புறக்­க­ணிக்கக் கூடும். இதனால் இந்த மாநாட்டை நடத்­து­வதில் இலங்கை அர­சுக்கு சிக்­கல்கள் ஏற்­படக் கூடும் என்ற எதிர்­பார்ப்­பு­கூட பல­த­ரப்­பிலும் நில­வி­யது.

எனினும் இலங்கை அர­சாங்­கத்­திற்கு மகிழ்ச்­சியும், பெரு­மையும் அளிக்­கத்­தக்க வகையில் இந்த மாநாட்டில் பெரும் எண்­ணிக்­கை­யி­லான நாடுகள் கலந்து கொண்­டி­ருக்­கின்­றன. இந்த மகிழ்ச்­சி­யில்­தானோ என்­னவோ உங்கள் மீது போர்க்­குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருக்­கின்­றதே, அது­பற்றி என்ன சொல்­கின்­றீர்கள் என சனல் 4 செய்­தி­யாளர் ஒருவர் ஜனா­தி­ப­தி­யிடம் கேட்­ட­போது, அது­பற்றி கலைப்­ப­ட­வில்லை என்று அவர் கூறி­யி­ருக்­கின்றார்.

போர்க்­குற்றம் மட்­டு­மல்ல. மனித உரிமை மீறல்கள் தொடர்­பா­கவும், ஊடக சுதந்­திரம், பேச்சுச் சுதந்­திரம் மற்றும், ஜன­நா­யக உரிமை மீறல்கள் தொடர்­பா­கவும் அவரும், அர­சாங்­கமும் கவ­லைப்­பட்­டி­ருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. அந்த நிலை­மைகள் குறித்து அக்­கறை கொண்­டி­ருப்­ப­தா­கவே தெரி­ய­வில்லை.

விடு­த­லைப்­பு­லி­க­ளு­ட­னான இறு­திக்­கட்டப் போரில் அர­சாங்­கமும், அரச படை­களும் நடந்­து­கொண்ட விதம் கார­ண­மாக, போர்க்­கு­ற்­றங்கள் புரி­யப்­பட்­ட­தாகக் குற்றம் சுமத்தும் அள­விற்கு இலங்­கைக்கு எதி­ரான மனித உரிமை மீறல் நிலை­மைகள் மோச­ம­டைந்­தி­ருந்­தன. நாட்டில் நல்­லாட்­சி­யில்லை. எதிர்க்­கட்­சிகள் ஓரங்­கட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன. அர­சாங்­கத்தை வலு­வாக எதிர்ப்­ப­தற்கோ அல்­லது கட்­டுப்­ப­டுத்தி வழி­ந­டத்­து­வ­தற்கோ ஜன­நா­யக ரீதியில் வல்­ல­மை­யுள்ள எதிர்­க்கட்­சிகள் எது­வு­மற்ற நிலையில் நாட்டில் ஆட்சி நடந்து கொண்­டி­ருக்­கின்­றது.

இரா­ணுவ மேலா­திக்கம் ஓங்­கிய நிலையில் அரச நிர்­வாகக் கட்­ட­மைப்­புக்கள் மோச­ம­டைந்­தி­ருக்­கின்­றன. குடும்ப ஆட்சி எங்­கேயும் காணாத அள­விற்கு மேலோங்கிக் காணப்­ப­டு­கின்­றது. வெல்ல முடி­யாது என்று பர­வ­லாகக் கரு­தப்­பட்ட விடு­தலைப்புலி­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்தில் வெற்­றி­பெற்ற ஒரே கார­ணத்­திற்­காக, இரா­ணு­வத்­திற்கு அதிக முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

இரா­ணு­வத்தில் அதி­கா­ரி­க­ளாக இருந்­த­வர்­க­ளுக்கு எல்லா இடங்­க­ளிலும் முத­லி­டமும், முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அவர்கள் உயர் சிவில் பத­வி­களில் அலங்­கா­ர­மாக அமர்த்­தப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். வெளி நாடு­க­ளுக்­கான தூது­வர்­க­ளாக, இரா­ஜ­தந்­தி­ரி­க­ளாக, ஐ.நா. சபையின் முக்­கிய பத­வி­க­ளுக்குக் கூட இறுதி யுத்­தத்தில் முக்­கிய பதவி வகித்த முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரிகள் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்.

யுத்தம் முடிந்த பின்­ன­ரான நிலைமை

கடந்த 2009 ஆம் ஆண்டின் பின்னர், இலங்­கையின் சிவில் நிர்­வாக போக்கு, பகி­ரங்­க­மா­கவே, இரா­ணுவ மய­மாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. தேசிய பாது­காப்பு என்ற போர்­வையில் இரா­ணு­வத்­தி­னரின் முக்­கி­யத்­துவம் மேலும், மேலும் அதி­க­ரித்துச் செல்­கின்ற ஒரு போக்­கி­லேயே அர­சாங்கம் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. சிறிய ஒரு நாடாக இருந்த போதிலும், பிராந்­திய வல்­ல­ர­சுகள் மற்றும் உலக வல்­ல­ரசு நாடு­களைப் போன்று, இலங்­கையில் தேசிய பாது­காப்­புக்கு அதிக முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­ப­டு­கின்­றது.

முப்­பது வரு­டங்­க­ளாக இந்த நாட்டை இரா­ணுவ ரீதியில் அச்­சு­றுத்திக் கொண்­டி­ருந்த விடு­த­லைப்­பு­லிகள் மோச­மா­னதோர் இரா­ணுவ முன்­னெ­டுப்பின் மூலம் அழிக்­கப்­பட்­டுள்­ள­போ­திலும், அவர்கள் மீண்டும் எழுந்­து­வி­டு­வார்கள் என்ற பூச்­சாண்­டியைக் காட்டி, பாது­காப்­புத்­து­றைக்­கான செல­வி­னத்தை மேலும் மேலும் அர­சாங்கம் அதி­க­ரித்துக் கொண்­டி­ருக்­கின்­றது.

கல்வி, சுகா­தாரம், போன்ற அடிப்­ப­டையில் முக்­கி­ய­மான துறை­க­ளுக்கும், நீதி, நல்­லாட்சி, ஜன­நா­யகம் என்­ப­வற்றை மேம்­ப­டுத்­து­வ­தற்குப் போதிய நிதி­யொ­துக்­கப்­ப­டு­வ­தில்லை என்ற குற்­றச்­சாட்­டுக்கள் அண்­மைய வரு­டங்­க­ளாக அர­சாங்­கத்தின் மீது அதி­க­ரித்த அளவில் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது. ஆயினும் இவை­யெல்­லா­வற்­றையும் எந்த வகை­யிலும் அர­சாங்கம் கவ­னத்திற் கொண்­ட­தா­கவோ அல்­லது அது­பற்றி கவ­லை­ய­டைந்­த­தா­கவோ தெரி­ய­வில்லை. கேட்­ப­தற்கோ, தடுப்­ப­தற்கோ எவ­ரு­மின்றி தன்­னிச்­சை­யான போக்கில் அர­சாங்கம் சென்று கொண்­டி­ருக்­கின்­றது.

ஜன­நா­யகம், நல்­லாட்சி, மனித உரிமை பேணல், நியா­ய­மான நீதித்­துறைச் செயற்­பாடு போன்ற விட­யங்­களில் உள்­நாட்­டிலும், சர்­வ­தேச அள­விலும், இலங்கை அரசின் நிலைப்­பாடு மோச­மா­ன­தா­கவே கரு­தப்­ப­டு­கின்­றது.

பிர­தம நீதி­ய­ரசர் ஒரு­வரை அர­சியல் ரீதி­யாகப் பழி­வாங்கி, அவ­ருக்குப் பதி­லாக அர­சியல் செல்­வாக்கு மிக்க ஒரு­வரைப் பத­வியில் அமர்த்­தி­யி­ருப்­பதன் மூலம், சர்­வ­தேச மட்­டத்தில் நீதித்­து­றைக்கு அப­கீர்த்தி ஏற்­ப­டுத்­திய ஓர் அர­சாங்­க­மாக இலங்கை அரசு தன்னை இனம் காட்டிக் கொண்­டி­ருக்­கின்­றது. நடப்­பாண்­டுக்­கான பொது­ந­ல­வாய உச்சி மாநாட்டில் முக்­கிய அம்­சங்­களில் ஒன்­றா­கிய நீதித்­து­றைக்­கான அமர்வில் சர்­வ­தேச சட்­டத்­த­ர­ணிகள் சங்கப் பிர­தி­நி­திகள் பகி­ரங்­க­மா­கவே புறக்­க­ணிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். இலங்கை வரு­வ­தற்­காக அவர்­க­ளுக்கு ஏற்­க­னவே வழங்­கப்­பட்­டி­ருந்த நுழைவு அனு­மதி சரி­யான காரணம் காட்­டப்­ப­டா­ம­லேயே மறுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

இத்­த­கைய ஒரு நிலை­யில்தான் பொது­ந­ல­வாய உச்சி மாநாட்­டுக்­காக உல­க­நா­டு­களின் தலை­வர்­களும் முக்­கி­யஸ்­தர்­களும், வர்த்­தகத் துறை சார்ந்தவர்­களும், இளைஞர் பிர­தி­நி­தி­களும் பெரும் எண்­ணிக்­கையில் கொழும்பில் வந்து குவிந்­தி­ருக்­கின்­றார்கள்.

பொது­ந­ல­வாய உச்சி மாநாடு நடப்­ப­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­ட­போதும், அதற்கு முன்­னரும் மனித உரி­மை­களைத் துச்­ச­மாக மதித்துச் செயற்­பட்ட அர­சாங்­கமும், அதன் பங்­கா­ளர்­களும், பொது­ந­ல­வாய உச்சி மாநாட்டின் போதா­வது அடங்கி நடப்­பார்கள் அடக்கி வாசிப்­பார்கள் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் அத்­தகைய எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு மாறா­கவே அவர்­களின் நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன.

கெலும் மக்­ரே­வுக்­கான வர­வேற்பு

விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான இறுதி யுத்­தத்தின் போது, இலங்கை அரசும், அர­ச­ப­டை­களும் மோச­மான முறையில் மனித உரிமை மீறல்­களில் ஈடு­பட்­டி­ருந்­தார்கள் என்றும், போர்க்­குற்றச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தார்கள் என்றும் சுமத்­தப்­பட்­டி­ருந்த குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்­கான சம்­ப­வங்­களை, சனல் 4 தொலைக்­காட்சி நிறு­வ­னமே முக்­கி­ய­மாகத் தொகுத்து வெளி­யிட்­டி­ருந்­தது. அந்த நிறு­வ­னத்தைச் சேர்ந்த கெலும் மக்ரே இதன் முக்­கிய பங்­கா­ளி­யாகத் திகழ்­கின்றார். அவ்­வப்­போது, இலங்­கைக்கு எதி­ரான போர்க்­குற்றம் அல்­லது மோச­மான மனித உரிமை மீறல் சம்­ப­வங்கள் பற்­றிய அதிர்ச்சி தரு­கின்ற விட­யங்­களை அவர் வெளி­யிட்டு வந்­தி­ருக்­கின்றார்.

ஜன­நா­யகம், நல்­லாட்சி, மனித உரி­மைகள், நியா­ய­மான நீதித்­துறைச் செயற்­பா­டுகள் என்­ப­வற்றை அங்­கத்­துவ நாடு­க­ளி­டையே வலி­யு­றுத்தி வரு­கின்ற பொது­ந­ல­வாய உச்சி மாநாடு கொழும்பில் நடை­பெ­று­வ­தை­யொட்டி, இலங்­கைக்கு வரு­வ­தற்­கான அனு­ம­தியை கெலும் மக்ரே கோரி­யி­ருந்தார். அந்த விண்­ணப்பம் இலங்கை அர­சாங்­கத்­தினால் பரி­சீ­லிக்­கப்­ப­ட­மாட்­டாது என்றே பலரும் எதிர்­பார்த்­தி­ருந்­தார்கள். அத்­த­கைய போக்­கி­லேயே அர­சாங்கத் தரப்­பினர் சில­ரு­டைய கருத்­துக்­களும் முன்னர் வெளி­வந்­தி­ருந்­தன. ஆனால் எதிர்­பா­ராத வித­மாக, சனல் 4 தொலைக்­காட்சி நிறு­வ­னத்­தி­ன­ருக்கு, கெலும் மக்ரே குழு­வி­ன­ருக்கு நுழைவு அனு­மதி வழங்­கப்­பட்­டது. அது மட்­டு­மல்­லாமல், அவர் கொழும்பு வரு­கின்ற நேரத்தில் பொது­ந­ல­வாய உச்சி மாநாட்டுக் காலத்தில் இலங்­கையின் எந்தப் பகு­திக்கும் சென்று வரலாம் என்ற அனு­ம­தியும் வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனால், கெலும் மக்ரே குழு­வினர் இலங்­கையில் காலடி எடுத்து வைப்­ப­தற்­காக கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வந்­தி­றங்­கி­ய­துமே, அவ­ருக்கு எதி­ராகப் பலர் அங்கு கூடி­நின்று சனல் 4 நிறு­வ­னத்­திற்கும், கெலும் மக்ரே குழு­வி­ன­ருக்கும் எதி­ராக ஆர்ப்­பாட்டம் நடத்தியிருந்­தார்கள்.

வெளி­நா­டு­களைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு நுழைவு அனு­மதி வழங்­கப்­ப­டு­வ­தென்­பது ஓர­ள­வுக்கு தனிப்­பட்ட விட­ய­மா­கவும், இர­க­சியம் காக்க வேண்­டிய ஒரு விட­ய­மா­கவே கரு­தப்­ப­டு­கின்­றது. இது அர­சாங்­கத்­துடன் சம்­பந்­தப்­பட்ட ஒரு விடயம். அதிலும் குறிப்­பாக கெலும் மக்­ரேயின் விட­யத்தில் இது அர­சாங்­கத்­தினால் கையா­ளப்­பட்ட மிகவும் முக்­கி­ய­மான விட­ய­மாகும். ஆனால், கெலும் மக்ரே கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வந்­தி­றங்­கு­வது தொடர்­பான தக­வல்கள், ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்­க­ளுக்குத் துல்­லி­ய­மாகக் கிடைத்­தி­ருந்­தது. அல்­லது, அவர்­க­ளுக்கு முன்­கூட்­டியே சரி­யான முறையில் திட்­ட­மிட்ட வகையில் அந்தத் தக­வல்கள் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இல்­லா­விட்டால் கெலும் மக்ரே கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வந்­தி­றங்­கிய அந்தச் சரி­யான நேரத்தில் அவ­ருக்கு எதி­ராகப் பலர் கூடி­நின்று ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருக்க முடி­யாது. அந்த வகையில் இந்த ஆர்ப்­பாட்­ட­மா­னது, அரச ஆத­ர­வா­ளர்­க­ளினால், அர­சாங்­கத்தின் ஆசிர்­வா­தத்­து­ட­னேயே நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பது புல­னா­கின்­றது.

இலங்கை வரு­வ­தற்குத் தனக்கு நுழைவு அனு­மதி வழங்­கப்­ப­ட­மாட்­டாது என எதிர்­பார்த்­தி­ருந்த கெலும் மக்ரே, அந்த அனு­மதி வழங்­கப்­பட்­டதும், அது குறித்து மகிழ்ச்­சி­ய­டைந்­தி­ருந்­தாலும், சர்ச்­சைக்­கு­ரிய ஒரு செய்தி நிறு­வ­னத்தைச் சேர்ந்­தவர், கடும் விமர்­ச­னத்திற்கு உள்­ளா­கி­யி­ருக்­கின்ற ஒரு செய்­தி­யாளர் என்ற வகையில் எச்­ச­ரிக்­கை­யா­கவே நடந்து கொண்­டி­ருந்தார். ஆயினும் கட்டுநா­யக்க விமான நிலை­யத்தில் ஆர்ப்­பாட்டம் நடத்தி தன்னை வர­வேற்­பார்கள் என்று அவர் கொஞ்­சமும் எதிர்­பார்த்­தி­ருக்­க­வில்லை.

பொது­ந­ல­வாய உச்சி மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்­காக உலக நாடு­களின் தலை­வர்கள், இரா­ஜ­தந்­தி­ரிகள், அரச முக்­கி­யஸ்­தர்கள் வந்­தி­றங்­கிய ஒரே­யொரு விமான நிலை­யத்தின் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. உயர் பாது­காப்பு வல­ய­மாக விளங்­கிய அவ்­வாறு விளங்­கி­யி­ருக்க வேண்­டிய கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் கெலும் மக்ரே குழு­வி­ன­ருக்கு எதி­ராகப் பெரும் எண்­ணிக்­கை­யா­ன­வர்கள் முற்­கூட்­டியே வருகை தந்து, கூடி நின்று எவ்­வாறு ஆர்ப்­பாட்டம் நடத்­தி­னார்கள். அவ்­வாறு அவர்­களால் எப்­படி நடந்து கொள்ள முடிந்­தது என்ற கேள்­விகள் எழுந்­தி­ருக்­கின்­றன. அங்கு நடத்­தப்­பட்ட ஆர்ப்­பாட்டம் குறித்து அதிர்ச்­சி­ய­டைந்­தி­ருந்த கெலும் மக்ரே, தாங்கள் வரு­வது எப்­படி முன்­கூட்­டியே வெளி­யா­ருக்கு ஆர்ப்­பாட்டம் நடத்­தி­ய­வர்­க­ளுக்குத் தெரிய வந்­தது என்று கேள்வி எழுப்­பி­யி­ருந்தார்.

அனு­ம­தியும் ஆர்ப்பாட்­டங்­களும்

கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் அளிக்­கப்­பட்ட அதி­ர­டி­யான அதிர்ச்சி தந்த வர­வேற்­புடன் கெலும் மக்­ரே­வுக்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டங்கள் நிற்­க­வில்லை. கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வந்­தி­றங்­கி­யது தொடக்கம், அவர் தங்­கி­யி­ருந்த ஹோட்­ட­லுக்குச் சென்­ற­போதும், அதன் பின்னர் அவர் சென்ற இடங்­க­ளுக்­கெல்லாம் அவ­ரு­டைய நட­மாட்­டங்­களும் செயற்­பா­டு­களும் உன்­னிப்­பாகக் கவ­னிக்­கப்­பட்டு வரு­வ­தாக அவ­ரது குழுவைச் சேர்ந்த செய்­தி­யாளர் ஒருவர் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

அர­சாங்­கத்­திற்கு எதி­ராக பிர­தான எதிர்க்­கட்­சி­யா­கிய ஐக்­கிய தேசிய கட்­சி­யினர் நடத்­திய ஒரு செய்­தி­யாளர் மாநாட்டில் சனல் 4 நிறு­வனச் செய்­தி­யா­ளர்­களும் கலந்து கொண்­டி­ருந்­தார்கள். இது­பற்றி உள்ளூர் ஊடகம் ஒன்று கேள்வி எழுப்­பி­யி­ருந்­தது. குடி­வ­ரவு திணைக்­க­ளத்தின் நடை­மு­றை­களை மீறும் வகையில் அவர்கள் நடந்து கொண்­டி­ருந்­தார்கள் என்று பகி­ரங்­க­மாகக் குற்றம் சாட்டப்­பட்­டி­ருந்­தது.

அது மட்­டு­மல்­லாமல், மோச­மான முறையில் மனித உரி­மை­களும், மனி­தா­பி­மான சட்ட விதி­களும் மீறப்­பட்­ட­தாகக் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள சம்­ப­வங்கள் இடம்­பெற்ற வட­ப­கு­தியில் யாழ்ப்­பா­ணத்­திற்குச் செல்­வ­தற்­காக, 13 ஆம் திகதி கெலும் மக்ரே குழு­வினர் கொழும்பில் இருந்து ரயிலில் பயணம் மேற்­கொண்­டி­ருந்­தார்கள். அவர்கள் பயணம் செய்த ரயில் அனு­ரா­த­புரம் ரயில் நிலை­யத்தை வந்­த­டை­வ­தற்கு முன்­ன­தா­கவே, நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்கள் அங்கு குழு­மி­யி­ருந்­தார்கள். அனு­ரா­த­புரம் நிலை­யத்தில் அந்த ரயில் நுழைந்­த­வு­ட­னேயே அங்கு கூடி­யி­ருந்த ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் கெலும் மக்­ரேக்கு எதி­ரான கோசங்­களை எழுப்­பி­னார்கள். கெலும் மக்­ரேக்கு எதி­ரா­கவும், சனல் 4 நிறு­வ­னத்­திற்கு எதி­ரா­கவும் சிங்­க­ளத்­திலும், ஆங்­கி­லத்­திலும் எழு­தப்­பட்­டி­ருந்த சுலோக அட்­டை­களை அவர்கள் ஏந்­தி­யி­ருந்­தார்கள்.

ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் வெறும் ஆர்ப்­பாட்­டத்­துடன் நிற்­க­வில்லை. அனு­ரா­த­பு­ரத்­திற்கு அப்பால் வடக்கு நோக்கி அந்த ரயிலைச் செல்­ல­வி­டாமல், ரயில் பாதையில் குறுக்­காக நின்றும், இருந்தும், படுத்­தும்­கூட அவர்கள் ஆர்ப்­பாட்டம் நடத்­தி­யி­ரு­ந்­தார்கள். கெலும் மக்ரே யாழ்ப்­பா­ணத்­திற்குச் செல்­வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்­கத்தில் இந்த ஆர்ப்­பாட்டம் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.

சர்ச்­சைக்­கு­ரிய சனல் 4 செய்­தி­யா­ளர்­க­ளுக்கு நாட்டில் நுழை­வ­தற்கும், அவர்கள் நாட்டில் விரும்­பிய இடங்­க­ளுக்குச் செல்­வ­தற்­கு­ரிய அனு­ம­தியை வழங்­கி­யி­ருந்த ஓர் அர­சாங்கம் அவர்­க­ளுக்கு எதி­ராக முக்­கிய பயண நிலை­யங்­களில் அவர்­க­ளுக்கு எதி­ரான ஆர்ப்பாட்­டங்கள் நடை­பெ­று­வ­தற்கு எவ்­வாறு அனு­ம­தித்­தி­ருந்­தது என்­பது கேள்­விக்கு உரி­ய­தாக இருக்­கின்­றது. நாட்­டுக்கு வரு­ப­வர்­களை விருந்­தி­னர்­க­ளாகக் கருதி கௌர­வ­ம­ளிக்க வேண்­டிய அர­சாங்கம் என்ன கார­ணத்திற்காக இவ்­வா­றான ஆர்ப்­பாட்­டங்கள் நடை­பெ­று­வதைப் பொறுத்­துக்­கொண்­டது, அல்­லது அவற்றைத் தடுத்து நிறுத்தி, அவர்­களின் பய­ணத்தைப் பாது­காப்­பா­ன­தாக உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு ஏன் தவ­றி­யது என்ற கேள்­வியும் எழுந்­துள்­ளது. அனு­ரா­த­புரம் ரயில் நிலை­யத்தில் நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டத்­தை­ய­டுத்து, மக்ரே குழு­வினர் வட­ப­கு­திக்­கான தமது பய­ணத்தைத் தொடர்­வது ஆபத்­தா­னது என்று காரணம் கூறி, அவர்­களைப் பொலி­சாரின் பாது­காப்­புடன் அர­சாங்கம் கொழும்­புக்கே திருப்பி அழைத்து வரு­வற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­தி­ருந்­தது. இந்தத் தக­வலை அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்­கின்ற பேச்­சா­ளரும், அமைச்­ச­ரு­மா­கிய கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்­தி­ருந்தார்.

அர­சாங்­கத்தின் அனு­மதி பெற்று இலங்கை வந்­துள்ள தனக்கு நாட்டில் எங்­கேயும் செல்­வ­தற்­கான அனு­ம­தியும் வழங்­கப்­பட்­டி­ருப்­ப­தாகத் தெரி­வித்­தி­ருந்த கெலும் மக்ரே, தங்­களை யாழ்ப்­பா­ணத்­திற்குச் செல்­ல­வி­டாமல் தடுத்­தமை குறித்து பெரும் அதி­ருப்­தி­ய­டைந்­தி­ருந்தார். இத்­த­கைய வர­வேற்பை, அவர் இந்த நாட்டின் விருந்­தோம்பல் வர­வேற்­புடன் தொடர்­பு­ப­டுத்தி கேள்வி எழுப்­பி­யி­ருந்தார். அத்­துடன், அவ­ரு­டைய குழுவைச் சேர்ந்த மற்­று­மொரு செய்­தி­யாளர், தமது கருத்­துக்­களைக் கூறு­வ­தற்கும் வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கு­மான உரிமை எவ­ருக்கும் இருக்­கின்­றது. ஆனால், தாங்கள் மற்­ற­வர்­களின் கருத்­துக்­களைக் கேட்க முடி­யாமல் அனு­ரா­த­புரம் ஆர்ப்­பாட்­டத்தின் மூலம் பல­வந்­த­மாகத் தடுக்­கப்­பட்­டி­ருப்­ப­தாகச் சுட்டி காட்­டி­யி­ருந்தார். இது உண்­மை­யி­லேயே கருத்துச் சுதந்­தி­ரத்­தையும், மற்­ற­வர்­களின் கருத்துக்களை அறி­கின்ற சுதந்­தி­ரத்­தையும், ஊடக சுதந்­தி­ரத்­தையும் மிதித்து நசுக்­கி­ய­தா­கவே கரு­தப்­ப­டு­கின்­றது.

உலக நாடு­களும், தலை­வர்­களும் என்ன செய்யப் போகின்றார்கள்?

எத்­த­கைய தடைகள் வந்­தாலும், தாங்கள் எப்­ப­டியும் யாழ்ப்­பா­ணத்­திற்குச் செல்வோம். அங்­குள்ள மக்­களைச் சந்­திப்போம் என்ற கெலும் மக்ரே அனு­ரா­த­புரம் ஆர்ப்­பாட்­டத்தின் பின்னர் துணி­வுடன் தெரி­வித்­தி­ருந்தார். இருந்தும், அவர் 14 ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்தை நோக்கி வாகனம் ஒன்றில் பிர­யாணம் செய்யப் போகின்றார் என்று வெளி­யா­கி­யி­ருந்த தக­வ­லை­ய­டுத்து, வவு­னி­யாவில் ஏ 9 வீதியில் ஓர் ஆர்ப்­பாட்டம் நடத்­தப்­பட்­டது, இந்த ஆர்ப்­பாட்­டத்தில் கலந்து கொள்­வ­தற்­காக அனு­ரா­த­புரம் மத­வாச்சி மற்றும் சிறி­புர போன்ற பகு­தி­களில் இருந்து வாக­னங்­களில் ஏற்றி வரப்­பட்­டி­ருந்த ஆண்­களும் பெண்­களும் கெலும் மக்ரே குழு­வி­னரை நாட்­டி­லி­ருந்து வெளி­யேற்ற வேண்டும் என்று கோச­மெ­ழுப்­பி­யி­ருந்­தார்கள். வவு­னி­யாவில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள வவு­னியா மாவட்ட மக்கள் ஒன்­றி­யத்­தி­னரும், தமது பதா­தை­யொன்றை ஏந்­திய வண்ணம் இந்த ஆர்ப்­பாட்­டத்தில் பங்­கு­கொண்­டி­ருந்­தார்கள்.

இதே­வேளை, கெலும் மெக்ரே குழு­வி­னரை, வட­ப­கு­திக்கு வரு­வ­தற்கு அனு­ம­திக்கக் கூடாது என்று வலி­யு­றுத்தி, முல்­லைத்­தீவு நக­ரத்­திலும் ஆர்ப்­பாட்டம் ஒன்று நடத்­தப்­பட்­டி­ருந்­தது. இந்த ஆர்ப்­பாட்­டத்தில் கலந்து கொள்­வ­தற்­காகப் பெரு­ம­ளவில் சிவில் பாது­காப்பு அணியைச் சேர்ந்த இளைஞர் யுவ­திகள் கொண்டு வந்து இறக்­கப்­பட்­டி­ருந்­தார்கள்.

சனல் 4 செய்­தி­யா­ளர்கள் மட்­டு­மல்­லாமல் பொது­ந­ல­வாய மாநாட்­டிற்­காக வருகை தந்­துள்ள பி.பி.சி. செய்­தி­யா­ளர்­களும் கூட, கண்காணிக்கப்பட்டிருக்கின்றார்கள். தாங்கள் செய்தி சேகரிக்க முடியாதவாறு இலங்கை அதிகாரிகள் தடைகளை ஏற்படுத்துகின்றார்கள், தடுத்து நிறுத்துகின்றார்கள் என்று ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்திருந்த பி.பி.சி. யின் செய்தியாளர்கள் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள்.

அதேநேரம் உள்ளூரைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளராகிய நிமல்கா பெர்னாண்டோவுக்குப் பகிரங்கமாக அரச ஊடகத்தின் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக அவர் முறையிட்டிருக்கின்றார். அது மட்டுமல்லாமல் பொதுநலவாய உச்சி மாநாட்டை முன்னிட்டு சிவில் அமைப்புக்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து 13, 14 ஆகிய தினங்களில் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த மாற்று மனித உரிமை விழா நிகழ்வின் மீது பெரும் எண்ணிக்கையிலான அரச ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்தியிருக்கின்றார்கள். பொதுநலவாய மாநாட்டையொட்டி, கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டமும:;, தாக்குதலும் நடத்தப்பட்டிருந்தது.

அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள், அதன் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது சட்டத்தை மீறிய நிலையில் அச்சுறுத்தப்படுகின்ற ஆபத்தான நிலையொன்றுநாட்டில் நிலவுவதையே இந்தச் சம்பவங்கள் வெளிச்சம்போட்டு காட்டியிருக்கின்றன. மனித உரிமைகளும், ஜனநாயக உரிமைகளும் போற்றி பாதுகாக்கப்பட வேண்டியவை. இதுதான் வளர்ந்து வருகின்ற இலங்கை போன்ற ஜனநாயக நாடுகளில் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

ஆனால் அந்த விழுமியங்களை வலியுறுத்துகின்ற பொதுநலவாய மாநாடு நடந்து கொண்டிருக்கும்போது, மறுபக்கத்தில் அவற்றை மிதித்து நசுக்கி அவமானப்படுத்துகின்ற கைங்கரியங்களே இலங்கையில் நடைபெற்றிருக்கின்றன. இத்தகைய மோசமான இலங்கை நிலைமைகளை கொழும்பில் கூடியுள்ள உலக நாடுகளும், அவற்றின் தவைர்களும் எப்போது புரிந்து கொள்வார்கள், எப்படி புரிந்து கொள்வார்கள், அவ்வாறு புரிந்து கொண்டு அவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்ற கேள்விகள் இப்போது பலருடைய மனங்களில் விசுவரூபமெடுத்திருக்கின்றன.
 
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99081/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.