Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரிய இனவழிப்பு!: கட்டாய கருத்தடை மூலம் இன அழிப்பு -ஆதாரம் குளோபல் தமிழ் செய்திகளுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி , முல்லைத்தீவில்  சில மாதங்களுக்கு முன்னர் கட்டாய கருத்தடை இடம் பெறுவதாக அறிக்கைகள் வெளியாகி இருந்தன. இது சனவரி 2012 முதல் அரசு ஆதரவுடன் படைத்தரப்பின் வற்புறுத்தலினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையை இங்கு குளோபல் தமிழ் செய்திகள் ஆதாரத்துடன் பிரசுரிக்கிறது.

Annual health bulletin 2012 S.No 1.21 family planning – new acceptors  இல் வெளியான தகவல்கள் அதிர்ச்சியளிப்பனவாக உள்ளன. முல்லைத்தீவில்  IUD கருத்தடை மருந்தானது 11284   பெண்களுக்கு கருப்பையினுள் உட்செலுத்தப்பட்டுள்ளதுடன்  4694 பெண்களுக்கு Implants என்னும் தோல் ஊடு ஊசிமூலமும் உட்செலுத்தப்பட்டுள்ளது. இவை 5 தொடக்கம் 7 வருடங்கள் உடலில்  கருக்கட்டும் தன்மையை இல்லாமற் செய்கின்றன.  இக்கருத்தடை சாதனம் ஒரு குழந்தையுடைய பெண்களுக்கும்  அதிக எண்ணிக்கையில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதுடன் இது மிக உயர் வீதத்தில் காணப்படுவதும் தமிழினம் இரகசியமாக மெல்லக் கருவழிக்கப்படுவதைக் (Genocide by birth control) காட்டுகிறது.

கிளிநொச்சியில் 3921 பெண்களுக்கு நிரந்தர கருத்தடை LRT செய்யப்பட்டுள்ளது. இச் சத்திர சிகிச்சைக்காக பெண் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை. அறுவை சிகிச்சை மூலம் கருமுட்டைக் குழாய்களை (Fallopian Tubes) வெட்டி பின்னர் இருமுனைகளிலும் கட்டி விடப்படுவதனால் கருமுட்டையானது கருப்பையினுள் செல்வதை நிரந்தரமாகவே தடுக்கிறது.

இங்கு வியப்பு யாதெனில் பெண்நோயியல் மகப்பேற்றுச் சத்திரசிகிச்சை நிபுணர் இல்லாமலே இச்சத்திர சிகிச்சையைானது சேவை நோக்குடன் இரகசியமான முறையில் இராணுவ வைத்தியரைக் கொண்டு கிளிநொச்சி , முல்லைத்தீவில்  மாவட்டங்களில் செய்யப்பட்டு உள்ளமையாகும். இதைவிட கிளிநொச்சியில் 6 ஆண்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலப்பகுதியில் யாழ் பிராந்தியத்தில் வேகமாக முன்னெடுக்கப்பட்ட கட்டாய கருத்தடையை மேற்கொண்ட தாய்சேய் நல பெண் அதிகாரி தமிழ் சிவில் சமூகத்தால் விடுக்கப்ட்ட எச்சரிக்கையை அடுத்து தனது நற் பணியை நிறுத்தியுள்ளார். எனினும் பெரும்பான்மை இனத்தை சார்ந்த சில வைத்தியர்கள் யாழ் பிராந்தியத்தில் கட்டாய கருத்தடையை நிகழ்த்தியதற்கான ஆதாரங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. அட்டவணையில் சிவப்பு நிறத்தினால் வட்டமிடப்பட்டுள்ளதைப் பார்க்க.

Page1.jpg
 Page%2028.jpg

மேலும் விபரங்களுக்கு annual health bulletin 2012 இனைப் பார்வையிட இங்கே அழுத்துக.

www.healthnp.org/progress/pdhs_1.pdf  இவ்வறிக்கை மூலம் கிளிநொச்சி மாவட்டத்தில் 19129 கருத்தரிக்கக் கூடிய பெண்களில் 3921 பேர் நிரந்தரக் கருத்தடைக் குள்ளாகியுள்ளமை தெரிய வருகிறது.  இது  20.49 %.     19129 பெண்களில் 821 பேரே ஆணுறை அல்லது பெண்ணுறையைப் பயன்படுத்துகின்றனர்.

முல்லைத்தீவில் 14358 பெண்களில் 11284 பேருக்கு Implant உட்செலுத்திகள்  பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை பெரிதும் பாலியல் தொழிலில் ஈடுபடும் தகவுள்ள பெண்களுக்கே உபயோகிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இராணுவ முகாம்களை அண்மித்த பிரதேசங்களில் வடமாகாணத்தில் அதிகம் செயற்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத் தக்கதே ஆகும்

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99267/language/ta-IN/article.aspx

கிளிநொச்சி கிராமங்களில் 52 பெணகளுக்கு கருத்தடை மெற்கொண்டது உண்மை – திருமதி யூட்!

கிளிநொச்சி கிராமங்களில் கருத்தடை மேற்கொண்டது உண்மையே ஆனால் கட்டாயகருத்தடை அல்ல என்கிறார் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி யூட் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கிராமங்களான வேரவில் கிராஞ்சி வலைப்பாடு கிராமங்களில் 52 பெணகளுக்கு கருத்தடை மெற்கொண்டது உண்மையே அனால் அவை கட்டாயத்தின் பெயரில் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் அவர்களின் விருப்பத்தின் பெயரிலேயே மேற்கொள்ளப்பட்டது அதுவும் தற்காலிக கருத்தடை சிகிசையே முறையே மேற்கொள்ளப்பட்டது என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் திருமதி எஸ் . ஆர் . யூட் அவர்கள் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான வேரவில் வலைப்பாடு கிராஞ்சி பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டதான கருத்தடை தொடர்பில் பிபிசி மற்றும் பல பத்திரிகைகளிலும் வெளியான செய்தி தொடர்பில் நேற்று(20.11.2013) கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வடக்கு மாகாண சபை எதிர்கட்சி தலைவர் கமலேந்திரன் அவர்களால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதனை தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பில் மாகாண மட்டத்தில் குழு ஒன்று அமைத்து விசாரணைகள் மேற்கொண்டோம் அந்த விசாரணை அறிக்கையில் இது ஒரு சாதாரண தேசிய மட்ட நிகழ்ச்சி கடந்த யூன் மாதம் போசாக்கு மாதமாக இலங்கை பூராகவும் அறிவிக்கப்பட்டது அந்த காலப்பகுதியில் ஜந்து வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு அவர்களின் நிறைகள் அளக்கப்பட்டு இதன் போது வேரவில் கிராஞசி வலைப்பாடு பகுதிகளில் பிள்ளைகளின் நிறைகள் குறைவாக காணப்பட்ட காரணத்தினால் இந்த பிரதேசங்களில் சுகாதார சம்மந்தமாக விசேட வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று ஆதாவது சுகாதார கல்வி மற்றும் சிறுவர்களின் போசாக்கு சம்மந்தமாக கிளிநொச்சி மாவட்ட தாய்சேய் நலனுக்கு பொறுப்பான வைத்திய அதிகாரிக்கு பணித்திருந்தார்கள் .

அதனடிப்படையில் அந்த வைத்திய அதிகாரி ஏனைய நான்கு அதிகாரிகளுடன் இணைந்து போசாக்கு மற்றும் சுகாதார கல்வி தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடாத்தி அன்றையதினமே குடும்ப கட்டுப்பாடு தொடர்பாகவும் வருகைதந்திருந்த தாய்மார்களுக்கு விளக்கமளித்தார் இதனை தொடர்ந்து அவர்களின் விருப்பத்தின் பெயரிலே கருத்தடை சிகிசை மேற்கொள்ளப்பட்டது எனக்குறிப்பிட்டார்.

மேலும் இந்த கருத்தடை முறையானது முற்றுமுழுதாக தற்காலிகமானது எந்த தாயாவது தனக்கு வேண்டாம் என்று விரும்பினால் அந்த நிமிடமே அதனை எடுத்துவிடவும் முடியும் இதன் பின்னர் குறித்த தாய் கர்ப்பம் அடையமுடியும் எனக்குறிப்பிட்டார்.

இதனைவிட எங்களுடைய விசாரணையில் அந்த பிரதேசங்களில் எந்த தாயும் வற்புருத்தப்படவில்லை ஆனால் இதில் அங்கு சென்ற மருத்துவ குழுவினர் குடும்ப கட்டுப்பாடு தொடர்பான ஆலோசனை வழங்கிய பின்னர் தாய்மார்களுக்கு கால அவகாசம் வழங்கி அவர்களை தங்களுடைய கணவனுடனும் குடும்பத்துடனும் கலந்தாலோசித்து பின்ன்ர் இந்த கருத்தடை மேற்கொண்டிருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது அந்த தாய்மார்களின் உரிமை மதிக்கப்பட்டிருக்கும் இதனைவிடுத்த சுகாதார கல்வி வழங்கப்பட்ட அன்றே மேற்கொள்ளப்பட்டதுதான் அனைவர் மத்தியிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனத்தெரிவித்தார்.

miss_jude-300x130.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.