Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலி.வடக்கு இடம்பெயர்ந்த மக்களிற்கு மாற்றிடம் வழங்கி குடியேற்றுவதை முற்றாக நிராகரிக்கிறோம்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வலி.வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்விற்கான அமைப்பு:-

 

 

 

வலி.வடக்கு இடம்பெயர்ந்த மக்களிற்கு மாற்றிடம் வழங்கி குடியேற்றுவதை முற்றாக நிராகரிப்பதாக வலி.வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்விற்கான அமைப்பு அறிவித்துள்ளது. 

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வலி.வடக்கு நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் 30 இற்கும் அதிகமான முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் கைவிடப்பட்ட கற்குவாரி பகுதிகளில் குடியமர்த்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. இதனை ஏற்றுக்கொண்டால் வலி.வடக்கு நிலப்பரப்பு படையினரிற்கு கைமாறிப்போவதை என்றுமே தடுக்க முடியாதென அவ்வமைப்பின் தலைவரான சணமுகலிங்கம் சஜீவன் தெரிவித்தார்.

இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் அரசினது மாற்றுக்காணி திட்டத்தை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்தார்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்களது திட்டமிட்ட ஏமாற்று வேலைகளினாலேயே இடம்பெயர்ந்த மக்கள் தமது கோரிக்கைகளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரிட்டிஸ் பிரதமரிடம் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவித்தார்.

யாழ்.பொதுசன நூலகம் முன்னதாக நடைபெற்ற காணாமல் போனோரது போராட்டமே வலி.வடக்கு போராட்டகாரர்களை பிரிட்டிஸ் பிரதமர் கண்டு கொள்ளாமைக்கு காரணமென சில நாடாளுமன்ற உறுப்பினர் கூறித் திரிவதையும் அவர் வன்மையாக கண்டித்தார். 

இதில் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்கு தெரியும் எக்காரணம் கொண்டும் இடம்பெயர்ந்த மக்கள் போராட்டத்தை பார்வையிட பிரிட்டிஸ் பிரதமர் வரமாட்டாரென்பது. 

ஆனாலும் நாங்கள் பொதுசன நூலகத்திற்கு வருகை தருவதை தவிர்க்க அங்கு கமருணை அழைத்து வருவதாக கடைசி நிமிடம் வரை கூறிக்கொண்டிருந்தார். 

ஆகக்குறைந்தது இடம்பெயர்ந்த மக்கள் தத்தமது முகாம்களிலிருந்தேனும் கமருனை சந்திக்கும் வாய்ப்பினை அவர் திட்டமிட்டு சிதைத்து விட்டதாகவும் சஜீவன் குற்றஞ்சாட்டினாhர்.

இதனிடையே வலி.வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்விற்காக போராடிவரும் எமது அமைப்பினை சிதைக்க சதி முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளது. அவ்வகையில் போலி அமைப்பொன்றை சிலர் ஏற்படுத்த முற்பட்டுள்ளனர். இத்தகைய சதி முயற்சியில் தமது சுயநல அரசியல் இலாபம் கருதி செயற்படுவதாகவும் சஜீவன் மேலும் தெரிவித்திருந்தார். அவர்கள் போராடும் மக்கள் வலுவை சிதைக்க முற்படுவார்கள். ஆனாலும் எமது அமைப்பு தொடர்ந்தும் வலி.வடக்கு நில விடுதலைக்காக போராடுமென அவர் மேலும் தெரிவித்தார். கூட்டமைப்பின் வலி.வடக்கு பிரதேச சபையின் பிரதி தவிசாளராக  சஜீவன் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99317/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.