Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலனாய்வாளர் அடாவடியை உடன் நிறுத்துங்கள்; மன்னார் ஆயர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலனாய்வாளர் அடாவடியை உடன் நிறுத்துங்கள்; மன்னார் ஆயர்
23 நவம்பர் 2013



mannar%20bishop_CI.jpg
 

வடக்கில் இராணுவப் புலனாய்வாளர்களின் அடாவடியை உடன் நிறுத்தி அங்கு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசிடம் மன்னார் ஆயர் அதி வணக்கத்துக்குரிய இராயப்பு யோசப் வேண்டுகோள் விடுத்தார். மனிதாபிமானப் பணியாளர்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களைக் கண்டித்து மன்னாரில் நேற்று நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
காணாமல்போன உறவுகளைத் தேடி அவர்களின் குடும்பத்தினர் நடத்தும் போராட்டங்களில் முன்னின்று செயற்படும் மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்புப் பேரவையின் இணைப்பாளர் எஸ்.சுனேஸ் சோசை என்பவருடைய வீட்டிற்கு நேற்றுமுன்தினம் அதிகாலை சென்ற இராணுவப் புலனாய்வாளர்கள் அவருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுத்திருந்தனர்.
 
இதனைக் கண்டித்தும், காணாமல் போனோரின் விடுதலைக்காகக் குரல் கொடுத்து வருவோருக்கு  விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல்களைக் கண்டித்தும் மன்னார் பிரஜைகள் குழு, தேசிய மீனவ ஒத்துழைப்புப் பேரவை மற்றும் மன்னார் மாவட்ட காணாமல்போன உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கம் ஆகியவை இணைந்து கண்டனப் பேரணியை நேற்று நடத்தின.
 
இந்தப் பேரணியில் மன்னார் ஆயர் அதிவணக்கத்துக்குரிய இராயப்பு யோசப்பும் கலந்துகொண்டார். குறித்த பேரணி மன்னார் செபஸ்தியார் பேராலயத்தில் இருந்து காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகி, மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சென்றடைந்தது.
 
இதன்போது பேரணியில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்களுக்கும், மன்னார் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றது.
 
இந்தச் சந்திப்பின்போது மன்னார் மாவட்டத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பில் பணியாற்றுகின்றவர் களுக்கு புலனாய்வுத்துறை என்ற பெயரில் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வருகின்ற அச்சுறுத்தல்கள் தொடர்பாக பேரணியில் கலந்துகொண்டவர்கள் பொலிஸ் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து குறித்த பேரணி மன்னார் மாவட்ட செயலகத்திற்கு சென்று, ஜனாதிபதிக்கு வழங்கும் முகமாக மகஜர் ஒன்றை மன்னார் மாவட்ட மேலதிக அரச அதிபரிடம் கையளித்தனர்.
 
இந்தப் பேரணியில் கலந்துகொண்ட மன்னார் ஆயர் தமது  நிலைப்பாட்டை மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மன்னார் மாவட்ட மேலதிக அரச அதிபர் ஆகியோருக்குப் பின்வருமாறு தெரிவித்தார். இந்த நாட்டை ஜனநாயக நாடு என்று அரசு கூறி வருகின்றபோதும் வடக்கில் தமிழ் மக்கள் அஹிம்சை ரீதியில் உரிமைப் போராட்டம் நடத்த முடியாத நிலை காணப்படுகின்றது. இராணுவத்தினரால் கடத்தப்பட்டவர்களைத் தேடி -காணாமல்போனோரைத் தேடி - இராணுவத்தின் நிலா ஆக்கிரமிப்பைக் கண்டித்து நடத்தப்படுகின்ற போராட்டங்களில் முன்னின்று செயற்படுவர்களை இராணுவப் புலனாய்வாளர்கள் குறிவைத்து அவர்களை அச்சுறுத்தியும், தாக்கியும் வருகின்றனர் எனக் குறிப்பிட்டார். 
 
எனவே, வடக்கில்  இராணுவப் புலனாய்வாளர்களின் அடாவடியை உடன் நிறுத்தி அங்கு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்' என்றார்.
 
இந்தப் பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம், வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி வி.சத்தியலிங்கம், வட மாகாண மீன்பிடி - போக்குவரத்து அமைச்சார் பா.டெனீஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பிரிமூஸ் சிறாய்வா, தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் இணைப்பாளர் எஸ்.ஜேசுதாசன், கத்தோலிக்க குருமார்கள், மன்னார் மாவட்ட காணாமல்போன உறவுகளைத்  தேடும் குடும்பங்களின் சங்கப் பிரநிதிகள்,மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
 
 
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99377/language/ta-IN/article.aspx

வடக்கில் புலனாய்வாளர்களின் அடாவடித்தனத்தை நிறுத்த வேண்டும்: அடைக்கலநாதன்

வடக்கில் தமிழ் மக்கள் மீதும் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மீதும் புலனாய்வுத் துறையினர் மேற்கொண்டு வரும் அடாவடித்தனத்தை உடன் நிறுத்த அரசு  துரித selvam-adaikalanathan.jpgநடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
 
இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 
-மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் இணைப்பாளர் உட்பட மனிதாபிமான பணியாளர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கு தொடர்ச்சியாக புலனாய்துத் துறையினரினால் நேரடியாகவும், தொலைபேசியூடாகவும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.
 
 
குறிப்பாக காணாமல் போன உறவுகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்;கே குறித்த அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
 
இந்த அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்;டே செல்லுகின்றன. இவ்விடையம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்தால் உரிய முறையில் விசாரனைகளை செய்வதில்லை. 
 
இதனால் காணாமல் போன உறவுகளுக்காக மேற்கொண்டு வரும் அமைதிபோராட்டங்கள் கூட கை விடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் புலனாய்வாளர்கள் இரவு நேரங்களிலே விசாரணைகளுக்காக வீடுகளுக்கு செல்லுகின்றனர்.
 
இதனால் பெண்கள் பாரிய அச்சத்தை எதிர் நோக்குகின்றனர். விசாரனைக்காக வீடுகளுக்குச் செல்லுகின்ற போது பெண் பொலிஸர் அழைத்துச் செல்லப்படாமல் பெண்களை விசாரணை செய்கின்ற நடவடிக்கைகளும் தொடர்ந்து கொண்டே செல்லுகின்றன. 
 
இவர்கள் யார்? என்பது தெரியாத நிலையில் எவ்வித சீருடையும் இன்றி சிவில் உடையில் அரச புலனாய்வுத்துறை என சென்று விசாரனைகளை மேற்கொள்ளுகின்றனர்.
 
எனவே வடமாகாணத்தில் உள்ள தமிழ் மக்கள் மீதும் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மீதும் புலனாய்வுத்துறையினர் மேற்கொண்டு வரும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
 இவர்கள் மீதான இந்த சம்பவங்களுக்கு அரசே உரிய பதிலை கூறி இவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விடையத்தில் சர்வதேச சமூகம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

virakesari

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.