Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முரளிதரன் இலங்கையை நேசிப்பவர்: விமல் வீரவன்ஸ்

Featured Replies

index.jpg

 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள்  சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமருக்கு இணையாக நாட்டை நேசிக்கும் குடிமகன் என அமைச்சர் விமல் வீரவன்ஸ் புகழ்ந்துள்ளார்.

 

கொழும்பு மாளிவத்தை பிரதேசத்தில் திஸாநாயக்க தோட்டத்தில் நடைபெற்ற வீடுகள் கையளிப்பு வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சனல் 4 தொலைக்காட்சியின் முன்னால் நாட்டின் உண்மையான நிலைமையை உலகத்திற்கு எடுத்துக் கூறிய கிரிக்கெட்வீரர் முத்தையா முரளிதனுக்கு தேசத்தின் மரியாதை வழங்கப்பட வேண்டும்.சனல் 4 தொலைக்காட்சியும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும் இலங்கை தொடர்பில் இருளான தோற்றத்தை உலகத்தில் எடுத்துச் செல்ல முயற்சித்தனர்.

 

இந்த சந்தர்ப்பத்தில் முரளிதரன் நாட்டை நேசிக்கும் குடிமகன் என்பதை உறுதிப்படுத்தி காட்டினார். அவர் நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்தார் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://dinamani.com/latest_news/2013/11/24/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/article1908679.ece

அவர் நாட்டை நேசிக்கும் குடிமகனா அல்லது நோட்டை நேசிக்கும் குடிமகனா என்று யாருக்கு தெரியும் :D


அவர் நாட்டை நேசிக்கும் குடிமகனா அல்லது நோட்டை நேசிக்கும் குடிமகனா என்று யாருக்கு தெரியும் :D

அவர் நாட்டை நேசிக்கும் குடிமகனா அல்லது நோட்டை நேசிக்கும் குடிமகனா என்று யாருக்கு தெரியும் :D

அவர் நாட்டை நேசிக்கும் குடிமகனா அல்லது நோட்டை நேசிக்கும் குடிமகனா என்று யாருக்கு தெரியும் :D

அல்லது தொண்டமானைப்போலே ஒரு குடி மகனோ 

 
என்ன இருந்தாலும் வீரவன்சாவிடம் நட்சான்றிதல் வேண்டிவிட்டார். இனி என்ன மின்சி இருக்கு.

பிரித்தானிய பிரதமருக்கு துஷ்ரா பந்தை வீசிய முரளிதரன் மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளர்?

எதிர்வரும் மேல் மாகாண சபைத்தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வைக்கும் நோக்கத்தில் ஜனாதிபதி தேடிய பிரபலமான நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஒருவர் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நட்சத்திரம் வேறு யாருமல்ல. இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த பிரித்தானிய பிரதமருக்கு துஷ்ரா பந்தை வீசி வீழ்த்த முயற்சித்து தனது பந்தில் தன்னையே வீழ்த்திக் கொண்ட முத்தையா முரளிதரனே அந்த நடசத்திரமாகும்.

கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்றதோடு அரசியல் மைதானத்திற்குள் காலடி எடுத்து வைத்த அர்ஜூன ரணதுங்க, சனத் ஜயசூரிய வரிசையில் முத்தையா முரளிதரனும் அரசியல் மைதானத்திற்கு வருவதாக ஜனாதிபதிக்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முரளிதரனின் விருப்பம் கிடைத்துள்ள நிலையில் மகிழ்ச்சியடைந்துள்ள ஜனாதிபதி, நாட்டின் இரண்டாவது தமிழ் முதலமைச்சராக முத்தையா முரளிதரனுக்கு பட்டாபிஷேகம் செய்ய திட்டங்களை வகுத்து வருகிறார்.

தாம் தமிழ் மக்களையும் சரிநிகர் சமமாக நடத்துவதாக உலகத்திற்கு காட்ட ஜனாதிபதி இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

முத்தையா முரளிதரன் தென்னிந்திய பெண்ணொருவரையே மணந்திருப்பதால், தென்னிந்தியாவுடன் அவருக்கு இருக்கும் நெருங்கிய தொடர்புகளை ஜனாதிபதி தனக்கு சாதகமாக பயன்படுத்துவதை தடுக்க முடியாது.

எனினும் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் முத்தையா முரளிதரனுக்கு எதிரான எதிர்ப்பலை கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் முரளியின் அரசியல் வருகையின் பின்னணியில் வேறு ஒரு கதை இருப்பதாக பேசப்படுகிறது.

வானொலி அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்படுவதை தடுக்க துமிந்த சில்வா அரசாங்கத்துடன் இணைந்து கொண்டது போல் முரளிதரனின் பின்னணியிலும் அப்படியான கதை இருப்பதாக தெரியவருகிறது.

அவரது சகோதரர் ஒருவர் சிறைச் செல்வதை தடுப்பதற்காவே முரளி அரசுடன் கைகோர்க்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு பெருந் தொகையான எத்தனேல் மதுசாரம் இறக்குமதி செய்யப்பட்டால் பாரியளவிலான அபராதப் பணத்தை அவரது சகோதரர் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த வர்த்தகத்தை அவர் நீண்டகாலமாக செய்து வந்துள்ளதாகவும் இதன் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காமல் போயிருப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விசாரணைகளை மூடிமறைக்க இருக்கும் ஒரே வழி அரசாங்கத்துடன் இணைவதுதான் என்று அறிந்திருக்கும் முரளிதரன், அரசியலில் இறங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=97651&category=TamilNews&language=tamil

 

Edited by nunavilan

அப்ப நாட்டுக்கும் இல்லை நோட்டுக்கும்  இல்லை,வோட்டுக்குத்தான் :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.