Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண விவசாய துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வீட்டின் மீது தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண விவசாய துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வீட்டுக்கு இன்று அதிகாலை 3 மணியளவில் கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

யாழ்.திருநெல்வேலியில் உள்ள அவரது வீட்டின் மீதே தாக்குதல் நாடாத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதலில் அவரது வீட்டு யன்னல் கண்ணாடிகள் சேதமாகியுள்ளன.

இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அவர் தெரிவிக்கையில். இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டு வாசலில் இரண்டு மோட்டார் சைக்கிள் வந்தவர்கள் வீட்டு (கேற்) வாசலில் நின்று வீட்டின் மீது கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டனர்.

மாவீரர் நாளை ஒட்டி மர நடுகை நிகழ்வை நடந்தியதன் பின்னனியிலையே இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என தெரிவித்தார்.

வடமாகாண சபை உறுப்பினர் இ ஆனல்ட் வீடு என கருதி அவரது சகோதரி வீட்டுக்கும் இன்று அதிகாலை கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டது.

 
பாசையூர் செபஸ்ரியன் வீதியில் உள்ள ஆனல்ட்டின் சகோதரி வீட்டுக்கு அதிகாலை 3.20 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சிங்களத்தில் கத்தியவாறு 2 நிமிடமாக சரமாரியாக கல் வீசி தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
anold.jpg
 
அந்த வீட்டில் வடமாகாண சபை தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கட்டவுட் கட்டப்பட்டு இருந்ததால் குறித்த வீடு ஆனல்ட்டின் வீடு என கருதியே தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது 
 
வீட்டில் இருந்தவர்கள் அவல குரல் எழுப்பியதை அடுத்து தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பி சென்றனர் 
 
இத் தாக்குதலில் வீட்டு யன்னல் கண்ணாடிகள் சில உடைந்து சேதமடைந்துள்ளது.
 
தாக்குதலாளிகள் சென்றதும் வீட்டார் அயலவரின் உதவியுடன் வீட்டுக்கு வெளியில் வந்து பார்த்த போது வீட்டு கேற்றடியில் கப்டன் என எழுதப்பட்டு அடுத்து சிங்களத்தில் எழுதப்பட்டு தொடர்ந்து குறியீட்டு இலக்கம் எழுதப்பட்ட பை ஒன்று காணப்பட்டது 
 
அந்த பையில் தான் தாக்குதலாளிகள் தாக்குதலுக்கு பயன்படுத்திய கல் கொண்டுவரபட்டு இருந்தது.எனவே இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் இராணுவத்தினர் அல்லது அவர்களோடு சேர்ந்து இயங்கும் குழுவே என வீட்டார் சந்தேகிக்கின்றனர்.
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.