Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலி. வடக்கிற்குச் சென்ற முதலமைச்சரை திருப்பி அனுப்பியது இராணுவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாண முதலமைச்சரும் இந்துக்குருமார்களும் இன்று வலி. வடக்கிற்குச் சென்றவேளை இராணுவத்தினரால் தடுக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் வீடழிப்புகளுடன்  அங்குள்ள இந்து ஆலயங்களும் இடித்துடைக்கப்படுவதாக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இன்று முதலமைச்சர் தலைமையில் இந்துகுருமார்கள் பார்வையிடுவதற்காக சென்ற வேளை மாவிட்டபுரம் பகுதியில் உள்ள காவலரணில் இருந்த இராணுவத்தினர் அவர்களை மேலும் செல்லவிடாது தடுத்து நிறுத்தியதுடன் திருப்பியனுப்பியும் உள்ளனர்.

இது தொடர்பாக  இந்துக்குருமார்கள் தெரிவிக்கையில், இராணுவத்தினரின் இவ்வாறான செயற்பாடுகள் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும்.

இதனால் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கங்களை ஏற்படுத்துவதாக கூறி வருகின்றமை அரசின் ஏமாற்று நாடகம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இதேவேளை வலி.வடக்கில் உயர்பாதுகாப்பு வலையத்தில் உள்ள மக்களுக்கு சொந்தமான வீடுகள் , ஆலயங்கள். பொதுக்கட்டடங்கள்  அனைத்தும் அண்மைக்காலமாக இடித்தழிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=840942475429565747#sthash.0jNNIkys.dpuf

 

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு முதலமைச்சருக்கே இந்த நிலமை என்றால் அந்த நாட்டிலுள்ள மக்களின் கதி????????

 

ஓ ஐ.நா, அம்னெஸ்டி............ எங்கே இருக்கிறீர்கள்?

 

சிலவேளை ஜெயபாலன் ஐயாவை விட்டால் கத்தி குளறி உள்ள போய் வந்திருப்பார்.

மன்னார் ஆயர் - வடமாகாண முதலமைச்சருக்கிடையில் விசேட சந்திப்பு.

வடமகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகைக்கும் இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்தில் விசேட சந்திப்பொன்று இடம் பெற்றது.
rayappu.jpg
இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சுகாதார, சுதேச வைத்திய அமைச்சர் பி.சத்தியலிங்கம்,வடமாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி பிரிமூஸ் சிராய்வா, வைத்திய கலாநிதி.ஜீ.குணசீலன்,அயூப் அஸ்மீன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
 
குறித்த சந்திப்பின் போது மன்னார் மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள காணிப் பிரச்சினைகள், இராணுவத்தின் தலையீடு,இராணுவத்தின் பிரசன்னம் அதிகரிப்பு, அமைச்சர் ஒருவரின்  தன்னிச்சையான செயற்பாடுகள், மீனவர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள், மீள் குடியேற்ற கிராம மக்களின் பிரச்சினைகள் உட்பட மன்னார் மாவட்ட மக்கள் எதிர் நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகளை மன்னார் ஆயர் உட்பட குறித்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்த கத்தோலிக்க அருட்தந்தையர்களும்  முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
DSC02859.jpgDSC02869.jpgDSC02889.jpgDSC02898.jpgDSC02899.jpgDSC02904.jpgDSC02996.jpgDSC02999.jpgDSC03007.jpg

http://virakesari.lk/?q=node/359575

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.