Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டிப்பளையில் பதற்றம் ; டயர்களை எரித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச செயலாளரினை அச்சுறுத்திய அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பிரதேச செயலக வீதியில் இன்று நடமாடியதனால் இப்பிரதேசத்தில் இன்று பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்திற்கு சென்ற தேரரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் ஒன்று கூடி தமது எதிர்ப்பை  தெரிவித்ததுடன், வீதியில் டயர்களை போட்டு எரித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
 
இதனையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சுமணரத்ன தேரர் மட்டக்களப்புக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. தேரரை பொலிஸார் தங்களுடைய வாகனத்தில் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் மண்முனைத் துறை வரை கொண்டு சென்று விட்டனர்.
 
இதே நேரம், இன்றும் பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் மந்த கதியில் நடைபெற்றுவருகின்றது.
 
மட்டக்களப்பு - பட்டிப்பளை பிரதேச செயலகத்தினுள் கடந்த புதன்கிழமை பகல் புகுந்த மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பிரதேச செயலாளரின் அலுவலக சாதனங்களைச் சேதப்படுத்தியிருந்ததுடன், பிரதேச செயலாளரையும் அச்சுறுத்தியிருந்ததாக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
அதனையடுத்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பகிஸ்கரிப்பிலும் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் நேற்றைய தினம் பொது மக்களும் பிரதேச செயலகம் முன்பாகப் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
 
அதே நேரம் பட்டிப்பளை - கொக்கட்டிச்சோலை பொலிஸார் ஊடாக களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் தேரர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்றம் 50 ஆயிரம் ரூபா சரீரப்பிணையில் விடுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=692582477429547049#sthash.uLz6AgHg.dpuf

  news_29-11-2013_49paddipalai-02.jpg

Annonces Google

தென் தமிழீழத்தின் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளரினை அச்சுறுத்திய அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பிரதேச செயலக வீதியில் இன்று நடமாடியதனால் பிரதேசத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்திற்கு சென்ற தேரரின் நவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் ஒன்று கூடி எதிர்ப்புக் காட்டியதுடன், வீதியில் டயர்களை போட்டு எரித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சுமணரத்ன தேரர் மட்டக்களப்புக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. தேரரை பொலிஸார் தங்களுடைய வாகனத்தில் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் மண்முனைத் துறை வரை கொண்டு சென்று விட்டனர்.

இதே நேரம், இன்றும் பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் மந்த கதியில் நடைபெற்று வருகின்றது.

மட்டக்களப்பு - பட்டிப்பளை பிரதேச செயலகத்தினுள் கடந்த புதன்கிழமை பகல் புகுந்த மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பிரதேச செயலாளரின் அலுவலக சாதனங்களைச் சேதப்படுத்தியிருந்ததுடன், பிரதேச செயலாளரையும் அச்சுறுத்தியிருந்ததாக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பகிஸ்கரிப்பிலும் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் நேற்றைய தினம் பொது மக்களும் பிரதேச செயலகம் முன்பாகப் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பட்டிப்பளை - கொக்கட்டிச்சோலை பொலிஸார் ஊடாக களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் தேரர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்றம் 50 ஆயிரம் ரூபா சரீரப்பிணையில் விடுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த பிரதேசத்தில் பெளத்த விகாரை ஒன்றை அமைக்க உடனடியாக அனுமதி கோரிய பிக்கு, பிரதேச செயலாளரினால் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் ரகளையில் ஈடுபட்டிருந்தார். அததுடன் பெண் பிரதேச செயலாளரை தகாத வார்த்தைகளால் போஷித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

paddipalai-01.jpg

paddipalai-02.jpg

paddipalai-03.jpg

http://www.paristamil.com/tamilnews/view-news-MzA4ODgxNzc2.htm#.UpiMPcTrw_Q

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.