Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வர் விக்னேஸ்வரன் தடுக்கப்பட்டமை இராணுவ ஆட்சிக்கு சிறந்த உதாரணம் - சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
sumanthiran_seithy-150.jpg

வடமாகாண மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் தமது மாகாணத்தில் ஒருசில இடங்களுக்குச் சுதந்திரமாகச் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டுள்ளார். இது வடக்கில் இடம்பெறும் இராணுவ ஆட்சிக்குச் சிறந்த உதாரணமாகும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று சபையில் தெரிவித்தார். வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள கோயில்கள், பாடசாலைகள் இராணுவத்தினரால் இடித்தழிக்கப்படுவதைப் பார்வையிடுவதற்காக நேற்று முன்தினம் மாலை அங்கு சென்ற வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை படையினர் அங்கு செல்லவிடாமல் திருப்பி அனுப்பியுள்ளனர். இந்நிலையில், நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வரவு - செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஏழாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே சுமந்திரன் மேற்கண்ட விடயம் குறித்து கேள்வியெழுப்பினார்.

  

மேலும் அவர் தெரிவித்தவை வருமாறு:-

 

வடமாகாணத்தின் வளர்ச்சி 25 வீதமாக அதிகரித்துள்ளது என அரசு கூறுகிறது. அது பொய். வடமாகாண வளர்ச்சி குறித்து வெளிவிவகார அமைச்சர் தெரிவித்த கருத்தை அவர் வாபஸ் பெற்றார். நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் உயிரிழந்திருந்தார். இது தற்கொலை என்றுதான் நாம் நினைத்தோம். ஆனால், அது கொலை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எது எவ்வாறிருப்பினும், மரணித்த அவரது குடும்பத்துக்கு நாம் எமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். அண்மையில் வல்வெட்டித்துறை பிரதேசசபை உறுப்பினரின் வீடு தாக்கப்பட்டது. அத்துடன், கரவெட்டி, சாவகச்சேரி, வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களின் வீடுகளும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டன.

வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் வீட்டுக்கு முன்னால் மலர் வளையம் வைக்கப்பட்டது. ஏன் இவை நடக்கின்றன? வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் கடந்த 22 வருடங்களாக இருந்த நடேஸ்வரா கல்லூரி, அம்மன், பிள்ளையார் ஆலயங்கள் உடைத்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இதைப் பார்வையிடச் சென்ற வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் இராணுவத்தினரால் தடுக்கப்பட்டார். ஒரு மாகாண முதல்வர் தமது மாகாணத்தில் உள்ள ஓர் இடத்திற்குச் செல்வதை எப்படித் தடுக்க முடியும்? வடக்கில் ஜனநாயகம் நிலை நாட்டப்பட்டுள்ளது என அரசு கூறுகிறது.

ஆனால், வடக்கு மக்களின் ஒரு இலட்சத்து 32 ஆயிரம் வாக்குகளைப் பெற்று அந்த மாகாணத்தின் முதலமைச்சராகத் தெரிவுசெய்யப்பட்டவர். தமது மாகாணத்தின் ஒரு சில இடங்களுக்கு சுதந்திரமாகச் செல்லமுடியாது இராணுவத்தினரால் தடுக்கப்பட்டார். இது வடக்கில் இடம்பெறும் இராணுவ ஆட்சிக்குச் சிறந்த உதாரணம் அல்லவா? யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், வடக்கு, கிழக்கு மக்கள் இன்னும் ஏன் இழிவுபடுத்தப்படுகின்றனர்? இறந்த காலத்தை மறந்து எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க நாம் தயாராக இருக்கிறோம். அரசும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=97976&category=TamilNews&language=tamil

இராணுவ ஆட்சிக்கு சிறந்த உதாரணம் 2.

யாழ்.பொதுசன நூலகத்திற்கான பிரதம நூலகராக தனது ஆதரவாளரான முன்னாள் இராணுவப்புலனாய்வு அதிகாரியொருவரை நியமிக்க அமைச்சர் றிசாத் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது பொதுநூலகத்தின் பிரதம நூலகராக இருந்து வரும் இமெல்டா ஓய்வு பெறும் காலம் அண்மித்துள்ள நிலையில் எந்தவித அடிப்படை தகுதியுமற்றவரான நிசாத் என்பவரை நியமிக்க அமைச்சர் றிசாத் அழுத்தங்னை பிரயோகித்து வருவதாக கூறப்படுகின்றது.

கடந்த ஆண்டில் சுற்றுலா பயணிகளாக சென்றிருந்த சிங்களவர்கள் சிலர் நூலகத்தில் அடாவடிகளில் ஈடுபட்டமைக்கு கடும் எதிர்ப்பு உள்ளுரில் கிளம்பியிருந்த நிலையில் நூலகத்தில் தமது பிடியினை இறுக்கிக்கொள்ள ஆளுநர் சந்திரசிறி அமைச்சர் றிசாத்தின் ஆலோசனையினில் அவசர அவசரமாக புத்தளத்திலிருந்து முன்னாள் இராணுவப்புலனாய்வு அதிகாரியொருவரை தருவித்து அவரிற்கு கூடிய அதிகாரங்களுடன் நூலக உதவியாளர் பதவியொன்றை வழங்கியிருந்தனர். தற்போது பொதுசன நூலகத்தின் அனைத்தையும் தீர்மானிக்கும் நபராக இந்நபரே இருந்து வருகின்றார்.

எனினும் தற்போது அடுத்த கட்ட நகர்வாக குறித்த நபரை நூலகத்தின் பிரதம நூலகராக நியமிக்க முயற்சிகள் ஆரம்பமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் பின்னணியில் தகுதியற்றவர்களை நியமித்து நூலக செயற்பாடுகளை முடக்கவும் புலம்பெயருதவிகளை சுருட்டிக்கொள்ளவுமே இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஏற்கனவே வடக்கு மாகாணசபை முதல் போக்குவரத்து சபை வரை அமைச்சர் றிசாத் நியமித்தவர்களாலேயே நிரம்பி வழிகின்றது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்பின் மாகாணசபை நிர்வாகம் கூட இத்தகைய நியமனங்களை வெளியேற்ற முடியாது திணறுவதாக தெரிய வருகிறது.

இதேவேளை தகுதியானவர்கள், நூலக சேவையில் இருப்பவர்கள், அரசியல் செல்வாக்குகளால் திணிக்கப்படாத எவரும் வடக்கில் அரச நியமனங்களை பெற்றுக் கொள்வதில் பிரச்சனை இல்லை எனதெரிவிக்கும் யாழ்ப்பாணத்தின் முக்கிய தரப்புகள் தமது மேலாதிக்கத்தை திணிக்கும் வகையில் அரசியல் பின்னணியில் நியமனங்கள் வழங்கப்படுவதே.

 

http://www.jvpnews.com/srilanka/55036.html

 

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் படையினர் மற்றும் பொதுமக்கள் என்ற வகையில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூருவது மனித உரிமை! https://www.youtube.com/watch?feature=player_embedded&v=FcR3EFhWTVM

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.